Published:Updated:

கயிலை காலடி காஞ்சி! - 31 - கருணை மழையில் நனைவோம்!

கயிலை காலடி காஞ்சி! - 31 - கருணை மழையில் நனைவோம்!
பிரீமியம் ஸ்டோரி
கயிலை காலடி காஞ்சி! - 31 - கருணை மழையில் நனைவோம்!

நிவேதிதா

கயிலை காலடி காஞ்சி! - 31 - கருணை மழையில் நனைவோம்!

நிவேதிதா

Published:Updated:
கயிலை காலடி காஞ்சி! - 31 - கருணை மழையில் நனைவோம்!
பிரீமியம் ஸ்டோரி
கயிலை காலடி காஞ்சி! - 31 - கருணை மழையில் நனைவோம்!

ஏகம்பத்து உறை எந்தாய் போற்றி
பாகம் பெண் உரு ஆனாய் போற்றி
பராய்த் துறை மேவிய பரனே போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
மற்று ஓர் பற்று இங்கு அறியோன் போற்றி

- மாணிக்கவாசகர்

மகா பெரியவாளுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை நம்மிடம் தொடர்ந்து பகிர்ந்துகொண்டார், கோழியாலம் ஸ்ரீதர ஆசார்யா.

‘` ‘நீ ஆரம்பிக்கப்போற ஸ்தாபனத்துக்கு நவஜீவன்ங்கற பேரையே வெச்சிடு’ என்று பெரியவா ஆக்ஞாபித்த சில வருடங் களுக்குப் பிறகே என்னால் கொத்தப்பேட்டை என்ற இடத்தில் சிறிய அளவில் நவஜீவன்ங்கற பேர்ல ஸ்தாபனம் தொடங்க முடிந்தது. பிறகு இந்த விஷயம் பற்றி அப்போது ஆனந்த விகடன் ஆசிரியராக இருந்த பாலசுப்ரமணியம் சாருக்கு ஒரு கடிதம் எழுதினேன். மத்தபடி நான் அவரிடம் எதுவும் பேசவே இல்லை. ஆனாலும், அவர் உடனே ஆனந்த விகடன்ல ஒரு செய்தியை முகவரியோட வெளியிட்டிருந்தார்.

அதைப் பார்த்து சேலம் ஆத்தூர்ல இருந்து ஒரு வாசகர் முதல் ஆளா 5 ரூபாய் மணியார்டர் அனுப்பியிருந்தார். தொடர்ந்து நிறைய வாசகர்கள் பணம் அனுப்பியிருந்தாங்க. அதிலிருந்து படிப்படியா வளர்ந்து இன்றைக்கு பல இடங்கள்ல குறிப்பா வடகிழக்கு மாநிலங்களான ஒடிசா, அசாம் போன்ற இடங்கள்ல இருக்கறவங்களுக்கு எங்களால முடிஞ்ச சேவை செய்து வருகிறோம். எல்லாவற்றுக்கும் மகா பெரியவா அனுக்கிரகம்தான் காரணம். இப்பத்தான் நான் எந்தக் காரணத்துக்காகப் பிறந்திருக்கிறேன் என்பது எனக்குப் புரிந்தது’’ என்று மகா பெரியவா தன்னுடைய பிறப்பின் நோக்கத்தை உணர்த்திய பெருங்கருணையைச் சிலிர்ப்புடனும் நெகிழ்ச்சியுடனும் பகிர்ந்து கொண்டவர் தொடர்ந்து, ‘`மகா பெரியவா வேதங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்த மகான். எனவே, அவர் விருப்பப்படியும், அவருடைய அனுக்கிரகத் தினாலும், ஒடிசா பெரஹாம்பூர் (தற்போது பிரம்மபுரா என்று அழைக்கப்படுகிறது) பகுதியில் ‘நவஜீவன் அதர்வ வேத பாடசாலை’ ஒன்றையும் தொடங்கி நடத்தி வருகிறோம்’’ என்றார் நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியுமாக.

கயிலை காலடி காஞ்சி! - 31 - கருணை மழையில் நனைவோம்!

வேதங்களை நாம் ரட்சிப்பதும், வேத தர்மங்களை நாம் கடைப்பிடிப்பதும்தான் பகவானின் அனுக்கிரகத்தை நாம் பெறுவதற்கான வழி என்று காலமெல்லாம் நமக்கு வலியுறுத்திய கருணைத் தெய்வம் காஞ்சி மகான். வேதங்களே ஒரு வடிவம் எடுத்து வந்ததுபோல், வேத ஸ்வரூபியாகத் திகழ்ந்த காஞ்சி மகான் வேதங்களைப் போதிப்பதற்காக பல இடங்களில் வேத பாடசாலைகளை ஏற்படுத்தி இருக்கிறார். அவற்றுள் பிரதானமானது தேனம்பாக்கத்தில் அமைந்துள்ள வேத பாடசாலை.

மகாபெரியவா அனுக்கிரகத்துடன் சுமார் 40 வருடங் களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்தப் பாடசாலையில் இதுவரை நூற்றுக்கணக்கான வித்யார்த்திகள் வேதம் படித்துச் சென்றிருக்கிறார்கள். தற்போது 30 வித்யார்த்திகள் வேதம் படித்து வருகிறார்கள். இங்கு ரிக், யஜுர், சாம வேதங்கள் வித்யார்த்திகளுக்குப் பயிற்றுவிக்கப் படுகின்றன. இங்கு வேதம் படிப்பதைப் பெரும் பேறாகக் கருதுகிறார்கள் வித்யார்த்திகள். இங்கு வேதம் படிக்க விரும்பும் வித்யார்த்திகள் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் (தொடர்புக்கு: சைலேஷ்: 93808 72790).

எண்ணரிய அருளாடல்களை தம் பக்தர்களின் வாழ்க்கையில் நிகழ்த்தி வரும் காஞ்சி மகானின் கருணைத் திறம் என்றென்றும் நம்மைக் காத்து ரட்சிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ‘அதிதியே வானம், அதிதியே விண்ணொளி, அதிதியே அன்னை, அவளே தந்தை, அவளே மகன், அதிதியே எல்லாத் தேவர்களும் எல்லா மனிதர்களும். பிறந்தவை, பிறக்கப் போகின்றவை எல்லாமும் அவளே’ என்று ரிக்வேதம் போற்றும் தேவியா வும் திகழ்கிறார் அவர். ஆம். கயிலை நாயகனின் அம்சமாக காஞ்சி முனிவர் அவதரித்தார் என்னும்போது, ஐயனின் இடப் பாகம் பெற்ற அம்பிகையின் அம்சமும் அவரிடத்தே பூரணப் பொலிவுடன் நிலைபெற்றிருப்பது இயல்புதானே?!

அதனால்தான் காமகோடி பீடத்தில் ஜகத்குருவாக எழுந்தருளி, இருந்த இடத்தில் இருந்தபடி சொல்லாமல் சொல்லி பொருளுணர்த்திய ஞானகுருவாக அருள்கிறார்.இங்ஙனம் ஞானமும், யோகமும் அருளும் காஞ்சி மகானின் கருணா கடாட்சம் என்றென்றும் நம்மையும் நம் சந்ததியினரையும் வாழ்வாங்கு வாழ்விக்கும் என்பது சத்தியமே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

(நிறைவுற்றது)

கயிலை காலடி காஞ்சி! - 31 - கருணை மழையில் நனைவோம்!

மூலாதார கணபதி

விநாயகர் அகவலில் `மூலாதாரத்து மூண்டெழு கனலை காலால் எழுப்பும் கருத்தறிவித்து' எனப் பாடியுள்ளார் ஒளவையார். யோக வித்தைக்கு ஆதாரமாக அமைவது மூலாதாரம். முழுமுதற் தெய்வமான கணபதியை மூலாதார கணபதியாகப் போற்றுவார்கள் அடியார்கள்.

திருவாரூர், தியாகேசர் சந்நிதியின் தூண் ஒன்றில் மூலாதார கணபதியைத் தரிசிக்கலாம். இந்த கணபதி தாமரை பீடத்தின்மீது நடனக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். கணபதியின் இந்தத் திருக்கோலம் ஆனந்தம் தரும் கோலம் என்பார்கள்!

அனுதினமும் மூலாதார கணபதியைத் தரிசித்து வழிபடுவதால், நம்முள் இருக்கும் அரிய சக்திகள் வெளிப்படும்; மனதில் நல்ல எண்ணங்களே மேலோங்கும். அதனால் நற்காரியங்கள் அனைத்திலும் வெற்றியே கிடைக்கும் என்பது பெரியோர் வாக்கு.

- எம். வள்ளி நாயகம், திருச்சி-2