Published:Updated:

ஆன்மிக துளிகள்...

ஆன்மிக துளிகள்...
பிரீமியம் ஸ்டோரி
ஆன்மிக துளிகள்...

ஆன்மிக துளிகள்...

ஆன்மிக துளிகள்...

ஆன்மிக துளிகள்...

Published:Updated:
ஆன்மிக துளிகள்...
பிரீமியம் ஸ்டோரி
ஆன்மிக துளிகள்...
ஆன்மிக துளிகள்...

எறும்புகளும் மனிதர்களும்!

ஒருமுறை கோயிலுக்குச் சென்ற ராமகிருஷ்ண பரமஹம்சரிடம்,

``ஒவ்வொரு நாளும் தயாரிக்கிற பிரசாதங்களையெல்லாம் எங்கிருந்தோ வருகிற எறும்புகள் மொய்த்துவிடுகின்றன.

கடவுளுக்கும் படைக்க முடியவில்லை, பக்தர்களுக்கும் கொடுக்க முடியவில்லை'' என்று முறையிட்டனர் கோயில் பணியாளர்கள்.

இதைக்கேட்ட பரமஹம்சர் சொன்னார்: ``இன்றைக்குக் கோயில் வாசலிலே ஒரு பிடி சர்க்கரையைப் போட்டு வைத்துவிடுங்கள். அப்புறம் எறும்புகள் உள்ளே வராது.''

ஆன்மிக துளிகள்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!



அதன்படியே கோயில் வாசலில் சர்க்கரையைப் போட்டதும், எறும்புகளெல்லாம் அந்தச் சர்க்கரையை மொய்த்துவிட்டு அப்படியே திரும்பிப் போய்விட்டன. கோயிலுக்குள் வரவில்லை.

``உள்ளே விதவிதமாக பிரசாதங்கள் இருக்கின்றன. ஆனால், இந்த எறும்புகள் வாசலில் இருக்கிற சர்க்கரையை மட்டும் மொய்த்துவிட்டுத் திரும்பிப் போய்விட்டனவே'' என்று எல்லாரும் ஆச்சர்யப்பட்டபோது, பரமஹம்சர் சொன்னார்: 

``எறும்புகளும் மனிதர்களும் ஒன்றுதான். மனிதர்களும் வாழ்க்கையில் உயரிய லட்சியமெல்லாம் வைத்துக்கொண்டுதான் இருப்பார்கள். ஆனால், நடுவிலே கிடைக்கிற அற்ப சந்தோஷத்துக்கு மயங்கி முன்னேறாமலேயே இருந்து விடுவார்கள்!''.

அருள்மொழிகள்...

•  கடவுளைத் தேடுபவன் கடவுளையும் செல்வத்தை நாடுபவன் செல்வத்தையும் அடைகிறான். வாழ்வில் எதை விரும்பி நாடுகிறார்களோ அதையே அடைவார்கள்.

ஆன்மிக துளிகள்...

• ஒளியை உணர்பவன், இருளையும் உணர்கிறான். நற்குணத்தைப் பற்றி அறிந்தவன், துர்குற்றத்தைப் பற்றியும் அறிந்திருப்பான்.

• பழங்கள் நிறைந்த மரம் எப்போதும் கனத்தினால் தாழ்ந்து வளையும். அதுபோல நீங்கள் பெருமைமிக்கவராக  வாழ வேண்டுமானால் அடக்கமும் பொறுமையும் தேவை.

- ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் 

நம்பிக்கை!     

ஆன்மிக துளிகள்...

னவில் வந்த கடவுளிடம் பக்தன் கோபமாய்க் கேட்டான், “நீ எல்லா இடத்திலும் நிறைந்திருப்பது உண்மையானால், ஏன் என்னுடைய பிரார்த்தனைகள் உன் செவிகளுக்கு எட்டவில்லை?”

கடவுள் சிரித்தபடியே, “நானும் ஒருவகையில் Wifi சிக்னல் போலத்தான் எங்கும் பரவி இருக்கிறேன்.

ஆனால், என்னை நீ உன்னுள் பெற்றுக்கொள்ள உனக்கு Password தெரிய வேண்டும்!” என்றார்!

பக்தன் “அது என்ன Password?”

ஆன்மிக துளிகள்...



என்று ஆர்வமாகக் கேட்க... ஆழ்ந்த_நம்பிக்கை எனச் சொல்லி மறைந்தார் கடவுள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism