Published:Updated:

சக்தியர் சங்கமம்! - ‘இது பெண்களுக்கான வழிபாடு!’

சக்தியர் சங்கமம்! - ‘இது பெண்களுக்கான வழிபாடு!’
பிரீமியம் ஸ்டோரி
சக்தியர் சங்கமம்! - ‘இது பெண்களுக்கான வழிபாடு!’

வே.கிருஷ்ணவேணி

சக்தியர் சங்கமம்! - ‘இது பெண்களுக்கான வழிபாடு!’

வே.கிருஷ்ணவேணி

Published:Updated:
சக்தியர் சங்கமம்! - ‘இது பெண்களுக்கான வழிபாடு!’
பிரீமியம் ஸ்டோரி
சக்தியர் சங்கமம்! - ‘இது பெண்களுக்கான வழிபாடு!’

கருடனின் அருளைப் பெற, நாக தோஷம் நீங்க அவசியம் படிக்க வேண்டிய திருக்கதை...

டி மாதம் வரும் அமாவாசைக்கு அடுத்த பஞ்சமி திதி நாள் (ஜூலை - 28) கருட பஞ்சமி தினமாகும். இந்தத் திருநாளை `நாக பஞ்சமி’ என்றும் சிலர் அழைப்பார்கள். பஞ்சமி என்றால் ஐந்து என்பது பொருள். பெண்களுக்கே உரித்தான இந்தத் திருநாளின் மகிமையை விவரிக்கிறார், சென்னை காளிகாம்பாள் கோயில் சண்முக சிவாச்சாரியார்.

‘‘ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் பெண்கள்தான் அந்த வீட்டின் சக்தி என்பார்கள் பெரியோர். வீட்டு வழிபாடுகள் முதற்கொண்டு சகல வேலைகளும் இல்லாள் இல்லாமல் நிறைவடையாது. அப்படிப்பட்ட சக்திகளுக்குச் சகல நன்மைகளையும் கொடுக்கக்கூடிய நாள் கருட பஞ்சமி. முதலில் கருட பஞ்சமி என்கிற விசேஷ நாள் எப்படி உருவானது என்பதைப் பார்ப்போம்.

சக்தியர் சங்கமம்! - ‘இது பெண்களுக்கான வழிபாடு!’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சக்தியர் சங்கமம்! - ‘இது பெண்களுக்கான வழிபாடு!’

காசியபர் எனும் மகரிஷிக்கு கர்த்ரு, விநதை என்று இரண்டு மனைவிகள். கர்த்ருவுக்கு ஆயிரம் நாகங்களே பிள்ளைகள். விநதைக்கு அருணன், கருடன் என்று இரண்டு பிள்ளைகள். இரண்டு மனைவிமார்கள்   ஒரே இல்லத்தில் இருந்தால் பிரச்னை வருவது சகஜம்தானே. இங்கும் அப்படித்தான்.

ஒருநாள் `உச்சை ச்ரவஸ்' எனும் தேவலோகத்துக் குதிரை வானில் பறந்து சென்றது. அதன் வால் கறுப்பு நிறத்தில் இருந்தது என்றாள் கர்த்ரு. ‘‘இல்லையில்லை... அந்தக் குதிரையின் வால் வெள்ளை நிறம்’’ என்று வாதிட்டாள் விநதை. ஆனால், கர்த்ருவோ ‘‘குதிரையின் வால் கறுப்பாக இருந்தால், நீ எனக்கு அடிமையாக வேண்டும்’’ என்று நிபந்தனை விதித்தாள். விநதையும் ஒப்புக்கொண்டாள். இதைத் தொடர்ந்து கர்த்ரு சதி செய்தாள். மறுநாள் தேவலோகக் குதிரையின் வாலில், தன் பிள்ளைகளாகிய நாகங்களை சுற்றிக்கொள்ளச் செய்தாள். விளைவு... குதிரை வானில் பறக்கும்போது அதன் வால் கறுப்பாகத் தென்பட்டது. விநதை அடிமையானாள்.

கருடன் தன் தாயை மீட்கத் துடித்தார். அவரிடம், ‘‘தேவலோகத்தில் இருந்து அமிர்தத்தைக் கொண்டு வந்தால் உன் அன்னைக்கு விடுதலை அளிக்கிறேன்’’ என்றாள் கர்த்ரு. கருடன் தாமதிக்கவில்லை; இந்திர லோகத்துக்குச் சென்று பல தடை களை வென்று அமிர்தத்தைக் கொண்டுவந்து கொடுத்து தாயை மீட்டார்.

அப்படி அவர் கொண்டுவந்த அமிர்தத்தில் சில துளிகள் கீழே சிந்தின. தர்ப்பைப் புற்களின்மீது படிந்திருந்த அமிர்தத்தை கர்த்ருவின் மைந்தர்களான நாகங்கள் சுவைக்க முற்பட்டபோது, தர்ப்பைப் புல் நாகங்களில் நாக்கைக் கிழிக்க, அவற்றின் நாக்குப் பிளவுபட்டது என்பர் (தர்ப்பைப் புற்களைக் கவன மாகத்தான் எடுக்க வேண்டியிருக்கும். இல்லையேல் அதன் கூர்மை கைகளைக் கிழித்து விடும்). தொடர்ந்து கர்த்ருவும், அவளின் பிள்ளைகளும் தங்களது தவறை உணர்ந்து மன்னிப்பு வேண்டினர். முனிவரின் ஆசியால் நற்பேறு பெற்றனர்.

இப்படி, கருடன் அமிர்தத்தை எடுத்துவந்த நாளையே கருட பஞ்சமி என்று சிறப்பித்து வழிபட்டு மகிழ்ந் திருக்கிறார்கள் முன்னோர்கள்.

அற்புதமான இந்த நாளில் கருட பகவானை வழிபடுவதுடன், நாக வழிபாடும் செய்து வணங்குவதால், நம் மனதில் இருக்கும் பகைமை உணர்வும், கர்ம வினைகளும், நாக தோஷங்களும் விலகும்; நமது வாழ்க் கைச் செழிக்கும்.

எப்படி வழிபடுவது?

கருட பஞ்சமியன்று, கருட பகவானைத் தரிசிப்பதும் வழிபடு வதும் விசேஷம். அத்துடன் நாக வழிபாடும் செய்வதால் கூடுதல் பலன் உண்டு.அன்று அதிகாலை எழுந்து நீராடி வீட்டைச் சுத்தம் செய்து பூஜையறையையும் தூய்மைப்படுத்தி அலங்கரிக்க வேண்டும். குறிப்பாக, வீட்டின் நுழை வாயில் கதவின் வலது, இடது இரண்டு பக்கத்திலும் உள்ள சுவரின் மீது மஞ்சள் தடவி, குங்குமத்தால் நாக உருவம் வரைந்து வைக்க வேண்டும்.

பின்னர், அருகில் உள்ள புற்றுக் கோயிலுக்குச் சென்று, பால் சமர்ப்பித்து வணங்கியபிறகு, புற்று மண்ணைக் கொஞ்சம் வீட்டுக்கு எடுத்துவர வேண்டும். சில இடங்களில் கோயிலுக்குச் செல்லுமுன், மஞ்சள் சரடு ஒன்றைத் தயார் செய்து அதில் மலர் ஒன்றை வைத்து  முடிச்சிட்டு, கையில் கட்டிக்கொள்ளச் சொல்வார்கள்.

புற்று மண்ணுடன் திரும்பும்போது, வாயிலில் நின்று ‘ஓம் நாக ராஜாய நமஹ’ என பிரார்த்தனை செய்துவிட்டு வீட்டுக்குள் நுழைய வேண்டும். பிறகு, புற்று மண்ணுடன் சிறிது அட்சதையையும் சேர்த்து வீட்டுப் பெரியவர்களிடம் (வயதில் மூத்த பெண்மணிகளிடம்) கொடுத்து, ஆசீர்வதிக்கும்படி கேட்டுக்கொள்ளலாம். ஆண்களும் அவ்வாறே ஆசி பெற்றுக்கொள்ள வேண்டும். பூஜையன்று உண்ணாநோன்பிருந்து வழிபடுவது விசேஷம். இயலாதவர்கள், மனச் சுத்தியோடு பூஜையில் கலந்துகொள்ளலாம்.

சக்தியர் சங்கமம்! - ‘இது பெண்களுக்கான வழிபாடு!’

சில மாநிலங்களில் நாகருக்கு நடுவில் கெளரி தேவியின் திருவுருவை வைத்து வழிபடுவார்கள். வேறு சில இடங்களில் முருகப்பெருமானை வைத்து வழிபடுவதும் உண்டு. ஒடிசா, பீகார், வங்காளம் போன்ற இடங்களில் வாசுகி பாம்பின் சகோதரியான மானஸாதேவியை வழிபடுவது வழக்கம். கெளரி பூஜை செய்யும்போது `ஓம் கெளர்யை நம:’ என உச்சரிக்க வேண்டும். `ஓம் கருடாய நம:’, `ஓம் நாகராஜாய நம:’ எனவும் பூஜையின்போது சொல்லலாம்.

குழந்தைப் பாக்கியம் தள்ளிப்போவதால் வருத்தப்படுவோர், தோஷத்தால் கஷ்டப்படுவோர் இந்த பூஜை செய்தால் நல்லது நடக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை பலப்பட; குடும்ப நலனும் தரவல்லது இந்தப் பூஜை.

  இந்தப் பூஜையைப் பெண்கள் செய்தால் வீடு சுபிட்சமாக இருக்கும்; எல்லா பாக்கியங்களும் அவர்கள் மூலமாக இல்லங்களுக்கு வந்து சேரும்!’’

கருட பஞ்சமி தினத்தில்...

சகல அஞ்ஞானங்களையும் நீக்க வல்லவர் கருடாழ்வார். இவரை வழிபடுவதால் சிறந்த பக்தி, ஞாபக சக்தி, வேதாந்த அறிவு, வாக்கு சாதுர்யம் போன்றவை கிடைக்கும் என்கிறது ஈஸ்வர சம்ஹிதை.

கருடனை வழிபட்டு உபவாசம் இருந்தால் மனநோய், வாய்வு நோய், இதயநோய், தீராத விஷ நோய்கள் தீரும் தன் கருட தண்டகத்தில் கூறப்பட்டுள்ளது.

கருடன் நிழல்பட்ட வயல்களில் அமோக விளைச்சல் உண்டாகும் என்பது கிராம மக்களின் நம்பிக்கை. கருடனைப் பார்ப்பதும், அவரது குரலைக் கேட்பதும்கூட நல்ல சகுனமாக உலகமெங்கும் பார்க்கப்படுகிறது.

ராமாயணக் காலத்தில் ராவண யுத்தத்தின்போது இந்திரஜித் ஏவிய நாகாஸ்திரத்தால், ராம - லட்சுமணர் கட்டுண்டார்கள். அப்போது அங்கு வந்த கருடனின் நிழல்பட்டே  அதிலிருந்து விடுபட்டார்கள் என்று கூறப்படுகிறது.

சக்தியர் சங்கமம்! - ‘இது பெண்களுக்கான வழிபாடு!’

கருடனின் அவதார தினமே கருட பஞ்சமி என்பார்கள்.

இந்தத் தினத்தில் சூரியோதயத்தில் கருடனைத் தரிசித்தால் மோட்சப்பேறு வாய்க்கும். பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ்வார்கள். அன்று விரதமிருந்து கருடாழ்வாரை வழிபட்டால் நாகதோஷம் நீங்கும், செவ்வாய் பலம் அதிகரிக்கும், வேண்டிக்கொள்ளும் எல்லா வேண்டுதல்களும் நிறைவேறும் என்பது ஆன்றோர் வாக்கு.

வடநாட்டுப் பெண்கள், தங்களின் சகோதரர்களின் நலனுக்காகவும், கருட பகவானைப் போன்றே பலமும் அதிர்ஷ்டமும் கொண்ட பிள்ளைகளைப் பெறவும் இந்தத் தினத்தில் கருடாழ்வாரை வழிபடுகிறார்கள்.

வைணவ ஆலயங்களில், கருட பஞ்சமி தினத்தன்று அதிகாலை கருட ஹோமத்துடன் மகா திருமஞ்சனமும், இரவு கருட வாகனத்தில் பெருமாள் புறப்பாடும் நடைபெறும். அந்த வேளையில் பெருமாளோடு, கருடாழ்வாரை தரிசிப்பது புண்ணியக் காரியமாகும்.

இந்த நாளில் கருட மந்திரம் மற்றும்  கருட பகவான் துதிப்பாடல்களைப்  படிக்கும் எல்லோருக்கும் கருடாழ்வார், தனது ஆசியை வழங்கி, தனது சக்தியில் ஒரு துளியையும் தருவார் என்பது நம்பிக்கை.
கருடபகவானை வழிபட்டு வரம்பெற ஒரு மந்திரம், இங்கே உங்களுக்காக...

‘தத்புருஷாய வித்மஹே ஸ்வர்ண பக்ஷாய தீமஹி
தன்னோ கருட பிரசோதயாத்’


- மு.ஹரிகாமராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism