Published:Updated:

ஆலயம் தேடுவோம் - உங்கள் வாக்கு பலிக்க வேண்டுமா? - காகபுஜுண்டர் வழிபட்ட கயிலையான்!

ஆலயம் தேடுவோம் - உங்கள் வாக்கு பலிக்க வேண்டுமா? - காகபுஜுண்டர் வழிபட்ட கயிலையான்!
பிரீமியம் ஸ்டோரி
ஆலயம் தேடுவோம் - உங்கள் வாக்கு பலிக்க வேண்டுமா? - காகபுஜுண்டர் வழிபட்ட கயிலையான்!

எஸ்.கண்ணன் கோபாலன், படங்கள்: கா.முரளி

ஆலயம் தேடுவோம் - உங்கள் வாக்கு பலிக்க வேண்டுமா? - காகபுஜுண்டர் வழிபட்ட கயிலையான்!

எஸ்.கண்ணன் கோபாலன், படங்கள்: கா.முரளி

Published:Updated:
ஆலயம் தேடுவோம் - உங்கள் வாக்கு பலிக்க வேண்டுமா? - காகபுஜுண்டர் வழிபட்ட கயிலையான்!
பிரீமியம் ஸ்டோரி
ஆலயம் தேடுவோம் - உங்கள் வாக்கு பலிக்க வேண்டுமா? - காகபுஜுண்டர் வழிபட்ட கயிலையான்!

யிலை மலைச் சாரலில் ஒருநாள் இரண்டு அன்னபட்சிகள் கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்தன. அவற்றை தன் அருள் கண்களால் சிவனார் பார்க்க, அவருடைய பார்வையிலிருந்து 21 சிவ கலைகள் புறப்பட்டு, காக உருவத்துடன் அன்னபட்சிக்குள் பிரவேசித்தன. அதன் பயனாக அன்னம் இருபது முட்டைகளைப் பொரித்தது.

21-வதாக வெளிவந்தவர் காக வடிவத்தில் இருந்த காகபுஜுண்டர். அண்டசராசரங்களையும் ஆட்சிசெய்யும் சிவனார், தம் அம்சமாகத் தம்மால் படைக்கப்பட்ட பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் மற்றுமுள்ள முப்பத்து முக்கோடி தேவர்கள்,  மகரிஷிகள் ஆகியோருக்கு மூன்று காலங்களையும் உணர்த்தும் பொறுப்பை, தம் திருவருளால் அவதரித்த காகபுஜுண்டருக்கு அருளியதுடன் அவருக்கு சிரஞ்ஜீவியாக இருக்கும் வரமும் தந்தார்.

ஆலயம் தேடுவோம் - உங்கள் வாக்கு பலிக்க வேண்டுமா? - காகபுஜுண்டர் வழிபட்ட கயிலையான்!

இத்தகு பேற்றினைப் பெற்ற காகபுஜுண்டர் பூவுலகில் சஞ்சாரம் செய்துகொண்டிருந்தபோது பல இடங்களில் சிவபெருமானை தியானித்து வழிபட்டிருக்கிறார். அப்படி அவர் சிவபெருமானை வழிபட்ட ஓர் ஆலயம், நீண்டகாலமாக வழிபாடு இல்லாமல் மிகவும் சிதிலமடைந்து இருப்பதாகக் கேள்விப்பட்டு அந்த ஆலயம் அமைந்துள்ள ஊருக்குச் சென்றோம்.

விழுப்புரம் மாவட்டம் மணலூர்ப்பேட்டை என்ற இடத்தில் தென்பெண்ணையாற்றின் வடகரையில் அமைந்திருக்கிறது அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத காகனேஸ்வரர் திருக்கோயில்.

பல யுகங்களுக்கு முன்பு காகபுஜுண்டருக்காக சுயம்புவாகத் தோன்றி அருளியவரும், கார்கேய மகரிஷி யால் வழிபடப் பெற்றவருமான ஐயன் காகனேஸ்வரர்     குடியிருக்கும் திருக்கோயிலின் சிதிலமடைந்த நிலையைக் கண்டு மனம் பதறித் துடிக்க, கண்களில் கண்ணீர் கசிந்தது.

‘இன்னும் இதுபோல் எத்தனை ஆலயங்களை சிதிலமடைந்த நிலையில் காண வேண்டுமோ?’ என்ற ஆற்றாமை நம் நெஞ்சை அடைத்தது. நமக்கு ஒரே ஆறுதலாக இருந்தது, திருக்கோயில் திருப்பணிகள் தொடங்கப்பட்டு இருப்பதற்கான அறிகுறிகள்தான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆலயம் தேடுவோம் - உங்கள் வாக்கு பலிக்க வேண்டுமா? - காகபுஜுண்டர் வழிபட்ட கயிலையான்!

கோயில் திருப்பணிகளை மேற்கொண்டிருப்பவர்களில் ஒருவரான விக்னேஸ்வரனிடம் பேசினோம்.

‘‘இந்தக் கோயில் எத்தனை வருஷமா இப்படி இருந்துவருகிறது என்பது எங்களுக்குத் தெரியாது. சொல்லப்போனால், இங்கே ஒரு கோயில் இருக்கிறது என்பதே எங்கள் யாருக்கும் தெரியாது. ஏதோ ஒரு பாழடைந்த மண்டபம்தான் புதர் மண்டி இருக் கிறது என்று நினைத்திருந்தோம்.

ஆனால், ஒரு வருடத்துக்கு முன்பு என் சகோதரி இளவரசியின் கனவில் சிவபெருமான் தோன்றி, பாழடைந்த மண்டபத்துக்குள் தான் இருப்பதாகத் தெரிவித்தார். முதலில் நாங்கள் அதை நம்பவில்லை. பிறகு சில நாள்கள் கழித்து எங்களுக்குத் தெரிந்த ரவி குருக்கள் என்பவரிடம் என் சகோதரியின் கனவைப் பற்றிக் கூறினேன். முதலில் அவருக்கு எதுவும் தோன்றவில்லை. பேசாமல் சென்றுவிட்டார்.

ஓரிரு மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் அவசர அவசரமாக என்னைப் பார்க்க வந்தார்.

ஆலயம் தேடுவோம் - உங்கள் வாக்கு பலிக்க வேண்டுமா? - காகபுஜுண்டர் வழிபட்ட கயிலையான்!

‘உங்கள் சகோதரி சொல்வது உண்மையாக இருக்கலாம் என்றே நினைக்கிறேன். ஒருமுறை என் தாத்தா என்னிடம் பேசிக்கொண்டிருந்தபோது, தென்பெண்ணையாற்றின் வடகரையில் உள்ள மணலூர்ப்பேட்டையில் பழைமையான சிவன் கோயில் இருந்ததைப் படித்திருப்பதாகக் கூறியது நினைவுக்கு வந்தது. எனவேதான், உடனே உங்களைப் பார்த்து விவரம் சொல்ல வந்தேன். எதற்கும் மண்டபத் தைச் சுற்றி மண்டியிருக்கும் புதர்களை அகற்றிப் பார்க்கலாமே’ என்று கூறினார்.

ஊர்மக்களும் அதற்குச் சம்மதித்தனர். ஊர்மக்கள் ஒத்துழைப்புடன் புதர்களை அகற்றிப் பார்த்தபோது, சந்நிதியில் சிவலிங்க மூர்த்தம் மட்டும் இருந்தது. வேறு எந்தச் சிலையும் இல்லை. சுற்று பிராகாரத்தில் தூண் களில் விநாயகர், முருகர் போன்ற சிலைகள் இருந்தன. கோயிலில் இருந்த ஒரு கல்வெட்டில் (கி.பி. 730 - 795) மலையநாட்டு அரசராக இருந்த வானகோவரயன் மகள் மாதேவடிகள், அருள்மிகு காமாட்சி அம்பிகை உடனுறை அருள்மிகு காகனேஸ்வரருக்குத் திருவமுது படைக்கவும், நந்தா விளக்கு எரிக்கவும் இரண்டு சிற்றூர்களையும் பொற்காசுகளையும் வழங்கியதாகக் குறிப்பு உள்ளதைப் பிறகு தெரிந்து கொண்டோம்.

ஆலயம் தேடுவோம் - உங்கள் வாக்கு பலிக்க வேண்டுமா? - காகபுஜுண்டர் வழிபட்ட கயிலையான்!

உழவாரப்பணி செய்த அன்றைக்கே  சுவாமிக்கு அபிஷேகமும் பூஜைகளும் செய்து வழிபட்டோம். கோயிலில் வைத்தே திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் செய்வது என்றும் தீர்மானித்தோம். ஊர்மக்களும் ஒத்துழைப்பதாகக் கூறினர். இப்போது இரண்டு பேர் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கி திருப்பணிகளைச் செய்து வருகிறோம்’’ என்றார் விக்னேஸ்வரன்.  அவரே தொடர்ந்து,  ‘`காகபுஜுண்டரும் கார்கேய மகரிஷியும் வழிபட்ட இந்தத் தலத்து இறைவன் அளவற்ற வரப்பிரசாதி என்றும், குறிப்பாகத் தீராத பிணிகளைத் தீர்ப்பவர் என்றும், ஜோதிடர் களுக்கு வாக்கு பலிதம் அருள்பவர் என்றும் நாடியில் தெரியவந்தது.

ஆலயம் தேடுவோம் - உங்கள் வாக்கு பலிக்க வேண்டுமா? - காகபுஜுண்டர் வழிபட்ட கயிலையான்!

நோய் இல்லாத ஆரோக்கியமான வாழ்க்கை எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். இந்தப் பிரார்த்தனையுடன் ஸ்வாமியை வேண்டிக் கொண்டு, அவரின் திருவருளோடு கோயில் திருப்பணிகளில் மும்முரமாக இறங்கி யிருக்கிறோம். சீக்கிரமே திருப்பணிகள் பூர்த்தியாகி, கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பதுதான் ஊர்மக்களின் விருப்பமும் எதிர்பார்ப்பும்’’ என்று கூறினார்.

உலக மக்களுக்கெல்லாம் ஆரோக்கியமான வாழ்க்கை அருள வேண்டும் என்ற திரு வுள்ளத்துடன், காகபுஜுண்டருக்காக சுயம்புவாகத் தோன்றிய ஐயன் காகனேஸ்வரர் திருக்கோயிலைப் புதுப்பிக்கும் திருப்பணிக்கு நாமும் தோள்கொடுப்போம்; நம்மால் இயன்ற பொருளுதவி செய்வோம்.

ஆலயம் தேடுவோம் - உங்கள் வாக்கு பலிக்க வேண்டுமா? - காகபுஜுண்டர் வழிபட்ட கயிலையான்!

மண்ணாகி விண்ணாகி மலையுமாகி வயிரமும் மாணிக்கமும் தானேயானானும், கண்ணாகி கண்ணுக்கோர் மணியுமாகி அருள்வோனுமாகிய ஐயனின் திருவருள் பெற்று நாமும் நம் சந்ததியினரும் சிறப்புற வாழ்வோம்.

எங்கிருக்கிறது... எப்படிச் செல்வது?

விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது மணலூர்ப்பேட்டை. திருக்கோவிலூர் - திருவண்ணாமலை சாலையில், திருக்கோவிலூரிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ளது. பேருந்து வசதி உண்டு.

வங்கிக் கணக்கு விவரம்:

A/C NAME: SHANMUGAM MS &VENKATACHALAM R
BANK: STATE BANK OF INDIA
BRANCH: MANALURPET
A/C NO: 36184506543
IFSC NO: SBIN 0007306
தொடர்புக்கு: விக்னேஸ்வரன் (9940037776)
              ஷண்முகம் (8489033737)

தீபம் போற்றி... திருவிளக்கே போற்றி!

வழிபாட்டின் ஓர் அங்கம் தீபலட்சுமி ஆராதனை. சந்தனக் குங்குமமிட்டு, பட்டு அணிவித்து, மாலை சூட்டி அலங்கரிக்கப் பட்ட திருவிளக்கில் தீபலட்சுமியை எழுந்தருளச் செய்து வழிபட வேண்டும்.

பூஜையின் தொடக்கம் முதல் நிறைவு வரையிலும் தீபம் தொடர்ந்து எரிவது அவசியம். திருவிளக்குகளைத் தரையில் வைக்கக் கூடாது. மணையில் கோலமிட்டு அதன்மீது திருவிளக்கை ஏற்றிவைத்து  மலர்தூவி வழிபட வேண்டும். கிராமப் புறங்களில் பூவரசு இலைமீது பசுஞ்சாண உருண்டையை வைத்து அதன்மீது விளக்கேற்றி வழிபடும் வழக்கம் உண்டு. பசுஞ்சாணம் திருமகளின் உறைவிடம் ஆகும். தீபங்களுக்கெல்லாம் வித்தாகத் திகழ்பவள் திருமகள். ஆக, தீபத் திருவிளக்கைப் பசுஞ்சாண உருண்டையில் இருத்தி வழிபடுவது விசேஷம்தான்.திருவிளக்கைப் பூஜிக்கும்போது ‘அனைத்து வடிவங்களாக விளங்குபவளும், அனைத்துக்கும் தலைவியானவளும், செல்வம், ஆரோக்கியம் ஆகியவற்றை அருள்பவளுமாகிய தேவியே... நீ எப்போதும் எம்மைவிட்டு நீங்காது அருள் புரிய வேண்டும்’ எனப் பிரார்த்திக்க வேண்டும்.

- சுபலட்சுமி, வள்ளியூர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism