ஞான நெருப்பு

தெறுத்து வந்த தீதெலாம்
அறுத்த உன்னை ஆதனேன்
ஒறுத்த தன்மை ஊழியாய்
பொறுத்தி என்று போயினான்

‘துஷ்ட நிக்கிரகம் என்ற வியாஜத்தால் விராதனைப் போன்ற தீயோருக்கும் நன்மை புரியவந்த கருணைக்கடல் ராமன்’ என்ற வதார ரகசியத்தை விராதன் வாக்காகக் குறிப்பிடுவது எவ்வளவு ரஸமாக இருக்கிறது. துஷ்டர்களும் பரம்பொருளின் குழந்தைகளே. நல்லவர்களை அறக்கருணை யால் திருத்துவதுபோல், அல்லாதவரை மறக்கருணையால் திருத்துகிறானாம் இறைவன். ‘அறக்கருணையானாலும் மறக் கருணையானாலும் கருணை கருணையே’ என்பது குறிப்பு.

விராதன் போய்விட்டான். ஆம், சூட்சுமரூபியான கந்தர்வன் போய்விட்டான். வெற்றி வீரர்களான ராம-லட்சுமணருக்கு அவ்வளவு வெற்றி குதூகலமில்லை. அம்புகளை ஜாக்கிரதையாக எடுத்துக்கொண்டு போகிறார்கள். இன்னும் எத்தனை ஆபத்துகளோ? சீதாதேவியோ பூவிலிருந்து பூவுக்குத் தாவும் மைனாவைப் போல், குதிபோட்டுக்கொண்டு குதூகலமாய்ப் போகிறாளாம். பொறுப்பும் சிறிது கவலையும் பொருந்திய முகத்துடன் செல்லும் வீர சகோதரர்களுடன்.

இவர்களைக் காட்டுவழியில் இழுத்துவந்து விராதனுக்குச் சாபம் தீர்க்க உதவிய விதியானது, இவர்களை மேலும் காட்டுக்குள் இழுத்துச் சென்று, அடுத்தபடியாக கிழ முனிவருக்கும் வைத்தியம் செய்விக்கிறது. அந்த முனிவர் சரபங்கர் என்ற பெயருடன், தவத்திலே பழுத்த பெருங்கிழவராக விளங்கினார்.

அவரது ஆசிரமத்தை ராமன் முதலியோர் அடைவதற்குமுன், அங்கே வேறொரு விருந்தாளி வந்திருந்தானாம். அவன் பெயர் தேவேந்திரன். பிரம்மனின்பொருட்டு அவருடைய லோகத்துக்கு விருந்தாளியாக வரும்படி முனிவரை அழைக்க வந்திருந்தானாம் தேவேந்திரன். ஆனால், `தவத்தின் விளைவாகப் பிறவி வைத்தியனாகிய ராமனைப் பார்க்கப் போகிறோமே!’ என்று மகிழ்ந்திருந்த முனிவருக்கு இந்திரனும் பிரம்மனும் பொருளாகத் தோன்றவில்லை. ராமனைப் பார்த்தபிறகு பிரம்மனின் நிலை எவ்வளவு அற்பமானது என்று இந்திரனுக்கே தோன்றுகிறது.

ராமனைப் பார்க்கப் பார்க்க தோத்திர செய்யச் செய்ய இந்திரனுக்கு ஞானக்கண் மட்டுமல்ல, ஆராய்ச்சிக் கண்ணும் நன்றாகத் திறந்துவிட்டதுபோலத் தோன்றுகிறது. ‘எந்த ஒன்றிலிருந்து இந்தப் பல உருவங்களும் தொன்றினவோ, அந்த ஒன்றே ஆதிமூலம்’ என்ற அந்த ஞானம் நன்கு புலனாயிற்று. ராமனை அந்தப் பரம ஞானத்தின் கொழுந்தாகவும், தேவர்களின் குறைகளைப் போக்க வேண்டுமென்றே மூல உருவை எங்கேயே ஒளித்துவைத்து விட்டு இங்கே பிறந்திருக்கும் தெய்வநாயகமாகவும் காண்கிறான் தேவராஜா.

ஒன்றாகி மூலத்(து) உருவம் பலவாகி
உணர்வும் உயிரும் பிறிதாகி ஊழி
சென்(று)ஆ சறுங்காலத்(து) அந்நிலைய தாகித்
திறத்(து) உலகம் தானாகிச் செஞ்செவே நின்ற
நன்றாய ஞானத் தனிக்கொழுந்தே நங்கள்
நவைதீர்க்கும் நாயகமே நல்வினையே நோக்கி
நின்றாரைக் காத்தி அயல் பேரைக் காய்தி
நிலையில்லாத் தீவினையும் நீதந்த தன்றே?

வேரிலிருந்து விருட்சம் தோன்றிப் பல கிளைகளைப் பரப்புவது போலக் கடவுளும் பல்வேறு உருவங்களாகக் கிளைத்திருக்கிறாராம். உணர்வும் உயிரும் உடலுமாய்க் காட்சி தருகிறாராம். மகா பிரளயம் ஏற்பட்டு எல்லாம் முடியும் காலத்தில், அப்போதுள்ள அம்முடிவு நிலையிலும் கடவுள் முடிவு பெறாமல் இருக்கிறாராம். மீண்டும் படைப்புச் சக்தி தழைக்கும்போது மறுபடியும் உலகங்கள் தோன்றுகின்றன. கடவுளே பலதிறப்பட்ட உலகங்கள் ஆகிறாராம்.

அத்தகைய கடவுளே ஞானச் சுடர்க்கொழுந்தே ராமனாக வந்திருக்கிறது, எங்களது குறைகளைப் போக்குவதற்கு. ஆகவே ராமன் தெய்வநாயகம், தெய்வ ஜோதி, மானுடச் சட்டையில் இருந்தபோதிலும் என்கிறான் இந்திரன்.

இத்தகைய தத்துவ விசாரத்துக்குப் பின் போகமூர்த்தியான இந்திரன், தனது போக பூமிக்குப்போய்விட்டான். முனிவர் ராமனை வரவேற்றார். அவனை மூலப்பொருளாகவே பரமபத நாதனாகவே முனிவரும் கண்டார். ராமனும் சீதையும் லட்சுமணனும் முனிவரின் ஆசிரமத்திலேயே இரவைக் கழித்தார்கள்.

சூரியன் இருளாகியப் போர்வையை விலக்கிக்கொண்டு உதயம் செய்தான். முனிவர் திடீரென்று அக்னிப் பிரவேசம் செய்யச் சித்தமாகிறார். ராமன் காரணம் கேட்கச் சரபங்கர், தானும் தன் மனைவியும் ராமனைத் தரிசிப்பதற்காகவே உயிரை வைத்துக்கொண்டிருந்ததாகவும், இனி ராமன் அருளால் அக்னிப் பிரவேசத்தை வியாஜமாகக் கொண்டு பரமபதப் பிரவேசம் செய்யப்போவதாகவும் பதில் சொல்கிறார். ரிஷி தம்பதிகள் அக்னிப் பிரவேசமானதும் சீதா ராம லட்சுமணர் பரிதவிக்கும் நெஞ்சினராய் அந்த ஆசிரமத்தை விட்டுப் புறப்பட்டார்கள். மலைப் பிரதேசங் களையும் மரங்கள் அடர்ந்த காட்டுப் பிரதேசங்களையும் தாண்டி வருகிறார்கள். வழியில் எத்தனையோ அழகிய கற்பாறைகள், அழகான காட்டாறுகள், உள்ளத்தை அள்ளிப் பருகும் அருவிச் சாரல்கள், இனிய பூங்காவனங்கள், ஆழமான தடாகங்கள்... இவற்றையெல்லாம் கண்விருந்தாகக் கண்டுகளிக்கும்போது சரபங்க ஆசிரமத்தில் தோன்றிய தாபமும் ஒருவாறு நீங்கியது இவர்களுக்கு.

தாயார் குளம்!

காஞ்சிபுரத்திலுள்ள சிவாலயங்களில் ஒன்று அருள்மிகு காயாரோகணேசுவரர் திருக்கோயில். இந்த சிவனாரை திருமகள் வழிபட்டு அருள்பெற்றதாகப் புராணங்கள் சொல்கின்றன. இங்கே மகாலட்சுமி உருவாக்கிய திருக்குளத்தை ‘தாயார் குளம்’ என்றும் ‘லட்சுமி குண்டம்’ என்றும் சிறப்பிக்கிறார்கள். இந்தக் குளம் நான்கு கோணமாக இல்லாமல் ஐங்கோணமாக அமைந்திருப்பது சிறப்பு.

-சு.இலக்குமண சுவாமி, மதுரை-6