Published:Updated:

நம்பிக்கையும் மகிழ்ச்சியும் தந்த குருப்பெயர்ச்சி ஹோமம்!

நம்பிக்கையும் மகிழ்ச்சியும் தந்த குருப்பெயர்ச்சி ஹோமம்!
பிரீமியம் ஸ்டோரி
நம்பிக்கையும் மகிழ்ச்சியும் தந்த குருப்பெயர்ச்சி ஹோமம்!

நம்பிக்கையும் மகிழ்ச்சியும் தந்த குருப்பெயர்ச்சி ஹோமம்!

நம்பிக்கையும் மகிழ்ச்சியும் தந்த குருப்பெயர்ச்சி ஹோமம்!

நம்பிக்கையும் மகிழ்ச்சியும் தந்த குருப்பெயர்ச்சி ஹோமம்!

Published:Updated:
நம்பிக்கையும் மகிழ்ச்சியும் தந்த குருப்பெயர்ச்சி ஹோமம்!
பிரீமியம் ஸ்டோரி
நம்பிக்கையும் மகிழ்ச்சியும் தந்த குருப்பெயர்ச்சி ஹோமம்!

வாசகர்களின் நலனுக்காக திருவிளக்கு பூஜை, சுவாஸினி பூஜை, பரிஹார சிறப்பு வழிபாடுகள் என்று `சக்தி விகடன்' சார்பில் பல வைபவங்கள் நடந்துவருவதை அறிவீர்கள்.

அவ்வகையில் குருப்பெயர்ச்சி தினமான கடந்த செப்டம்பர் 2 சனிக்கிழமையன்று, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகிலுள்ள முன்னூரில், சக்தி விகடனும் அருள்மிகு ப்ரஹன்நாயகி சமேத அருள்மிகு ஆடவல்லீஸ்வரர் திருக்கோயில் ஆன்மிக சங்கமும் இணைந்து வழங்கிய குருப்பெயர்ச்சி சிறப்புப் பரிகார ஹோமம் மற்றும் வழிபாடுகள் மிக அற்புதமாக நடந்தேறின.

‘முன்னூருக்குச் சென்றுவந்தால் வாழ்வில் நிச்சயம் முன்னுக்கு வந்துவிடலாம்’ எனும் நம்பிக்கையைப் பக்தர்கள் மனதில் ஆழப் பதித்துவிடும் அற்புதமான க்ஷேத்திரம் இது. தன் பக்தனான நல்லியகோடன் போரில் வெற்றி பெறும் பொருட்டு, தாமரை மலர்களையே ஆயுதங்களாக அருளி, அவனை வெற்றி வாகை சூடச் செய்த முருகப் பெருமான் சந்நிதி கொண்டிருக்கும் திருத்தலம், தன் அடியவரான சோழ மன்னனுக்காகத் தமது திருநடன தரிசனத்தைக் காட்டியருளியதால் சிவனார் ஆடவல்லீஸ்வரர் எனும் திருப்பெயர் கொண்டு திகழும் ஊர். நவகிரகங்களில் ஒருவரான குரு பகவான் தான் இழந்த ஞானத்தையும் தேஜஸையும் திரும்பப் பெற்ற உன்னத திருத்தலம். மட்டுமின்றி சிவப்பரம்பொருளே குரு அம்சத்துடன் அருள்பாலிக்கும் புண்ணிய க்ஷேத்திரம் முன்னூர்.

நம்பிக்கையும் மகிழ்ச்சியும் தந்த குருப்பெயர்ச்சி ஹோமம்!

இத்தனை மகிமைகளையும் ஒருங்கேகொண்ட முன்னூர் ஆடவல்லீஸ்வரர் திருக்கோயிலில் குருப்பெயர்ச்சி மகா ஹோமம் என்ற அறிவிப்பு சக்தி விகடனில் வெளிவந்ததுமே, ஏக வரவேற்பு வாசகர்களிடம் இருந்து. தொலைபேசியிலும் கடிதங்கள் மூலமாகவும் தங்கள் வரவை முன்பதிவு செய்துகொண்டவர்கள், குருப்பெயர்ச்சி தினத்தில் பெருந்திரளாகக் கூடிவிட்டார்கள் முன்னூர் ஆலயத்தில்.

