Published:Updated:

கேள்வி பதில் - தேவ பிரச்னம் தெய்வ வாக்கா?

கேள்வி பதில் - தேவ பிரச்னம் தெய்வ வாக்கா?
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில் - தேவ பிரச்னம் தெய்வ வாக்கா?

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் - படம்: மஹி தங்கம்

கேள்வி பதில் - தேவ பிரச்னம் தெய்வ வாக்கா?

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் - படம்: மஹி தங்கம்

Published:Updated:
கேள்வி பதில் - தேவ பிரச்னம் தெய்வ வாக்கா?
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில் - தேவ பிரச்னம் தெய்வ வாக்கா?

? தேவ பிரச்னம் என்பது ஜோதிடத்தின் ஒரு பிரிவா அல்லது தெய்வ வாக்காகச் சொல்லப்படுவதா?

- க.செந்தில்குமார், கடலூர்    

கேள்வி பதில் - தேவ பிரச்னம் தெய்வ வாக்கா?

பலன் சொல்லும் பகுதியைச் சார்ந்த ஜோதிடத்தின் சிறப்புப் பிரிவு - ‘பிரச்னம்’. கோயிலில் உறைந்திருக்கும் இறையுருவ ஆராதனையில் தெரிந்தும் தெரியாமலும் நிகழ்ந்த தவறுகளையும் நிறைவுகளையும் கண்டறியப் பயன்படும் ‘தேவ பிரச்னம்’ என்பது, ஜாதகம் பார்த்துச் சொல்லும் பலன் அல்ல. இறையுருவத்துக்கு ஜாதகம் வராது. இறையுருவங்களுக்குப் பூர்வஜென்ம கர்மவினை இல்லை.

கடவுளிடம் நமது அணுகுமுறையில் ஏற்பட்ட தவறுகளின் தொகுப்பு, அதனால் விளைந்த சைதன்யத்தின் குறை ஆகியவையே தேவ பிரச்னத்தில் ஆராயப்படும். தர்ம சாஸ்திரத்துக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. பலன் சொல்ல கிரகங்களைப் பயன்படுத்தினாலும், விளக்கம் முற்றிலும் மாறுபட்டிருக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கேள்வி பதில் - தேவ பிரச்னம் தெய்வ வாக்கா?நித்ய பூஜை, சிறப்பு பூஜை, உற்சவ கால பூஜைகள், பூசாரியின் நடைமுறை, நடத்தை, பூஜைப்பொருள்களின் குறை - நிறை, அறங்காவலர்களின் அணுகுமுறையில் தென்படும் விபரீதங்கள், இறையுருவத்தின் நிறைவு போன்ற விஷயங்கள் ஆராயப்படும். தவறுகளுக்குப் பரிகாரமும், மேம்படுத்த வேண்டிய வழிமுறைகளும் பரிந்துரைக்கப்படும். கேள்வி அறிவால் இதைக் கற்க இயலாது. ஆசிரியரிடம் பயின்று தெரிந்துகொள்ள வேண்டிய கல்வி அது.

? பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்த விஞ்ஞான ஆய்வுகள் இன்றைக்கும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இதுகுறித்த தகவல்கள் நமது புராணங்களில் உண்டா?

- இ.ராஜேஸ்வரன், கோவை-2


‘பூமி உருண்டை’ என்கிற உண்மையை 450 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஸ்பானிஷ் கப்பல் பயணியான ‘மெகல்லன்’ கண்டுபிடித்ததாகச் சொல்வர். ஆனால், பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே, வேதமும் அதையொட்டிய நூல்களும் பூமி உருண்டை என்றே சொல்லி வந்தன. ‘அண்டம்’ முட்டை வடிவம் என்கிறது புராணம். வேத காலத்து வேதம் ஓதுபவர்கள், ‘அநேக கோடி ப்ரம்மாண்டானாம் மத்யே’ என்று சங்கல்பம் செய்வதுண்டு. படைப்பவன் முதலில் நீரைப் படைத்தான். அதன்பிறகு, அதில் ப்ரம்மாண்டத்தை, அதாவது உருண்டை வடிவில் பூமியைப் படைத்தான் என்கிறது புராணம்.

ஆனால், ‘பூமி உருண்டை; கோள வடிவமானது என்பதைக் கண்டுபிடித்தது வெளிநாட்டவன்தான். நாம் எல்லோரும் பூமி தட்டையாக இருப்பதாகவே நினைத்தோம். அவன்தான் நம் கண்ணைத் திறந்து உண்மையை விளக்கினான்’ என்று நம்மவர்கள் குழந்தைகளுக்குப் பாடம் கற்பிப்பது வேதனையளிக்கிறது.

பல உதாரணங்களைக் காட்டி... எலுமிச்சைப்பழம், எறும்பு, கப்பல் - கொடிமரம் என்றெல்லாம் விளக்கி, குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்கள் இன்றும் உள்ளனர். சந்திரனில் மண்ணும் நீரும் இருப்பதை வேதமும் ஜோதிடமும் பறைசாற்றியும் காதுக்கு எட்டவில்லை நம்மவர்களுக்கு. அதேநேரம், இன்றைய நம்மவன் (நிகழ்காலத்தில் வாழும்) `ஒருவனே கண்டுபிடித்தான்' என்று எழுதவும் துணிகிறார்கள். பழைய சோறு, இன்டர்நேஷனல் பேக்கிங்கில் யு.எஸ் முத்திரையுடன் வந்தால், அதை வாங்கிப் பெருமைப்பட்டுக்கொள்ளும் பெரியோர்களும் நம்மில் உண்டு. அடிமைத்தனத்துக்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது.   

கேள்வி பதில் - தேவ பிரச்னம் தெய்வ வாக்கா?

ஒலியின் வேகத்தைவிட ஒளியின் வேகம் பன்மடங்கு அதிகம் என்பதை அநாயாசமாகத் தனது காப்பியச் செய்யுளில் கதைக்கு உகந்த உதாரணமாகக் காட்டிவிட்டான் காளிதாசன். ஆனால், நம்மவர்களோ அதை வெளிநாட்டானின் அருளால் கிடைத்த தகவலாக வெளியிடுகிறார்கள்.

15 வருடங்கள் ஆராய்ச்சியில் பொழுதுகளை வீணாக்கி, ‘கங்கை நீரில் விஷக்கிருமிகள் அழிந்துவிடுகின்றன’ என்று வெளிநாட்டுக் காரன் சொன்னால், அதைக்கேட்டு நம்மவன் கங்கை ஜலம் உயர்ந்தது என்கிறான்! ‘இமம் மே கங்கே யமுனே ஸரஸ்வதி’ எனும் வேத வாக்கு அவர்கள் காதில் விழுந்தாலும், அந்நியருக்கு உயர்வு அளிப்பதைப் பண்பாக எண்ணுகிறார்கள்.  இடைப்பட்ட நாளில் நம் வேத காலச் சிந்தனைக்கு ஏற்பட்ட இழுக்கு இன்னும் அழியவில்லை. கைகள் இருந்தும் ஸ்பூனால் உணவருந்தும் பழக்கம் தொடர்கிறது. வெள்ளையர் வெளியேறி 65 ஆண்டுகள் கழிந்தும்கூட, நம் குழந்தைகள் அவர்களது பண்பாட்டை வளர்த்துக் கொண்டிருக்கின்றனர்.

பூமியின் ஆகர்ஷண சக்தியை ஆர்யபட்டர் சொன்னாலும், அந்தப் பெருமையை வெளி நாட்டவருக்குத் தாரைவார்த்துக் கொடுக்கும் தாராளம் நம்மவர்களுக்குண்டு. தரம் வாய்ந்த கேரள முந்திரிப் பருப்பும், வடநாட்டு பாஸ்மதியும் யு.எஸ்ஸில் கிடைக்கும். நாம் சுவைப்பதோ இரண்டாம் தர, மூன்றாம் தர பொருள்களையே. அவன் உயர்ந்தவன்; உயர்ந்த பொருள் அவனுக்குரியது என்று பக்தி சிரத்தையுடன் நாம் அனுப்பி வைக்கிறோம். விண்வெளியில் வளையவரும் கிரகங்கள், அதனால் ஏற்படும் விளைவுகள், கிழமைகள், ஆண்டுகள் அத்தனையும் உலகுக்கு அளித்த ஜோதிடம் திரைமறைவில் தள்ளப்பட்டுவிட்டது. ஆங்கில ஆண்டைக் கொண்டாடுவதில் நம்மவர்களுக்குத் தனி ஆனந்தம். உயிருள்ள வரைக்கும் தம்பதியாக வாழ்ந்து அனுபவிக்கும் நம்மை, விவாகரத்தை ஏற்கவைத்துவிட்டது புதிய கலாசாரம்; அது நம்மவர்களுக்கு இனிக்கிறது.

வேத சிந்தனைகள், சாஸ்திரக் கோட்பாடுகள் அனைத்தையும் கேட்டும், படித்தும்... பொறாமை கொண்ட அவர்கள், அவற்றின் நல்ல விளக்கத்தை மறைத்து, கசப்பை உமிழ்ந்திருப்பதை இன்னும் நாம் உணரவில்லை. வேதம், அதைப் பின்பற்றி வெளிவந்த சாஸ்திரங்கள்... ஏன் பௌத்தம், ஜைனம் தொடர்பான நூல்களும், அணுவையும் அதன் உட்பிரிவான பரமாணுவையும் அவற்றின் செயல்பாட்டையும் எடுத்துரைக்கின்றன. ஆனாலும், அதையெல்லாம் புறக்கணித்துவிட்டு, அணு விதிகள் அயல்நாடுகளின் வெகுமதி என்பவர்களும் உண்டு. நம்மவர்கள் விழித்துக் கொள்ள பல காலம் ஆகும். லோகாயத வாழ்க்கையில் இருந்து ஆன்மிக வாழ்க்கையில் பார்வையைச் செலுத்தும் பக்குவம் வரும் வேளை இன்னும் வரவில்லை.

? அனுமனுக்கு விரதம் இருக்க விரும்பும் பக்தர்கள், எந்தெந்த தினங்களில் அவரை வழிபட வேண்டும்? தங்களின் அறிவுரை தேவை.

- பெ.சிதம்பரம், செங்கோட்டை


அனுமனை வழிபடுவதற்கு நாள் - கிழமை எல்லாம் பார்க்கவேண்டிய தேவையில்லை. நேரம் கிடைத்தால், எப்போது வேண்டுமானாலும் வழிபடலாம். மற்ற அலுவல்களிலிருந்து மனம் முற்றிலும் விடுபட்ட நிலையில் அவரை வழிபடுவது சிறப்பான பலனை அளிக்கும்.எந்நேரமும் அவருடைய நாமாவைச் சொல்லிக் கொண்டு, அலுவல்களுடன் இணைந்து செயல் படுவது, பக்தியைச் கொச்சைப்படுத்துவதாகும்.

மனம் ஒரு புலனோடு இணையும் வேளையில், அதே அளவோடு அதே நேரம் இன்னொரு புலனோடும் இணையாது. மனம் ஒன்றுதான்; இரண்டு இல்லை. பல் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக, நேரம் கிடைக்கும்போதெல்லாம் பல் துலக்குவதில்லை. உடல் அழுக்கை அகற்று வதற்காக எப்போதும் குளித்துக்கொண்டே இருப்பதில்லை.

அன்றாட அலுவல்களில் சிக்கித்தவிக்கும் இன்னாளில்... வழிபாட்டுக்கென குறிப்பிட்ட வேளையைத் தேர்ந்தெடுப்பது சிறப்பு. தவிர, நீடித்த பணிவிடையைச் செவ்வனே செய்யவும் இயலும். ஆகையால், வியாழக்கிழமை அன்று அனுமனை வழிபடுங்கள்; அவருடைய அருள் கிடைக்கும்.

- பதில்கள் தொடரும்...

அண்டமும் பிண்டமும்    

கேள்வி பதில் - தேவ பிரச்னம் தெய்வ வாக்கா?

‘‘அகண்ட ஆகாசத்தில் என்னென்ன இருக்கின்றனவோ அதெல்லாம் ஜீவனிடமும் இருக்கின்றன. மனுஷ்ய சரீரத்தில் அவையெல்லாம் இந்த ஜீவனுடைய இந்திரியங்களுக்கு எட்டுகிற மாதிரி வேறுவிதமாக இருக்கின்றன.

இவன் தொண்டையிலே ஒருவிதமான சப்தங்களை உருவாக்குகிறான் என்றால், ஆகாசத்திலும் அதற்கு மூலமாக நம் காதுக்குக் கேட்க முடியாததாகச் சில வித சப்தங்கள் இருக்கின்றன. ரேடியோ மின்சார அலையைக் கிரகித்து சப்த அலையாக மாற்றுகிறதுபோல், இவனும் அந்த ஆகாச சப்தங்களைக் கிரகித்து அவற்றை ஜீவனுடைய இந்திரியங் களுக்கு, காதுக்குக் கேட்கக்கூடிய சப்தங்களாக மாற்றித்தர முடியுமானால் லோக க்ஷேமத்துக்கு என்ன வேண்டுமோ, அதை சப்தத்தாலேயே சாதித்துக்கொண்டு விடலாம். இதைப் பண்ணிக்கொடுக்கிற ஸயன்ஸ்தான் யோகம்.’’    

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism