Published:Updated:

அம்மன் காசு!

அம்மன் காசு!
பிரீமியம் ஸ்டோரி
அம்மன் காசு!

நல்லன எல்லாம் தருவாள்

அம்மன் காசு!

நல்லன எல்லாம் தருவாள்

Published:Updated:
அம்மன் காசு!
பிரீமியம் ஸ்டோரி
அம்மன் காசு!
அம்மன் காசு!
அம்மன் காசு!

புதுக்கோட்டை ராஜாவின் சமஸ்தானத்தில் ‘அம்மன் காசு’ எனப்படும் சின்னஞ்சிறிய காசு செலவாணியில் இருந்தது. அந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் புதுக்கோட்டை தொண்டமான் மன்னர்களின் குலதெய்வமான அருள்மிகு பிரகதாம்பாளின் திருவுருவம் பொறிக்கப் பட்டிருக்கும். மறு பக்கத்தில் ‘விஜய’ என்று தெலுங்கு மொழியில் எழுதப்பட்டிருக்கும்.

தசரா பண்டிகையின்போது ஏழை அந்தணர் களுக்குத் தானம் அளிக்கும்பொருட்டு இந்தக் காசு 1938-ல் அச்சடிக்கப்பட்டதாம். இது, காலணாவுக்கு ஐந்து காசுகள்; ஒரு ரூபாய்க்கு 320 காசுகள் என்ற மதிப்பில் புழக்கத்தில் இருந்தது.

அம்மன் காசு!

தசரா 10 நாள் திருவிழாவின்போது ஏழை அந்தணர்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு படி அரிசியும் நான்கு அம்மன் காசுகளும் அளிக்கப் பட்டன. பழைய அரண்மனையில் நான்கு வாயில்களிலும் இப்படியான தானம் வழங்கப் பட்டன. மாலை 3 மணிக்குத் தொடங்கும் விநியோகம் 6 மணிக்கு நிறைவடையும். அதேபோல், சமஸ்தான அரசுப்பணியில் இருந்த அந்தணர்களுக்கு தசரா பண்டிகையின் நிறைவில் அரிசியும் அம்மன் காசும் மொத்தமாக வழங்கப் பட்டன.

இந்தக் காசை முதலில் கையால் தயாரித்து வந்தனர். அப்படிச் செய்யப்பட்ட காசுகள் சீரற்றதாக ஒரே அளவில் இல்லாமல் இருந்தன. அதனால், ஆங்கிலேயே அரசாங்கம் கொல்கத்தா வில் நடத்திவந்த நாணய அச்சகத்தில் இந்த நாணயத்தை அச்சிட்டுத் தரும்படி சமஸ்தானம் கேட்டுக்கொண்டது.

அம்மன் காசு!
அம்மன் காசு!

‘நாங்கள் அச்சிடுவது என்றால்,  பிரகதாம்பாளின் உருவத்துக்குப் பதில் விக்டோரியா ராணியாரின் உருவத்தைப் பொறித்துக்கொள்ள வேண்டும்’ என்று நிபந்தனை விதித்தது ஆங்கிலேய அரசு. இதை சமஸ்தானம் ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர், லண்டனில் உள்ள தனியார் நிறுவனத்திடம் ஆர்டர் கொடுத்து, அம்மன் காசுகளை அச்சிட்டு வாங்கினார்களாம். 1947-ம் ஆண்டு வரை இந்தக் காசுகள் புதுக்கோட்டை மக்களிடம் புழக்கத்தில் இருந்தன.

இன்றைக்கும்கூட புதுக்கோட்டைப் பகுதி மக்கள், ‘ரொம்பக் கஷ்டம் கையில ஒரு அம்மங்காசுகூட இல்லை’, ‘அவனுக்கு ஒரு அம்மன் காசு கூட தர மாட்டேன்’ என்றெல்லாம் பேசுவதைக் கேட்கலாம்!

- ஆர்.சி.சம்பத்
படங்கள்: பா.காளிமுத்து

அம்மன் காசு!

திக்குவாய் பிரச்னை தீர...

வா
ரியார் சுவாமிகள் தனது உபன்யாசத்தில் சொன்ன தகவல் இது. ‘‘திக்குவாய்க்கு இயற்கை சிகிச்சை ஒன்று உண்டு. வல்லினம் அதிகம் வராத, குறிப்பாக வல்லினத்தில் தொடங்கும் வரிகள் இல்லாத பத்துப் பாடல்களை நாலாயிர திவ்ய பிரபந்தத்திலிருந்தும், திருவாசகத்திலிருந்தும் தேர்ந்தெடுங்கள். அவற்றை காலையிலும் மாலையிலும் இயன்ற வரையிலும் பாடுங்கள். இசையின் மகிமையால் பாட்டின் இடையே வரும் வல்லினம் தெற்றாது. விரைவில் பலன் கிடைக்கும்.''