பெண்கள், குங்குமம் இடுவதால், ஸ்ரீமகாலட்சுமியின் பரிபூரண அருளைப் பெறுகிறார்கள். குங்குமத்தை மோதிர விரலால்தான் இடவேண்டும்.
விரலி மஞ்சள், வெண்காரம், படிகாரம், கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து அரைக்கப்பட்ட பொடியுடன் நல்லெண்ணெய் கலந்து குங்குமம் தயாரிக்கப்படுகிறது. மஞ்சளும் காரமும் வேதிவினை புரிவதால் சிவப்பு நிறத்தைப் பெறுகிறது குங்குமம்.

குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளைத் தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வயப்படுத்துவது கடினம்.
தெய்வத்தன்மையும் மருத்துவத் தன்மையும் உள்ள குங்குமத்தை அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவற்றுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.
மூளைக்குச் செல்லும் நரம்புகள் அதிகமான உஷ்ணத்தை மூளைக்கு அனுப்பாமல், அதை கட்டுப்படுத்தக்கூடிய பகுதி நெற்றி. அந்த நெற்றியில் குங்குமம் இடுவதால் அந்த சூடு தணிகிறது.
திருமணமான பெண்கள் நெற்றியின் நடுவிலும், வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு. ஆண்கள் இரு புருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது விசேஷம்!