ஆம்! அன்றைய தினத்தில் திருவிழாக்கோலம் பூண்டிருந்தது முன்னூர். ஊர் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டு வைபவம் போன்று அகமும் முகமும் மலர, விழாப் பணிகளைச் சிரமேற்கொண்டு செய்ததும் சிலிர்க்கவைத்தன. உள்ளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் மட்டுமின்றி, மதுரை, திருச்சி, கோவை போன்ற தொலைதூர ஊர்களில் இருந்தும் பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர்.

காலை 9 மணிக்கு கணபதி பூஜையுடன் துவங்கி, குருப்பெயர்ச்சி மகா ஹோமத்தை, ரவி குருக்கள் தலைமையில் சிவாச்சார்யர்கள் மிகச் சிறப்பாக நடத்திவைத்தனர். ஹோமம் தொடங்கு வதற்கு முன்னதாக ‘சக்தி விகடன்’ வாசகர்கள் மற்றும் கலந்துகொண்ட அன்பர்கள் அனைவரது சார்பிலும் சங்கல்பம் செய்யப்பட்டது. இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற ஹோம வைபவத்தைப் பக்தர்கள் அனைவரும் பக்திச் சிரத்தையோடு தரிசித்து சிந்தை மகிழ்ந்தார்கள்.

குருப்பெயர்ச்சி ஹோமம் பூர்ணாஹுதியுடன் நிறைவு பெற்ற பிறகு, ஐயன் ஆடவல்லீஸ்வரருக்கும், பரிவார மூர்த்தங்களுக்கும், நவகிரகங்களுக்கும்  சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. விழா நிறைவில் வந்திருந்த பக்தர்கள் அனைவருக் கும் பிரசாதம் வழங்கப்பட்டது. காலையில் இருந்தே அன்னதானமும் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. விழா ஏற்பாடுகளை ஸ்ரீ ப்ரஹன் நாயகி சமேத ஸ்ரீஆடவல்லீஸ்வரர் திருக்கோயில் ஆன்மிக சங்கத்தினர் மிக அற்புதமாகச் செய்திருந் தனர். அவர்களுக்கும், ஊர் மக்களுக்கும், விழா நடைபெற அனுமதியும் பூரண ஒத்துழைப்பும் வழங்கிய திருக்கோயில் தக்கார்/ஆய்வாளர் கே.ஆர்.செல்வராஜ், செயல் அலுவலர் வை.மணி ஆகியோருக்கும் சக்தி விகடன் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தோம்.

நம்பிக்கையும் மகிழ்ச்சியும் தந்த குருப்பெயர்ச்சி ஹோமம்!

விழா நிறைவடைந்து பிரசாதம் பெறும் வேளை யில் ``குரு பார்க்கக் கோடி நன்மை என்பார்கள். இங்கே முன்னூர் கோயிலில் குருவின் திருவரு ளோடு  சிவனாரின் பேரருளும்  கிடைக்கப்பெற்றதில் பரம திருப்தி எங்களுக்கு. இந்த வாய்ப்பை நல்கிய முன்னூர் மக்களுக்கும் சக்தி விகடனுக்கும் நன்றி'' என்று நம்மிடம் நெகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார் திருச்சி வாசகர் வி.ராமு. அவரது கருத்தே விழாவுக்கு வந்திருந்த அனைவரது கருத்தாகவும் இருந்திருக்க வேண்டும். விடை பெற்றுச் சென்ற வாசகர்கள் அனைவரது முகத் திலும் வெளிப்பட்ட மகிழ்ச்சியும் பூரிப்பும் அதை நமக்குத் தெளிவாக உணர்த்தின.

- மு.வ.ஹரிகாமராஜ், படங்கள்: கா.முரளி