Published:Updated:

நாகதோஷம் நீங்கும்... கல்யாணம் கைகூடும்!

நாகதோஷம் நீங்கும்... கல்யாணம் கைகூடும்!
பிரீமியம் ஸ்டோரி
News
நாகதோஷம் நீங்கும்... கல்யாணம் கைகூடும்!

நாகதோஷம் நீங்கும்... கல்யாணம் கைகூடும்!

குடைவரைக் கோயில்களுக்கு பிரசித்தி பெற்ற புதுக்கோட்டை மாவட்டம், பேரையூரில் அமைந்திருக்கிறது, அருள்மிகு நாகநாத சாமி திருக்கோயில். பேரையூர் திருத்தலமானது புதுக் கோட்டை பொன்னமராவதி சாலையின் வடபுறத்தில்  அமைந்துள்ளது.

வியாச மகரிஷி இயற்றிய, ‘சூத சம்ஹிதை’ என்ற நூலில், அகத்திய முனிவர் இந்தத் தலத்தின் பெருமையை கௌதம முனிவருக்குக் கூறுவதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

நாகதோஷம் தீர்க்கும் அற்புதத் தலம் இது என்கிறார்கள் பக்தர்கள். நூற்றுக்கணக்கில் இங்கு நிறைந்திருக்கும் நாகர் சிலைகளும், நாக வடிவிலேயே வளைந்து நெளிந்து வளர்ந்து திகழும் தென்னைகளுமே அதற்கு சாட்சி!

நாகதோஷம் நீங்கும்... கல்யாணம் கைகூடும்!

தற்போது, இக்கோயில் அறநிலையத்துறை கட்டுப் பாட்டில் இருக்கிறது. கோயிலைத் தரிசிக்கச் சென்ற நாம், உள்ளூர் அன்பர் களிடம் பேசினோம்.

‘‘திருநாகேஸ்வரத்துக்கு அடுத்தபடியாக நாக தோஷ நிவர்த்திக்கு உரிய தலமாக திகழ்கிறது இவ்வூர். பிரம்மன், இந்திரன் ஆகியோர் வழிபட்ட சிறப்பு இந்தத் தலத்துக்கு உண்டு.

திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தைப் பேறு வாய்க்காத  பெண்கள் இங்கு வந்து அம்பாள் பெரியநாயகியை மனமுருகி வழிபட்டுச் செல்கிறார்கள். அம்பாளை வழிபடுவதுடன், மஞ்சள் துணியில் சிறு கல்லை இட்டு முடிந்து,  நந்தியாவட்டை மரக் கிளைகளில் தொட்டில் போன்று கட்டி ஆட்டிவிட்டுச் செல்வர். இதனால் விரைவில் அவர்களது வீட்டில் தொட்டில் சத்தம் கேட்கும் என்பது நம்பிக்கை.

அதேபோல், நாகதோஷம் உள்ளவர்கள் தோஷம் விலகும் பொருட்டு, நாகர் சிலையை (கற்சிலை) செய்துகொண்டுவந்து, இங்குள்ள திருக்குளத்தில் ஒரு மண்டல காலம் வைக்க வேண்டும். பின்னர் 15 நாட்கள் நோன்பிருந்து வழிபட்டு, நாக வேள்வி செய்து நாகர் சிலையை நிறுவி வணங்கினால் தோஷம் விலகும் என்பது நம்பிக்கை’’ என்று சிலிர்ப்போடு விவரித்தார்கள் அந்த அன்பர்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நாகதோஷம் நீங்கும்... கல்யாணம் கைகூடும்!

திருமண வரம் வேண்டியும் இங்கு வழிபாடு செய்கிறார்கள். இங்கு வந்து அம்பாளையும் ஸ்வாமியையும் மனதாரப் பிரார்த்தித்து வழிபட்ட பிறகு, நாகர் சிலைகளின் மீதும் நந்தியாவட்டை மரத்தின் கிளையிலும் மஞ்சள் சரடுகளைக் கட்டிவிட்டுச் செல்கிறார்கள். இதனால், தடைகள் அனைத்தும் நீங்கி விரைவில் திருமணப் பேறு வாய்க்கும் என்பது ஐதீகம். பங்குனி மாதக் கடைசியில் இந்தக் கோயிலில் நடைபெறும் தேர்த் திருவிழா, இந்தப் பகுதியில் வெகுப் பிரசித்தம்.

நீங்களும் ஒருமுறை பேரையூருக்குச் சென்று நாகநாதரை வழிபட்டு வாழ்வில் நலம்பெற வரம் வாங்கி வாருங்களேன்!

- ப. தினேஷ்குமார்.   
     
- படங்கள்: அ.மணிகண்டன்

நாகதோஷம் நீங்கும்... கல்யாணம் கைகூடும்!

சுரங்கத்தில் ஒலிக்கும் சங்கநாதம்!

பேரையூர் அருள்மிகு நாகநாதசாமி திருக்கோயிலுக்கு அருகில் சுனை ஒன்று உள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை பங்குனி மாதம் கடைசி வாரத்திலோ அல்லது சித்திரை முதல் வாரத்திலோ, இந்தச் சுனையை யொட்டி அமைந்தி ருக்கும் சுரங்கத் துக்குள் மிருதங்க இசை, நாகஸ்வர ஓசை மற்றும் சங்க நாதத்துடன் நாட்டியமாடும் சத்தம் கேட்குமாம். முப்பத்து முக்கோடி தேவர்களும் இசை முழக்க, அதற்கேற்ப நாகநாதர் நடனம் ஆடுவதாக ஐதீகம். சுனையின் கரையில் உள்ள பாறையில் உள்ள அம்புக்குறியை சுனையின் நீர்மட்டம் தொடும் போது, சுமார் 3 மணி நேரம் தொடர்ந்து இத்தகைய மங்கல சத்தம் கேட்பதாகக் கூறுகிறார்கள் அன்பர்கள்!