Published:Updated:

நல்லது நடந்தது!

நல்லது நடந்தது!
பிரீமியம் ஸ்டோரி
நல்லது நடந்தது!

நல்லது நடந்தது!

நல்லது நடந்தது!

நல்லது நடந்தது!

Published:Updated:
நல்லது நடந்தது!
பிரீமியம் ஸ்டோரி
நல்லது நடந்தது!

க்தி விகடன் 22.11.16 இதழில், திருமருகல் தலத்தைப் பற்றி ஒரு கட்டுரை வெளியிட்டு இருந்தோம். அந்தக் கட்டுரையிலேயே, வைப்பூரைச் சேர்ந்த செட்டிப் பெண் நாளும் வழிபட்டதும், மிகவும் புராதனமானதுமான ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீஜம்புநாதசுவாமி திருக்கோயில் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்ததையும் குறிப்பிட்டிருந்தோம்.     

நல்லது நடந்தது!

நாம் அந்தக் கோயிலுக்குச் சென்றிருந்த போது ராமலிங்கம் என்ற அன்பரைச் சந்தித்தோம். கோயிலைப் புதுப்பிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தவரிடம் நாம் பேசியபோது, ‘`செட்டிப் பெண் வாழ்ந்த இத்தலம் சிதிலமடைந்து நூறு வருஷத்துக்கும் மேல் ஆகிவிட்டது. கோயிலின் சுற்றுப்புறங்கள் திறந்தவெளி கழிப்பிடமாகவும், குடிமகன்களின் கூடாரமாகவும் மாறியதைக்கண்டு வேதனையாக உள்ளது. கோயிலைப் புதுப்பிக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டிருக்கிறோம். என்னுடைய சொத்துகளை விற்று, திருப்பணி செய்யவும் நான் தயாராகவே இருக்கிறேன். இந்தக் கோயில் புதுப் பொலிவு பெறுவது எந்நாளோ?” என்று ஏக்கத் துடன் கூறியதையும் வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டோம்.        

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நல்லது நடந்தது!

சிவாலயத் திருப்பணியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட ராமலிங்கம் ஐயா, இன்று நம்மிடையே இல்லையென்றாலும், அவருடைய விருப்பம் நிறைவேறிவிட்டது. ஆம்,   ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீஜம்புநாதசுவாமி கோயில் திருப்பணிகள் நிறைவுபெற்று, சமீபத்தில் கும்பாபிஷேகமும் சிறப்பாக நடைபெற்றது.     

நல்லது நடந்தது!

கிராமப் பிரமுகர் ராமதாஸ் நம்மிடம் கூறும் போது, ‘`ராமலிங்கம் சார்தான் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்று தீவிரமாக இருந்தார். அதற்காக சில லட்சங்களைச் செலவு செய்ததுடன் தன்னுடைய சொத்துகளை விற்கவும் துணிந்தார். அந்த நேரத்தில் சக்தி விகடனில் இந்தக் கோயில் பற்றிய கட்டுரை வெளிவந்தது. அந்தக் கட்டுரை யைப் படித்துவிட்டுத் திருப்பூர் தொழிலதிபர் ஒருவர் மொத்த செலவையும் தானே ஏற்றுக் கொண்டு, கோயிலுக்குத் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகமும் செய்துவிட்டார்’’ என்றார்.     

நல்லது நடந்தது!

திருப்பூரைச் சேர்ந்த அந்தத் தொழிலதிபரைத் தொடர்புகொண்டோம். தன்னுடைய பெயரை வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையுடன் பேசினார். ‘`எனக்குப் பூர்வீகம் இந்த ஊர்தான். திருப்பூரில் ஆயத்த ஆடை பிசினஸ் செஞ்சிக்கிட்டு இருக்கேன். எங்க ஊர் கோயிலுக்கு ஏதாவது செய்யணும்ங்கற ஆசை ரொம்ப நாளாவே எனக்கு இருந்தது. அப்பத்தான் சக்தி விகடன்ல வந்த கட்டுரையைப் படிச்சேன்.  கொஞ்சம் பணம் தான் செலவு செய்யணும்னு நெனச்சிருந்தேன். இங்கே வந்து ராமலிங்க ஐயாவோட தியாகத்தைக் கேட்டதுக்கப்புறம் மொத்தச் செலவையும் நானே ஏத்துக்கிட்டேன். கும்பாபிஷேகமும் நல்லபடியா முடிஞ்சிடுத்து. அந்த நேரத்துல ஊர்ப் பெரியவங் களை எல்லாம் கௌரவிச்சபோது, கோயில் திருப்பணிக்கே தன்னை அர்ப்பணிச்ச ராமலிங்க ஐயாவைக் கௌரவிக்க முடியலை யேங்கற வருத்தம் ஏற்படத்தான் செய்தது. ஆனாலும், இந்தக் கோயில் இருக்கறவரை ராமலிங்க ஐயாவோட பேரும் புகழும் நெலைச் சிருக்கும்’’ என்றார். அறநிலையத்துறை செயல் அலுவலர் ராஜேந்திரன். ``சக்தி விகடனின் சேவை இன்னும் பல கோயில்களின் திருப்பணிகளுக்குத் தேவை. மிக்க நன்றி’’ என்றார் நெகிழ்ச்சியுடன்.

சிறியளவிலான உபயங்களுக்கே பெரியளவில் பெயரைப் போட்டு தங்களைப் பிரகடனப்படுத்திக் கொள்வோர் மத்தியில், ராமலிங்கம் ஐயாவின் அர்ப்பணிப்பும், திருப்பூர் அன்பர் முதலான இக்கோயில் பக்தர்களின் பண்பும் பக்தியும் மகத்தானவை. இவர்களைப் போன்றோரால் இன்னும் பல ஆலயங்கள் பொலிவடையும்; அதன் பலனால் அகிலம் செழிப்படையும்.

- மு. இராகவன், படங்கள் : கே. குணசீலன்   

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism