Published:Updated:

கல்யாண வரம் அருளும்... கேதாரீஸ்வர விரதம்

கல்யாண வரம் அருளும்... கேதாரீஸ்வர விரதம்
பிரீமியம் ஸ்டோரி
கல்யாண வரம் அருளும்... கேதாரீஸ்வர விரதம்

பூசை.ச.ஆட்சிலிங்கம்

கல்யாண வரம் அருளும்... கேதாரீஸ்வர விரதம்

பூசை.ச.ஆட்சிலிங்கம்

Published:Updated:
கல்யாண வரம் அருளும்... கேதாரீஸ்வர விரதம்
பிரீமியம் ஸ்டோரி
கல்யாண வரம் அருளும்... கேதாரீஸ்வர விரதம்

பிருங்கி முனிவர் சிறந்த சிவபக்தர். ஒருமுறை கயிலைக்குச் சென்றவர், அங்கே அமர்ந்திருந்த சிவசக்தியரில் சிவனாரை மட்டுமே வலம் வந்து வணங்கினார். இதைக் கண்ணுற்ற அம்பிகை ஆற்றாமை கொண்டாள். விளைவு... பிருங்கி முனிவரின் சக்தியும் ஆற்றலும் அவரைவிட்டு நீங்கின. அப்போது, சிவப் பரம்பொருள் அவருக்கு மூன்றாவது காலை அளித்துச் சாயாது நிற்கவைத்தார்.

இதையடுத்து திருக்கயிலையை விட்டு நீங்கிய அம்பிகை, கெளதம முனிவரின் ஆசிரமத்தை அடைந்து, அவரின் வழிகாட்டலுடன் கேதாரத்தை அடைந்து 21 நாள்கள் விரதமிருந்து சிவனாரை வழிபட்டு, அவரின் திருமேனியில் இட பாகத்தைப் பெற்றாள். பெளஷ்யபுராணம், திருச்செங்கோடு தலபுராணம், அருணாசலப்புராணம் ஆகியன இந்தக் கதை குறித்து விவரிக்கின்றன.

இக்கதை மட்டுமின்றி, அம்பிகை சிவனாரை வழிபட்டு, பொன்னிறம் பெற்றாள் என்றும் அதனால் அவளுக்குக் `கெளரி' எனும் திருப்பெயர் வந்தது என்றும் ஒரு திருக்கதை உண்டு. இவ்வாறு அம்பிகை கடைப்பிடித்த விரதமே கேதார கெளரீஸ்வர விரதம் ஆகும்.

கல்யாண வரம் அருளும்... கேதாரீஸ்வர விரதம்

விரத காலம்...

அம்பிகையிடம் ‘‘புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி முதல் தேய்பிறை சதுர்த்தசி வரை 21 நாள்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்’’ என்று கெளதம முனிவர் விளக்கினாராம். இம்முறைப்படி விரதம் கடைப்பிடிப்பது உத்தமபட்சம்.

புரட்டாசி தேய்பிறை பிரதமை முதல் சதுர்த்தசி வரையிலான 14 நாள்கள் விரதம் கடைப்பிடிப்பது மத்திமம். புரட்டாசி தேய்பிறை அஷ்டமி தொடங்கி சதுர்த்தசி வரையிலான 7 நாள்கள் கடைப்பிடிப்பது அதமபட்சம்.
புரட்டாசி தேய்பிறை சதுர்த்தசி அன்று மட்டும் விரதம் கடைப்பிடிப்பது சாமான்யபட்சம்.

இந்த நான்கு காலத்திலும் இயலாதோர் ஐப்பசி மாதம் தேய்பிறைச் சதுர்த்தசியில் (தீபாவளியன்று) இவ்விரதத்தைக் கடைப் பிடித்து சிவனாரை வழிபடுவார்கள். மறுநாள் அமாவாசை தினத்தில் கெளரி தேவியை வழிபடுவார்கள். அது கேதார கெளரி விரதம் ஆகும்.

விரத நியதிகள்

ஏரி, குளம் முதலான நீர்நிலைகளின் கரைகளில் ஆலமரத்தடியில் பெண்கள் கூடி இந்த விரத பூஜையைச் செய்வது வழக்கம். தற்காலத்தில் வீடுகளிலேயே பூஜிக்கின்றனர்.

விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கி, பிருங்கி முனிவர், கெளதம முனிவர் ஆகியோரையும் தியானித்து பின்னர் தம்மையே அம்பிகையாகப் பாவித்து சிவபூஜை செய்ய வேண்டும்.

சிவபெருமானுக்கு 21 வகை பூக்கள், 21 வகை இலைகளால் அர்ச்சனை செய்து, 21 என்ற எண்ணிக்கையில் கனிகள், அதிரசம், பணியாரம் ஆகியவற்றைச் சமர்ப்பித்து வழிபட வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கல்யாண வரம் அருளும்... கேதாரீஸ்வர விரதம்

பூஜையின்போது 21 முடிச்சுகள் கொண்ட நோன்புக் கயிறை சிவனாரின் திருமுன் வைத்து வழிபடல் வேண்டும். பூஜை முடிந்ததும் மூத்த சுமங்கலியின் ஆசியோடு அவரின் கையால் அவற்றை மற்ற பெண்கள் கட்டிக்கொள்ள வேண்டும்.

விரத பலன்கள்

கேதார கெளரீஸ்வர விரதம் கடைப்பிடித்து சிவனாரை வழிபட்டால் சகல சம்பத்துகளும் உண்டாகும். மணமாகாத பெண்களுக்குத் தடைகள் அனைத்தும் நீங்கி, விரைவில் மனதுக்கு இனிய கணவன் வாய்ப்பான். சுமங்கலிகளுக்கு மாங்கல்ய பலம் உண்டாகும். இல்லத்தில் தம்பதி ஒற்றுமை மேலோங்கும். இந்தப் பூஜையால் விவசாயம் செழிக்கும், நோய், வறுமை முதலான துன்பங்கள் நீங்கும்.

அதிரசப் பிரசாதம்

இந்த விரத பூஜையில் சமர்ப்பிக்கப்படும் நைவேத்தியங்களில் மிக முக்கியமானது அதிரசம். அரிசியை இடித்துச் சலித்து அதனுடன் வெல்லப்பாகைக் கலந்து, வட்டமாகத் தட்டி எண்ணெயில் வேகவைத்து அதிரசம் தயார் செய்வார்கள். சிவபெருமானுக்குச் சமர்ப்பிக்கப்படும் அதிரசங்களை, திருமணமாகிச் சென்ற தங்கள் வீட்டுப் பெண்ணுக்குச் சீராக அனுப்பும் வழக்கமும் உண்டு. இதனால் அவள் நீண்ட ஆயுளும், சிறந்த மணவாழ்வையும் பெறுவாள் என்பது நம்பிக்கை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism