Published:Updated:

ஸ்ரீரமண மகரிஷி

ஆத்ம அனுபவம்

ஸ்ரீரமண மகரிஷி

ஆத்ம அனுபவம்

Published:Updated:
ஸ்ரீரமண மகரிஷி
ஸ்ரீரமண மகரிஷி
ஸ்ரீரமண மகரிஷி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'பகவான் ஸ்ரீரமண மகரிஷி’ என்று பின்னாளில் அழைக்கப்பட்ட பாலசுவாமியின் இருப்பிடத்தைச் சுற்றி அன்பர்கள் தங்கினர். அவரால் ஈர்க்கப்பட்டு, அவருடனேயே இருந்து, அவரிடம் கற்க வேண்டும் என்று விருப்பத்துடன் தங்கினார்கள்.

'சத்குரு ஸ்ரீரமண மகரிஷியின் சரிதமும், உபதேசமும்’ என்கிற ஸ்ரீரமணாச்ரம வெளியீட்டில், இம்மாதிரியான பக்தர்கள் பற்றிய எல்லா செய்திகளும் வெளியிடப்பட்டிருக்கின்றன. எட்டு பாகங்கள் கொண்ட இந்த நூலில், ஒரு பாகம் 750 பக்கங்களைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொருவர் இல்லத்திலும் இருக்கவேண்டிய சுவையான, உயர்வான நூல் இது. இந்த நூலில் சொல்லப்பட்ட சில பக்தர்களை இப்போது காணலாம்.

பகவானின் அன்பர்களான பெருமாள்சாமி, கந்தசாமி என்ற இருவர், ஒவ்வொரு நாள் காலையிலும் பி¬க்ஷக்குக் கிளம்புவார்கள். அப்படிக் கிளம்பும்போது, மலையிலிருந்து ஒரு முறையும், மலை அடிவாரத்தில் ஒரு முறையும், எந்தத் தெருவில் பி¬க்ஷக்குப் போகிறார்களோ, அங்கு ஒரு முறையும் தங்கள் கையிலிருக்கிற சங்கினால் நீண்ட முழக்க மிடுவார்கள். வீட்டிலுள்ளவர்கள் அந்த ஒலியைக் கேட்டு பாலசுவாமிக்குப் பி¬க்ஷயிடத் தயாராவார்கள்.

##~##
திருவண்ணாமலையில், நகரத்தார்களால் நிர்மாணிக்கப்பட்ட பெரிய சத்திரம் இருக்கிறது. 'ஓயா மடம்’ என்று அதற்குப் பெயர். ஓயாது அன்னதானம் செய்ததால், இடையறாது சாதுக்களுக்கு உணவு வழங்கியதால் அந்தப் பெயர் வந்திருக்கக் கூடும். பெருமாள்சாமியும், கந்தசாமியும் அந்த அன்னதான சத்திரத்துக் குப் போய் உணவு யாசிப்பார்கள். அங்கு வழங்கப்படும் உணவைக் கொண்டு போய் பாலசுவாமியிடம் தருவார்கள். பாலசுவாமி அதைப் பகிர்ந்தளிக்க, அமைதியாய் உண்பார்கள்.

ஒரு முறை, அவர்களுடன் இன்னும் இரண்டுபேர் சேர்ந்து வர, அன்னதான சத்திரத்தின் நிர்வாகி, ''என்ன நாலுபேர் வந்திருக்கிறீர்கள்?’ என்று கேட்டு விட்டார். நால்வரும் திடுக்கிட்டு, வெட்கத்துடன் பின்வாங்கினர்.

இனிமேல், இந்த நிர்வாகியின் தயவை எதிர்பார்த்து இந்த சத்திரத் தில் கையேந்தாமல், தெருத்தெருவாகக் கையேந்தலாம், வீடுகளில் பிச்சை எடுக்கலாம் என்று தீர்மானித்து, முன்பே சொன்னபடி சங்குகள் ஊதி யாசிக்கக் கிளம்பினார்கள்.

ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு விதமான உணவு வகை கிடைக்கும். இனிப்பு, காரம், புளிப்பு என்றிருக்கும். கொண்டுபோய் பாலசுவாமியிடம் அதைச் சேர்த்ததும், அவர் தன் திருக்கரங்களால் அவற்றை ஒன்றாகப் பிசைவார். ஒரு விநோதமான சுவை யுடன் அந்த உணவு இருக்கும். அங்கே தங்கியிருக்கிற அத்தனை பேருக்கும் போதுமானதாகவும் இருக்கும்.

அப்படி வீடுகளுக்குப் போகும்போது வெறுமே போகாமல், பாலசுவாமி இயற்றிய 'அக்ஷர மணமாலை’ பாடிக்கொண்டு போவார்கள். நகரத்தார் சத்திரத்தில் நல்ல சோறு. ஒரேவிதமான குழம்பு, கூட்டு, காய் என்று வக்கணை யான உணவு நகர்ந்து போய்... இருபது- இருபத்தைந்து வீடுகளின் விதம்விதமான உணவு பாத்திரத்தில் போடப்பட்டு, ஒன்றாக பிசையப்பட்டு உண்ண கொடுக்கப்பட்டது; உணவின் மீதான ருசி, தேர்ந்தெடுத்து சாப்பிடு கிற தன்மை இதனால் அழிந்தது.

'ஏன் நாலு பேர்’ என்று நகரத்தார் சத்திரத்தில் நிர்வாகி கேட்டதால், எந்தக் கெடுதலும் நேரவில்லை. மாறாக, அந்தக் கேள்வி நல்லதற்கே உபயோகமாயிற்று. பாலசுவாமியைச் சார்ந்த சாதுக்கள் எந்தவிதமான உணவை உண்ண வேண்டுமோ, அந்த விதமான உணவை ருசி பற்றிய அக்கறை யில்லாமல் உண்டார்கள். உண்ணும் சுகத்திலிருந்து அறுபட்டார்கள்.

ஸ்ரீரமண மகரிஷி

கடுந்தவத்தால், உள்ளார்ந்த மௌனத் தால் பிறர் மனதை அறியும் சக்தி பால சுவாமிக்கு இருந்தது. திருவண்ணா மலையில், சேஷாத்ரி ஸ்வாமிகளின் சீடரான குழுமணி நாராயண சாஸ்திரி என்பவர் வாழ்ந்துவந்தார். இவர், சேஷாத்ரி ஸ்வாமியின் சரிதத்தை எழுதி பதிப்பித்திருக்கிறார். ஒரு நாள்,  வாழைப்பழங்களை பாலசுவாமிக்காக எடுத்துப் போனார். போகிற வழியில் அண்ணாமலையார் கோயிலுக்குப் போய், அந்த சீப்பிலிருந்து ஒரு பழத்தை கோயிலிலுள்ள சம்பந்த விநாயகருக்கு மனதால் நிவேதனம் செய்தார். மீதியுள்ள பழங்களை அண்ணாமலையாருக்காக மனதால் நிவேதனம் செய்தார். பிறகு எடுத்துக்கொண்டு மலையேறி பாலசுவாமியை அடைந்தார் அந்தப் பழத்தை அங்குள்ள அன்பர்களிடம் கொடுத்து உள்ளே வைக்கச் சொன்ன போது, பாலசுவாமி சட்டென்று கை நீட்டி, பழத்தை எடுத்துப்போன தொண்டனைத் தடுத்து நிறுத்தினார்.

'சற்று நில்லுங்கள். விநாயகருக்கு நைவேத்தியம் செய்த அந்தப் பழத்தை நாம் எடுத்துக்கொள்ளலாம்’ என்றார். குழுமணி சாஸ்திரிக்கு தூக்கிவாரிப் போட்டது. 'சித்த ஸம்ஹித்’ என்று சொல்லப்படும், பிறர் மனதை அறியும் பலம் பாலசுவாமிக்கு இருந்ததைத் தெரிந்துகொண்டார்.

'இந்த பலம் இருக்கின்ற நீங்கள், நான் எதற்கு வந்திருக்கிறேனோ, அதைக் கட்டளையிடக்கூடாதா?’ என்று மனதுக்குள் பிரார்த்தித்தார். வால்மீகி ராமாயணத்தை சம்ஸ்கிருத உரைநடையில் எழுதியிருந்ததை பால சுவாமியிடம் காண்பிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது.

ஸ்ரீரமண மகரிஷி

உடனே பாலசுவாமி சட்டென்று, 'ராமாயணம் வாசிக்க வேண்டியது தானே’ என்று சொல்ல, குழுமணி சாஸ்திரியின் அதிர்ச்சி அதிகமாயிற்று. அந்த அதிர்ச்சியே பணிவையும், பக்தியையும் கொடுத்தது. தன்னுடைய ராமாயண உரைநடையை அவர் பால சுவாமியின் முன்பு அரங்கேற்றினார்.

வந்தவாசிக்கு அருகேயுள்ள குடியாத்தம் என்கிற ஊரிலிருந்து ஒரு பாட்டி, பாலசுவாமியை வந்து சரணடைந்தார். அந்த அம்மையாரின் ஊர் தவிர, மற்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை. அவரை எல்லோரும் 'கீரைப் பாட்டி’ என்று அழைத்தார்கள். எதற்காக அப்படி அழைக்கிறார்கள் என்ற விவரமும் புரியவில்லை.

அந்த அம்மையாரும் ஊரில் பல பேரிடம் தானியங்கள் கேட்டு வாங்கி, அதைச் சமைத்து பாலசுவாமிக்குக் கொடுத்த பின்னரே, தான் சாப்பிடு வார். மலையடிவாரத்தில் குகை நமச்சிவாயம் என்ற மண்டபம் இருந் தது. அந்த மண்டபத்தில் ஓர் அறையில் அந்தக் கீரைப் பாட்டி குடியிருந்தார். யாசித்து வாங்கிய பொருள்களை அந்த மண்டபத்தில் சேமித்து வைப்பது அவள் வழக்கம். அந்த மண்டபத்துக்குள் வேறு எவரையும் அவள் அனுமதிப்பதில்லை. இருந்த ஒரே பானையில் வெந்நீர் வைத்துக் குளித்துவிட்டு, பிறகு அதே பானையில் சாதம் சமைத்து, சாதம் வடித்த பின்னர், அதே பானையில் குழம்பு, காய் முதலியவற்றை செய்து, அதை அந்த மண்டபத் தூண்களிலுள்ள தெய்வங்களுக்கு நிவேதனம் செய்வாள். பிறகு மலையேறி, பகவானிடம் தான் சமைத்ததைக் கொடுப்பாள்.

ஏழைக் கிழவியிடமிருந்து திருடுவதற்கு ஒரு திருடன் வந்தான். கதவு திறந்து, உள்ளே இருந்த உணவுப் பொருள்களை சோதனை செய்தபோது, பாட்டி விழித்துக்கொண்டு, ''திருடன், திருடன்'' என்று கத்த, உடனே மலையிலிருந்த  பாலசுவாமியின் காதில் விழுந்து, ''இதோ வந்து விட்டேன்'' என்று பதில் குரல் கொடுத்து, பாலசுவாமி அந்த இருட்டில் தட்டுத் தடுமாறி வந்தார்.

கீழே வந்து பாட்டி தனியாக இருப்பதைப் பார்த்து என்னவென்று விசாரித்தனர். அருகே உள்ள நமச்சிவாயர் குகையிலும், மற்ற மண்டபங்களிலும் கீரைப் பாட்டியின் குரல் கேட்கவில்லை. ஆனால் உயரே உள்ள பால சுவாமியின் இருப்பிடத்தில் அந்தக் குரல் கேட்டிருக்கிறது. 'ஏதாவது கனவு கண்டு உளறியிருப்பாய்’ என்று மற்றவர் கேலி செய்ய, பாலசுவாமி கதவு திறந்து பார்த்தார். தானியங்கள் இறைந்திருந்ததைப் பார்த்து, திருடன் வந்தது உறுதி செய்யப்பட்டது.

தவசிகளுக்கும், சாதுக்களுக்கும் உணவிடுதலே வாழ்க்கையாகக் கொண்டிருந்த அந்தக் கீரைப் பாட்டி, 1972-ஆம் வருடம் இறைவனடி சேர்ந்தார். அவர் சரீரம் ரமணாச்ரமத்துக்கு அருகேயுள்ள தக்ஷிணாமூர்த்தி கோயிலுக்கு எதிரே இருக்கும் புளியமரத்தடியில் அடக்கம் செய்யப்பட்டது. கீரைப் பாட்டியே, ரமணாச்ரமத்தில் வளர்க்கப் பட்ட பசு- லட்சுமியாக மறு ஜென்மம் எடுத் ததாக ஆஸ்ரமத்தில் பலர் நம்புகிறார்கள்.

இதைப் பற்றி பேசும்போதெல்லாம் பகவான் ரமண மகரிஷி மௌனமாக இருந்துவிடுவார். அந்தப் பசு எங்கிருந்து வந்தது என்று பிறர் விசாரிக்கும்போது, குடியாத்தத்திலிருந்து அருணாச்சலம் பிள்ளை என்பவர் ஓட்டி வந்திருக்கிறார் என்று தெரிய வர, 'அட கீரைப் பாட்டியும் அதே இடத்திலிருந்துதான் வந்தாள்’ என்று பகவான் ரமணர் சொன்னது குறிப்பிடத்தக்கது.

ஒரு முறை பாலசுவாமியும், பழனிச்சாமியும் கிரிவலம் முடித்து அண்ணாமலையார் கோயிலுக் குள் அமர்ந்திருந்தபோது, ஈசான்ய மடத்து மடாதிபதி தன் சீடர்களுடன் கோயிலுக்குள் நுழைந்தார். சுவாமி தரிசனம் முடித்து வெளியே வரும்போது, மடாதிபதியும், அவரது சீடர்களும் பாலசுவாமியைச் சூழ்ந்து கொண்டார்கள். தங்களுடன் வருமாறு வற்புறுத்தினார்கள்.

பாலசுவாமி சைகையால் 'வர முடியாது’ என்று சொல்ல, மடாதிபதி சீடர்களின் உதவி யோடு குண்டுக்கட்டாய் சுவாமியைத் தூக்கி, தன் வண்டியில் வைத்து மடத்துக்கு அழைத்துப் போனார். வண்டியில் சவாரி செய்வதை முற்றிலும் தவிர்த்த பாலசுவாமி, அன்று வண்டி யில் போகும்படி நேரிட்டது. ஈசான்ய மடத்தில் பாலசுவாமியை அமர வைத்து, எதிரே தலை வாழையிலை போட்டு அதில் விதம்விதமான பதார்த்தங்களுடன் உணவு பரிமாறினார். 'மடத்திலேயே தங்கலாமே’ என்று மடாதிபதி வற்புறுத்தினார். அந்த உணவு வகைகளில் சிலதை மட்டும் உண்டுவிட்டு அவர்கள் அன்புப் பிடியிலிருந்து பாலசுவாமி தப்பித்து வந்தார்.

பாலசுவாமி கிரிவலம் வரும்போது, ஈசான்ய மடத்தில் உள்ளவர்கள் வணங்கி, சுவாமியை உள்ளே வரச் சொல்வது வழக்கம். சில நேரம் பாலசுவாமி ஈசான்ய மடத்துக்குப் போவதும் உண்டு. அப்போது இலை பரிமாறி உணவு போடுவார்கள். சுவாமி சிறிதளவு உணவு எடுத்துக்கொண்ட பிறகு, மீதமான அந்த உணவு வகைகளை அங்குள்ளவர்கள் கலந்து 'இது பாலசுவாமியின் பிரசாதம்’ என்று உண்ணுவார்கள்.

அதைப் பார்த்த பிறகு, பாலசுவாமி அங்கு இலையில் உண்ணுவதை நிறுத்திவிட்டார். அந்த மடத்தில் வாசலில் போய் கையேந்தி யாசிப்பார். அவர்கள் கையில் சிவபெருமானுக்கு நைவேத்தியம் செய்த அன்னத்தைப் போடுவார்கள். அந்த அன்னம் உப்பில்லாமல் இருக்கும். அதைப் பற்றிய எந்த அக்கறையுமில்லாமல், கையில் விழுந்த உணவைச் சாப்பிட்டுவிட்டு, கைகளைத் துடைத்துக்கொண்டு பாலசுவாமி நகர்ந்து விடுவார்.

- தரிசிப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism