Published:Updated:

கேள்வி பதில் - கோபுரம் இல்லாமல் கோயில் கட்டலாமா?

கேள்வி பதில் - கோபுரம் இல்லாமல் கோயில் கட்டலாமா?
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில் - கோபுரம் இல்லாமல் கோயில் கட்டலாமா?

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி பதில் - கோபுரம் இல்லாமல் கோயில் கட்டலாமா?

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:
கேள்வி பதில் - கோபுரம் இல்லாமல் கோயில் கட்டலாமா?
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில் - கோபுரம் இல்லாமல் கோயில் கட்டலாமா?

? பாவத்துக்குப் பரிகாரமாகச் செய்யப்படும் பிரார்த்தனைகளை, வழிபாடுகளை இறைவன் ஏற்றுக்கொள்வாரா?

- என்.மங்களநாயகி, சீர்காழி

இறைவன் தன்னிச்சையாகப் பிரார்த்தனையை ஏற்கவோ, மறுக்கவோ செய்ய மாட்டார். பாவம் செய்தவனின் தரம், பிரார்த்தனையின் நோக்கம் போன்றவற்றை அறிந்து தர்ம சாஸ்திரத்தின் பரிந்துரைப்படி செயல்படுவார். ‘வேதமும், தர்ம சாஸ்திரமும் எனது கட்டளைகள். அதை மீறுபவன் எனது பக்தனானாலும் நான் மன்னிக்க மாட்டேன்’ என்பது கடவுளின் வாக்கு.     

கேள்வி பதில் - கோபுரம் இல்லாமல் கோயில் கட்டலாமா?

அறியாமையால் செய்த பாவத்தை அவர் மன்னிப்பார். ‘இப்படி செய்துவிட்டேனே என்று என் மனம் மிகவும் வேதனைப்படுகிறது. அந்தத் தவறின் சிந்தனை என்னை வாட்டி வதைக்கிறது. மீண்டும் இந்தத் தவறை என் மனம் நினைக்காது. சாஸ்திரம் சொல்லும் தண்டனையை நடைமுறைப்படுத்த எனக்குத் தகுதியில்லை. உன்னைச் சரணடைந்து விட்டேன். அருள வேண்டும்!’ என்று மனமுருகி வேண்டினால் மன்னிப்பு நிச்சயம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கேள்வி பதில் - கோபுரம் இல்லாமல் கோயில் கட்டலாமா?நமது விருப்பத்தை நிறைவேற்றக் கடமைப் பட்டவர் கடவுள் என்று எண்ணக் கூடாது. தனக்கு வணக்கம் செலுத்தும் அத்தனை பேரையும் கடவுள் மன்னித்து விட்டால், யாருக்குத் தண்டனை அளிப்பது? தண்டனை அளிப்பது செயலற்றுப் போகும். அப்போது சட்டம் ஏட்டில் மட்டும் தென்படும். அது சரி என்று தங்களுக்குத் தோன்றுகிறதா? தவறு செய்தபிறகு, கடவுளை வணங்குவதை விட்டுவிட்டு, தவறு செய்யாமல் இருக்கும் மனப்பாங்கைப் பெற்று விடுங்கள். அவர் தண்டிக்கவே மாட்டார். தங்களுக்கு அருள் புரிவார்!

? நாக வழிபாடு அவசியமா? நாகங்கள் என்றதும் பயம்தானே மேலோங்கும்; பக்தி ஏற்படாது அல்லவா?

- கே.ராம்குமார், புதுச்சேரி


பயத்தில் வழிபடுவது என்கிற கொள்கையே பாரதத்தில் பிறந்தவர்களுக்கு இல்லை. பயம் இருந்தால், அதைப் போக்க வழிபடுவோமே தவிர, ‘பயம் இருக்கிறது; அதனால் கும்பிடுகிறேன்’ என்பது இங்கே இல்லை.

சாதாரணப் பாமரனுக்காக நாகம் என்று வைத்து அதை வழிபடுவதாக நீங்கள் நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். இந்தக் கல்லில் இருக்கும் நாகத்தை மட்டும் பார்க்காதீர்கள். வேதத்திலேயே சர்ப்பத்தைப் பற்றிச் சொல்லப்பட்டு இருக்கிறது.  

ஆயில்யம் நட்சத்திரத்தின் தேவதையே சர்ப்பம்தான். சர்ப்பத்தைச் சொல்லும் வேத மந்திரம் என்னென்ன சர்ப்பங்களை எல்லாம் சொல்கிறது தெரியுமா? பூமியில் இருக்கும் சர்ப்பம்; அந்தரட்சத்தில் (இடைவெளியில்)இருக்கும் சர்ப்பம்; வாயு மண்டலத்தையும் தாண்டி விண்வெளியில் கிரகங்களுக்கு இடையில் நழுவிப் போகக் கூடியதான சர்ப்பம்... இப்படி நிறைய சர்ப்பங்களைச் சொல்லும். அதை எல்லாம் நாகமாக வழிபடுகிறோம். நமது வீட்டின் கொல்லைப்புறத்துக்கு வரும் சாதாரண விஷப் பாம்பில்லை அது.

ஒரு கோயிலுக்குப் போகிறோம் என்றால், சுவாமியைப் பார்த்து பயப்படவா செய்கிறோம்? அசுரனை வதம் செய்யும் கோலத்தோடு கோபமும் குரோதமும் ததும்பும் அம்பாளின் முகத்தைப் பார்த்தால் பயமா வருகிறது? பக்திதானே வருகிறது... பயப்படுத்தும் உருவமாக இருந்தாலும் பயப்படுவதில்லையே நாம்? எனவே, பக்தியால் மட்டுமே வழிபடுகிறோம் என்பதில் உங்களுக்கு எந்தச் சந்தேகமும் வேண்டாம்.  

கேள்வி பதில் - கோபுரம் இல்லாமல் கோயில் கட்டலாமா?

? எங்கள் குலதெய்வத்துக்குப் புதிதாகக் கோயில் கட்டலாம் என்று திட்டமிட்டுள்ளோம். உறவுகளில் சிலர், கோபுரம் இல்லாமல் கோயில் இருக்கக் கூடாது. மூன்று நிலை கோபுரமாவது அமைக்க வேண்டும் என்கிறார்கள். பொருளாதாரத்தை மனதில் கொண்டு, கோபுரத்தைத் தவிர்த்தால் தவறா?

- கே.ராமமூர்த்தி, ஆத்தூர்


வெவ்வேறு வகையான கோயில்கள் உள்ளன. சுவரே இல்லாத கோயிலும் உண்டு. கூரை இல்லாத கோயில் உண்டு. நமக்காகத்தான் கோயில். கோயிலுக்காக நாம் இல்லை. நமக்கு எவ்வளவு வசதி இருக்கிறதோ அதற்குத் தகுந்தபடி கோயில் கட்டி வழிபடலாம் என்று நமக்காக இறங்கி வந்திருக்கிறது ஆகம சாஸ்திரம். கோயில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. மரத்தடியில் ஒரு பிள்ளையாரை வைத்தால் அது கோயில்தானே... எல்லாமே ஆகம சாஸ்திரப்படிதான் அமைந்திருக்கின்றன.

? நமது வீட்டிலோ, தொழில் ஸ்தானங்களிலோ இருக்கும் தெய்வப் படங்களை, பூஜிக்கும் நேரம் தவிர மற்ற தருணங்களில் திரை போட்டு மூடிவிட வேண்டும் என்கிறார்களே ஏன்?

- ஜி.கல்பனா, மரக்காணம்


திரை போடுவது எதற்கு? சுவாமிக்கு நிவேதனம் செய்யும்போதும் சில அலங்காரங்கள் செய்யும்போதும் பார்க்கக் கூடாது. அதற்குத்தான் திரை. பிம்பத்தின் சாந்நித்யத்துக்கும் திரைக்கும் சம்பந்தம் இல்லை. நல்லது-கெட்டது என்பதைத் திரையை வைத்து எடை போடக் கூடாது. பக்தர்களுக்காக வந்ததுதான் திரை. சில கோயில் களில் திரை இல்லை என்பதால், கதவைச் சாத்திவிடுவார்கள். இதெல்லாமே தரிசனம் செய்ய வருபவர்களுக்குச் சரியான தரிசனம் கொடுப்பதற்கான ஏற்பாடுதான்.

மற்றபடி, எல்லா இடத்திலும் வியாபித்திருக்கும் கடவுளைத் திரை போட்டு மறைத்துவிட முடியாது. அதனால், திரை போடுவதால் நன்மை- தீமை என்று எதுவும் கிடையாது.

? தெய்வ ஆயுதங்களின் கூர்முனையில் எலுமிச்சைப்பழத்தைச் செருகி வைப்பதற்கான தாத்பர்யம் என்ன?

-சி.கணபதிராமன், பரமன்குறிச்சி


சூலத்திலும், வேலாயுதத்திலும் எலுமிச்சைப் பழம் குத்தி வைப்பது, சம்பிரதாயம். அது சாஸ்திரத்தில் வந்ததல்ல. குத்தாவிட்டாலும் தப்பில்லை. எலுமிச்சைப்பழ மாலை போடுவதும் சம்பிரதாயம்தான். புது வண்டி கிளம்பும்போது, சக்கரத்தின் அடியில் எலுமிச்சைப்பழம் வைத்து நசுக்குவார்கள். விரலில் நகச்சுத்தி வந்தால் எலுமிச்சைப்பழம் செருகுகிறோம். முன்பெல்லாம் பெரியவர்களைப் பார்க்கப் போகும்போது எலுமிச்சைப்பழம் கொண்டு போவார்கள். காய்ந்தாலும் அதனுள் சாறு இருக்கும் என்பது எலுமிச்சைப்பழத்தின் குணம். இப்படி பல இடங்களில் இருக்கும் எலுமிச்சைப்பழம், ஆயுதங்களுக்கும் வந்துவிட்டது

? மந்திரம் ஜபிக்கும்போது குறிப்பிட்ட மந்திரத் துக்குரிய தெய்வத்தை மனதில் தியானிக்க வேண்டும் என்கிறார்கள். என்னால் அப்படிச் செய்ய முடியவில்லை. தெய்வத் திருவுருவைத் தியானிக்க முயற்சி செய்தால், ஜபத்தின் தொடர்ச்சி தடைப்படுகிறது. என்ன செய்வது?

எம்.பத்மநாபன், திருச்சி-2


ஜபத்துக்குப் பயன்படும் எழுத்துகளின் கோவையை மனம் அசைபோட வேண்டும். ஸ்லோகமும் தேவதா ஸ்வரூபமும் எழுத்துகளில் அடங்கிய தத்துவத்தின் வெளிப்பாடு.

உதாரணமாக, ‘நம:சிவாய’ என்கிற பஞ்சாட்சர ஜபம் செய்யும்போது, அதில் மனம் ஊன்றியிருக்க வேண்டும். ஸ்லோகத்தையோ, தேவதா ஸ்வரூபத்தையோ தியானிக்க முனைந்தால், நீங்கள் சொல்வதுபோல் ஜபத்தின் தொடர்ச்சி விடுபட வாய்ப்பு உண்டு.

‘நம:சிவாய’ என்ற எழுத்துகளின் கோவையில், ஸ்லோகம், ஸ்வரூபம் இரண்டும் அடங்கிவிட்டன. வேறு வேறாகப் பார்க்கும் எண்ணம் முளைத்தால், ஜபம் செய்யும் பக்குவத்தை மனம் அடையவில்லை என்று பொருள். முழு ஈடுபாட்டுடன் மனம் ஜபத்தில் லயித்தால், மற்ற விஷயங்களை மறந்துவிடும்.

சூட்சுமமான தத்துவம் பீஜாக்ஷரம்; ஸ்தூலமான வடிவம் ஸ்லோகம். அதன் ஸ்வரூபம், சூட்சுமத்தை எட்டிய பிறகு, ஸ்தூலத்துக்குத் திரும்புவது அறியாமை.

- பதில்கள் தொடரும்...