Published:Updated:

கனவில் கிடைத்த கட்டளை... தென்னாங்கூர் வந்த பாண்டுரங்கன்!

கனவில் கிடைத்த கட்டளை... தென்னாங்கூர் வந்த பாண்டுரங்கன்!
பிரீமியம் ஸ்டோரி
கனவில் கிடைத்த கட்டளை... தென்னாங்கூர் வந்த பாண்டுரங்கன்!

க.புவனேஸ்வரி- படம்: க.முரளி

கனவில் கிடைத்த கட்டளை... தென்னாங்கூர் வந்த பாண்டுரங்கன்!

க.புவனேஸ்வரி- படம்: க.முரளி

Published:Updated:
கனவில் கிடைத்த கட்டளை... தென்னாங்கூர் வந்த பாண்டுரங்கன்!
பிரீமியம் ஸ்டோரி
கனவில் கிடைத்த கட்டளை... தென்னாங்கூர் வந்த பாண்டுரங்கன்!
கனவில் கிடைத்த கட்டளை... தென்னாங்கூர் வந்த பாண்டுரங்கன்!

த்குரு ஸ்ரீஞானானந்தகிரி சுவாமிகள் ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஜோதிர்மடத்தின் பீடாதிபதி ஸ்ரீசிவரத்னகிரி சங்காராச்சாரிய சுவாமிகளிடம் சந்நியாச தீட்சைப் பெற்றவர். பின்னர் திருக்கோவிலூரில் ஆசிரமம் அமைத்து, ஆன்மிக சாதனைகள் புரிந்துவந்த காலம் அது. கலியுகத்தில் நாமசங்கீர்த்தனமே இறைவனின் அருளைப்பெறுவதற்கு மிகவும் உன்னதமான சாதனம் என்பதை உணர்த்தும் வகையில் நாமசங்கீர்த்தனத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தார். அவருடைய சீடரான பூஜ்யஸ்ரீ ஹரிதாஸ்கிரி சுவாமிகள் தம்முடைய குருநாதரின் உத்தரவின் பேரில் நாடு முழுவதும் விஜயம் செய்து நாமசங்கீர்த்தனத்தால் எண்ணற்ற மக்களை ஆன்மிகத்தின்பால் திருப்பும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

கனவில் கிடைத்த கட்டளை... தென்னாங்கூர் வந்த பாண்டுரங்கன்!

ஒருமுறை ஸ்ரீஹரிதாஸ்கிரி சுவாமிகளின் கனவில் தோன்றிய குருநாதர், அவரை பண்டரிபுரம் செல்லுமாறும், அங்கே பாண்டுரங்கன் ஆலயத்தில் அவருக்குப் பாண்டுரங்கனின் விக்கிரகம் ஒன்று கிடைக்கும் என்றும் தெரிவித்தார். அதேபோல், பாண்டுரங்கன் கோயில் பண்டா (அர்ச்சகர்) கனவிலும் தோன்றிய குருநாதர், கோயிலுக்கு வரும் தம்முடைய சீடரிடம் பாண்டுரங்கனின் விக்கிரகத்தைத் தருமாறு உத்தரவிட்டார்.

பண்டரிபுரத்தில் இருந்து பாண்டுரங்கனின்  விக்கிரகத்தை பெற்றுக்கொண்டு நாடெங்கும் யாத்திரை மேற்கொண்டு நாம சங்கீர்த்தனம் செய்து வந்தார் ஸ்ரீஹரிதாஸ்கிரி சுவாமிகள்.

கனவில் கிடைத்த கட்டளை... தென்னாங்கூர் வந்த பாண்டுரங்கன்!

தம்முடைய குருநாதர் ஸித்தியான பிறகு, தென்னாங்கூரில் தம்முடைய குருநாதரை வழிபடுவதற்காக ஸ்ரீஞானானந்தகிரி பீடத்தையும், அங்கே குருநாதருக்கு ஒரு பிருந்தாவனமும் ஏற்படுத்தினார். மேலும், குருநாதரின் உத்தரவுப்படி அங்கே ரகுமாயி சமேதராக ஸ்ரீபாண்டுரங்கனுக்கு சந்நிதி ஏற்படுத்தினார். பண்டரிபுரத்தில் தனக்குக் கிடைத்த விக்கிரகத்தையும் வைத்து வழிபாடுகளும் நாமசங்கீர்த்தனமும் நடைபெற வழிவகை செய்தார்.

மேலும் கோகுலாஷ்டமியை ஒட்டி, பாகவத சப்தாஹமும், கோகுலாஷ்டமி விழாவும் நடத்தி வந்தார். அவருக்குப் பிறகு ஸ்ரீநாமானந்தகிரி சுவாமிகளும் அந்தத் திருப்பணியை ஏற்றார். அவரைத் தொடர்ந்து தற்போது ஸ்ரீநிரஞ்சனானந்த சுவாமிகள் தம்முடைய குருநாதர் வழிவகுத்துச் சென்றபடி விழாக்களையும் பூஜைகளையும் தொடர்ந்து வருகிறார்.

கனவில் கிடைத்த கட்டளை... தென்னாங்கூர் வந்த பாண்டுரங்கன்!

ஸ்ரீபாண்டுரங்கன் சந்நிதியில் ஆடி மாதம் வரும் ஆஷாட ஏகாதசி, கார்த்திகை ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி போன்ற விசேஷங்களுடன், கோகுலாஷ்டமியும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

கோகுலாஷ்டமி தினம் 4-வது நாளாக வரும்படி பாகவத சப்தாஹ பாராயணம் தொடங்குகிறது. சப்தாஹ பாராயணத்தின் 4-வது நாள் பாராயணம் ஸ்ரீகிருஷ்ணரின் அவதாரத்தைக் குறிப்பிடும் பகுதியாக அமைவது விசேஷம்.

கனவில் கிடைத்த கட்டளை... தென்னாங்கூர் வந்த பாண்டுரங்கன்!

அன்று இரவு முழுவதும்   நாமசங்கீர்த்தனத்துடன் கோகுலாஷ்டமி விழா மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்படும். 9-வது நாள் ஸ்ரீகிருஷ்ணர் கோகுலத்துக்குச் சென்றதை நினைவுபடுத்துவதுபோல் விமர்சையான முறையில், உறியடி உற்சவம் போன்ற வைபவங்களுடன் விழா நடைபெறும்.

கோகுலாஷ்டமி விழாவையொட்டியே ஸ்ரீஹரி தாஸ்கிரி சுவாமிகளின் ஆராதனை விழாவும் வருவது சிறப்பு. இந்த வருடம் தென்னாங்கூர் ஸ்ரீஞானானந்தகிரி பீடத்தில் வரும் 11-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை கோகுலாஷ்டமி வைபவம் விமர்சையாக நடைபெற இருக்கிறது.

தலவிருட்சம்

இந்தத்தலத்தின் தலவிருட்சமாக தமால விருட்சம் உள்ளது. பகவான் கிருஷ்ணர் தமால விருட்சத்தின் அடியில் நின்றுகொண்டுதான் புல்லாங்குழல் இசைத்ததாகவும், அந்த இசையில் ராதை லயித்ததாகவும் சொல்லப்படுகிறது. பொதுவாக வட இந்தியப் பகுதிகளில் மட்டுமே காணப்படும் தமால விருட்சம் இங்கே இருப்பது தனிச் சிறப்பு.

கனவில் கிடைத்த கட்டளை... தென்னாங்கூர் வந்த பாண்டுரங்கன்!

திருக்கல்யாண உற்சவம்

இங்கு சனிக்கிழமைகள் தவிர மற்ற நாள்களில் திருப்பதியைப் போலவே திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகின்றது. வைதீக சம்பிரதாயமும் பஜனை சம்பிரதாயமும் இணைந்து மிக அற்புத மாக நடைபெறுகிறது திருக்கல்யாண வைபவம்.இப்படியான வைபவங்கள் மட்டுமின்றி, இந்தப் பீடத்தில் திகழும் வண்ண ஓவியங்களும் பக்தர்கள் தரிசித்து மகிழவேண்டிய கலைப் பொக்கிஷங்களாகும்!

பூரி தரிசனமும் பண்டரிபுர தரிசனமும்!

காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில், வந்தவாசியிலிருந்து சுமார் 6 கி.மீ தூரத்திலும் காஞ்சிபுரத்திலிருந்து 35 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது தென்னாங்கூர். இந்தப் பீடத்தில் பூரி ஜகந்நாதர் ஆலயத்தில் உள்ளது போன்றே கோபுரம் அமைந்திருக்கிறது. இந்த கோபுர தரிசனம் நமக்குப் பூரிக்குச் சென்ற புண்ணியத்தையும், இந்தப் பீடத்தில் அருள்மிகு ரகுமாயி சமேதராகக் காட்சி தரும் பாண்டுரங்கன் தரிசனம் நமக்குப் பண்டரிபுரம் சென்ற புண்ணியத்தையும் ஒருசேரத் தருகின்றன.

பாண்டுரங்கனுக்கு விதவிதமாய் அலங்காரம்!

இந்தப் பீடத்தில் பாண்டுரங்கன் ஞாயிற்றுக்கிழமைகளில் மதுராபுரி ஆளும் மன்னனின் அலங்காரத்திலும், வியாழன் அன்று பக்தர்களுக்கு ஸ்ரீபாத தரிசனம் அருளும் வகையில் எளிய அலங்காரத்திலும், வெள்ளியன்று வெள்ளிக் கவசம் அணிந்தும், சனிக்கிழமைகளில் திருப்பதி பெருமாளைப் போலவும் தரிசனம் அருள்கிறார். யந்திர வழிபாட்டின் அடிப்படையான ஸ்ரீசக்ர அதிதேவதைகள் அனைத்தும் இங்கு இருப்பது விசேஷம். இறைவனுக்கு நாமசங்கீர்த்தனம் (பக்திப் பாடல்) மூலம் வழிபாடு செய்யப்படுவது, இத்தலத்தின் தனிச் சிறப்பம்சம்.