Published:Updated:

குறை தீர்க்கும் கோயில்கள் - 10 - கருவாக்கி உருவாக்கி காத்திடுவாள் கர்ப்பரட்சாம்பிகை!

குறை தீர்க்கும் கோயில்கள் - 10 - கருவாக்கி உருவாக்கி காத்திடுவாள் கர்ப்பரட்சாம்பிகை!
பிரீமியம் ஸ்டோரி
குறை தீர்க்கும் கோயில்கள் - 10 - கருவாக்கி உருவாக்கி காத்திடுவாள் கர்ப்பரட்சாம்பிகை!

டாக்டர் ஜெயம் கண்ணன் - படங்கள்: கே.குணசீலன்

குறை தீர்க்கும் கோயில்கள் - 10 - கருவாக்கி உருவாக்கி காத்திடுவாள் கர்ப்பரட்சாம்பிகை!

டாக்டர் ஜெயம் கண்ணன் - படங்கள்: கே.குணசீலன்

Published:Updated:
குறை தீர்க்கும் கோயில்கள் - 10 - கருவாக்கி உருவாக்கி காத்திடுவாள் கர்ப்பரட்சாம்பிகை!
பிரீமியம் ஸ்டோரி
குறை தீர்க்கும் கோயில்கள் - 10 - கருவாக்கி உருவாக்கி காத்திடுவாள் கர்ப்பரட்சாம்பிகை!
குறை தீர்க்கும் கோயில்கள் - 10 - கருவாக்கி உருவாக்கி காத்திடுவாள் கர்ப்பரட்சாம்பிகை!

கமுத முல்லை கமழ்கின்ற கருகாவூர்
அமுதர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே

- திருஞானசம்பந்தர்

ந்தப் பூவுலகில் மனிதராய் பிறப்பெடுத்த ஒவ்வொருவருக்கும் தனக்குப் பின் தன் சந்ததியை வளர்த்து எடுத்துச் செல்வதற்கும் தன் பெயர் சொல்வதற்கும் ஒரு வாரிசு வேண்டும் என்ற ஆசை அமைந்திருப்பது இயற்கை. சிலருக்கு மட்டும் அந்த ஆசை, பிரார்த்தனையாகிவிடுகிறது. முற்காலங் களில் மிக அரிதாக இருந்த குழந்தைப்பேறின்மை தற்காலத்தில் மிக அதிகமாக மக்களை வாட்டி வதைக்கிறது.

‘எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்?’ என்று மருத்துவம், ஆன்மிகம், சோதிடம், பரிகாரம் என்று பல வழிகளில் முயற்சி செய்து, ஒரு குழந்தைக்காக தவம் கிடக்கும் தம்பதியரின் எண்ணிக்கை இன்று பல லட்சங்களைத் தாண்டும் நிலைக்கு வந்து விட்டது. தம்மை தாயாக்கும் ஒரு தனயனுக்காகத் தவிக்கும் அந்த உள்ளங்களின் வேதனையைப் போக்கி, அவர்களின் வயிற்றில் கருவை அருளி, அதை மகவாய் உருவாக்கி, அதை அந்தத் தாய் சுகமாகப் பிரசவிக்கும்வரை காத்து நிற்கிறாள், திருக்கருகாவூர் தலத்தில் அருள்புரியும் அன்னை ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை.

மானிடரின் குறைகளைத் தீர்க்க ஒவ்வொரு விதமாய், ஒவ்வோர் இடத்தில் குடிகொண்டிருக்கும் அம்மையும் அப்பனும், தஞ்சை மாவட்டம் திருக்களாவூர் எனப்படும் திருக்கருகாவூரில் குழந்தையில்லாக் குறையைத் தீர்த்துவைத்து, அதைக் காத்து நிற்கும் தெய்வங்களாக அருள்பாலிக் கின்றனர். தேவார மூவரின் பாடலும் பெற்ற புனிதத்தலம் இது.

திருஞானசம்பந்தரின் வாக்குப்படி தீ - அழல் நெருப்பு வண்ணனாக விளங்கும் சிவபெருமான், அப்பர் பெருமான் வாக்குப்படி எல்லாமுமாகக் காட்சி தரும் சிவப்பரம்பொருள், `முல்லைவன நாதர்’ எனும் திருப்பெயர் கொண்டும்... தாயின் வயிற்றிலுள்ள கருவைச் சிதையாமல் காக்கும் அம்பிகை ‘கருக்காத்த நாயகி, கர்ப்பரட்சாம்பிகை ஆகிய திருப்பெயர்களைக்கொண்டும் அருள்பாலிக்கிறார்கள் இந்தத் தலத்தில்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குறை தீர்க்கும் கோயில்கள் - 10 - கருவாக்கி உருவாக்கி காத்திடுவாள் கர்ப்பரட்சாம்பிகை!

உஷத் காலத்தில் தரிசிக்க வேண்டிய உன்னதத் தலம்!

சோழவள நாட்டில், காவிரித் தென்கரைத் தலங்களுள் மிகச் சிறப்பு வாய்ந்த பிரார்த்தனை தலமாக விளங்குவது, அருள்மிகு கருக்காத்த நாயகி உடனுறை முல்லைவனநாதசுவாமி திருக்கோயில். இத்திருக்கோயிலில் சுவாமி, விநாயகர், நந்தி மூவரும் சுயம்பு மூர்த்திகளாகவும் சுவாமி சந்நிதியின் பின்புறம் லிங்கோத்பவர் இருக்கும் குடவரையில் அர்த்தநாரீஸ்வரர் அமைந்திருப்பதும் மிகச் சிறப்பான அமைப்புகளாகும்.

கும்பகோணத்துக்கு மிக அருகில், வெட்டாற்றின் கரையில் அமைந்துள்ள இந்தத் தலத்தின் தல விருட்சம் முல்லைக்கொடி. எனவே, இங்கு குடிகொண்டிருக்கும் இறைவன், முல்லைவன நாதர் என்று அழைக்கப்படுகிறார். முல்லைக்கு ‘மாதவி’ என்று மற்றுமொரு பெயர் இருப்பதால் இங்கே இறைவனுக்கு ‘மாதவீவனேஸ்வரர்’ என்றும், மகப்பேறு அளிப்பதால் ‘கர்ப்பப்புரீஸ்வரர்’ என்றும்கூட பெயர்களுண்டு. முல்லைவனத்தில் புற்றுருவில் சுயம்புவாகத் தோன்றிய லிங்கத் திருமேனியில் முல்லைக்கொடிகள் படர்ந்து கிடந்ததால், அந்தக் கொடி படர்ந்திருந்த வடுவை மூலவரின் மேல் இன்றும் நாம் காணலாம். லிங்கத் திருமேனி புற்றுமண்ணால் ஆனது. உளிபடாத தானே எழுந்த திருமேனி. புற்றுருவாக இருப்பதால், இங்கே இறைவனுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை. புனுகு மட்டுமே சார்த்தப்படுகிறது.

குறை தீர்க்கும் கோயில்கள் - 10 - கருவாக்கி உருவாக்கி காத்திடுவாள் கர்ப்பரட்சாம்பிகை!


இந்தப் பெருமானுக்கு முல்லை மலர் மிக விசேஷமானது.செம்பொன் ஜோதியாகவும் அமுதத் திருமேனியாகவும் சுயம்புத் திருமேனியாகவும் இருக்கும் இவரை தரிசிப்பவர்களுடைய மனதிலுள்ள குற்றங்கள் நீங்கும்.  நேருக்கு நேராக அமைந்து, ஒரே நாளில் தரிசிக்க வேண்டிய பஞ்சாரண்யத் தலங்களில் (இது குறித்து நாம் ஏற்கெனவே அவளிவநல்லூர் பற்றிய கட்டுரையில் விரிவாகக் குறிப்பிட்டிருக்கிறோம்), உஷத் காலத்தில் தரிசிக்க வேண்டிய முதல் தலம் திருக்கருகாவூர். முதல் காலத்தில் இங்கே தரிசனம் செய்துவிட்டு, ஏனைய காலங்களில் மற்ற தலங்களைப் பக்தர்கள் தரிசிப்பதற்கு ஏதுவாக, இங்கே அதிகாலை 5.30 மணிக்கு உஷத் கால பூஜைகள் செய்யப்படுகின்றன.

பற்பல சிறப்புகள் வாய்ந்த இத்திருக்கோயில், சோமாஸ்கந்த வடிவில் அமைந்திருப்பது வெகு சிறப்பு. இங்குள்ள இறைவனுக்கும் இறைவிக்கும் நடுவில் வள்ளி, தெய்வானையுடன் கூடிய ஸ்ரீசுப்பிரமணியர் சந்நிதி அமைந்துள்ளது. சோம-உமா-ஸ்கந்த வடிவில் அமைப்பிலுள்ள இம்மூன்று சந்நிதிகளையும் ஒருசேர வலம்வந்து தரிசிப்பவர்களுக்கு, புத்திர பாக்கியத்தையும், உருவான கரு, சிதைவின்றி கிடைக்கும்படி அதைக் காத்தருள்கின்ற அருள்பேற்றையும் வழங்கும் தலமாக இது விளங்குகிறது. இந்த அமைப்புள்ள ஆலயத்தை ஒருசேர சுற்றுப் பிராகாரம் வலம்வருவது நல்லது. குடும்பத்தோடு இங்கே மூன்று முறை சுற்றுப் பிராகாரம் வந்து அம்பிகையை வணங்கினால், மனதுக்கு அமைதியும் வாழ்க்கையில் வளமும் சேரும்.

முற்காலத்தில் நித்திருவர் என்ற முனிவர், தன் மனைவி வேதிகையுடன் இங்கே வசித்து வந்தார். ஒருமுறை வேதிகை கருவுற்று இருந்தபோது, அவளைத் தனியே தன் ஆசிரமத்தில் விட்டுவிட்டு வருணனைத் தரிசிக்கச் சென்றிருந்தார் நித்திருவர். ஒருநாள், ஊர்த்துவபாதர் என்ற முனிவர் இவர்களுடைய ஆசிரமத்தை நாடிவந்து தன் பசிக்கு உணவு கேட்டார். கருவுற்றிருந்த வேதிகையோ, அது சமயம் தளர்ச்சி மிகுதியால் அயர்ந்து படுத்திருந்தபடியால் இவருடைய குரல் கேட்டும் எழுந்து வந்து அன்னமிட முடியவில்லை.

இதை அறியாத ஊர்த்துவபாதர், ‘ராச யட்சு’ என்ற நோயினால் அவள் வருந்துமாறு சாபமிட்டுவிட்டுச் சென்றுவிட்டார். இதனால் வேதிகையின் வயிற்றுக் கருவுக்கு ஊனம் வர, அவள் திருக்கருகாவூர் பெருமானையும் பெருமாட்டியையும் வேண்டித் துதித்தாள். இதனால் அம்பிகையே கர்ப்பரட்சகியாகத் தோன்றி, கலைந்த கருவை ஒரு குடத்துக்குள் ஆவாஹனம் செய்து, குழந்தை உருவாகும் நாள் வரையிலும் வைத்துக் காப்பாற்றி, ‘நைந்துருவன்’ என்னும் குழந்தையாகக் கொடுத்தாள். குழந்தை நைந்துருவனுக்கு அவன் அம்மாவிடம் பால் இல்லாதபடியால் அம்பாள் காமதேனுவை அனுப்பி, பால் கொடுக்கச் சொன்னாள். காமதேனு தன் கால் குளம்பினால் பூமியில் கீறியதும் பால்குளம் (க்ஷீரகுண்டம்) தோன்றியது. இன்றும் அந்தக் குளம் ஆலயத்துக்கு முன்புறம் இருப்பதைக் காணலாம்.

குறை தீர்க்கும் கோயில்கள் - 10 - கருவாக்கி உருவாக்கி காத்திடுவாள் கர்ப்பரட்சாம்பிகை!

பின்னர் வந்த நித்திருவர், நடந்ததையெல்லாம் கேள்விப் பட்டு, எல்லையிலா மகிழ்வெய்தி னார். வேதிகையும் முனிவரும்,  ‘இனிமேல் இத்தலத்தில் கருவுற்ற பெண்களுக்கு எந்த இன்னலும் வராமல் காக்க வேண்டும்’ என்று மனமுருகி வேண்டிக்கொண்டனர். அவ்வாறே, இன்றளவும் இந்த ஊரில் கருவுறும் பெண்களும் வெளியூரில் இருந்தவண்ணம் இங்குள்ள சுவாமியையும் அம்பாளையும் பிரார்த்திக்கும் பெண்களும் நலமாகவே குழந்தை பெறுகிறார்கள் என்பது கலியுக அற்புதம். இன்றைக்கும் இந்தத் தலத்து நாயகியை மனதார வேண்டுவோருக்கு கரு உண்டாகிறது, கரு நிலைக்கிறது, ஆரோக்கியமாக வளர்ந்து, சுகப்பிரசவமாகி, நல்லதொரு குழந்தையாய் ஜனிக்கிறது.

குறை தீர்க்கும் கோயில்கள் - 10 - கருவாக்கி உருவாக்கி காத்திடுவாள் கர்ப்பரட்சாம்பிகை!


மேலும் இங்கே பல தெய்வங்களும் தேவர்களும் முனிவர்களும் வந்து வணங்கியிருப்பதாகத் தல புராணம் உரைக்கின்றது. படைப்பு கடவுளாகிய பிரம்மதேவரும், சுவர்ணாகரன் என்ற வைசியனும் இத்தலத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி, சாபம் நீங்கப்பெற்றதாக வரலாறு இருக்கிறது. கெளதம மகரிஷி தனக்கு ஏற்பட்ட கோஹத்தி தோஷம் நீங்க, இந்தத் தலத்துக்கு வந்து புனித நீராடி ஒரு சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டு விமோசனம் பெற்றாராம். அவர் வழிபட்ட லிங்கத் திருமேனி இன்றும் கௌதமேசுவரர் என்ற திருப்பெயருடன் அம்பிகை சந்நிதி எதிரே தனிக்கோயிலில் அருள்வதைத் தரிசிக்கலாம்.

தட்ச சாபத்தால் இன்னலுற்ற சந்திரன், ஒரு பௌர்ணமி தினத்தில் இங்கு சிவபூஜை செய்து நற்கதி பெற்றதால் இன்றும் ஒவ்வொரு பங்குனி பௌர்ணமி நாளிலும் சந்திரன் ஒளி இறைவன் திருமேனியில் படுவதைக் காணலாம். மேலும் பீமசேனன், புண்ணியத்துவசன் ஆகியோரும் இங்கு வழிபட்டு உய்ந்தனர்.

சோமாஸ்கந்த அமைப்பிலான அபூர்வ ஆலயம்!

மிகப் பெரியதாகப் பரந்து விரிந்திருக்கும் இந்த ஆலயத்தின் சுவாமி கோயிலுக்கு முன்னால் கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவையும் தென் கிழக்கில் மடப்பள்ளி, 63 நாயன்மாரும் வடகிழக்கில் நடராஜர் சபை முன் மண்டபமும், யாகசாலையும் அமைந்திருக்கின்றன. அவற்றைத் தாண்டிச் செல்கையில் சுவாமிக்கு வடகிழக்கே நடராஜர் சந்நிதியும், நவகிரகங்களும் தென்திசையில் சோமாஸ்கந்தர் சந்நிதியும் தென்கிழக்கில் தல விநாயகரான சுயம்பு மூர்த்தி கற்பகப் பிள்ளையார் சந்நிதியும் அழகே அமைந்திருக்கின்றன.

கோயிலின் உள்பிராகாரத்தில், சேக்கிழார், சந்தனாச்சாரியார், நால்வர் சந்நிதிகளும், தட்சிணா மூர்த்தி, நிருதி விநாயகர், அர்த்தநாரீஸ்வரர், மகா லட்சுமி, ஆறுமுகர், பிரம்மன், துர்கை, சண்டிகேஸ் வரர் ஆகிய தெய்வங்கள் வீற்றிருந்து அருள்பாலிக் கின்றனர். தல விருட்சமான முல்லைக்கொடி சண்டிகேஸ்வரருக்கும் திருமஞ்சனக் கிணற்றுக்கும் இடையே இருக்கிறது.

திருக்கருகாவூர் திருத்தலத்தில் இருக்கும் நான்கு தீர்த்தங்களும் அதி சிறப்புப் பெற்றவையே. கோயிலுக்கு எதிரே உள்ள க்ஷீரகுண்டம் (பால் குளம்), தெய்வப் பசுவாகிய காமதேனுவின் காலால் உருவாக்கப்பட்டது. அடுத்து சத்தியகூபம் என்னும் தீர்த்தம், சுவாமி மற்றும் அம்மன் கோயில்களுக்கு இடையே இருக்கிறது. அதன் பின்னர், ஊருக்குத் தென்மேற்கே அமைந்திருக்கும் பிரம்ம தீர்த்தம். நான்காவது தீர்த்தம், விருத்த காவிரி. காவிரியின் கிளை நதியாகிய வெட்டாறுதான் இது. இதைத்தான் ‘முள்ளிவாய்’ என்று புராணங்கள் குறிப்பிட்டுள்ளன.

குறை தீர்க்கும் கோயில்கள் - 10 - கருவாக்கி உருவாக்கி காத்திடுவாள் கர்ப்பரட்சாம்பிகை!

அதேபோல சோமாஸ்கந்தர் வடிவமைப்பில் அமைந்திருக்கும் சுவாமி, அம்பாள், மற்றும் அந்த சந்நிதிகளுக்கு இடையே அமைந்திருக்கும் ஆறுமுகர் சந்நிதி ஆகியவற்றை ஒருசேர வலம்வருவது வேறு எந்தக் கோயிலிலும் இல்லாத சிறப்பாகும்.

சுயம்புமூர்த்தியான மூலவருக்கு திருக்கருகாவூர் மகாதேவர், திருக்கருகாவூர் ஆழ்வார், திருமுல்லை வனமுடைய மகாதேவர் என்றெல்லாம்கூட பெயர்கள் வழங்கப்பட்டதாகக் கோயில் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. முல்லைவனநாதரின் செந்தீ வண்ணத்தைப் போற்றிப் பரவசமாகிப் பாடியிருக்கிறார் சம்பந்தர்.

சுவாமியை அடுத்து இங்கே அகிலம் காப்பவளாய் அகிலாண்ட கோடி அன்னையாக, அனைத்து உயிர்களின் கருவைக் காப்பவளாக, கண்கண்ட தெய்வமாகக் காட்சி கொடுப்பவள் கரும்பணையாள் என்று அழைக்கப்பெறும் கர்ப்பரட்சகி. இந்த அம்பிகையின் திருவடியில் பசு நெய்யை வைத்து மந்திரித்து உட்கொண்டவர்களுக்கு நன்மக்கட்பேறு கிடைப்பதும், எண்ணெய் வைத்து மந்திரித்துப் பயன்படுத்தும் கருவுற்றப் பெண்களுக்கு சுகப்பிரசவம் நடப்பதும் அனைவரும் கண்டு வியக்கும் அதிசயங்கள்!

பிரார்த்தனை முறை...

அன்னையிடம் பிள்ளைகள் அநேக வரங்களுக்காகக் கைகூப்பி தொழுதாலும், பல ஆண்டுகள் குழந்தைப்பேறு இல்லாதவர்கள் குழந்தை பாக்கியம் பெறுவதற்கான பிரார்த்தனையே இங்கே சிறப்பிடமும் முதலிடமும் பெறுகிறது.

மகப்பேறு வாய்க்காத பெண்கள், இங்கே கோயில் கொண்டிருக்கும் அன்னை கருக்காத்த நாயகியை பக்தியோடு மனமொப்பி வேண்டி, நெய்யினால் படி மெழுகி, கோலமிட்டு, அர்ச்சனை செய்ய வேண்டும். அம்மன் பாதத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட நெய்யினை 45 நாள்கள் உண்டு வந்தால், குழந்தைப் பேறு கிட்டும் என்பது கண்கூடாக நாம் காணக்கூடிய நிதர்சனம்.

கருவைக் கொடுப்பது மட்டுமல்ல; கருத்தரித்த பெண்கள், இந்தத் தலத்து நாயகியை வேண்டி, விளக்கெண்ணெய் மந்திரித்து வயிற்றில் தடவினால், அவர்களின் கருவுக்கு எந்தவிதமான பாதிப் பும் இல்லாமல் காக்கப்படுவதுடன் சுகப்பிரசவம் ஆவதும் அனு தினமும் அங்கே பகிரப்படும் அனுபவ நிகழ்வுகளே. குழந்தை பாக்கியம் மட்டுமல்ல; திருமண பாக்கியம்  கூடிவராத பெண் களும் இங்கே படி மெழுகி, அர்ச்சனை செய்து அன்னையைப் பிரார்த்தித்துப் பூஜை செய்தால் திருமணம் கூடிவருகிறது என்பதும் பலர் வாழ்வில் கண்ட உண்மை.

அதுமட்டுமா? சரித்திரம் போற்றும் தகவல்கள், தங்கத் தொட்டிலில் தாலாட்டு,  அன்னை மீதான பக்தியால் அடியார்கள் செய்து கொடுத்த திருப்பணிகள் என்று இந்தத் தலம் குறித்து விவரிக்க இன்னும் பல தகவல்கள் உண்டு. அவை அடுத்த இதழில்!

- தரிசிப்போம்...

தொகுப்பு: பிரேமா நாராயணன்

குறை தீர்க்கும் கோயில்கள் - 10 - கருவாக்கி உருவாக்கி காத்திடுவாள் கர்ப்பரட்சாம்பிகை!

எப்படிச் செல்வது?

ஞ்சை மாவட்டம் பாபநாசத்துக்கு தெற்கே 6 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. தஞ்சையிலிருந்து 20 கிலோமீட்டர் தூரத்திலும் கும்பகோணத்தி லிருந்து 20 கிலோமீட்டர் தூரத்திலும், சாலிய மங்கலத்திலிருந்து வடக்கே 10 கிலோமீட்டர் தூரத்திலும் இருப்பதால், எல்லா திசைகளிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.