Published:Updated:

“ஓடினாலும் உறங்கினாலும் உள்ளே ஓடும் மகா மந்திரம்!”

“ஓடினாலும் உறங்கினாலும் உள்ளே ஓடும் மகா மந்திரம்!”
பிரீமியம் ஸ்டோரி
“ஓடினாலும் உறங்கினாலும் உள்ளே ஓடும் மகா மந்திரம்!”

இசைக் கலைஞர் அருணா சாய்ராம்பிரேமா நாராயணன்

“ஓடினாலும் உறங்கினாலும் உள்ளே ஓடும் மகா மந்திரம்!”

இசைக் கலைஞர் அருணா சாய்ராம்பிரேமா நாராயணன்

Published:Updated:
“ஓடினாலும் உறங்கினாலும் உள்ளே ஓடும் மகா மந்திரம்!”
பிரீமியம் ஸ்டோரி
“ஓடினாலும் உறங்கினாலும் உள்ளே ஓடும் மகா மந்திரம்!”

ம் அம்மாவைப்போல பேச்சில் வாத்ஸல்யம், தீராத இறைபக்தி, கேட்போரை ஈர்க்கும் காந்தக்குரல் எனக் கர்னாடக இசைக் கலைஞர் அருணா சாய்ராம் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம். சக்தி விகடனுக்காக அவருடன் ஓர் மாலை வேளையில் உரையாடினோம். இசையைப் போலவே அவரது பேச்சும் காந்தம்.   

“ஓடினாலும் உறங்கினாலும் உள்ளே ஓடும் மகா மந்திரம்!”

‘‘என் அப்பாவுக்குப் பூர்வீகம் திருவாரூர். அம்மா திருச்சி. நான் வளர்ந்ததோ மும்பையில். வருஷாவருஷம் திருச்சிக்கும் திருவாரூருக்கும் வருவதாலே, அந்த இழை அறுந்துபோகாமல் இருந்தது. திருவாரூரைச் சுற்றிலும் கோயில்கள்தானே. அவற்றில் என் மனசுக்கு நெருக்கமானது, திருக்கோலக்காவில் இருக்கும் ‘ஸ்ரீதாளபுரீஸ்வரர் கோயில்’. அந்தக் கோயிலுக்கு என் வாழ்க்கையில் முக்கியமான பங்கு இருக்கு.

அப்போ எனக்கு பதினாலு வயசு. குரல் உடைந்து மாறும் காலகட்டம் அது. எனக்கு அந்த வயசில் குரல் உடைஞ்சு, கொஞ்சம் சிரமப்பட்டேன். ‘பாட வேண்டிய குரலாச்சே’னு அம்மா கவலைப்பட்டப்போ, ‘திருக்கோலக்காவில் அருளும் ஓசை கொடுத்த நாயகியைக் கும்பிடச் சொல்லுங்க’ என்று தெரிஞ்சவங்க சொன்னாங்க. உடனே, என் பெற்றோர் அங்கே கூட்டிட்டுப் போனாங்க.

திருக்கோலக்கா அம்பாள்... பேசாத குழந்தையைப் பேசவைப்பாள்; திக்குவாயைச் சரியாக்குவாள்; பக்கவாதத்தால் பேசும் திறனை இழந்தவங்களுக்கு மீண்டும் பேச்சைக் கொடுப்பாள். அவகிட்ட, ‘இந்தக் குழந்தை குரல் சரியாகி, நல்லாப் பாடணும்’னு அம்மா மனமுருகி வேண்டிக்கிட்டாங்க. அதுக்கப்புறம்தான் எனக்கு இந்தக் குரல் வந்தது. இப்போ என் கச்சேரியைக் கேட்கிற பல ரசிகர்கள், ‘உங்களுக்கு வெண்கலக் குரல்’னு சொல்றாங்கன்னா, அது அந்த ஓசை நாயகியின் அருள்தான். அதனால, அடிக்கடி திருக்கோலக்காவுக்குப் போவேன். ஒவ்வொரு முறை அங்கு போய்ட்டு வரும்போதும், என் குரலில் ஒரு முன்னேற்றம் ஏற்படும். மனசுக்கு நிம்மதியைக் கொடுக்கும் கோயில் அது. அங்கே பிடிச்ச இன்னொரு விஷயம், அர்ச்சகர் சோமசுந்தர குருக்கள் பாடும் ‘கலையாத கல்வியும்’ என்கிற விருத்தம். அவ்வளவு அழகா பாடுவார்.  அவர் பாடறதைக் கேட்டுக்கேட்டு, நானும் அந்த விருத்தத்தைக் கச்சேரிகளில் பாடறேன். அதைப் பாடிட்டு, தண்டபாணி தேசிகரின் ‘ஜகத் ஜனனி’ பாடறதை வழக்கமா வெச்சிருக்கேன்’’ என்றவர், ராகவேந்திர சுவாமி மடம் பற்றி கூறுகிறார்...

திருக்கோலக்காவுக்கு அடுத்தபடியா சென்னையில் நேரம் கிடைக்கிறப்போ எல்லாம் நான் போற கோயில், ரங்கா சாலையில் இருக்கும் மிகப் பழமையான ராகவேந்திர சுவாமி மடம். 75 வருஷத்துக்கு முன்னால ஸ்தாபிச்ச மடம். சென்னையில் ராகவேந்திர சுவாமிகளுக்காக ஸ்தாபிச்ச முதல் மடம் அதுதான். வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கிறதால, நினைச்சதும் நடந்து போயிடுவேன். நான் நாளெல்லாம் மனசுக்குள் சொல்ற மந்திரமும் ராகவேந்திரர் மூல மந்திரம்தான். 

ஸ்ரீராகவேந்திரர் என் வாழ்க்கையில் வந்தது மறக்க முடியாத ஒரு நிகழ்வு. என் வாழ்க்கையில் எந்தக் குறையும் இல்லையென்றாலும், மனசுக்குள்ளே இனம்புரியாத ஒரு சஞ்சலமும் குழப்பமும் இருந்துச்சு. கச்சேரிகள் பண்ணிட்டு இருந்தாலும்,  எதிர்காலம் குறித்த ஏதோ ஒரு தவிப்பு. அதை எப்படி தீர்க்கிறதுன்னு தெரியாமல் திணறிட் டிருந்தேன். அந்தச் சமயத்தில், எனக்குப் பக்கவாத்தியம் வாசிக்கிற நர்மதாவைப் பார்க்க போயிருந்தேன். வித்வான் எம்.எஸ்.கோபாலகிருஷ்ணனுடைய மகள் அவர். நர்மதாவைப் பார்த்துட்டு் கிளம்பும்போது, வித்வான் எம்.எஸ்.அனந்தராமன் (கோபாலகிருஷ்ணனின் சகோதரர்) என்னையும் அப்பாவையும் பார்த்தார். உடனே அப்பாவின் பேரைச் சொல்லி, ‘சேதுராமய்யர்வாள்... உள்ளே வாங்க’னு கூப்பிட்டார். நாங்க உள்ளே போனோம். என்னைப் பார்த்து, ‘பாடிண்டிருக்கியா?’னு கேட்டார்’’ என்ற அருணா சாய்ராம், அப்போது நிகழ்ந்ததை ஒரு காட்சியாக விவரிக்கிறார்...

`` ‘ஆமாம்...’ என்றேன்.
‘ராகவேந்திர சுவாமி தெரியுமா உனக்கு?’
‘தெரியாது.’
‘ராகவேந்திர மந்திரம் தெரியுமா?’
‘தெரியாது.’


அவ்வளவுதான்... தன்னுடைய மகனைக் கூப்பிட்டு,  ஒரு படம் எடுத்து வரச்சொன்னார். அதை என் கையில் கொடுத்தார். ஒரு பேப்பரில் ஸ்ரீராகவேந்திர மூல மந்திரத்தை எழுதிக்கொடுத்து,  மந்திரத்தை மூணு தடவை எனக்கு உபதேசித்தவர், ‘இதைத் தினமும் 12 முறை சொல்லு. உன் கஷ்டங்கள் போயிடும். இன்னும் சிறப்பான இடத்துக்கு வருவே. உலகம் முழுதும் உன் பாட்டு பரவும்’னு சொன்னார். தேவ வார்த்தைகள் அவை.

அப்போதிலிருந்து அந்த மந்திரத்தைத் தினமும் சொல்ல ஆரம்பிச்சேன். என்ன ஆச்சர்யம்... என் மனச் சஞ்சலங்கள் விலகி, தெளிவாகிட்டேன்.

அன்றையிலிருந்து இந்த மந்திரம் தன்னிச்சையாக உள்ளே ஓடிட்டிருக்கு.இப்போதும் ஸ்ரீராகவேந்திர மந்திரம் ஒரு கவசம்போல என்னை காத்துட்டிருக்கு'' - பக்தியில் குழைந்து உருகி வழிகிறது அருணாவின் வெண்கலக் குரல்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“ஓடினாலும் உறங்கினாலும் உள்ளே ஓடும் மகா மந்திரம்!”

ஊத்துக்காடு திருப்பணி... ஆண்டவன் தந்த பாக்கியம்!

ஊத்துக்காடு அருள்மிகு ஆதி நாராயணப் பெருமாள் கோயிலின் கும்பாபிஷேகத் திருப்பணிகளில் அருணா சாய்ராமுக்கும் பங்குண்டு. ‘‘ஊத்துக்காடு மறக்க முடியாத தலம். ஜாம்பவான் வெங்கட சுப்பராமய்யர் பிறந்த ஊராச்சே! அங்கே பெருமாள் கோயிலில் இருக்கும் காளிங்க நர்த்தனக் கிருஷ்ணர் உற்ஸவர் விக்ரகம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவ்வளவு அழகா இருப்பார். அவருக்கு ரெண்டு பக்கமும் கொழுகொழுன்னு ரெண்டு மாடுகள் நிற்கும். அவை, காமதேனுவின் கன்றுகள் நந்தினியும் பட்டியும். அந்த உற்ஸவருக்கு ஒரு சுவாரஸ்யமான தல புராணம் உண்டு. ஒரு சமயம், காமதேனுவின் கன்றுகள் ரெண்டும் கிருஷ்ணரைப் பார்த்து, ‘நீங்க எப்பவோ காளிங்க நர்த்தனம் பண்ணினதை நாங்க பார்க்கலை. இப்போ எங்களுக்காகப் பண்ணக் கூடாதா?’னு கேட்டதுகளாம். உடனே, அந்தக் கன்றுகளுக்காகக் கிருஷ்ணர் காளிங்க நர்த்தனக் காட்சியை அருள்பாலிச்சாராம். அங்கே திருப்பணி நடந்தபோது, என்னைவிட என் நெருங்கிய குடும்ப நண்பர், அமெரிக்காவில் இருக்கும் டாக்டர் க்ரிஸ் யோகம்தான் அதிக நன்கொடை கொடுத்தார். என் தில்லானாவைக் கேட்டுக்கேட்டு ரசிகையாகி, நெருங்கிய தோழியானவங்க டாக்டர் க்ரிஸ் யோகம். அவங்கதான் ஊத்துக்காடு கோயில் புனருத்தானத்துக்கு பெரிய அளவில் உதவியிருக்காங்க. நான் கச்சேரிகள் பண்ணி சிறிய அளவில்தான் செய்தேன். ஊத்துக்காடு கோயிலுக்குத் திருப்பணி பண்ணினது, என் வாழ்க்கையில் ஆண்டவன் கொடுத்த பெரிய பாக்கியம்!’’ - நன்றி உணர்வோடு கூறினார் அருணா. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism