Published:Updated:

சக்தியர் சங்கமம்!

சக்தியர் சங்கமம்!
பிரீமியம் ஸ்டோரி
சக்தியர் சங்கமம்!

படம்: ந.வசந்தகுமார்

சக்தியர் சங்கமம்!

படம்: ந.வசந்தகுமார்

Published:Updated:
சக்தியர் சங்கமம்!
பிரீமியம் ஸ்டோரி
சக்தியர் சங்கமம்!
சக்தியர் சங்கமம்!

‘எனக்கு எல்லாமே ஆஞ்சநேயர்தான்!’

‘‘என்னோட கண்கண்ட தெய்வம் என்றால் அது ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர்தான். இக்கட்டான ஒவ்வொரு தருணத்திலும் அவரோட அனுக்கிரஹம் எனக்கு உறுதுணையா இருந்திருக்கு.

25 வருஷத்துக்கு முன்னாடி என் முதல் பிரசவ சமயத்துல டாக்டர் கொடுத்த டியூ டேட் வரை பிரசவ வலியே வரல. செக்கப் பண்ணின டாக்டர் `ஒரு வாரத்துக்குள்ள வலி வரலேன்னா, சிசேரியன் செஞ்சுடலாம்’னு சொல்லிட்டார். எனக்கு சிசேரியன் செஞ்சுக்கறதுல உடன்பாடில்லை. அந்த நேரத்துல வீட்டுக்கு வந்த குடும்ப நண்பர் ஒருவர், `ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயரை வேண்டிட்டு வாம்மா. சுகப்பிரசவம் ஆயிடும்’னு சொன்னார். நானும் நம்பிக்கையோட போய் வேண்டிட்டு வந்தேன். இரண்டே நாள்ல வலி வந்து சுகப்பிரசவம் ஆயிடுச்சு.     

சக்தியர் சங்கமம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இரண்டாவது பிரசவத்தின்போது டாக்டர், `குழந்தையோட தலை ரொம்பப் பெரிசா இருக்கு. சிசேரியன்தான் செய்யணும்’னு சொல்லிட்டார். அப்போது என்னால கோயிலுக்குப் போயி கும்பிட முடியல. மனசுக்குள்ளேயே ஆஞ்சநேயரை வேண்டிக்கிட்டேன். மொட்டைமாடியில் வாக்கிங் பண்ணும்போதும் அனுமனைக் குறித்த பிரார்த்தனைதான். அப்படியே ஒரு மணி நேரம் நடந்துட்டு வந்து படுத்துட்டேன். தூங்கிட்டு இருக்கும்போதே வலி வந்து உடனே ஆஸ்பத்திரிக்குப் போயிட்டோம். இரண்டு மணி நேரத்துலேயே சுகப்பிரசவம் ஆகிடுச்சு. குழந்தை தலை பெரிசா இருந்தும், சுகப்பிரசவம் ஆனதை பார்த்து டாக்டரே ரொம்ப ஆச்சர்யப்பட்டாங்க. எல்லாம் அந்த ஆஞ்சநேயரோட அனுக்கிரஹம்தான்!

அன்னிக்கு ஆரம்பிச்சு இப்ப வரைக்கும் வாழ்க்கையில நான் சந்திக்கிற பிரச்னை, சிரமம்னு எல்லாத்தையும் ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயரை வேண்டிட்டு அவர் பொறுப்புல விட்டுடுவேன். நல்ல தீர்வையே தந்திருக்கார் ஆஞ்சநேயர்''.

- ஆதிரை வேணுகோபால், சென்னை. 

சக்தியர் சங்கமம்!

விபூதி மந்திரம் தெரியுமா?

விபூதி என்னும் சொல்லுக்கு ஐஸ்வர்யம் என்று பெயர். ‘திருவை அளிப்பதால்-திருமகளின் கடாட்சத்தைப் பெற்றுத் தருவதால் விபூதியைத் ‘திருநீறு’ என்கிறோம்' என்று விபூதியின் மகிமையைச் சுவைபட விவரிப்பார்கள் பெரியோர்கள்.

விபூதி அணியும்போது மனதில் பஞ்சாட்சரத்தையும் ‘மந்திரமாவது நீறு’ எனும் திருஞானசம்பந்தரின் பதிகத்தையும் சொல்லி வழிபடுவது சிறப்பு. அதேபோல், ‘ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் என்று பூதி அணிகின்ற...’ எனும் அருணகிரிநாத சுவாமிகளின் வாக்குப்படி ஆறுமுகம் என்ற முருகனின் திருப்பெயரை ஆறு தடவை சொல்லி விபூதி அணிவோருக்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

- கே.ராஜேஸ்வரி, சேலம்

சக்தியர் சங்கமம்!

பூஜையறை டிப்ஸ்...

குத்துவிளக்கில் பூ வைக்கும்போது கீழே விழுந்துவிடும் அல்லது எண்ணெயில் பூ படும். இதைத்தவிர்க்க, பூ வைக்கும் இடத்தில் ஒரு ரப்பர் பேண்டைச் செருகிப் பூவை வைத்துவிட்டால், அது கீழே விழாமலும் எண்ணெயில் படாமலும் இருக்கும்.
விளக்கைத் துலக்குவதற்கு முன்னதாக விளக்கில் படிந்திருக்கும் எண்ணெயை ஒரு டிஷ்யூவால் துடைத்து எடுத்துவிட்டால் துலக்குவதற்கு எளிமையாக இருக்கும்.விளக்கின் பாதங்களில் காம்புள்ள, வாசனை மலர்களை மட்டும் போட வேண்டும். காம்பு உடைந்த, நைந்து போன மலர்களைப் போடுவதைத் தவிர்க்க வேண்டும்.

- எம்.சி.தேவிப்ரியா, காரைக்குடி

சக்தியர் சங்கமம்!

பூக்களும் சில நியதிகளும்!

பூஜையில் பூக்களுக்குப் பிரதான இடமுண்டு. அவற்றைப் பயன் படுத்தும்போது சில நியதிகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சாமந்தி, சங்கு புஷ்பம், தெச்சிப்பூ, பாரிஜாதம் போன்ற மலர்களை இதழ்களைக் கிள்ளாமல் அர்ச்சனையில் பயன்படுத்த வேண்டும்.

தாமரை, செம்பருத்தி, தாழம்பூ ஆகியவற்றை இதழ்களாகப் பிரித்தெடுத்து அர்ச்சனைக்குப் பயன்படுத்தலாம்.

பூக்கள் தீர்ந்து போனால் அட்சதையைப் பயன்படுத்தலாம். அதுவும் தீர்ந்துவிட்டால், குங்குமம் பயன்படுத்தலாம். எதுவும் இல்லையெனில், பக்தியுடன் பகவான் நாமத்தை மட்டும் கூறி அர்ச்சிக்கலாம்; தவறில்லை.

அதுசரி, பூஜையில் பூக்கள் சொல்லும் தாத்பர்யம் என்ன தெரியுமா? இதுகுறித்து சொற்பொழிவு ஒன்றில் ஆன்மிகப் பெரியவர் ஒருவர் சொன்னதை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

‘பூ மென்மை, நினது திருப்பாதங்களும் மென்மை, எனது இதயம் மென்மை. விருப்பம் - பக்தி கலந்த மென்மையான இதயத்தைப் பூக்களின் வாயிலாகத் தங்களது பாதத்தில் சேர்த்துவிட்டேன்!’ என்று நம்மையே இறைவனிடம் அர்ப்பணிக்கும் விதமாக புஷ்ப சமர்ப்பணம் நிகழ்கிறதாம்.

- சங்கரி லிங்கம், திருநெல்வேலி 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism