Published:Updated:

புதிய புராணம்! - வெட்டவெளியில் சுற்றுங்கள்..!

புதிய புராணம்! - வெட்டவெளியில் சுற்றுங்கள்..!
பிரீமியம் ஸ்டோரி
புதிய புராணம்! - வெட்டவெளியில் சுற்றுங்கள்..!

சங்கர்பாபு - படம்: மஹிதங்கம்

புதிய புராணம்! - வெட்டவெளியில் சுற்றுங்கள்..!

சங்கர்பாபு - படம்: மஹிதங்கம்

Published:Updated:
புதிய புராணம்! - வெட்டவெளியில் சுற்றுங்கள்..!
பிரீமியம் ஸ்டோரி
புதிய புராணம்! - வெட்டவெளியில் சுற்றுங்கள்..!

பூமிப்பந்தைக் காற்று மண்டலம் போல இன்னொரு மண்டலமும் சுற்றி இருப்பதாகச் சில நேரம் தோன்றுகிறது. அது, கவலை மண்டலம்.மனிதர்கள் தினுசு தினுசான காரணங்களுக்காக வெளிப்படுத்தும் கவலைகளின் அடர்த்தியினால் பூமியின் பாரம் அன்றாடம் கூடிக்கொண்டே இருக்கக்கூடும். கவலைப்படுவதற்கான காரணங்கள் இருக்கும்போது, கவலைப்படுவது தவிர்க்க முடியாத ஒன்று.   

புதிய புராணம்! - வெட்டவெளியில் சுற்றுங்கள்..!

கவலைப்படுவதில் பிரச்னை இல்லை. ஆனால், கவலை என்ற உணர்விலேயே மனிதன் ஆழ்ந்து விடும்போது, அந்தக் கவலைகள் அவனைத் தின்னத் தொடங்குகின்றன. யாரும் இவற்றை விரும்பிச் செய்வதில்லை. ஆனால், தன்னைப் பீடித்துள்ள தீராக் கவலைகளிலிருந்து வெளியே வரத் தெரியாத மனிதன் அவனுக்கே பாரமாகி நாளடைவில் சமூகத்தின் நோயாகி விடுகிறான். எப்படி கவலைகளிலிருந்து வெளியே வருவது? இதற்கான பதில்களில் ஒன்று...

கோயிலைச் சுற்றுங்கள் என்பதே!

எப்படி என்கிறீர்களா?

விளக்குகிறேன்...

நீங்கள் ஏதோ ஒரு கவலையில் இருக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். உங்கள் ஊரிலிருந்து கொஞ்சம் மேலே எழும்பிப் பாருங்கள்... என்ன தெரிகிறது? கட்டடங்கள், செடி கொடிகள், மரங்கள், ஆறுகள், ஏராளமான மனிதர்கள்.

இக்காட்சிகளைப் பார்த்துக்கொண்டே மேலே செல்கிற நீங்கள், உங்களது ஊரின் காட்சியுடன் பக்கத்து ஊர்களின் காட்சிகளையும் அரை குறையாகப் பார்ப்பீர்கள். பின்னர், அதுவும் மங்கலாகத் தெரிகிற அளவுக்கு உயரத்தில் சென்று கொண்டே இருக்கிறீர்கள். ஒருகட்டத்தில் பூமி முழுக்கத் தெரியும். சற்றுநேரத்தில் பெரிய பந்து மாதிரி தெரிந்த பூமி, அடுத்த கட்டத்தில் குட்டிப்பந்து மாதிரியும், பின்னர் ஒரு கடுகு மாதிரியும் தெரியும்.

இன்னும் மேலே செல்லச் செல்ல... விண்கற்கள்,  குட்டி கிரகங்கள்,  நட்சத்திரங்களைக் காண்பீர்கள். இவை ஒரு சீரான வேகத்தில் சுற்றுவதைப் பார்த்தவாறே, நீங்களும் அவற்றினூடே சுற்றி, இன்னும் மேலே செல்கிறீர்கள். இப்போது சூரியக் குடும்பத்தை உங்களால் நன்கு பார்க்க முடிகிறது. சூரியன் பிரமாண்டத் தீக்கோளமாய் ஜொலித்துக் கொண்டிருக்கிறது.  சூரியனைச் சுற்றி பூமி உள்ளிட்ட ஒன்பது கோள்கள்  தங்களுக்கான பாதைகளில் சுற்றுகின்றன.
 
வெள்ளி, சூரியனிலிருந்து 10 கோடி கி.மீ தூரத்தில் சுற்றிவருகிறது. வியாழனுக்கு 63 துணைக்கோள்கள் உள்ளன. இக்கிரகம் சூரியனைச் சுற்றிவர 11 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது. 60 துணைக்கோள்களைக் கொண்ட சனி கிரகம், சூரியனைச் சுற்றிவர 29 ஆண்டுகளை எடுத்துக்கொள்கிறது. இக்கிரகத்தைச் சுற்றி உள்ள வளையத்தின் வெளிப்புறத்துக்கும் நடுப்பகுதிக்கும் உள்ள இடைவெளியில் ஏறக்குறைய ஆறு பூமிகளை நிறுத்தி வைக்கலாம்.

வியாழனில் உள்ள ஒரு நிலா ஏறக்குறைய  வட அமெரிக்காவை ஒத்தது. சூரியனின் சுற்றளவை நமது பூமியால் அளக்க வேண்டும் என்றால், வரிசையாக 109 பூமிகளை நிறுத்தி வைக்க வேண்டும். சூரியனை நிரப்ப வேண்டும் என்றால் 1,300,000 பூமிகள் தேவைப்படும்.இப்போது நமது சூரியக் குடும்பத்தைத் தாண்டி, கோடிக்கணக்கான சூரியன்கள், நட்சத்திரங் களைக்கொண்ட பால்வீதியைப் பார்க்கின் றீர்கள். நம் பால்வீதியை ஒளியின் வேகத்தின் கடந்தால்கூட அதைக்கடக்க ஒரு லட்சம் வருடங்கள் தேவைப்படும். அதையும் கடந்தால், இதேபோல் கோடிக்கணக்கான பால்வீதிகள். பிரபஞ்சம் விரிந்துகொண்டே செல்கிறது. இவ்வளவு பிரமாண்டங்களையும் உங்களால் பார்க்க முடிந்தால், நம் பூமி இவற்றோடு ஒப்பிடக்கூட முடியாத அளவுக்கு `ஒன்றுமில்லாத்தன்மை'யுடன் இருப்பதை உணர்வீர்கள். அப்படியானால்,  இத்துளியிலும் துளியான பூமியில் வாழ்கின்ற கோடிக்கணக் கான மனிதர்களில் ஒருவரான நீங்கள் எம்மாத்திரம்? அதைவிட உங்களது கவலைகள் எம்மாத்திரம்?

உண்மைதான் நண்பரே! ஆனால், இந்த அண்ட சராசரத்தின் பிரமாண்டத்தை உணர்பவர்கள் தங்களின் கவலைகளும்,  பிரச்னை களும் எவ்வளவு சிறியவை என்பதை அறிவார்கள். இதை அறியாதவர்களுக்கு என் பதில் இதுதான்..

கோயில்களைக் கவனியுங்கள். அங்கு அருளும் நவகிரகங்களைச் சுற்றி வாருங்கள். இது நம் சூரியக் குடும்பத்தைச் சுற்றிவருகிற மாதிரி இல்லை. நவகிரகங்களைச் சுற்றும்போது, நீங்களும் வெட்ட வெளியில் ஓர் அணுவிலும் அணுவாகி சுற்றுகின்றீர்கள். எல்லையற்ற வீதியில் சுற்றி உங்களை நீங்களே ஒன்றுமில்லாமல் உணர்கிறபோது,  உங்களின் பிரச்னைகளும், கவலைகளும் மட்டும் எப்படி உயிருடன் இருக்கும்? இதை அன்றாட அனுபவத்திலேயே உணரலாம்.எல்லாவற்றையும் இறைவனிடம் ஒப்படைத்து விட்டு மனதை காலியாக வைத்திருப்பவர்கள் அந்த  `ஒன்றுமில்லாத்தன்மை'யை உணர்வார்கள். இந்நிலையில் அவருக்கான தீர்வுகள் கிடைக்கின்றன; கவலைகள் அற்றுப்போகும்.

நமது கோயில்களில் நிறுவப்பட்டுள்ள நவகிரக வடிவமைப்பு, நமது மதத்தின் வானியல் சார்ந்த அறிவின் வெளிப்பாடு. பிரபஞ்ச வீதியில் நீங்களே தூசு என்கிறபோது, உங்களின் கவலைகளும், பாரங்களும் அதைவிட தூசு என்பதை உணர்த்துவதற்கான ஏற்பாடு.  நவகிரகங்கள் எல்லாத் திசைகளிலும் பார்க்கின்றன. இது இறைவனின் பார்வை படாத திசைகளே இல்லை என்பதற்கான குறியீடு.

சரி, ஒரு மூலையில் இருக்கிற நவகிரகங்களைச் சுற்றுகிறீர்கள். அப்படியானால் கோயிலின் நடுவில் கர்ப்பக்கிரகத்தில் இருக்கிற இறைவன்? பிரபஞ்சத்தின் மையமாக உருவகப் படுத்திப் பாருங்கள். ஆம், நம் கோயில்களின் அமைப்பே பிரபஞ்சத்தின் பிரமாண்டத்தைச் சுட்டும் அமைப்புதான்!

“தானே வெளியென எங்கும் நிறைந்தவள்
தானே பரம வெளியது வானவள்
தானே சகலமுமாகி அழித்தவள்
தானே அனைத்துள் அண்ட சகலமுமே..
” என்பது திருமூலர் வாக்கு. கோயிலைச் சுற்றுவது, பிரபஞ்ச வீதியில் சுற்றி, `ஒன்றுமில்லாத்தன்மை'யை உணர்ந்து,  மனதை எளிமையாக்கும் ஏற்பாடுதான். எளிமையான மனதில் எப்படி எரிமலைகள் வெடிக்கும்? ஏகாந்தம் மட்டுமே இருக்கும்! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism