‘தஞ்சம்மாவுக்கு வாழ்க்கைப் புரியவில்லை. மனிதர்களின் வாழ்வை மலரச் செய்வதற்காகவே தோன்றியிருக்கும் மகான்களை இனம் காணத் தெரியவில்லை. மகான் ராமாநுஜர் வருணங்களைப் பொருட்படுத்துவதில்லை. ஆனால், அவர் மனைவி தஞ்சம்மா குலம் கோத்திரம் பார்க்கிறாள். பிழை அவள் மீதல்ல. அவள் வளர்ப்பும் வளர்ந்த சூழலும் அப்படி...’

- இப்படி மகான் ஸ்ரீராமாநுஜரின் திவ்ய சரிதத்தை மடைதிறந்த வெள்ளம்போல் விவரித்துக்கொண்டிருந்தது யார் தெரியுமா?

பால்மணம் மாறாத பத்து வயது பாலகனான விஸ்வஜித் பிரபாகரன்தான். காந்தமெனக் கவரும் தனது இனிய குரலில் பகவத் ராமாநுஜரைப் பற்றி பக்திச் சொற்பொழிவு நடத்திக் கொண்டிருந்தான். பாலகனின் மழலை மொழியில் ஒலித்த பகவத் ராமாநுஜரின் சரிதத்தில், ஆண்களும் பெண்களுமாகத் திரண்டிருந்த ஒட்டுமொத்தக் கூட்டமும் லயித்துவிட்டது.

நவராத்திரி விழாவைச் சிறப்பிக்கும் வகையிலும் இளம் கலைஞர்களை ஊக்கப்படுத்தும்வகையிலும் சக்தி விகடன் - ஸ்பென்சர் பிளாசா இணைந்து வழங்கிய நவராத்திரி விழாவில்தான், இந்த அற்புத வைபவம் நடந்தேறியது.

சென்னை - அண்ணாசாலை ஸ்பென்சர் பிளாசா வளாகத்தில், கடந்த 22.9.17 முதல் 28.9.17 வரையிலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற நவராத்திரி விழாவில், தேஜாஸ்ரீ, ரூபாஸ்ரீ ஆகியோரின் கர்னாடக சங்கீத நிகழ்ச்சி, மாற்றுத் திறனாளி ஜோதியின் வயலின் இசை நிகழ்ச்சி ஆகியவையும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

- ஜி.லட்சுமணன்.