பிரீமியம் ஸ்டோரி

அதிர்ஷ்டம் தரும் அல்லிப் பூ...  நிம்மதி தரும் வெண்தாமரை! 

சக்தியர் சங்கமம்!

குரு ஹோரையில், ஐந்து விதமான வாசனைப் பூக்களால் மாலை தொடுத்து இறைவனுக்குச் சமர்ப்பித்து வழிபட்டால், பிள்ளைகள் கல்வியில் நன்கு கவனம் செலுத்துவர். இதையே சுக்ர ஹோரையில் செய்தால், தம்பதி ஒற்றுமையும் லட்சுமிகடாட்சமும் உண்டாகும்.

சயன அறையில், இறைவனையும் இறைவியையும் பள்ளியறையில் எழச் செய்யும்போது, இயன்றவரை நாமே பூக்களைத் தொடுத்து மாலையாக்கிப் பூஜைக்குக் கொடுத்து வழிபட்டால், சத் சந்தான பலன் (உத்தமமான பிள்ளை பேறு) கிடைக்கும்.

சக்தியர் சங்கமம்!

அஷ்ட புஷ்பங்கள் எனப்படும் தும்பை, வில்வம், செந்தாமரை, செம்பருத்தி, புன்னை, வெள்ளெருக்கு, நந்தியாவட்டம், செண்பகம் ஆகியவற்றால் அர்ச்சித்து வழிபட்டால், அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

அதேபோல், பூஜையில் ஒவ்வொரு பூவுக்கும் ஒரு பலன் உண்டு. என்னென்ன என்று தெரிந்துகொள்வோமா?

பூக்கள் தரும் பலன்கள்

செவ்வந்தி: குரு கிரகத்தால் ஏற்படும் பாதிப்புகள் விலகும்.

செவ்வரளி:
குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.

நீலச்சங்கு மலர்:
சனி பகவானின் அருள் கிடைக்கும்.

வெண்தாமரை:
நிம்மதியான வாழ்வை ஏற்படுத்தித் தரும்.

செந்தாமரை:
செல்வம், ஆயுள் மற்றும் சூரிய பகவானின் அருள் கிடைக்கச் செய்யும்.

பொன் அரளி: திருமணப் பாக்கியம் கைகூடும்.

மஞ்சள் அரளி:
கடன் தொந்தரவுகளை நீக்கும்.

ரோஜா:
உடலுக்கும் உள்ளத்துக்கும் பலம் தரும்.

பாரிஜாதம்: பக்தியுணர்வு மேலோங்கும்.

அல்லி:
அதிர்ஷ்டம் உண்டாகும்.

மல்லிகை:
பார்வைக் குறைபாடு நீங்கும்.

- சுபா கண்ணன்

‘சாமி கொடுத்த பணம்!’

சக்தியர் சங்கமம்!

ரு மாசத்துக்கு முன்னாடி எங்க வீட்டுல ரொம்பப் பணத் தட்டுப்பாடு. என்னோட மூத்த பையனுக்குப் பயங்கரமான பல்வலி வேற! அவனை ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போகக்கூடக் கையில காசு இல்ல. `ஃபார்மஸியில் மாத்திரை வாங்கிச் சாப்பிடுறேன்’னு சொன்னான். ஆனா, அதுக்கும் மனசு இடம் கொடுக்கல.

`சரி, சாமிக்கு முடிச்சு வெச்சுருக்குற காசை எடுத்துப் போம்’னு ஒரு பக்கம் மனசுல தோணுது; இன்னொரு பக்கம் `வேண்டுதல் காசை எப்படி எடுக்க..?’ன்னு ஒரு தடுமாற்றமும் இருந்துச்சு. கடைசில வேறுவழி இல்லாம, `நம்மளோட இயலாமைதான் சாமிக்குத் தெரியுமே’ன்னு போய், சாமி முன்னாடி வெச்சுருந்த டப்பாவைத் தொறந்தா, உள்ளே ஆயிரம் ரூபா இருக்கு.

சக்தியர் சங்கமம்!ஒருநாள் என்னோட வீட்டுக்காரர் கொடுத்த காசை அதுக்குள்ளே என் பேத்தி வெச்சுருக்கா. தொலைச்சிட்டான்னு வீடு முழுக்கத் தேடி, பிறகு விட்டுட்டோம். அது இப்பக் கிடைக்சுருக்கு. `கடவுளே, இதுக்குதான் உன் உண்டியலைத் திறக்கச் சொல்லி என் மனசைத் தூண்டினியா?’னு கண்ணீர்மல்க இறைவனுக்கு நன்றி சொன்னேன்.

எப்போ நமக்கு என்னென்ன தேவைன்னு கடவுளுக்குத் தெரியும்; அப்போ அதைக் குறைவில்லாம நமக்குத் தருவார்னு புரிஞ்சுக்கிட்டேன். 

- ஆ.தைலா, மதுரை

கெளரி ஆரத்தி பாட்டு

சக்தியர் சங்கமம்!

ன்னட தேசத்தில் கெளரி ஆரத்தி பாட்டுப் பாடுவார்கள். வெள்ளிக்கிழமை களில் சுத்த அஷ்டமி தினங்களில், கெளரி தேவியைத் தங்கள் வீட்டில் எழுந்தருளச் சொல்லி அவளை ஆரத்தி எடுத்து வரவேற்கும் பாவையில் இந்தப் பாட்டைப் பாடுவார்கள். இதனால் வீட்டில் சர்வ மங்கலங்களும், சகல சுபிட்சங்களும் உண்டாகும் என்பது நம்பிக்கை. அந்தப் பாடலின் கருத்து உங்களுக்காக.

சுக்ர வாரத்தில் ஸுத்த அஷ்டமியில் மங்கள வாரங்களில் பரம சிவனின் பட்டத்து ராணி பார்வதிக்கு கெளரி மாதாவுக்கு ஜய மங்களம், நித்ய சுப மங்களம்.

பொன்மழை பொழியட்டும். இடது வலது கரங்கள் இரண்டும் இணைந்து உன்னை வணங்கட்டும். அன்னதானம் செய்ய வேண்டும் என்ற கனவு நிஜமாகட்டும். என் சகோதரனுக்கு வரங்கள் கொடு. கெளரி அம்மா உன்னை செளபாக்கியத்துடன் எதிர்கொள்வேன்.

நீ ஒருவள் உண்டு உடுத்தினால் என்ன வேண்டுமானாலும் தரலாம். நீ இல்லையேல் மூன்று உலகங்களும் இல்லை. சீக்கிரம் என் வீட்டுக்கு வருவாயம்மா. கேளம்மா! நான் செய்த பூஜை உனக்குத் திருப்தியளித்தால் சீக்கிரமே என்னைப் பரிபாலிக்க வருவாயம்மா!

எலுமிச்சைத் தோட்டத்தில் ரம்பையைவிட அழகான கெளரி நின்றிருப்பாள். அவளைப் பூஜிக்கும் மக்களுக்கு வரத்தைத் தந்திடுவாள். வாயில் மெல்லும் தாம்பூலத்தைச் சுகந்தம் வீசும் சந்தனத்தைப் பிரசாதமாக நமக்குத் தருவாள்.

வாழைத் தோட்டத்தில் அழகிய கெளரி நின்றிருப்பாள். வந்தவருக்கெல்லாம் பாக்கியம் கொடுப்பாள். வாய்த் தாம்பூலத்தையும் சந்தனத்தையும் நம் எல்லோருக்கும் பிரசாதமாகக் கொடுப்பாள்.

முத்து ஆரத்தி, பவழ ஆரத்தி எடுத்து நாரியர்கள் சந்திரனுக்கு  ஒப்பான முகத்தாளை வணங்கினர். சுமங்கலித்துவம் கொடுத்து என்னைக் காப்பாற்று என்று வேண்டினர்.

நீல மாணிக்கங்கள் போட்ட புஷ்ப ஆரத்தியைப் பெண்கள் எடுத்தனர். செளபாக்கியங்கள் சகலமும் கொடு என்று தீப ஆரத்தித் தட்டை வைத்தனர் கீழே.

தீப ஆரத்தித் தட்டை கீழே வைக்கும்போது பிரசன்னமானாள் பாக்கிய கெளரி. புவனத்தின் தாயே, மகா மாயே, சந்திரனைத் தலையில் வைத்த செளந்திர ரூபிணியே, ருத்திரனின் அரசியே, தாயி மஹா கெளரிக்குச் சமர்ப்பணம் என்று மந்தாரை புஷ்பங்களைப் பொழிந்தனர். புஷ்ப  மழை பொழிந்தனர்.

நாமும் வெள்ளிக்கிழமைகளில் இதை வாசித்து அம்பாளை வழிபட, நினைத்த காரியம் கைகூடும்; சகல சம்பத்துகளும் உண்டாகும்.

-பத்மா ஸ்ரீநிவாஸன், சென்னை-17

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு