Published:Updated:

ராமேஸ்வரம் கோயிலில் உய‌ர் நீதிமன்ற குழு ஆய்வு (படங்கள்)

 ராமேஸ்வரம் கோயிலில் உய‌ர் நீதிமன்ற குழு ஆய்வு (படங்கள்)
ராமேஸ்வரம் கோயிலில் உய‌ர் நீதிமன்ற குழு ஆய்வு (படங்கள்)

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் குறித்து விசாரிப்பதற்காக‌ மதுரை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட‌ கல்லூரி பேராசிரியர் குழு இன்று ராமேஸ்வரத்தில் ஆய்வு மேற்கொண்டது.
 

 ராமேஸ்வரம் கோயிலில் உய‌ர் நீதிமன்ற குழு ஆய்வு (படங்கள்)

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஏற்படும் அசௌரியங்கள் மற்றும் அங்குள்ள சுகாதார குறைபாடுகள் குறித்து கோவையை சேர்ந்த வழக்கறிஞர் வெண்ணிலா மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட‌ நீதிபதிகள், ராமேஸ்வரம் கோயி லில் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து அறிக்கை அளிக்குமாறு இந்து அறநிலையத்துறை ஆணை யருக்கு உத்தரவிட்டிருந்தனர். மேலும் கோயிலுக்குள் உள்ள தீர்த்தங்களில் பக்தர்கள் நீராடுவதன் மூலம் தீர்த்தம் வீணாவதை தடுக்க மாற்று வழி உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளவும் உத்தரவிட்டனர். இதற்கென மதுரை தியாகராஜர் பொறியியற் கல்லூரி பேராசிரியர்கள் டாக்டர் அருணாச்சலம், டாக்டர் சந்திரன் ஆகியோரையும் நீதிபதி கள் நியமித்தனர்.

 ராமேஸ்வரம் கோயிலில் உய‌ர் நீதிமன்ற குழு ஆய்வு (படங்கள்)

இதையடுத்து, இன்று காலை பேராசிரியர்கள் அருணாச்சலம், சந்திரன் ஆகியோர் ராமேஸ்வரம் கோயிலில் ஆய்வு களை மேற்கொண்டனர். கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களிலும் பக்தர்கள் எவ்வாறு நீராடுகின்றனர். தற்போது உள்ள நடைமுறையில் பக்தர்களுக்கு உள்ள பிரச்னைகள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களிடமும் விசாரணை நடத்தி விவரங்களை குறித்துக் கொண்டனர்.

 பின்னர், இந்து அறநிலையத்துறை கமிஷனர் தனபாலன், கோயில் தக்கார் ராஜா குமரன்சேதுபதி ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினர். நீதிமன்ற உத்தரவுப்படி கோயிலில் ஆய்வு நடத்த வந்துள்ளதாகவும், ஆய்வு குறித்த அறிக்கையை ஏப்ரல் முதல் தேதி உயர்நீதிமன்றத்தில் அளிக்க இருப்பதாகவும் பேராசிரியர்கள் இருவரும் தெரிவித்தனர் 

இரா.மோகன்

படங்கள்: உ.பாண்டி