Published:Updated:

பக்தர்களின் நன்மைக்காக - கரகம் சுமக்கும் மலையரசி அம்மன்!

பக்தர்களின் நன்மைக்காக - கரகம் சுமக்கும் மலையரசி அம்மன்!
பிரீமியம் ஸ்டோரி
பக்தர்களின் நன்மைக்காக - கரகம் சுமக்கும் மலையரசி அம்மன்!

பக்தர்களின் நன்மைக்காக - கரகம் சுமக்கும் மலையரசி அம்மன்!

பக்தர்களின் நன்மைக்காக - கரகம் சுமக்கும் மலையரசி அம்மன்!

பக்தர்களின் நன்மைக்காக - கரகம் சுமக்கும் மலையரசி அம்மன்!

Published:Updated:
பக்தர்களின் நன்மைக்காக - கரகம் சுமக்கும் மலையரசி அம்மன்!
பிரீமியம் ஸ்டோரி
பக்தர்களின் நன்மைக்காக - கரகம் சுமக்கும் மலையரசி அம்மன்!

‘மலையரசி எங்கள் பொன்னரசி’ என்று கவிஞர் கண்ணதாசன் வியந்து போற்றிய சிறுகூடல்பட்டி மலையரசி அம்மன், கண்ணதாசனுக்கு மட்டுமின்றி, வழிபடும் அனைவருக்குமே பொன்னரசியாக இருந்து, பொன்னையும் புகழையும் அள்ளி அள்ளி வழங்குகிறாள். இவள் அருளால்தான் கண்ணதாசன் கவிபாடும் திறம் பெற்றதாகக் கூறுகிறார்கள். கவிபாடும் திறன் மட்டுமின்றி வழிபடும் அனைவருக்கும் அனைத்து நலன்களையும் அருள்பவள் மலையரசி அம்மன்.   

பக்தர்களின் நன்மைக்காக - கரகம் சுமக்கும் மலையரசி அம்மன்!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் - பிள்ளையார்பட்டி சாலையில் வைரவன்பட்டி என்ற இடத்தில் இருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் அமைந்திருக் கிறது சிறுகூடல்பட்டி. ஊரின் சாலையை ஒட்டியே மலையரசி, கோயில் கொண்டிருக்கிறாள். நகரத்தார் சமூகத்துக்குப் பாத்தியப்பட்ட இந்தக் கோயிலில், மற்ற கோயில்களில் உள்ளதுபோல் விமானம்-விதானம் எதுவுமின்றி, பச்சைப் பனை ஓலைகளால் வேயப்பட்ட கூரையின்கீழ் அருட்காட்சி தருகிறாள், மலையரசி அம்மன்.

ஐந்து முகங்கள்கொண்ட முகூர்த்தக்காலைக் கடந்து கோயிலுக்குள் நுழைந்தால், இடப்புறமாக வளையல்களும் மஞ்சள் கயிறுகளும் குவிந்திருப்பதைக் காணலாம். அவை, தங்களுடைய நேர்த்திக் கடனுக்காகப் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் என்பதை அறியமுடிகிறது. மலையரசி அம்மன் அங்கே கோயில்கொண்ட வரலாறு குறித்து கோயில் பூசாரியான முத்துமாணிக்கம் என்பவரிடம் கேட்டோம். இவருடைய குடும்பத்தினர்தான் மூன்று தலைமுறைகளாக அம்மனுக்குப் பூஜை செய்து வருகின்றனர்.

‘‘முற்காலத்தில் ஓலைப்பெட்டி ஒன்று ஆற்றில் மிதந்துவந்து, நெடுமரம் ஆற்றங்கரையில் ஒதுங்கியது. அப்போது அந்த வழியாகப்போன வழிப்போக்கர் ஒருவர் ஓலைப்பெட்டியை எடுத்துத் திறந்து பார்த்தபோது, உள்ளே ஏழு கன்னிமார்கள் காட்சி அளித்திருக்கிறார்கள். பின்னர், அவர்களில் ஆறு பேர் வெவ்வேறு தலங்களுக்குச் சென்றுவிட, ஒரு கன்னி மட்டும் கண்மாய்க் கரையோரமாகவே நடந்துவந்து, சிறுகூடல்பட்டி கிராமத்தில் தாமரைப் பூ வடிவில் சுயம்புவாக எழுந்தருளினாளாம். அவளே மலையரசி அம்மன்.     

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பக்தர்களின் நன்மைக்காக - கரகம் சுமக்கும் மலையரசி அம்மன்!

அதுவரை வறுமையின் பிடியில் சிக்கித்தவித்த கிராமத்தில், மலையரசி இங்கே எழுந்தருளியதுமே செல்வச் செழிப்பு நிறைந்தது;  ஒவ்வொரு குடும்பத்திலும் வளம் நிறைந்தது. எனவே, கிராமத்தைச் சேர்ந்த எல்லோருமே மலையரசி அம்மனைக் கொண்டாடத் தொடங்கிவிட்டார்கள்’’ என்றவர் தொடர்ந்து, கோயிலின் விழா வைபவங்கள் குறித்து விவரித்தார்.

‘`மலையரசி அம்மன் கோயிலில், வைகாசி விசாகம் பௌர்ணமி அன்று மிகச் சிறப்பான முறையில் திருவிழா கொண்டாடப்படும். வெளிநாடுகளில் இருப்பவர்கள்கூட திருவிழாவுக்குக் குடும்பத்தோடு வந்துவிடுவார்கள். ஆடி மாதம் சிறப்பு வழிபாடாக கும்மியடித்து அம்மனை மகிழ்விப்பார்கள்.

பொதுவாக மற்ற கோயில்களில் பூசாரிகளோ அல்லது சிவாசார்யர் களோதான் கரகம் எடுப்பார்கள். ஆனால், இந்தக் கோயிலில் பக்தர்களின் நன்மைக்காக மலையரசி அம்மனே தன் திருமுடியில் கரகம் ஏந்துகிறாள். பச்சை மண் பானையில் தீர்த்தம் நிரப்பப்பட்டு, தென்னம் பாளைகளால் மூடப்பட்டிருக்கும் கரகத்தை அம்மன் திருமுடியில் ஏற்றிவைப்பர். அதற்கு முன்பாக பூசாரி 48 நாள்கள் விரதம் அனுஷ்டிப்பார். கோயில் திருவிழா நடைபெறும் நாள்களைப் பொறுத்து அம்மன் திருமுடியில் கரகம் இருக்கும். திருவிழா முடிந்த மறுநாள் அதிகாலையில்தான் பூசாரி அம்மன் திருமுடியில் இருந்து கரகத்தை இறக்கிவைப்பார்.    

பக்தர்களின் நன்மைக்காக - கரகம் சுமக்கும் மலையரசி அம்மன்!

கரகத்தில் இருக்கும் தீர்த்தம் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். வெளியூரிலிருந்து வருபவர்கள் இந்தத் தீர்த்தத்தைப் பெற்று பருகிய பிறகுதான் ஊருக்கே செல்வார்கள். இந்தத் தீர்த்தப் பிரசாதம் சகல விதமான பிணிகளையும் தோஷங்களையும் நீக்குவதாக நம்பிக்கையுடன் சொல்கின்றனர் பக்தர்கள். குறிப்பாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்தத் தீர்த்தத்தைக் குடித்தால், அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைப்பதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கின்றனர்’’ என்றார் முத்துமாணிக்கம்.

மலையரசியின் மகத்துவத்துக்குச் சான்றாக இன்னொரு விசேஷத்தை யும் சிலிர்ப்புடன் பகிர்ந்துகொள்கிறார்கள் பக்தர்கள். அதாவது, மனதில் தாங்கமுடியாத சோகத்துடன் இருப்பவர்கள் இரவில் மலையரசி அம்மனை நினைத்து வழிபட்டுவிட்டு உறங்கச்சென்றால், அவர்களது கனவில் பட்டுப் பாவாடை உடுத்திய குழந்தையாகக் காட்சி தருவாளாம் மலையரசி. அவ்வளவில் பக்தர்களின் துன்பங்களெல்லாம் பஞ்சாகப் பறந்து போய்விடுமாம். இரண்டு தளங்களாக அமைந்திருக்கும் கோயிலில் மலையரசி அம்மன் மேல் தளத்தில் காட்சி தருகிறாள். ஆண் பக்தர்கள் மேல் தளத்தில் இருந்தும், பெண் பக்தர்கள் கீழ்த் தளத்தில் இருந்தும் அம்மனைத் தரிசிக்க வேண்டும்’’ என்றார்.

- தெ.பாலமுருகன்

படங்கள்: எஸ்.சாய்தர்மராஜ்

உங்கள் கவனத்துக்கு...

தலத்தின் பெயர்:
சிறுகூடல்பட்டி

அம்மன்: அருள்மிகு மலையரசி

திருத்தலச் சிறப்பு:
பக்தர்களின் நன்மைக்காக அம்மனே தன் திருமுடியில் கரகம் ஏந்தும் திருத்தலம்.

சிறப்பு பிரார்த்தனை:
திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் வேண்டியும் பிரார்த்திக்கின்றனர்.

எப்படிச் செல்வது?: திருப்பத்தூர் - பிள்ளையார்பட்டி சாலையில் வைரவன்பட்டியில் இருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது சிறுகூடல்பட்டி. திருப்பத்தூரில் இருந்தும் பிள்ளையார்பட்டியில் இருந்தும் பஸ் வசதி உண்டு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism