Published:Updated:

நாரதர் உலா... - வைத்தீஸ்வரர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் எப்போது?

நாரதர் உலா... - வைத்தீஸ்வரர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் எப்போது?
பிரீமியம் ஸ்டோரி
நாரதர் உலா... - வைத்தீஸ்வரர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் எப்போது?

நாரதர் உலா... - வைத்தீஸ்வரர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் எப்போது?

நாரதர் உலா... - வைத்தீஸ்வரர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் எப்போது?

நாரதர் உலா... - வைத்தீஸ்வரர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் எப்போது?

Published:Updated:
நாரதர் உலா... - வைத்தீஸ்வரர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் எப்போது?
பிரீமியம் ஸ்டோரி
நாரதர் உலா... - வைத்தீஸ்வரர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் எப்போது?

‘‘கொடுமை கொடுமை என்று கோயிலுக்குப் போனால், அங்கே இரண்டு கொடுமை தலைவிரித்து ஆடுதாம்’’ என்று அங்கலாய்த்த படியே அறைக்குள் பிரவேசித்தார் நாரதர்.  

நாரதர் உலா... - வைத்தீஸ்வரர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் எப்போது?

‘‘என்ன நாரதரே, அங்கலாய்ப்பு பெரிதாக இருக்கிறதே? வேதாரண்யம் போவதாகச் சொன்னீரே... அங்கு ஏதேனும் பிரச்னைகளா?’’ வெயிலுக்கு இதமாக நாரதருக்கு இளநீர் கொடுத்து உபசரித்தபடியே, நமது கேள்வியை முன்வைத்தோம். ‘சர்சர்’ரென்று இரண்டே நிமிடங்களில் இளநீரை உறிஞ்சிக்குடித்து முடித்தவர், தம்மைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு பேச ஆரம்பித்தார்.

‘‘வேதாரண்யத்துக்குப் போகிறேன் என்று சொன்னது உண்மைதான். ஆனால், அதற்குள்ளாக வைத்தீஸ்வரன்கோயில் குறித்து சில தகவல்கள் மெயில் பண்ணியிருந்தார் நண்பர் ஒருவர். விஷயம் அவசரமாகப்படவே, வைத்தீஸ்வரன்கோவிலுக்குப் பயணத்தை மாற்றிக்கொண்டேன்.’’

‘‘அந்த ஊர் கோயில் பிரச்னைகள் குறித்து ஏற்கெனவே பகிர்ந்து கொண்டிருந்தீரே. அதுபற்றி நமது இதழிலிலும் சொல்லியிருந்தோமே... இன்னுமா அந்தப் பிரச்னைகள் எல்லாம் களையப்படவில்லை?’’
 
நமது ஆதங்கத்தை உள்வாங்கிக்கொண்டவர், தலையசைத்து அதை ஆமோதித்தபடியே பேச்சைத் தொடர்ந்தார்.

‘‘முன்னர் சொன்ன பிரச்னைகளோடு வேறு சில விஷயங்களையும் வேதனையோடு பகிர்ந்து கொண்டார்கள் பக்தர்கள் சிலர்.’’

‘‘ஒவ்வொன்றாகச் சொல்லும்.’’

‘‘அதற்குத்தானே நானிருக்கிறேன். ஒன்று விடாமல் சொல்கிறேன் கேளும்’’ என்றபடியே விவரிக்க ஆரம்பித்தார்.

‘‘நாகை மாவட்டத்தில் உள்ளது வைத்தீஸ்வரன்கோவில். இங்குள்ள வைத்தியநாதசுவாமி கோயில், தருமபுர ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதை நீர் அறிந்திருப்பீர். நவகிரக தலங்களில் செவ்வாய்க்குரிய தலமாகக் கருதப்படும் இந்தத் தலத்தில், மனிதகுலத்துக்கு வருவதாகச் சொல்லப்படும் 4,448 வியாதிகளையும் தீர்க்க, தையல்நாயகி அம்பாள், தைலப் பாத்திரத்தில் சஞ்சீவியும் வில்வமரத்து அடி மண்ணும் எடுத்து வர, வைத்தியநாத சுவாமி மருத்துவராக அருள்பாலிக்கிறார் என்றும் முருகப்பெருமான் சிவனாரை வழிபட்ட தலம் என்றும் சொல்கின்றன புராணங்கள். இப்படி மகத்துவங்கள் நிறைந்த இந்தத் தலத்தில் பிரச்னைகளும் நிறைய என்கிறார்கள் பக்தர்கள்’’ என்று சற்றே பேச்சை நிறுத்திய நாரதர், லேப்டாப்பை திறந்து தமக்கு வந்த இ-மெயிலையும் நம்மிடம் காண்பித்தார்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாரதர் உலா... - வைத்தீஸ்வரர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் எப்போது?

‘‘மெயில் தகவல்கள் இருக்கட்டும். நீர் நேரில்போய் வந்தீரே... அதுபற்றி சொல்லும்’’ என்றோம் நாம்.

‘‘கோயிலைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கான தங்கும் வசதி போதிய அளவில் இல்லை. கோயிலுக்குச் செல்லும் வழியில் கடைகள் ஆக்கிரமிப்பு, கடைக்காரர்கள் சிலர் பக்தர்களிடம் காட்டும் அடாவடிகள் குறித்தெல்லாம் ஏற்கெனவே
சொல்லியிருந்தோம். அந்தப் பிரச்னைகள் எல்லாம் அப்படியே தொடர்வதுதான் வேதனை.  அதுமட்டுமின்றி, கோயிலின் நிர்வாகச் சீர்கேடு குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடத்திவரும் அன்பர் பாலசுப்பிரமணியம் வேறு சில பிரச்னைகளையும் பகிர்ந்துகொண்டார். ‘பல கோடி ரூபாய் மதிப்புள்ள கோயிலுக்குச் சொந்தமான இடங்களை குறைவான விலைக்கு விற்றதாகக் கணக்குக்காட்டி,  பல கோடி ரூபாயைச் சுருட்டி இருக்கிறார்கள். கோயில் நிலங்களை விற்றதில் அறநிலையத் துறையின் அனுமதி பெறாததுடன், இதுதொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் ஆதீன நிர்வாகம் மதிக்கவில்லை. மேலும், அறநிலையத்துறையின் அனுமதி பெறாமல், தங்க ரதம் செய்வதற்காக தங்க ரதத் திருப்பணி உண்டியல் வைத்துப் பக்தர்களிடம் பணம் வசூலிக்கிறார்கள்’ என்று கொட்டித் தீர்த்துவிட்டார் அவர்’’ என்ற நாரதரிடம், ‘‘தங்க ரதத் திருப்பணி எப்போதோ முடிந்துவிட்டதாகக் கேள்விப்பட்டோமே’’ என்றோம்.

‘‘உண்மைதான். தங்க ரதத் திருப்பணி முடிந்து பத்து வருடங்கள் ஆகியும், பணம் வசூலிப்பதாக பக்தர்கள் குறைபட்டுக்கொண்டனர்்’’ என்றார் நாரதர்.

‘‘கோயில் கும்பாபிஷேகம் குறித்தும் பக்தர்கள் மத்தியில் ஆதங்கம் உண்டு என்று தகவல் வந்ததே’’ - நமக்கு வந்த தகவலையும் நாரதரிடம் பகிர்ந்துகொண்டோம்.

‘‘அந்தக் கொடுமையை ஏன் கேட்கிறீர்? 18 வருடங்களுக்கும் மேலாகியும் கும்பாபிஷேகம் செய்வதற்கான சிறு முயற்சியைக்கூட மேற்கொள்ளவில்லை என்கிறார்கள். அதேபோல் கட்டளை மடம், ஆர்.சி.சி. மண்டபம், பணியாளர் குடியிருப்பு தொடர்பான பணிகள் எல்லாமே அறநிலையத்துறையின் அனுமதி பெறாமல் டெண்டர் விடப்பட்டு அரைகுறையாக நிற்கின்றனவாம். மேலும் கோயிலுக்குள்ளேயே சுவாமி சந்நிதி, அம்பாள் சந்நிதி, மடப்பள்ளி, வசந்த மண்டபம் என்று பல இடங்கள் சிதிலம் அடைந்துள்ளதாகவும், வங்கி இருப்பில் போதிய பணம் இருந்தும் கோயிலைப் புதுப்பித்துக் கும்பாபிஷேகம் செய்யாமல் இருப்பதாகவும் பாலசுப்பிரமணியம் குறைப்பட்டுக்கொண்டார்’’ என்றார் நாரதர்.

‘‘இதுபற்றி அறநிலையத்துறை அதிகாரிகளிடம் பேசினீர்களா?’’

‘‘பேசினேன். மயிலாடுதுறை அறநிலையத்துறை இணை ஆணையர் கஜேந்திரனிடம் கேட்டபோது, ‘எங்கள் உத்தரவையும் சரி, நீதிமன்ற உத்தரவையும் சரி... ஆதீன நிர்வாகம் மதிப்பதே இல்லை. நாங்கள் என்ன செய்வது?’ என்று குறைபட்டுக்கொள்கிறார் அவர்’’ என்ற நாரதரிடம்,

‘‘சரி! கோயில் நிர்வாகத் தரப்பில் என்ன சொல்கிறார்கள்?’’ என்று கேட்டோம்.

‘‘ஆதீனம் சார்பில் கட்டளைத் தம்பிரான் திருநாவுக்கரசர் சுவாமிகளிடம் கேட்டேன். ‘இட விவகாரம் எல்லாம் கோர்ட்டில் இருக்கு. 12 வருஷத்துக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் செய்யணும்னு எந்தச் சட்டத்திலும் சொல்லலை. கோயில் வேலைக்கும் ஆள் கிடைப்பதில்லை. எல்லாம் நடக்கும்போது நடக்கும்’ என்று முடித்துக்கொண்டார்’’ என்ற நாரதரிடம், திருவாரூர் ஆழித் தேரோட்டம் குறித்து விசாரித்தோம்.    

நாரதர் உலா... - வைத்தீஸ்வரர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் எப்போது?

‘‘திருவாரூர் ஆழித்தேரோட்ட திருவிழா குறித்த தகவல்கள் ஏதேனும் உண்டா?’’

‘‘கோலாகலமாக நடந்துமுடிந்திருக்கிறது ஆழித் தேரோட்டம். காலையில் 7:20 மணியளவில்  உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், மாவட்ட ஆட்சியர் தேர் வடத்தைப் பிடித்திழுக்க தேரோட்டம் ஆரம்பித்தது. இந்த வைபவத்தில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி மற்றும் நீதிபதி மகாதேவன் ஆகியோரும் கலந்துகொண்டார்கள்''

``கூட்டம் நிறைய இருந்ததா? விழா ஏற்பாடுகள் எல்லாம் எப்படி?''

``சுமார் 50,000 பேர் திரண்டிருப்பார்கள். அன்றையதினம் மேகமூட்டமாக இருந்ததால் வெயில் தாக்குதலில் இருந்து தப்பித்துக் கொண்டார்கள் பக்தர்கள். மற்றபடி தன்னார்வ  அமைப்புகளும் அடியார்களும்தான் ஆங்காங்கே குடிநீர், நீர்மோர் என்று வழங்கிக் கொண்டிருந் தார்கள்.''

``தெப்பக்குளத்தில் நீர் நிரம்புமோ நிரம்பாதோ என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்தீரே...'' என்று நாம் முடிப்பதற்குள் நாரதர் முந்திக்கொண்டார்.

``பரவாயில்லை. தளும்பத் தளும்ப நீர் இல்லை என்றாலும் ஓரளவுக்கு நீர்நிரம்பிக் கிடந்தது; கமலாலயக் குளத்தில் பக்தர்கள் நீராடியதையும் காணமுடிந்தது'' என்று  நாரதர் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, அவருக்குச் செல்போனில் அழைப்பு வந்தது.

‘‘வேதாரண்யம் நண்பர்தான் அழைக்கிறார். போய் பார்த்துவிட்டு வருகிறேன். அதுபோக, இன்னொரு தகவலும் உலாவுகிறது. திருக் கண்ணபுரம் செளரிராஜ பெருமாள் கோயிலில் நிர்வாகிகளுக்கிடையேயான கோஷ்டிப் பூசலால் பிரம்மோற்ஸவமே தடைப்பட்டு நிற்கிறதாம். அது பற்றியும் விசாரித்து வருகிறேன்’’ என்ற நாரதர்,  நம்முடைய பதிலை எதிர்பார்க்காமல் புறப்பட்டு விட்டார்.

படங்கள் : க. சதீஷ்குமார், ஈ.ஜெ. நந்தகுமார்