Published:Updated:

கேள்வி பதில் - கோயில் தேங்காயைச் சமையலுக்குப் பயன்படுத்தலாமா?

கேள்வி பதில் -  கோயில் தேங்காயைச் சமையலுக்குப் பயன்படுத்தலாமா?
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில் - கோயில் தேங்காயைச் சமையலுக்குப் பயன்படுத்தலாமா?

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் - படம்: மஹி தங்கம்

கேள்வி பதில் - கோயில் தேங்காயைச் சமையலுக்குப் பயன்படுத்தலாமா?

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் - படம்: மஹி தங்கம்

Published:Updated:
கேள்வி பதில் -  கோயில் தேங்காயைச் சமையலுக்குப் பயன்படுத்தலாமா?
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில் - கோயில் தேங்காயைச் சமையலுக்குப் பயன்படுத்தலாமா?

? சிவாலயங்களில் பிரதோஷ வழிபாட்டின்போது, மூலவர் எதிரில் உள்ள நந்திக்கு மட்டுமின்றி, கொடி மரத்தின் அருகிலுள்ள நந்திக்கும் அபிஷேக ஆராதனைகள் நடத்த வேண்டுமா?

- வி.ரவிச்சந்திரன், முருகன்குறிச்சி       

கேள்வி பதில் -  கோயில் தேங்காயைச் சமையலுக்குப் பயன்படுத்தலாமா?

மூலவரின் எதிரில் இருக்கும் நந்திக்கு மட்டும் அபிஷேக ஆராதனைகள் செய்தால் போதுமானது. அதன்மூலம், கோயிலில் இருக்கும் அத்தனை நந்திகளையும் வழிபட்ட பலன் கிடைத்துவிடும்.

சரஸ்வதி பூஜையின்போது, புத்தகம் அடுக்கி வைத் திருப்போம். அதில் மேலே இருக்கும் புத்தகத்துக்குச் சந்தனம், குங்குமம் இட்டு பூஜை செய்தால், அதன் கீழே இருக்கும் அத்தனை புத்தகங்களுக்கும் பூஜை செய்ததாக ஆகிவிடும். மூலவரின் நித்யாராதனையில் உத்ஸவரும் மகிழ்வார். வீதியுலா வரும் உத்ஸவருக் கான வழிபாடு, மூலவரையும் அடைந்துவிடும்.

பிராகாரச் சுவரின் மூலைகளில் எதிரும் புதிருமாக நந்திகளைத் தரிசிக்கலாம். கோயில் மணிகளிலும் நந்தி வீற்றிருப்பார். அவர்களின் பணிவிடைகளைத் தனியாகச் செயல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை; பிரதான நந்திக்கான வழிபாட்டில் அது அடங்கிவிடும்.

நைவேத்தியத்தை மறைக்கும் திரையிலும் நந்தி இருக்கும். சிவபார்வதனின் நினைவை நிலைநிறுத்த நம்மால் ஏற்படுத்தப்பட்டது அது. நந்தியை மனதில் குடியிருத்துங்கள்.

? ஆலயங்களிலிருந்து பிரசாதமாகப் பெற்றுவரும் தேங்காயை, வீட்டு பூஜைக்கான நைவேத்தியச் சமையலில் பயன்படுத்தலாமா?

- கே.கார்த்திகா, கோவில்பட்டி


வீட்டுச் சமையலில் சேர்த்துக்கொள்ளலாம். வழிபாட்டில் படைக்கும் நிவேதனத்துடன் சேர்க்க இயலாது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கேள்வி பதில் -  கோயில் தேங்காயைச் சமையலுக்குப் பயன்படுத்தலாமா?திருமணம் போன்ற சடங்குகளில் சமைத்த பொருளை வரவழைத்து உண்ணும் நமக்கு நெருடல்  வருவதில்லை. முன்னோர் ஆராத னையில் சமைத்த பொருளை ஏற்பதில் சங்கோஜம் இல்லை. சமைத்த பொருளை வரவழைத்து விசேஷ பூஜையில் நிவேதனம் செய்வதுண்டு. அப்படியிருக்க, பிரசாதப் பொருளை ஏற்பதில் ஏன் தயக்கம்? பிரசாதப் பொருளைக் கலந்து சமைப்பது, சமையலில் தூய்மை அளிக்கும். வீட்டில் பூஜையில் நிவேதனம் செய்ய அதைப் பயன்படுத்தக்கூடாது. ஏற்கெனவே ஒருதடவை நிவேதனமாக ஒரு பொருளைக் கலந்தால், அந்தப் பொருளுக்கு மீண்டும் நிவேதனம் செய்வதற்கான தகுதி அற்றுவிடும்.

? ரயில் மற்றும் பேருந்து பயணங்களில் அன்பர்கள் சிலர் இறைவனைத் தியானித்து ஜபிப்பதைப் பார்த்திருக்கிறேன். அவசரயுகத்தில் கிடைக்கும் தருணத்தில் அவர்கள் இறைவனை ஆராதிப்பது மகிழ்ச்சிதான் என்றாலும், இந்த நடைமுறை சரியானதுதானா?

- வி.வேல்முருகன், செங்கல்பட்டு


அவசர உலகம், வேலைப்பளு, சீக்கிரமாக எல்லா வேலைகளையும் முடிக்க வேண்டும். உட்கார்ந்து சாப்பிடவும் நேரம் இல்லை. அதற்காக, சாதத்தைக் கையில் எடுத்துக்கொண்டு தெருவில் நடந்துகொண்டே சாப்பிடலாமா? குளிக்க நேரம் இல்லை... குளியலைத் தவிர்க்கலாமா? கோயிலுக்குப் போக நேரம் இல்லை. ஸ்கூட்டரில் இருந்தபடியே சந்நிதியைப் பார்த்து தலையாட்டிவிட்டுச் செல்லலாமா?!

ஆனால், சின்னத்திரை பார்க்க நேரமுண்டு. அதுதான் விந்தை. பகவானை எப்படியாவது ஆராதனை செய்தால் போதாது; இப்படித்தான் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம். மாறி வரும் தங்களது சிந்தனைக்கேற்ப ஆன்மிகத்தை மாற்றி அமைக்கலாம். ஆனால், பலன் இருக்காது. பலனைத் தீர்மானிப்பதில் நமக்குச் சுதந்திரம் இல்லை. நமது உழைப்புக்கு உகந்த ஊதியத்தைத் தீர்மானிப்பதில் நமக்குச் சுதந்திரம் இல்லை. நாம் இழுத்த இழுப்புக்குக் கடவுள் செவிசாய்க்க வேண்டும் எனும் புது சிந்தனை, சிறுபிள்ளைத் தனமானது. அபிராமி பட்டரை மேற்கோள்காட்டி தங்களது விருப்பத்தை வெளியிடுவதும், அதற்குப் பலன் இருப்பதாக நினைப்பதும் கடவுள் வழிபாட்டில் தங்களது சுணக்கத்தைக் காட்டுகிறது. நித்தமும் வேதம் ஓத வேண்டும் என்கிறது சாஸ்திரம் (வேதோநித்யம் அதீயதாம்).   

கேள்வி பதில் -  கோயில் தேங்காயைச் சமையலுக்குப் பயன்படுத்தலாமா?

`ஆபரேஷன் நடந்திருப்பதால் உட்கார இயலாது; நிற்கத்தான் முடியும். என்ன செய்வது?' என்று கேட்டால், ‘நின்றபடியே வேதம் சொல்’ என்கிறது சாஸ்திரம். ‘எனக்கு நிற்க இயலாது; உட்காரத்தான் முடியும். அதுவும் சப்பணம் இட்டு உட்கார இயலாது. என்ன செய்வது?’ என்றால், ‘எப்படி முடியுமோ அப்படி உட்கார்ந்து சொல்’ என்றது வேதம். `நிற்கவும் முடியாது, உட்காரவும் இயலாது, படுத்துக்கொண்டுதான் இருக்க வேண்டும்' எனில், `படுத்துக்கொண்டே வேதம் சொல்' என்கிறது வேதம் (உததிஷ்டன், உதாஸீன, உதசயான). இந்தச் சலுகை எல்லோருக்கும் பொருந்தாது. ‘வேதம் ஓத வேண்டுமே... ஆனால், முடியவில்லையே’ என ஏங்கும் மனதுக்கு அளித்த வெகுமதி அது. உலகவியல் சுவையை அனுபவிக்க உடல்வலிமையோடு ஓடிக்கொண்டிருக்கும் வாட்டசாட்டமான உடல்வாகு பெற்றவருக்கு இந்தச் சலுகை கிடையாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கடவுளையே ஏமாற்றி அவரிடமிருந்து அருளைப் பெற்றுவிடலாம் என்கிற சிந்தனை பலன் தராது. ஒருவன், பாத்திரம் நிறைய வறுத்த வேர்க்கடலை வைத்திருந்தான். அதைப் பார்த்த மற்றொருவன், ‘இதோ பார், இப்போது கடலையைச் சாப்பிட ஆரம்பிக்காதே. இரு, நான் வீட்டில் இருந்து உமி கொண்டு வருகிறேன். அதையும் கலந்து இருவரும் பங்கு போட்டு ஊதி ஊதி சாப்பிடுவோம்’ என்றானாம். அந்தச் சிந்தனை நமக்கு வரக் கூடாது. என்ன அவசர மானாலும் ஒரு நொடிப்பொழுதாவது மற்ற அலுவல்களை அகற்றிவிட்டு, ஈடுபாட்டுடன் கடவுளை நினைக்க வேண்டும். நேரமில்லை என்கிற காரணத்தைக் காட்டி, கடவுளைப் பணிய வைப்பது தவறு.

கடவுள் வழிபாட்டில் நுனிப்புல் மேய இடம் இல்லை. சிரமத்தைப் பாராமல் இருக்கையில் அமர்ந்து, முறையாக ஜபம் செய்யுங்கள். தங்களுக்குத் துணைசெய்ய கடவுள் காத்திருக்கிறார். வெற்றிபெறுவீர்கள்.

? எங்கள் ஊர் பக்கம் உள்ள ஓர் ஆலயத்தில் ஸ்தல விருட்சம் கிடையாது. அந்தக் கோயிலுக்கான விருட்சம் எது என்பதும் தெரியவில்லை. ஸ்தல விருட்சமாக எந்த மரத்தை ஏற்கலாம்?

- எம்.சங்கரி, திருநெல்வேலி-4


ஸ்தல விருட்சமாக அரச மரத்தை நட்டு வளர்ப்பது சிறப்பு. அதோடு வேப்ப மரமும் ஆலமரமும் இருக்கலாம். அரச மரம் ஸ்தல விருட்சம்; அதோடு மற்ற விருட்சங்களையும் இடமிருந்தால் வளர்க்கலாம். அதனால் சுகாதாரம் வளர்வதுடன், பல பறவை இனங்களுக்கும் அடைக்கலமாகத் திகழும்.

ஆலும், அரசும்,  வேம்பும் ஆயாசத்தை அகற்றி ஆனந்தத்தை அளிக்கும். இறைப்பணியில் முனைந்து செயல்படுங்கள்; நன்மை உண்டு.

? தனித்தனியே குடித்தனம் செய்யும் சகோதரர்கள், முன்னோருக்கான சிரார்த்தக் காரியங்களைச் சேர்ந்து செய்யலாமா?

- சி.வள்ளிநாயகம், சென்னை-67


சட்டி இரண்டானால் சிரார்த்தமும் இரண்டு. சட்டி ஒளபாசனப் பானை இரண்டானால், சட்டி சமையல் இரண்டானால், குடித்தனம் இரண்டானால், வரவு - செலவு ஆகியனவும் இரண்டானால் கடமைகளும் இரண்டாக மாறிவிடும்.

ரேஷன் கார்டு, குடிமகன் சான்று (ஐடென்டி கார்டு), வங்கிக் கணக்கு, வருமானவரிக் கணக்கு, வீடு, வாகனம் ஆகியவற்றை எல்லாம் தனித்தனியே ஏற்படுத்திக்கொண்ட பிறகு, முன்னோர் ஆராதனையில் மட்டும் அண்ணா என்று பெருமையைப் புதுப்பித்து, அவருடன் ஒட்டிக்கொண்டு ஆராதனையில் ஈடுபட்டதாக எண்ணுவது தவறு.

எண்ணிக்கையில் அதிகமான புதல்வர்களை ஈன்றெடுக்க வேண்டும். அப்போதுதான் அறம் விரிவடையும் என்கிறது தர்மசாஸ்திரம் (ஏஷ்டவ்யா பஹவ: புத்ரா:... ).

அறம் விரிவடையும் நோக்கத்தில் பல புத்திரர்களை ஈன்றெடுக்கிறார்கள் பெற்றோர்கள். அதற்கு எதிரிடையாக எல்லோரும் ஒன்று சேர்ந்து அண்ணனுடன் இணைந்து அறத்தைச் சுருக்கிக்கொள்வது, உயர்ந்த நோக்கத்துக்கு ஊறு விளைவிக்கும்.

ரயில் பயணத்தில் நான்கு பிள்ளைகளுக்கும் தனித்தனி பயணச் சீட்டுதான் வாங்குவான் தந்தை. பெரிய பையனான அண்ணனுடன் தம்பிகளை ஒட்டவைப்பது இல்லை. இரட்டையர்களாகப் பிறந்தவர்களுக்கு, மனைவிகள் தனித்தனியாக இருப்பார்கள். ஆகவே, சிரார்த்தங்களையும் பிண்டங்களையும் தனித்தனியே செயல்படுத்த வேண்டும்.

கூட்டுக்குடித்தனமாக ஒரே வீட்டில் ஒரே சமையலில் பிள்ளைகள், பேரன்கள், கொள்ளுப் பேரன்கள் அத்தனை பேரும் இணைந்து இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் தனது சம்பாத்தியத்தைக் குடும்பத் தலைவனிடம் அளிக்க வேண்டும். வரவு-செலவு குடும்பத் தலைவன் வசம் இருக்கும். தலைவன் சொற்படி செயல்பட வேண்டும். அதுபோன்ற சூழலில், அண்ணாவை முன்னிட்டு அவரோடு ஒட்டிக்கொண்டு சிரார்த்தம் செய்யலாம்.

- பதில்கள் தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism