Published:Updated:

‘ஞான தீபம்’ ஒளிர... - பிள்ளைகளோடு கொண்டாடினோம் பிள்ளையாரை!

‘ஞான தீபம்’ ஒளிர... - பிள்ளைகளோடு கொண்டாடினோம் பிள்ளையாரை!
பிரீமியம் ஸ்டோரி

குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள் பெரியோர்கள். குழந்தைகளுடன் சேர்ந்து ஞானச் சுடரேற்றி தெய்வத்தைக் கொண்டாடினால், எவ்வளவு சிறப்பாக இருக்கும்?! அப்படியான ஓர் அற்புத வைபவம்தான், கடந்த விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சக்தி விகடனும், தீபம் எண்ணெய் உற்பத்தி நிறுவனமான காளீஸ்வரி ரீஃபைனரியும் இணைந்து வழங்கிய ‘ஆனைமுகனுக்கு ஞான தீபத் திருவிழா’!     

‘ஞான தீபம்’ ஒளிர... - பிள்ளைகளோடு கொண்டாடினோம் பிள்ளையாரை!

கடந்த 27.8.17 (ஞாயிறு) அன்று, சென்னை - தி.நகர், ராமகிருஷ்ணா மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோவை - சிங்காநல்லூர் ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா மற்றும் மதுரை - அவுனியாபுரம் எஸ்.பி.ஜே மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய மூன்று இடங்களிலும் கோலாகலமாக நடந்தேறியது விழா!

‘இயற்கைப் பிள்ளையார்’ பரிசுப் போட்டி, புதிர், ஓவியம், ஆடை-அலங்காரம், பாடல்-ஸ்லோகம் மற்றும் கதை சொல்லுதல் ஆகிய பிள்ளைகளுக்கான போட்டிகளோடு, பெற்றோருக்காக நடந்த ‘தீபம் சிறப்புப் போட்டி’யும் சேர்ந்து களைகட்டியது, ஆனைமுகனுக்கான ஞான தீபத் திருவிழா. சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று ஊர்களிலும் குழந்தைகளோடு இணைந்து திருவிளக்கேற்றி வைத்த சிறப்பு விருந்தினர்கள், தங்களின் பேச்சால் பிள்ளைகள் மத்தியில் ஞான தீபமும் ஏற்றிவைத்தார்கள் என்றே சொல்லலாம்.  

‘ஞான தீபம்’ ஒளிர... - பிள்ளைகளோடு கொண்டாடினோம் பிள்ளையாரை!

சிவாலயத்தில் அணையும் தறுவாயில் இருந்த தீபச் சுடரை அறியாமல் தூண்டிவிட்ட எலி, அதன் பலனாக மறுபிறவியில் மகாபலிச் சக்கரவர்த்தியாகப் பிறந்ததாம்.  திருவாரூர் தலத்தில், தண்ணீரால் விளக்கேற்றி இறைவனை வழிபட்டு சிறப்படைந்தவர் நமி நந்தியடிகள். திருவொற்றியூர் இறைவனுக்குத் தீபமேற்ற இயலாமல் வறுமை சூழ்ந்தபோதும் தன் குருதியையே எண்ணெயாக ஊற்றி, விளக்கேற்ற முயன்ற செயலால் சிவனருள் பெற்றவர் கலிய நாயனார். உலகையே விளக்காக்கி, சமுத்திரத்தை நெய்யாக்கி, ஆதவனையே தீபச் சுடராக்கி... பாசுரத்தால் பெருமாளை வழிபட்டவர் பொய்கையாழ்வார்.

இந்த அடியார்களின் வழியில் இறையருள் பெறும் பொருட்டு, தினமும் தீப வழிபாடு செய்வதன் உன்னதத்தை எடுத்துரைத்தார்கள் சிறப்பு விருந்தினர்கள். 

‘ஞான தீபம்’ ஒளிர... - பிள்ளைகளோடு கொண்டாடினோம் பிள்ளையாரை!

மதுரையில், ‘‘தெய்வ வழிபாட்டின் மகத்துவத்தோடு, விளக்கேற்றும் பண்பாடு பற்றியும் அதன் காரணத்தையும் நாம் அவசியம் அறிந்துகொள்ள வேண்டும்’’ எனத் தொடங்கி, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் மிக அற்புதமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். கோவையில் கவிஞர் மகுடேசுவரன், ‘‘ஆழ்ந்த நிலையே ஒளியைத் தரும். ஆன்மிகம் மட்டுமே ஞானத்தைத் தரும். இதற்கான அடையாளங்களே சுடரொளி வீசும் தீபங்கள்’’ என்று தீபத்தின் மகத்துவத்தோடு, பிள்ளையாரின் பெருமையையும் எடுத்துரைத்தார்.

சென்னையில் பேசிய சிரிப்பானந்தா, ‘‘தீய சக்திகள் விலக நல்லெண்ணெயும், உறவுகள் மேம்பட ஆமணக்கு எண்ணெயும், மன நிம்மதிக்குத் தேங்காய் எண்ணெயும், செல்வங்கள் பெருக இலுப்பை எண்ணெயும் சேர்த்து, ஐந்தாவதாக... வீட்டில் அன்னலட்சுமியின் கடாட்சம் பெருகிட உமியிலிருந்து கிடைக்கும் எண்ணெயையும் கலந்து விளக்கேற்ற வேண்டும். இதனால் சகல சுபிட்சங்களும் பெருகும்!'' என்று ஐந்து எண்ணெய்கள் கொண்டு தீபமேற்றி வழிபடுவதன் அவசியத்தை மிக அற்புதமாக விளக்கினார். விழா நிறைவில் போட்டிகளில் வென்ற பிள்ளைகளுக்குச் சான்றிதழோடு, தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனம் காளீஸ்வரி ரீஃபைனரி வழங்கிய பரிசுகள் வழங்கப்பட்டன. இவர்களுக்கு மட்டுமின்றி விழாவில் கலந்துகொண்ட பிள்ளைகள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.   

‘ஞான தீபம்’ ஒளிர... - பிள்ளைகளோடு கொண்டாடினோம் பிள்ளையாரை!

தீபத் தகவல்களோடும், பங்களிப்புச் சான்றிதழ்களோடும், பரிசுகளோடும் திரும்பிய பிள்ளைகள், அவர்களின் பெற்றோர்கள் அனைவரது உள்ளங்களும் நிச்சயம் பூரண பூரிப்பால் நிறைந்திருக்கும். அகத்தின் ஒளி முகத்திலும் தீபச்சுடராய் ஒளிர, பெரிதும் நன்றி சொல்லி விடைபெற்றார்கள்.

படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்,  ஜெ.பரணிதரன், சி.ரவிக்குமார், ல.அகிலன், பா.ராகுல்