Published:Updated:

ஆன்மிக துளிகள்...

ஆன்மிக துளிகள்...
பிரீமியம் ஸ்டோரி
ஆன்மிக துளிகள்...

ஆன்மிக துளிகள்...

ஆன்மிக துளிகள்...

ஆன்மிக துளிகள்...

Published:Updated:
ஆன்மிக துளிகள்...
பிரீமியம் ஸ்டோரி
ஆன்மிக துளிகள்...

புன்னைநல்லூரில்  முத்துப்பல்லக்கு!

ற்புத பலன்களை அள்ளி வழங்கும் மகத்துவமான திருத்தலம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள புன்னைநல்லூர். இங்கே கோயில்கொண்டிருக்கும் அன்னை மாரியம்மன், வேண்டுபவருக்கு வேண்டிய வரங்களை வழங்கும் கற்பகத்தருவாகத் திகழ்கிறாள். எந்தவொரு மனக் கஷ்டமாக இருந்தாலும் சரி, புன்னைநல்லூர் சென்று  அம்மனை வேண்டிக்கொண்டு, கொஞ்சம் உப்பும் மிளகும் வாங்கி, கோயிலில் வைக்கப்பட்டிருக்கும் தொட்டியில் போட்டுவிட்டு, கொஞ்சம் வெல்லத்தை வாங்கி, கோயில் குளத்தில் கரைத்துவிட்டுப் போனால் போதும். நமது துன்பமும் சேர்ந்து கரைந்துபோகும்; வாழ்க்கை வெல்லமாக இனிக்கும் என்பது ஐதீகம்.      

ஆன்மிக துளிகள்...

அதேபோல் இக்கோயிலில் நிகழும் முத்துப்பல்லக்கு வைபவத்தைத் தரிசிப்பதாலும் விசேஷ பலன்கள் கைகூடும். இந்த வருடம் அருள்மிகு  முத்துமாரியம்மனுக்கு 94-வது ஆண்டாக முத்துப்பல்லக்குப் பெருவிழா சிறப்புடன் நடைபெறவுள்ளது. 13.8.17 முதல் 15.8.17 வரை நடைபெறும் இவ்விழாவையொட்டி விடையாற்றி விழாவும் நடைபெறும். பக்தர்கள் இந்த விழா வைபவங்களில் கலந்துகொண்டு மாரியம்மனைத் தரிசித்து மனமுருக வழிபட்டு வந்தால், வாழ்வில் இன்னல்கள் யாவும் நீங்கி நன்மைகள் பெருகும்.

- ச.செந்தில்குமார், திருப்பூர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தக்காளி காணிக்கை!

காரைக்குடி நகரின் அருகே உள்ள முத்துப்பட்டினம் எனும் பகுதியில் கோயில் கொண்டிருக்கிறாள் முத்து மாரியம்மன். சமயபுரத்திலிருந்து இங்குவந்து பல சித்து விளையாடல்கள் புரிந்த சிறுமி ஒருத்தியின் நினைவாக இந்தக் கோயில் அமைந்ததாகச் சொல்கிறார்கள். அந்தச் சிறுமியின் வேண்டுகோளின்படி இந்த ஆலயத்தில் அம்மனுக்குத் தக்காளிப் பழமே காணிக்கையாகத் தரப்படுகிறது. மேலும், அம்மனுக்குத் தக்காளி பழச்சாறால் அபிஷேகம் நடத்தப்படுவதும் இக்கோயிலின் சிறப்பம்சம் ஆகும்.

- மு.ஹரிகாமராஜ், சென்னை  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism