Published:Updated:

கயிலை காலடி காஞ்சி! - 28 - “உன்னோட பேரனை மடத்துக்கு அனுப்பிடு!”

 கயிலை காலடி காஞ்சி! - 28 - “உன்னோட பேரனை மடத்துக்கு அனுப்பிடு!”
பிரீமியம் ஸ்டோரி
கயிலை காலடி காஞ்சி! - 28 - “உன்னோட பேரனை மடத்துக்கு அனுப்பிடு!”

மகா பெரியவா இட்ட கட்டளைநிவேதிதா - ஓவியங்கள்: ம.செ

கயிலை காலடி காஞ்சி! - 28 - “உன்னோட பேரனை மடத்துக்கு அனுப்பிடு!”

மகா பெரியவா இட்ட கட்டளைநிவேதிதா - ஓவியங்கள்: ம.செ

Published:Updated:
 கயிலை காலடி காஞ்சி! - 28 - “உன்னோட பேரனை மடத்துக்கு அனுப்பிடு!”
பிரீமியம் ஸ்டோரி
கயிலை காலடி காஞ்சி! - 28 - “உன்னோட பேரனை மடத்துக்கு அனுப்பிடு!”

யிலை நாயகனின் அம்சமாக அவதரித்த காஞ்சி மகா பெரியவா, யாரிடம் எதை எப்போது பெற்றுக்கொள்ள வேண்டும் என்று திருவுள்ளம் கொள்கிறாரோ, அப்படியே பெற்றுக் கொள்ளவும் செய்கிறார். அப்படித்தான் முருகேசன் என்ற பக்தரின் வாழ்க்கையிலும் ஓர் அற்புதம் நடைபெற்றது.

 கயிலை காலடி காஞ்சி! - 28 - “உன்னோட பேரனை மடத்துக்கு அனுப்பிடு!”

சென்னையைச் சேர்ந்த தொழிலதி பரான முருகேசன் சக்தி விகடனின் வாசகரும்கூட. மகா பெரியவா மகிமை களை விவரிக்கும்வகையில் வெளிவந்து கொண்டிருக்கும் இந்தத் தொடரைப் படித்துவிட்டு, மகா பெரியவா தவமியற்றிய தவபூமியான தேனம்பாக்கம் சென்று தரிசிக்க விரும்பினார். அதன்படியே சமீபத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் காஞ்சிபுரத்துக்குச் சென்றவர் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை நம்மிடம் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.

‘‘சக்தி விகடனில் மகா பெரியவா மகிமை பற்றி வெளிவரும் தொடரைப் படிச்சதுல இருந்தே தேனம்பாக்கத்துக்குப் போகணும்னு நெனைச்சுண்டிருந்தேன். சமீபத்துல ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில கெளம்பி காஞ்சிபுரம் போனேன். முதல்ல காமாட்சி அம்மனை தரிசனம் செஞ்சுட்டு, பிறகு தேனம்பாக்கம் போனேன். அப்ப கோயில் திருப்பணிகள் முடிஞ்சு கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகள் நடந்துண்டிருந்தது.

தேனம்பாக்கத்துல தரிசனம் முடிச்சுண்டு புறப்படறப்போ, அங்கிருந்து அப்படியே ஓரிக்கைக்கும் கலவைக்கும் போகலாமேன்னு தோணிச்சு. அது மகா பெரியவா உத்தரவாவே எனக்குத் தோணித்து. ஏன்னா, அந்த எண்ணம் எனக்குத் தோணினதே மகா பெரியவா சந்நிதியிலதான்.

அதுக்குக் காரணம் ஓரிக்கையில் நடந்த அற்புதமான ஒரு சம்பவம்தான். ஓரிக்கையில் மகா பெரியவாளுக்கு சாத்தறதுக்காக ஒரு மாலையை வாங்கிண்டு ஓரிக்கைக்குப் போனேன். நான் போன நேரம் மகா பெரியவா சந்நிதி கதவு மூடியிருந்தது.

 ‘அடடா, சந்நிதி மூடிட்டாங்களே. நாம வாங்கி வந்த மாலையைப் பெரியவாளுக்கு சாத்த முடியலையே’ன்னு மனசுக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சு. விவரம் கேட்கறதுக்கும் பக்கத்துல யாரும் இல்லை. அப்படியே வருத்தத்தோட நான் அங்கே கண்களை மூடியபடி  இருக்கறச்சே, சந்நிதி கதவு தெறக்கற சத்தம் கேட்டது. கண்ணைத் தொறந்து பார்த்தப்ப, அப்பத்தான் அபிஷேகம் நடந்து அலங்காரம் முடிஞ்சிருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டேன். அப்படியே பரவசமாயிடுச்சு.

என்னோட சந்தோஷத்தை அதிகப் படுத்தறதுபோல், வெளியில வந்த அர்ச்சகர் என்னைக் கூப்பிட்டார். ஆனால், அவர் வேறு யாரையோதான் கூப்பிடுகிறார்னு நான் அங்கேயே இருந்தேன். அப்ப எனக்குப் பக்கத்துல வந்த ஒருத்தர், அர்ச்சகர் என்னைத்தான் கூப்பிடறார்னு சொன்னார். உடனே நான் வேகமாக அர்ச்சகரிடம் சென்றேன். அவர் அங்கிருந்த ஒரு தட்டில் நான் வாங்கிட்டுப் போன மாலையை வைக்கச் சொன்னார்.

நானும் அப்படியே மாலையை அந்தத் தட்டுல வெச்சேன். வாங்கிண்டு போய் மகா பெரியவாளுக்குச் சாத்தி, அர்ச்சனை செய்து தீபாராதனை காட்டினார்.  சந்நிதி கதவு மூடப்பட்டு இருந்ததைப் பார்த்து, வாங்கிண்டு போன மாலையை மகா பெரியவாளுக்குச் சாத்த முடியலையேன்னு கஷ்டப்பட்ட என்னை, மகா பெரியவா ஆறுதல்படுத்தி, ஆசீர்வதித்தது போல் இருந்தது அந்த அற்புதமான நிகழ்ச்சி. மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், இந்தச் சம்பவம் சாதாரணமா தோணலாம். ஆனால், அப்ப எனக்கு இருந்த மனநிலையில, என்னோட கஷ்டத்தைத் தீர்க்கறதுக்காக மகா பெரியவா அருள் செஞ்சதாத்தான் நான் நெனைக்கறேன்’’ என்று  ஓரிக்கையில் மகா பெரியவா சந்நிதியில் தனக்கு ஏற்பட்ட அற்புத அனுபவத்தை நம்மிடம் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.

மகா பெரியவா வேதங்களை முற்றாக உணர்ந்தவர் என்பதுடன், வேதங்களை நாம் ரட்சித்தால், வேத புருஷன் நம்மைக் காப்பாற்று வான் என்பதையும் உணர்ந்திருந்தார்.

‘வேத புருஷன் உன்னைக் காப்பாற்றுவான்’ என்று மகா பெரியவா அனுக்கிரகம் செய்த  ஒரு சிறுவன்தான் மகா பெரியவாளிடம் தனக்கு ஏன் ஸ்கூல் பீஸ் கட்டவில்லை என்று உரிமையுடன் கேட்டவன். இன்றைக்கு சக்தி விகடனின் வாசகராக இருக்கும் கோழியாலம் ஸ்ரீதர ஆசார்யா, மகா பெரியவா தன்னுடைய வாழ்க்கையில் பல நேரங்களில் நிகழ்த்திய அற்புதங்களைப் பரவசத்துடன் நினைவுகூர்ந்தார்.

‘`1957-ம் வருஷம் நான், என் தாத்தா பாட்டியுடன் காஞ்சிபுரத்தில் இருந்தேன். அப்போது சங்கரமடம், சின்ன காஞ்சிபுரம் ஆனைக்கட்டித் தெருவில் இருந்தது. மடத்துக்குக் கொஞ்சம் தொலைவிலேயே என்னுடைய வீடும் இருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 கயிலை காலடி காஞ்சி! - 28 - “உன்னோட பேரனை மடத்துக்கு அனுப்பிடு!”கொஞ்சம் வறுமை நிலையில் இருந்ததால், சங்கர மடத்தின் ஆதரவில்தான் நான் பள்ளிக்குச் சென்று படித்தேன். என்னைப்போன்ற ஏழைச் சிறுவர்களின் படிப்புக்காக மகா பெரியவா ஒரு திட்டம் கொண்டு வந்தார். ஏழைச் சிறுவர்களுக்கு விஷ்ணு சஹஸ்ரநாமம் கற்றுக்கொடுத்து, தினமும் அதிகாலையில் விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராய ணம் செய்தபடி வரதராஜ பெருமாள் கோயிலை  வலம்வர வேண்டும். அந்தச் சிறுவர்கள், கோயிலுக்குப் பக்கத்தில் இருந்த கிருஷ்ணா பள்ளியில் படிப்பதற்கு மடத்தின் சார்பில் ஏற்பாடு செய்திருந்தார் பெரியவா. சிறுவர்களுக் கான பீஸ் மாதம்தோறும் மடத்தில் இருந்து பள்ளிக்கு வந்துவிடும்.

இந்தத் திட்டத்தின்படி நான் படித்துக் கொண்டு இருந்தபோது, ஒருநாள் பிற்பகல் என்னை அழைத்த தலைமை ஆசிரியர், ‘உனக்கு இந்த மாதம் பீஸ் கட்டவில்லை. எனவே, நீ நாளையில் இருந்து ஸ்கூலுக்கு வர வேண்டாம்’ என்று சொல்லிவிட்டார்.

நன்றாகப் படித்தும், ஏன் எனக்கு பீஸ் கட்டவில்லை என்று தெரியவில்லை. அழுகையும் ஆத்திரமும் பீறிட்டு வந்தது. ஸ்கூலில் இருந்து நான் நேரா மடத்துக்குத்தான் போனேன். மகா பெரியவா பக்தர்களுக்குத் தரிசனம் கொடுத் துண்டிருந்தார். எல்லோரையும் தள்ளிக்கொண்டு முன்னால் போய்விட்டேன்.  மகா பெரியவா என்னைப் பார்த்துவிட்டார். நான் அழுது கொண்டிருக்கவே, ஒரு பெரிய கல்கண்டை எடுத்து என்னிடம் கொடுத்தார். கல்கண்டை வாங்கிக்கொண்ட பிறகும் நான் அங்கேயே அழுது கொண்டே நின்றதால், மகா பெரியவா என்னைப் பார்த்து, ‘ஏன் அழுகிறாய்?’ என்று கேட்டார்.

‘ஏன் தாத்தா எனக்கு ஸ்கூல் பீஸ் கட்டலை?’ என்று ஆத்திரத்துடன் கேட்டேன். ஒரு சிறுவனான நான் அப்படிப் பேசியதைக் கேட்டு அங்கிருந் தவர்கள் என்னை முறைத்துப் பார்த்தார்கள். ஆனால், மகா பெரியவா என்னைக் கனிவு ததும்பப் பார்த்து, ‘நான்தான் கட்ட வேண்டாம்னு சொன்னேன்’ என்றார். மகா பெரியவாளே எனக்கு பீஸ் கட்ட வேண்டாம் என்று சொன்ன தாகக் கேட்டதுமே எனக்கு இன்னும் அழுகை பீறிட்டது. ‘நான்தான் நன்றாகப் படிக்கிறேனே. எனக்கு ஏன் பீஸ் கட்ட வேண்டாம்னு சொன்னீங்க தாத்தா?’ என்று கேட்டேன்.

‘குழந்தே, நீ இப்ப அழாம வீட்டுக்குப் போ. நான் உன் தாத்தாக்கிட்ட பேசறேன்’ என்று சொன்னார். தாத்தாவிடம் பேசுவதாக மகா பெரியவா சொன்னதுமே எனக்குப் பயமாகிவிட்டது. மகா பெரியவாளிடம் தைரியமாகப் பேசும் எனக்கு, என் தாத்தாவிடம் பேசுவது என்றால் நடுக்கம்தான். மகா பெரியவா அப்படி சொன்னதுமே நான் வீட்டுக்கு வந்துட்டேன். நடந்த விஷயத்தை என் பாட்டியிடம் மட்டும் கூறினேன். மகா பெரியாவாளிடமே நான் துணிச்சலாகப் பேசியது என் பாட்டிக்கு அதிர்ச்சியைத் தந்தது. விஷயத்தைத் தாத்தாவிடம் சொல்லவே பயந்தார்கள்.

அப்போதெல்லாம் மின்சார வசதி இல்லாததால், இரவு 7 மணிக்கே சாப்பிட்டுப் படுத்துவிடுவோம். அன்றைக்கும் நாங்கள் சாப்பிட்டுப் படுத்த கொஞ்ச நேரத்துக்கெல்லாம் வாசல் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது.    

 கயிலை காலடி காஞ்சி! - 28 - “உன்னோட பேரனை மடத்துக்கு அனுப்பிடு!”

‘யார் இந்த நேரத்தில்?’ என்ற கேள்வியுடன் என் பாட்டி போய் வாசல் கதவைத் திறந்தார். நானும் பின்னாலேயே போனேன்.

வெளியில் மடத்துச் சிப்பந்தி ஒருவர் அரிக்கேன் விளக்கைப் பிடித்தபடி இருக்க, அந்த மெல்லிய வெளிச்சத்தில், பரப்பிரம்மமே மண்ணிறங்கி வந்ததுபோல் மகா பெரியவா நின்று கொண்டி ருந்தார். அந்த நேரத்தில் மகா பெரியவா வீட்டுக்கு வந்ததைக் கண்டு,  பக்தி சிலிர்ப்புடன் என் பாட்டி சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார். விஷயம் தெரிந்து வெளியில் வந்த தாத்தா, மகா பெரியவாளைக் கண்டதும் நமஸ்காரம் செய்தார்.

என்னுடைய தாத்தா கோழியாலம் ஸ்ரீநிவாச ஆசார்யா பெரிய வேத பண்டிதர் என்பதால், மகா பெரியவாளுக்கு என் தாத்தாவிடம் தனி வாஞ்சையே உண்டு.

தாத்தாவும் மகா பெரியவாளும் அந்த இரவு நேரத்தில் எங்கள் வீட்டு ரேழியில் உட்கார்ந்து கொண்டு பேசத் தொடங்கிவிட்டனர். பல விஷயங்களைப் பேசிய பிறகு, மகா பெரியவா என்னைப் பார்த்தபடியே, ‘உன் பேரப் புள்ளைக்கு இன்னும் ரெண்டு நாளைக்குள்ள உபநயனம் செஞ்சி, என்னோட  மடத்துக்கு அனுப்பிடு’ என்று கூறினார். என் தாத்தா, ‘திடுதிப்பென்னு சொன்னா எப்படி பெரியவா? கையில பணம் எதுவும் இல்லே. பையனைப் பெத்தவங்களும் இங்கே இல்லே. எப்படி உடனே உபநயனத்துக்கு ஏற்பாடு செய்யறது?’ என்று கேட்டார்.

‘அதெல்லாம் தானா நடக்கும். மடத்துல இருந்து தேவையானது கிடைக்கும். நீ எதுக்கும் கவலைப்படாதே. நான் சொன்னமாதிரியே ரெண்டு நாளைக்குள்ள உபநயனம் செஞ்சிடு’ என்று சொல்லிவிட்டார். அதற்கு மேலும் என் தாத்தாவால் மறுத்துப் பேச முடியவில்லை.

மகா பெரியவா சொன்னபடியே மறுநாளே மடத்தில் இருந்து 10 படி அரிசியும், பத்து ரூபாய் பணமும் கொடுத்தனுப்பினார் மகா பெரியவா. கோழியாலம் மடத்தில் இருந்தும் கொஞ்சம் உதவி கிடைத்தது. உபநயனமும் நன்றாக நடந்தது.

உபநயனம் முடிந்த சில நாள்களில் உபா கர்மாவும் முடிந்துவிட்டது. மகா பெரியவா உத்தரவுப்படி நான் சங்கர மடத்தின் சார்பில் நடந்துகொண்டிருந்த குந்தன்மல் தம்மானி வேதாஸ்ரமத்தில் குருகுல முறையில் வேதம் படிப்பதற்குச் சேர்ந்தேன்'' என்றவர், சற்று நிதானித்து யோசித்துவிட்டு அடுத்தடுத்து நடந்த விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

உள்ளம் சிலிர்க்கவைக்கும் அனுபவங்கள் அவை!

- திருவருள் தொடரும்