Published:Updated:

கேள்வி பதில் - தங்கக்கொலுசு அணியலாமா?

கேள்வி பதில் - தங்கக்கொலுசு அணியலாமா?
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில் - தங்கக்கொலுசு அணியலாமா?

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி பதில் - தங்கக்கொலுசு அணியலாமா?

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:
கேள்வி பதில் - தங்கக்கொலுசு அணியலாமா?
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில் - தங்கக்கொலுசு அணியலாமா?

? முக்தி பெற்றுவிட்ட மகான்கள் மீண்டும் பூமியில் அவதரிக்கும் வாய்ப்பு உண்டா?

 - கே.வேலு ராமநாதன், மேலூர்


உலக வாழ்வில், அங்கும் இங்குமாகத் தென்படும் இன்பம், மின்னல் போல் மறைந்து விடுகிறது; நாம் விரும்பினாலும் அது நிலைப்பதில்லை. வேப்பம் பழத்திலும் ஓர் அசட்டு இனிப்பு உண்டு. ஆனால், கசப்பு சுவையே அதிகம். எனினும் பறவைகள், இனிப்புக்காகவே அந்த பழத்தை அணுகும். உலக வாழ்விலும் இன்பத்தைவிட துன்பமே அதிகம். இதை உணர்ந்து, துன்பத்திலிருந்து விடுபடுவதற்கான வழியைச் சொன்னார்கள் மகான்கள். அத்துடன் துன்பக் கடலைத் தாண்டி, நிலைத்த இன்பத்தில் மகிழ்ந்து உதாரண புருஷர்களாகவும் விளங்கினார்கள்.

காட்டில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவனை சிங்கம் துரத்தியது. பயந்து ஓடியவன் ஒரு மரத்தில் ஏறினான். மரக் கிளையில் பாம்பு ஒன்று படமெடுத்து நின்றது. ஆபத்தான இந்த நிலையிலும் அந்த மனிதன்... மரக்கிளையில் தொங்கும் தேனடையில் கசிந்த தேனைப் பருக ஆசைப்பட்டானாம்! இன்றைய மனிதர்களின் நிலையும் இப்படித்தான். உலக சுக-போகங்களில் மூழ்கிய மனம் அதில் இருந்து வெளிவர விரும்பாது. மீண்டும் மீண்டும் துயரத்தில் தள்ளப்பட்டாலும், துளியளவே கிடைக்கும் இன்பத்தை நினைத்துச் செயல்படும்.

`துயரத்தில் இருந்து விடுதலை!' என்பதே நிரந்தரமான இன்பம். இதை அடைந்தவன் திரும்பவும் பிறப்பு- இறப்பு எனும் சூழலில் மாட்டிக் கொள்ள மாட்டான். எனவே, நீங்கள் விரும்பினாலும், மகான்கள் மறுபிறவியை ஏற்க மாட்டார்கள். மறுபிறவிக்குக் காரணமான கர்மவினைகள் அழிந்துவிட்டதால், அவர்களே விரும்பினாலும் கூட, மறுபிறவி கிடைக்காது!

கேள்வி பதில் - தங்கக்கொலுசு அணியலாமா?

? ‘தினமும் கடவுளின் திருமுகத்தில் கண் விழிக்க வேண்டும்’ எனும் நோக்கத்தில் எனது படுக்கை அறையில் முருகக்கடவுளின் படத்தை மாட்டிவைத்துள்ளோம். சிலர், படுக்கையறை யில் சாமி படங்களை மாட்டிவைக்கக் கூடாது என்கிறார்கள். நீங்கள்தான் வழிகாட்ட வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கேள்வி பதில் - தங்கக்கொலுசு அணியலாமா?- கே. சங்கமித்ரா, சத்தியமங்கலம்


சுத்தமான அறை. இருவர் படுக்க வசதியான கட்டில். வெல்வெட் மெத்தை. அதில் நறுமணம் கமழும் பூக்கள். வாசனைப் பொருள் களால் மணம் வீசும் சூழல்.

நாவுக்கு ருசியான இனிப்பு வகைகள். சுண்டக் காய்ச்சிய பால். குங்குமப் பூவும் பாதாமும் அதில் சேர்ந்திருக்கும். குத்துவிளக்கு எரிந்துகொண்டிருக்கும். சுவரில் படங்கள் தொங்கிக் கொண்டிருக்கும். அவற்றில் வள்ளி - தெய்வானையுடன் முருகன், ருக்மணி - சத்யபாமா வுடன் கண்ணன் ஆகியோர் படங்கள் இருக்கும். முன் நெற்றியில் வளைந்த கேசத்துடன் மிளிரும் குழந்தை முருகன் படமும் இருக்கும். கையில் வெண்ணெய், தலையில் மயில் தோகையுடன் விளங்கும் கண்ணன் படமும் இருக்கும். இது முதலிரவில் சந்திக்க வேண்டிய அறை. அடுத்த அறையில் பெண்கள் மெல்லிசை எழுப்பிப் பரவசப்படுத்துவார்கள். சாந்தி கல்யாணத்தில் கடைப்பிடிக்கும் மரபு இது.

கண்ணின் குளிர்ச்சிக்குச் சூழல் ஒத்துழைக் கும். விளக்கின் ஜோதி - கண்ணுக்கு விருந்து. நறுமணம் - மூக்குக்கு, இனிப்பு - நாவுக்கு, மெத்தை சுகம் - உடலுக்கு, இசை - காதுக்கு, சாமி படங்கள் மனதுக்கு.

இருவரின் புலன்களும் அப்போது புத்துயிர் பெற்று விளங்கும். இருவரது மனம், பிறக்கப் போகும் குழந்தையின் மனப்போக்கை நிர்ணயிக்கும். தெய்வப் படங்கள், தம்பதியின் நல்லெண்ணங்கள், கண்ணன், முருகன் போன்ற தங்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தையின் நினைவு அத்தனையும் அவர்களது மனதை ஈர்த்து முதலிரவு சந்திப்பை நிறைவு செய்யும். அதன் பலனாகக் கிடைக்கும் குழந்தைச் செல்வம், ஆற்றல் படைத்த புலன்களோடும் தெளிந்த மனதோடும் சிறக்கும். முதலிரவில் படுக்கை அறையில் படம் மாட்டியிருப்பதை வரவேற்பது நமது மரபு. படங்களைப் பார்த்தால் கடவுள் நினைவு வரும். ஆகையால், படங்கள் இருப்பது அவசியம்.

இயற்கையில் விளைந்த இணை சேரல் அல்ல, நமது முதலிரவு. அன்பும் பண்பும் கலாசாரமும் நாகரிகமும், ஆன்மிகமும் கலந்த ஒரு தனித் தோற்றம் அதற்குண்டு. தர்ம சாஸ்திரம், அது நல்ல நேரத்தில் நிகழ வேண்டும் என்று சொல்லும். வருங்காலக் குடிமக்களைத் தோற்றுவிக்கும் வேளை. அது நல்ல வேளையாக இருக்க வேண்டும்.

‘உனது அருளால் இன்றைய பொழுது நன்றாக இருந்தது. நாளைய பொழுதையும் நல்லதாகச் செய்துவிடு’ என்று இரவில் படுக்கும்போது இறைவனை வணங்க வேண்டும் என்பது நமது மரபு. கோலாகலமான இன்றைய உலகில் - மனம் அல்லல்படும் சூழலில், படுக்கும்போது மனதில் கடவுள் நினைவுவருவது கடினம். ஆகையால், படுக்கை அறையில் தென்படும் கடவுள் படம் கடவுளை நினைவூட்டும். மரபும் செயல்படும். கடவுளை நினைவில் இருத்தி, பாதுகாக்க முடியுமானால் படுக்கை அறையில் சாமி படங்கள் தேவைப்படாது. கல்வி கற்கும் வேளையில் கிடைத்த நினைவாற்றல் தாய் தந்தையரையும், கடவுளையும் மறக்காமல் வைத்திருக்கும். அந்தப் பண்பு நம்மில் வளரட்டும். அப்போது படங்களை அகற்றிவிடலாம்.

கேள்வி பதில் - தங்கக்கொலுசு அணியலாமா?

? உடல்நிலை காரணமாக, அடிக்கடி தலைக்குக் குளிக்க இயலவில்லை. கோயிலுக்குச் செல்லும்போது தலைக்குக் குளிக்காமல் செல்லலாமா?

- தி.கனகசபாபதி, திருநெல்வேலி-2


 தலைக்குக் குளித்தால், உடல்நலம் குன்றிவிடும் எனில், அதற்கான சில நடைமுறைகளை சாஸ்திரம் பரிந்துரைக்கிறது. உடலுக்குக் குளிக்கலாம், ஈரத்துணியால் தலை முதல் கால் வரை துடைத்துக் கொள்ளலாம், தண்ணீரை மந்திரத்துடன் தெளித்துக் கொள்ளலாம், நெற்றியிலும் மற்ற இடங்களிலும் திருநீறு அல்லது திருமண் அணியலாம், உடம்பில் கதிரவனின் கதிர்களை ஏற்கலாம், ஒருவனை நீராட வைத்து அவனைத் தொட வைக்கலாம் (அதாவது 10 தடவை நீராடச் சொல்லி, பத்து தடவை தொடவைக்கலாம்)...  இதில், ஏதாவது ஒன்றை நடைமுறைப்படுத்தலாம்.

அதேநேரம், இப்படியான பரிந்துரைகள் எல்லோருக் கும் பொருந்தாது. மருந்து எண்ணெயை தலையில் தேய்த்துக் கொண்டு நீராடினால் உடம்புக்கு ஒன்றும் ஆகாது. பழக்கப்பட்டு விட்டால் உடம்பு ஏற்றுக்கொள்ளும். ஆயுள் முழுக்க தலைக்கு குளிக்காமல் இருப்பதாலேயே தேகநலக் குறைபாடு மறைந்துவிடாது. சிறந்த மருத்துவரை அணுகுங்கள். ஆரோக்கியத்துக்கு உதவும் அன்றாடக் குளியலைத் தவிர்ப்பதையே சிகிச்சை முறையாக்கிவிடக்கூடாது!

கேள்வி பதில் - தங்கக்கொலுசு அணியலாமா?

? பொன் வண்ண வேலைப்பாடு கொண்ட  வெள்ளிக் கொலுசைக் காலில் அணிந்திருக்கிறேன். அதை தங்கக் கொலுசு என்று எண்ணிக்கொண்ட மூதாட்டி ஒருவர், ‘காலில் தங்கக்கொலுசு போடக்கூடாதம்மா’ என்று புத்திமதி சொன்னார். எனது கொலுசு வெள்ளிதான் என்பதை அவருக்கு விளக்கிவிட்டேன். என்றாலும் எனக்குள் ஒரு சந்தேகம்... காலில் தங்கக் கொலுசு போடக் கூடாது என்பது ஏன்?

- கே.சங்கரிகிருஷ்ணன், மேட்டுப்பாளையம்


 இன்னின்ன பாகங்களில் இன்னின்ன ஆபரணங்களை அணிவது என்பதை விதிமுறையாகக் கடைப்பிடித்து வருகிறோம். சாப்பிடுவதற்கென்று ஒரு வழிமுறை இருக்கிறது. அப்படித்தான் சாப்பிடுகிறோம். உடை உடுத்துவதற்கென்று ஒரு வழிமுறை இருக்கிறது. அதன்படி உடுத்துகிறோம். கண்ணாடி போட்டுக் கொள்பவர் ஃப்ரேமை வேண்டுமா னால் தங்கத்தில் செய்துகொள்ளலாம். காசு இருக்கிறதே என்று கண்ணாடி யையே தங்கத்தில் போட்டுக்கொள்ள முடியுமோ?

பளிச்சென்று பார்க்கும்போதே தெரிகிற இடத்தில் தங்கம் போடுவதுதான் வழக்கம். ‘தங்கக்கொலுசு போட் டிருக்கிறேன்’ என்று எதிரில் வருபவருக்குக் காலைத் தூக்கிக் காட்ட முடியுமா? எனவே, ஏற்கெனவே இருக்கும் வழக்கத்தை மாற்ற வேண்டிய தேவை ஒன்றும் இல்லை.

- பதில்கள் தொடரும்...