திருப்பதியில் தாயாரை தள்ளிவிட்டுடாங்க - கொந்தளிக்கிறார் ராகவா லாரன்ஸ்!


சென்னை: ''இலங்கையில் தமிழர்களை கொடூரமாக கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு திருப்பதி கோயிலில் சிவப்பு கம்பளம் விரித்து மரியாதை செய்கிறார்கள். ஆனால், என்னுடைய தாயாரை பிடித்துத் தள்ளுகிறார்கள்' - நடிகர் ராகவா லாரன்ஸ்தான் இப்படிக் குமுறுகிறார்.
நடன இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் கடந்த 31 ஆம் தேதி இரவு குடும்பத்துடன் திருப்பதி வந்தார். அங்கு அவர் திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்தார். மறுநாள் அதிகாலையில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக கிரேடு 2 வி.ஐ.பி. தரிசனத்தில் சென்று குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலை யான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது, அங்கிருந்த கோவில் ஊழியர்கள் லாரன்ஸின் தாயார், மனைவி மற்றும் குழந்தைகளை வேகமாக நகரும்படி சொல்லி, பிடித்து தள்ளி விட்டனர்.
இதை நேரில் பார்த்த லாரன்ஸ், சம்பந்தப்பட்ட ஊழியரிடம் ஆவேசத்துடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனால், கோயில் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே, அங்கிருந்த சக ஊழியர்கள் ஓடி வந்து லாரன்ஸை சமரசம் செய்தனர். அங்கிருந்து மன வருத்தத்துடன் வெளியே வந்த லாரன்ஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
##~~## |