தொடர்கள்
Published:Updated:

சக்தியர் சங்கமம்!

சக்தியர் சங்கமம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சக்தியர் சங்கமம்!

சக்தியர் சங்கமம்!

அனுபவம்... ஆன்மிகம்!

வாழ்க்கை தரும் சில அனுபவங்கள் எப்போதும் மறக்க முடியாதவையாக அமைந்துவிடும். அவற்றில் நம் சக்தி மீறி நடக்கும் அற்புதங்களும் அடங்கும். அப்படியான சிலிர்ப்பூட்டும் சில தெய்விக அனுபவங்கள் இங்கே...  

சக்தியர் சங்கமம்!

கனவில் கேட்ட குரல்!

``எ
ன் பையனுக்கு இருபத் தெட்டு வயசு. அவன் ராசியில செவ்வாய் இருக்குறதால, செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணா தேடினோம். எவ்வளவு தேடியும் அமையல. அதனால, ஒருமுறை அவனைச் சிறுவாபுரி கோயிலுக்குக் கூட்டிட்டுப் போயிட்டு வந்தோம்.  

சக்தியர் சங்கமம்!

ரெண்டு நாள் இருக்கும். பையனோட கல்யாணம் பத்தின நினைவோட தூங்கிட்டேன். அப்ப ஒரு கனவு. `நீ ஆசைப்பட்ட மாதிரியே உன் பையனுக்குக் கல்யாணம் நடக்கும்’னு ஒரு குரல் கேட்டது. சட்டுன்னு முழிப்பு வந்துடுச்சு. எனக்கென்னவோ, அந்தக் குரல், கடவுளோட அசரீரியாகவே பட்டது. இப்போ ஒரு சம்பந்தம் வந்திருக்கு. அசரிரீ ரூபத்துல கடவுளே வந்து என் பையனுக்கு ஒரு நல்ல வரன் அமைச்சுக் கொடுத்துட்டார்னுதான் சொல்லணும். அவனுக்குக் கல்யாணம் ஆனதும் இன்னொரு தடவை சிறுவாபுரி முருகனைக் கும்பிட்டுட்டு வரணும்.’’

- ம.சித்ரா, கோவில்பட்டி

சக்தியர் சங்கமம்!

முப்பெயர் வாங்கிய முருகன்!

``எ
ன்னோட சொந்தத்துல ஒருத்தருக்குக் குழந்தை பிறந்து பிறந்து இறந்து போச்சு... எந்தக் குழந்தையும் தங்கலை. அப்போ திருச்செந்தூர் முருகன்கிட்ட `குழந்தை தங்குனா முப்பெயர் விடுறேன்’னு அவங்க வேண்டிக்கிட்டாங்க. அது மாதிரியே மூணு குழந்தை அவங்களுக்குப் பிறந்துச்சு. அவங்களும் `சக்திவேல் முருகன், கந்தவேல் முருகன், வெற்றிவேல் முருகன்'னு பெயர் வெச்சாங்க.  

சக்தியர் சங்கமம்!

கடவுள் கிருபையால குழந்தை பிறந்தது அற்புதமென்றால், அவர்கள் வேண்டியது போலவே மூன்று குழந்தைகள் பிறக்க, முருகன் முப்பெயர் வாங்கிக்கொண்டான் என்றால், அது அற்புதத்திலும் அற்புதம் அல்லவா! இப்ப நானும் முருகனின் பக்தை. எந்தப் பிரச்னையானாலும் முருகன் கோயிலுக்குப் போவேன். உடனே சரியாகிடும். கடவுள் நம்பிக்கையில்லாத எனக்கு இந்த விஷயம், `சாமி கும்பிடாம ஒரு வேலையும் ஓடாது’ங்குற அளவுக்கு மாத்திடுச்சு.’’

- குமாரி கௌசல்யா, கல்பாக்கம்

கவுன்சலிங்கில் துணை நின்ற கண்ணப்ப சாமி!

``எ
ன் பையனுக்கு சென்னையில பிரபலமான இன்ஜினீயரிங் காலேஜ்ல படிக்க ஆசை. அவன் 87% மார்க் வெச்சுருந்தான். எல்லாரும்  ‘டொனேஷன் கொடுத்தாதான், அங்கே சீட் கிடைக்கும்’னு சொன்னாங்க. டொனேஷனுக்கு நான் எங்கே போவேன்?    

சக்தியர் சங்கமம்!

காவாங்கரைல உள்ள `கண்ணப்ப சாமி' ஜீவ சமாதிக்குப் போய் ‘நீ தான் வழிகாட்டணும்’னு மனமுருகி வேண்டிக்கிட்டேன்.

வேண்டியதுபோலவே, கவுன்சலிங் கூப்பிட்டாங்க.   அன்னிக்கு ஆறு `சீட்'தான் இருந்துச்சு. எங்களுக்கு முன்னாடி நிறையப் பேர் இருந்தாங்க. நாங்க கவுன்சலிங் போகும்போது, ஒரே ஒரு `சீட்'தான் இருந்துச்சு. அதுவும் எங்களுக்கே கிடைச்சது. லட்சக்கணக்குல டொனேஷன் கொடுக்காம என் பையனுக்கு சீட் கிடைச்சது. சாமி துணை இருந்தா எதையுமே சாதிக்க முடியும்.’’

வ.சண்முகத்தாய், சென்னை


தொகுப்பு: வெ.வித்யா காயத்ரி