Published:Updated:

குபேர பூஜைக்கு ஒரு கோயில்!

குபேர பூஜைக்கு ஒரு கோயில்!
பிரீமியம் ஸ்டோரி
குபேர பூஜைக்கு ஒரு கோயில்!

கே.குணசீலன்

குபேர பூஜைக்கு ஒரு கோயில்!

கே.குணசீலன்

Published:Updated:
குபேர பூஜைக்கு ஒரு கோயில்!
பிரீமியம் ஸ்டோரி
குபேர பூஜைக்கு ஒரு கோயில்!

தீபாவளி என்றாலே லக்ஷ்மிகுபேர பூஜை செய்வது வழக்கம். பொதுவாக அவரவர் வீடுகளிலோ அல்லது

குபேர பூஜைக்கு ஒரு கோயில்!

வியாபார ஸ்தலங்களிலோ லக்ஷ்மிகுபேர பூஜை செய்வார்கள். ஆனால், தஞ்சாவூரில் உள்ள தஞ்சபுரீஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு தீபாவளியை ஒட்டிவரும் அமாவாசை நாளில் லக்ஷ்மிகுபேர பூஜை நடைபெறுகிறது.

அன்று கோயிலுக்குச் சென்று பூஜையில் கலந்து கொண்டு அருள்மிகு தஞ்சபுரீஸ்வரரை வழிபட்டால், இழந்த செல்வங்களைத் திரும்பப்பெறலாம். வறுமையில் இருப்பவர்கள், குபேரன் அருளால் நிறைந்த செல்வம் பெற்றுச் சிறப்புற வாழலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குபேர பூஜைக்கு ஒரு கோயில்!

தஞ்சைக்குப் பெயர் தந்த ஈஸ்வரன்!

தஞ்சாவூர் கருந்தட்டான்குடி வடவாற்றின் தென் கரையில் வம்புலாஞ்சோலை என்று ஒரு சோலை இருந்தது. அந்தச் சோலையில் பராசர முனிவர் ஆசிரமம் அமைத்துத் தவம் இயற்றி வந்தார். பல மாணவர்கள் அவரிடம் கல்வி பயின்றனர். திருப்பாற்கடலைக் கடைந்து தேவர்கள் பெற்ற அமிர்தத்திலிருந்து சிறிதளவு பெற்று வந்த பராசர முனிவர், அந்த அமிர்தத்தை இங்குள்ள தீர்த்தத்தில் கலந்தார். அதன் காரணமாக இந்தக் குளம் அம்ருத தீர்த்தம் என்று அழைக்கப்பட்டது. தற்போது ராஜகோரி குளம் என்று அழைக்கப்படுகிறது.

குபேர பூஜைக்கு ஒரு கோயில்!

இந்தப் பகுதியை ஒட்டி அமைந் திருந்த இலவந்தீவு தஞ்சகன், தாரகன், தாண்டகன் என்ற மூன்று அரக்கர்களின் வசம் இருந்தது. அவர்கள் மூவரும் சிவபெருமானிடம் வரம் பெற்ற செருக்கில், தேவர் களையும் முனிவர்களையும் துன்புறுத்தி வந்தனர். இந்த நிலையில் 12 ஆண்டுகள் மழையே இல்லாமல் உலகில் கடும் வறட்சி ஏற்பட்டது. அந்த வறட்சி நிலையிலும் வம்புலாஞ்சோலையில் இருந்த அம்ருத தீர்த்தத்தில் மட்டும் நீர் நிறைந்திருந்தது.

பசியாலும் தாகத்தாலும் வாடிய அரக்கர்கள் நீர் தேடி வரும் வழியில் வம்புலாஞ் சோலையில் இருந்த அம்ருத தீர்த்தம் அவர்கள் கண்களில் பட்டது.  தாகம் தீரும்வரை தண்ணீர் பருகிய அரக்கர்கள், தாகம் தணிந்ததும் அங்கிருந்த முனிவர்களைத் துன்புறுத்தத் தொடங்கி விட்டனர். பராசர முனிவரையும் அவர்கள்  விட்டுவைக்கவில்லை. அவருடைய தவத்தைக் கலைக்க முயற்சி செய்தனர்.

முனிவர்கள் பிரம்மனையும் சிவனாரையும் வேண்டினர். சிவபெருமானின் யோசனையின்படி திருமால் அம்ருத தீர்த்தத்தில் இருந்த அமுதத்தை அப்படியே நீரில் இருந்து பிரித்தெடுத்துப் பருகிவிட்டார். பின்னர், நான்கு திருக்கரங்களுடன் நீலமேகப் பெருமாளாக முனிவர்களுக்கு தரிசனம் கொடுத்தார். நீரின் மகிமை குறைந்ததால், அசுரர்களின் வலிமை குன்றியது.

குபேர பூஜைக்கு ஒரு கோயில்!

அப்போது காளிதேவி எட்டு திசைகளிலும் உக்கிரக் காளி, மயான காளி, நிசும்ப சூதனி, வடபத்திர காளி, செல்லியம்மன், குந்தாளம்மன், செங்கமல நாச்சியம்மன், அகோர கோடியம்மன் என்று தோன்றி அசுரர்களை வதம் செய்தார். தஞ்சகன் இறக்கும் வேளையில், தன் பெயரில் இந்த ஊர் விளங்க வேண்டும் என்று வரம் கேட்டான். அவன் கேட்டபடியே சிவபெருமான் வரம் அளித்தார். அன்று முதல் இந்த ஊருக்குத் தஞ்சாவூர் என்ற பெயர் ஏற்பட்டது. அரக்கர்களை வதம்செய்த காளியைச் சாந்தப்படுத்திய சிவபெருமான், தஞ்சபுரீஸ்வரர் என்ற திருப்பெயருடன் ஆனந்தவல்லி அம்பிகையுடன் எழுந்தருளினார்.

பெரிய கோயிலுக்கும் முற்பட்ட திருக்கோயில்!

தஞ்சை பெரிய கோயிலைக் கட்ட நினைத்த ராஜராஜ சோழன், கருவூர்த் தேவரிடம் ஆலோசனை பெற்றுக் கற்களைக் கொண்டு வந்தார். ஆனால், தஞ்ச புரீஸ்வரர் கோயிலுக்கு எதிரில் இருந்த காட்டை அடைந்ததும் கற்களை ஏற்றி வந்த வண்டிகள் அப்படியே நின்று விட்டன. அன்று இரவு ராஜகுருவின் கனவில் தோன் றிய தஞ்சபுரீஸ்வரர், தம்மை வழிபடுமாறு உத்தரவிட்டார். அதன்படி ராஜராஜ சோழன் முதலானோர் 41 நாள்கள் தஞ்சபுரீஸ்வரர் கோயிலில் பூஜைகள் செய்து வழிபட்டனர். அதன் பிறகே தஞ்சை பெரிய கோயில் எழுப்பப்பட்டது. மேலும், பெரிய கோயில் பிரகதீஸ்வரருக்கு எந்த விழா நடைபெற்றாலும், முதலில் தஞ்சபுரீஸ்வரருக்கு பூஜை செய்து, அவருடைய உத்தரவு பெற்றே விழாக்கள் தொடங்கும்.

தஞ்சை பெரிய கோயிலுக்கும் முற்பட்ட தஞ்சபுரீஸ்வரர் கோயில், மராட்டிய மன்னர் சரபோஜி காலத்தில் சிவாஜி ராஜா சாகேப் மனைவி காமாட்சியம்பாய் சாகேப் முயற்சியில் நர்த்தன மண்டபம், கருங்கல் மண்டபம் கட்டி, செப்புக் கொடி மரமும் நிறுவி, கோயில் விரிவுபடுத்தப்பட்டது.

குபேர பூஜைக்கு ஒரு கோயில்!

குபேரன் வழிபட்ட தலம்!

தனது ராஜ்ஜியம் செல்வம் அனைத்தையும் ராவணனிடம் இழந்த குபேரன், வட திசை நோக்கிப் புறப்பட்டார். அப்போது சசிவனம் என்று அழைக்கப்பட்ட வன்னிக்காட்டுப் பகுதியில் தஞ்சம் அடைந்தார். `விருபாசுர சதுர்வேதி மங்கலம்' என்று முனிவர்களால் போற்றப்பட்ட அந்த வன்னிக்காட்டில் சுயம்புவாக எழுந்தருளி இருந்த ஆனந்தவல்லி சமேத அமலேஸ்வரர் என்று திருப்பெயர் கொண்ட தஞ்சபுரீஸ்வரரை அனுதினமும் வழிபட்டு வந்தார். அதன் பலனாக அவருக்கு சிவ தரிசனம் கிடைத்தது. சிவனாரிடம் தனது ராஜ்ஜியமும், செல்வ போகங்களும்  மீண்டும் தனக்குக் கிடைக்க வேண்டும் என்று பிரார்த் தித்தார் குபேரன்.

ஆனால், சிவனாரோ குபேரன் கேட்டதற்கும் மேலான பதவியை வழங்கத் திருவுள்ளம் கொண்டு,குபேரனை வட திசைக்கு அதிபதியாக நியமித்ததுடன், நவ நிதிகளையும் தந்து அருள் புரிந்தார்.

மேலும், உலகத்தில் செல்வம் வேண்டுவோர் அனைவரும் குபேரனை வழிபட வேண்டும் என்றும் ஒரு சிறப்பினை குபேரனுக்கு அருளினார். அவரிடம், ``எனக்கு அருள்புரிந்தது போன்றே இங்கு வந்து தங்களை வழிபடும் அன்பர்களுக்கும் அருள வேண்டும்'' என்று வேண்டிக்கொண்டார். சிவனாரும் குபேரன் கேட்டபடியே அருள்புரிந்தார்.

குபேர பூஜைக்கு ஒரு கோயில்!

சிவபெருமான் குபேரனுக்கு அருள்புரிந்தது தீபாவளியை ஒட்டிவரும் அமாவாசை என்பதால், இந்தத் தலத்தில் தீபாவளியை ஒட்டிவரும் அமாவாசையன்று குபேர பூஜையும் யாகமும் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

குபேர பூஜைக்கு ஒரு கோயில்!

இந்த வருடம் 19.10.17 அமாவாசையன்று மாலை 4.30 மணிக்கு குபேர மகா யாகம் தொடங்குகிறது. யாகத்துக்குத் தேவையான நெய், பழங்கள் போன்ற ஹோம திரவியங் களுடன் பக்தர்கள் கலந்துகொண்டு, தஞ்சபுரீஸ்வரர் அருளாலும், குபேரனின் அனுக்கிரகத்தினாலும் அளவற்ற செல்வம் பெற்றுச் சிறப்புற வாழலாம்.

எப்படிச் செல்வது?

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து திருவையாறு செல்லும் சாலையில் சுமார் 2 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது அருள்மிகு தஞ்சபுரீஸ்வரர் கோயில். பேருந்து வசதி உள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism