Published:Updated:

ஆண்டாள் தரிசனம்!

ஆண்டாள் தரிசனம்!
பிரீமியம் ஸ்டோரி
ஆண்டாள் தரிசனம்!

ஆடி சிறப்பிதழ்

ஆண்டாள் தரிசனம்!

ஆடி சிறப்பிதழ்

Published:Updated:
ஆண்டாள் தரிசனம்!
பிரீமியம் ஸ்டோரி
ஆண்டாள் தரிசனம்!

அவதார காலம்!

மகாவித்வான் மு.ராகவையங்கார், ஆண்டாளது காலத்தைக் கணிக்க உதவும் அபூர்வமான வானியல் நிகழ்ச்சிகளைச் சுட்டிக்காட்டியுள்ளார்.     

ஆண்டாள் தரிசனம்!

வெள்ளி எழுதலும், அதேசமயம் வியாழன் உறங்குதலும் அபூர்வ நிகழ்ச்சி. திருப்பாவை 13-வது பாசுரம் இந்த நிகழ்வை வர்ணிக்கிறது. இதைக் குறிப்பிட்டு, 8-ம் நூற்றாண்டில் இம்மாதிரி நிகழ்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். கி.பி. 731-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18-ம் தேதி அதிகாலை 3.50 மணி முதல் 4.00 மணிக்குள் அந்த மார்கழி பௌர்ணமி அன்றே திருப்பாவை தோன்றியதாகக் கூறப்படுகிறது. கி.பி.716-ம் ஆண்டு ஆடிப்பூரத்தில் ஆண்டாள் தோன்றியதாக வரலாறு கூறுகிறது.

ஆண்டாள் கிளி!


ஆண்டாள், சுகப்பிரம்மம் என்ற ரிஷியைக் கிளி ரூபத்தில் ரங்கநாதரிடம் தூது அனுப்பியதாகவும், தூது சென்று வந்த கிளியிடம், ‘என்ன வரம் வேண்டும்?’ என்று ஆண்டாள் கேட்க சுகப்பிரம்மம், ‘இதே கிளி ரூபத்தில் உங்கள் கையில் தினமும் இருக்க அருள் புரிய வேண்டும்!’ என்று வேண்டிக்கொண்டார். அதனால் ஆண்டாளின் கையில் கிளி இடம்பெற்றிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. தினமும் புதிதாகச் செய்து சமர்ப்பிக்கப்படும் ஆண்டாள் கிளியைப் பெறுவதைப் பாக்கியமாகக் கருதுகிறார்கள் பக்தர்கள்.

தேரழகு!

ஸ்ரீ ஆண்டாளின் அவதார தினமான ஆடிப் பூரம் அன்று ஸ்ரீ வில்லிப்புத்தூரில் தேர்த் திருவிழா நடைபெறுகிறது. தமிழகத்தின் மூன்றாவது பெரிய தேராகக் கருதப்படும் இதில், சுமார் 1,000 தேவ-தேவியர், ரிஷிகள், முனிவர்கள் ஆகியோரது உருவங்களுடன் மகாபாரதம், ராமாயணக் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இந்தத் தேரை வடம் பிடிக்க 3,000 ஆட்களாவது வேண்டுமாம். வானமாமலை ஜீயரால் வழங்கப்பட்ட இந்தத் தேர் நவாம்சம் பொருந்தியது. திருவிழாவன்று ஆண்டாளும், ரங்கமன்னாரும் இத்தேரில் எழுந்தருளி வீதி உலா வருவார்கள்.

- கிருஷ்ணராஜ், சென்னை-5.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism