Published:Updated:

நாரதர் உலா... - சீர் பெறுமா சிவாலயம்?

நாரதர் உலா... - சீர் பெறுமா சிவாலயம்?
பிரீமியம் ஸ்டோரி
நாரதர் உலா... - சீர் பெறுமா சிவாலயம்?

நாரதர் உலா... - சீர் பெறுமா சிவாலயம்?

நாரதர் உலா... - சீர் பெறுமா சிவாலயம்?

நாரதர் உலா... - சீர் பெறுமா சிவாலயம்?

Published:Updated:
நாரதர் உலா... - சீர் பெறுமா சிவாலயம்?
பிரீமியம் ஸ்டோரி
நாரதர் உலா... - சீர் பெறுமா சிவாலயம்?

   "மாசிலநாதர் கோயில்னு பேரு, ஆனால், அங்குதான் அனைத்து வகை குற்றங்களும் நடக்கின்றன” என்று சொல்லியபடியே வந்தமர்ந்தார் நாரதர்.  வெயிலில் வியர்த்துவந்த நாரதருக்கு ஏ.சி போட்டுக் குளிரவைத்து, ``என்ன நாரதரே... எந்தக் கோயில், என்ன குற்றம்?'' என்று கேட்டோம்.   

நாரதர் உலா... - சீர் பெறுமா சிவாலயம்?

“ `நாகை மாவட்டம், தரங்கம்பாடி சுற்றுலா தலத்தின் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த மாசிலநாதர் ஆலயம் உள்ளது.  மது, மாது, சூது இவை மூன்றும் மனித வாழ்வின் மகா பாவங்கள் என்று கூறுகிறார்கள். ஆனால், இவை அத்தனையும் இந்தக் கோயில் ஏரியாவில் நித்தமும் சத்தமில்லாமல் நடப்பதுதான் கொடுமை.  நீங்கள் நேரில் ஒருமுறை விசிட் செய்யுங்களேன்' என்று நண்பர் ஒருவரிடமிருந்து வாட்ஸ்அப்பில் தகவல் வந்தது. அதுதான் நேரில் சென்று வந்தேன்'' என்ற நாரதர், அந்தக் கோயில் குறித்த பிரச்னைகளைக் கொட்ட ஆரம்பித்தார். “அங்கே கடலோரம் காம்பவுண்ட் சுவர் இல்லாமல் தனித்தனி சந்நிதிகள் அமைந்திருப்பதும், அவற்றுக்கிடையே சந்துபோன்ற இடைவெளி இருப்பதும், மறைமுக மாய் தவறு செய்பவர்களுக்கு வாய்ப்பாகப் போய்விட்டது.  ஒருபக்கம்  நான்வெஜ் டிஷ்கள், ஊறுகாய் சகிதம் சாராய பார்ட்டிகள் கனஜோராக நடக்கின்றன.   மறுபக்கம், நாலுபேர் பணம் வைத்து ஆடு-புலியாட்டம் ஆடுகிறார்கள்.  எல்லாவற்றையும் பார்த்து மனம் நொந்துபோனேன். இதுபற்றி விசாரிக்கலாம் என்று, பக்கத்திலிருந்த பாலு பூசாரியிடம் பேச்சு கொடுத்தேன்.      

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாரதர் உலா... - சீர் பெறுமா சிவாலயம்?

`இந்தக் கோயிலுக்குக் கிழக்குப் பக்கம்தான் வாசல்.  ஆனால், இங்கு நடக்கும் கொடுமைகளைப் பார்க்க சகிக்காமல், குருக்கள் உட்பட பக்தர்கள் நொந்துபோய் கோயிலின் பின்பக்கமாகத்தான் உள்ளே நுழைகிறார்கள். நஞ்சை, புஞ்சைன்னு 520 ஏக்கர் சொத்துள்ள கோயில்ல நிர்வாகம் சரியில்ல.  வாசல் கேட் எல்லாம் துருப்பிடிச்சுக் கிடக்கு.  ஈசன் கிழக்கு நோக்கிக் கடலைப் பார்க்கும்படிக் கோயில் அமையறது ரொம்ப அபூர்வம். ஆனால், இந்தக் கோயிலின் அருமை யாருக்கும் தெரியலை' என்று வருத்தத்தோடு சொல்கிறார்'' என்றார் நாரதர். `‘இதுபற்றிக் கோயில் நிர்வாகத் தரப்பில் பேசினீரா?’'

“பேசாமல் இருப்பேனா... அறநிலையத்துறை செயல் அலுவலர் முருகையனிடம் கேட்டேன். ‘இது சுற்றுலா பகுதி என்பதால் வெளியூரிலிருந்து வருகிறவர்களைத் தடுக்க முடியல. காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கவும் சொல்லியிருக்கிறேன்.  நிரந்தரமா கோயில் சார்பில் காவலர் ஒருவரை நியமித்தால்தான் ஓரளவுக்குத் தடுக்க முடியும்.  கோயில் நிலங்களில் இறால் பண்ணைக்குக் குத்தகைக்குக் கொடுத்து வருமானத்தை அதிகரித்தால்தான் கோயிலுக்கு பல நல்ல காரியங்களைச் செய்ய முடியும்.  அதற்கு முயற்சி செய்துகிட்டு வர்றேன்' என்று முடித்துக் கொண்டார்'' என்றார் நாரதர்.  

நாரதர் உலா... - சீர் பெறுமா சிவாலயம்?

அவரே தொடர்ந்து, `‘அடுத்து, அருகிலுள்ள திருவிடைக்கழி முருகன் கோயிலுக்குப் போனேன். முருகனும் அவர் தந்தை சிவனும் ஒரே கருவறையில் காட்சிதரும் கோயில் இது’' என்ற நாரதரிடம், `‘அங்கேயும் பிரச்னையா?’' என்று கேட்டோம். ``ஆமாம்'' என்று ஆமோதித்தவர், அங்குள்ள பிரச்னைகளை விவரித்தார். “குலோத்துங்கச் சோழனால் கட்டப்பட்டு, சரபோஜி மன்னரால் காணிக்கையாக ஏராளமான நிலங்கள் வழங்கப்பட்ட இக்கோயிலை ஜெயராமன் என்பவர் பரம்பரை டிரஸ்டியாக கோர்ட் மூலம் அதிகாரம் பெற்று கோயிலை நிர்வகிக்கிறார். `காரைக்குடி, சுவாமிமலை, சிதம்பரம் என பல ஊர்களிலிருந்து பாதயாத்திரையாக ஆண்டுக்கு பல லட்சம் பக்தர்கள் வரும் இக்கோயிலில் கழிவறை இருந்தும் பயன்பாட்டில் இல்லை. குளிப்பதற்கு எந்த வசதியும் இல்லை.  குடிப்பதற்குக் கூட குடிநீர் இல்லை' என்று பாதயாத்திரையாக வந்த சேகர் என்ற பக்தர் சொன்னார்.  அழகிரிசாமி என்பவரோ, `அறநிலையத் துறைக்குக் கோயில் வருமானத்தைக் குறைத்துக் கணக்கு காட்டப்படுகிறதோ என்று சந்தேகம் எழுந்துள்ளது. லட்சக் கணக்கில் வருமானமிருந்தும் பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் ஏன் நடத்தவில்லை. இதுகுறித்து அறநிலையத் துறைக்கு நான் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை' என்றார் வேதனையோடு. பரம்பரை டிரஸ்டி ஜெயராமனிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டேன்.  அவரோ, `உங்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை' என்கிறார்!'' என்ற நாரதரிடம்,  `‘அறநிலையத்துறை அதிகாரிகளிடம் பேசினீரா?'' என்றோம்.       

நாரதர் உலா... - சீர் பெறுமா சிவாலயம்?

``அறநிலையத்துறை செயல் அலுவலர் சிவக் குமாரிடம் பேசினேன். கழிவறை கொஞ்சம் பராமரிப்பில்லாம இருக்கு. கும்பாபிஷேகம் செய்ய தொல்லியல் துறையிலிருந்து ஒப்புதல் வாங்கியிருக்கோம். திட்ட அறிக்கைத் தயார் செய்து அனுப்பியிருக்கோம். கும்பாபிஷேகம் செய்யும் போது இந்தக் குறைகளைச் சரி செஞ்சிடலாம்.  பரம்பரை டிரஸ்டின்னு கோர்ட்மூலம் உத்தரவு வாங்கியிருக்காங்க. அதில் நாங்க தலையிட முடியாது.  உள்ளூர்ல அவருக்குக் கொஞ்சம் பகை இருக்கு. அதனால சின்ன விஷயத்தையெல்லாம் பெரிசுபடுத்துறாங்க' என்றார் அவர்'' என்ற நாரதர், நாம் கேட்பதற்குள் முந்திக்கொண்டு, ``திருக்கண்ணபுரம் பிரம்மோற்ஸவம் குறித்து விசாரித்து வருகிறேன். அடுத்தமுறை வரும்போது விரிவாகப் பகிர்ந்துகொள்கிறேன்'' என்றபடியே நம்மிடம் விடைபெற்றுக்கொண்டார்.

படங்கள் : க. சதீஷ்குமார்