Published:Updated:

சனங்களின் சாமிகள் - 12

சனங்களின் சாமிகள் - 12
பிரீமியம் ஸ்டோரி
சனங்களின் சாமிகள் - 12

புருஷாதேவிஅ.கா.பெருமாள், ஓவியங்கள்: ரமணன்

சனங்களின் சாமிகள் - 12

புருஷாதேவிஅ.கா.பெருமாள், ஓவியங்கள்: ரமணன்

Published:Updated:
சனங்களின் சாமிகள் - 12
பிரீமியம் ஸ்டோரி
சனங்களின் சாமிகள் - 12

திருவாணை நாட்டில் பெண்கள் மட்டுமே வாழ்ந்தனர்.  கோட்டை மதிலைத் தாண்டி ஆண்கள் எவரும்

சனங்களின் சாமிகள் - 12

உள்ளே நுழைய முடியாது. அந்த நாட்டின் பெண்கள்,   தன்னைவிட வயதில் மூத்த பெண்ணை மாப்பிள்ளையாகக்கொள்வர்.  திருமணமான ஒரு பெண்ணின் கழுத்தில் தாலி இல்லை என்றால், அவளே கணவன் என்பது நடைமுறை.

திருமணமாகி ஓராண்டு கழிந்ததும் மணப்பெண் கடற்கரைக்குப் போவாள்.  சிங்களக் காற்று எனப்படும் சோழக் காற்று அடிவயிற்றில் படும்படி நிற்பாள்.  காற்று அவளின் கர்ப்பப்பையில் புகுந்த அடையாளத்தை உணர்ந்ததும் வீட்டுக்குத் திரும்புவாள். அன்றிலிருந்து பத்தாவது மாதத்தில் ஒரு பெண் குழந்தையைப் பெறுவாள்.  அந்தச் சமூகத்தில் ஆண் குழந்தை பிறக்காது. அந்த நாட்டின் சிறப்பு அது.

திருவாணை தேசத்து அரசிக்குத் திருமணம் முடிந்து ஓராண்டு கழிந்தது. ராணி கடற்கரைக்குச் சென்று சோழக் காற்றை உட்கொண்டு திரும்பினாள். அதன் விளைவாகப் பத்தாம் மாதத்தில் குழந்தை பெற்றாள். அந்தக் குழந்தைக்குப் `புருஷாதேவி' எனப் பெயரிட்டார்கள்.
 
புருஷாதேவிக்கு ஏழு வயதிலேயே வாள் வில் பயிற்சிகள்,  அஸ்திர சஸ்திர வித்தைகள் ஆகிய அனைத்தும் கற்பிக்கப் பட்டன. குதிரையேற்றமும் பழகினாள் புருஷாதேவி. நாளொருவண்ணமும் பொழுதொருமேனியுமாக காலம் உருண்டது. புருஷாதேவிக்குத் திருமண வயது வந்ததும் அவள் விரும்பிய பெண்ணை மாப்பிள்ளையாக்கினார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சனங்களின் சாமிகள் - 12

ஓராண்டு கழித்து புருஷாதேவியும் கடற்கரைக்குப் போய் சோழக் காற்றைச் சுவாசித்துக் கர்ப்பமுற்றாள். மகப்பேறு காலத்தில் அவள் தங்குவதற்காகக் கோட்டை ஒன்று கட்டப்பட்டது. நிறைமாத கர்ப்பிணியான புருஷா தேவி கோட்டை அரண்மனையில் குடியேறினாள்.

திருவாணை தேசத்துக்கு அருகில் செம்பன்மாமுடி என்ற சிற்றரசு இருந்தது. அந்த நாட்டின் அரசன், இறந்து போன தன் தாயாரின் ஆண்டுச் சடங்கைக் காசியில் நடத்த விரும்பினான். அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யும்படி மந்திரிகளுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது.

காசிப் பயணத்துக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் துரிதகதியில் செய்தனர் அமைச்சர்கள். அப்போது, ``திருவாணை நாட்டின் வழியே காசிக்குச் செல்வது எளிது'' என்றார் மந்திரி ஒருவர். அதன்படி
பரிவாரங்கள் திருவாணையின் கோட்டையை நெருங்கின. அப்போதே, மதிலுக்கு மேலிருந்த படி பெரும் பேரிகைகளை ஒலிக்கச்செய்து அவர்களை எச்சரித்தனர், திருவாணையின் கோட்டைக் காவலாளிப் பெண்கள்.

செம்பன்மாமுடி தேசத்து மந்திரி, தங்களது பயணம் குறித்து விவரித்தான். அவரிடம் திருவாணை தேசத்து வழக்கத்தை விவரித்து,  `ஆண்வாடை பட்டால் எங்கள் மண் அழிந்துவிடும்' எனக் கூறி, கதவுகளைத் திறக்க மறுத்து விட்டாள் கோட்டையின் தலைமைக் காவலாளி.

செம்பன்மாமுடி தேசத்து மந்திரியும் தன் மன்னனிடம் சென்று நடந்ததை விவரித்த துடன் ``நாம் வேறு வழியைத் தேர்ந்தெடுப்போம்'' என்றும் கேட்டுக்கொண்டார். ஆனால் மன்னன் அதற்குச் செவி சாய்க்கவில்லை. “நானே நேரில் சென்று கட்டளையிடுகிறேன்'' என்றவன் உடனடியாகப் புறப்பட்டான்.

திருவாணைக் கோட்டையை அவன் அடைந்த அதே நேரம்... நடந்த விஷயங்களை எல்லாம் கேள்விப்பட்டு, அதன் வீரியத்தைப் புரிந்துகொண்டதனால் தானே கோட்டைக் காவலுக்கு வந்து நின்றிருந்தாள் புருஷாதேவி.  நிறைமாதக் கர்ப்பிணியான அவளிடம் “கதவுகளைத் திறந்துவிடு” என்று அதிகாரத் தொனியுடன் கூறினான் செம்பன்மாமுடி மன்னன்.

“நீ யார் இதைச் சொல்ல? இது என் நாடு, என் கோட்டை” என்று பதிலுக்குக் கோபத்துடன் சீறினாள் புருஷாதேவி. மன்னனும் ஆவேச மானான். “இங்கு கோட்டை கட்ட உனக்கு உரிமை தந்தது யார்?” என்று இரைந்தான்.

``அதைக் கேட்க நீ யார்?'' என்றாள் அவள்.

“நான் யாரென்பதை போர்க்களத்தில் காட்டுகிறேன்” என்று சூளுரைத்துவிட்டுச் சென்றான் மன்னன்.

சொன்னதுபோலவே படையோடு வந்தான். புருஷாதேவியும் ஆயத்தமானாள். தன் பருத்த வயிற்றை துணியால் இறுக்கிக் கட்டிக்கொண்டாள். கவசமும் ஆயுதங்களும் தரித்து, குதிரை ஏறி வந்தாள். அவளைத் தொடர்ந்து வாளும் கேடயமும் ஏந்திய பெண்கள் கூட்டம் வந்தது.

பெரும்போர் ஆரம்பித்தது. புருஷாதேவி இரண்டு கைகளிலும் வாளைப் பிடித்து வீசினாள். எதிரி சேனையைச் சேர்ந்த ஆண் வீரர்கள் அவளின் சீற்றத்தைத் தாங்காமல் சிதறி ஓடினர். நிறைவாக செம்பன்மாமுடி மன்னனின் முன்னே வந்தாள்.  “உன் வீரத்தை என்னிடம் காட்டு” என்றபடி, அவனைத் தாக்க ஆரம்பித்தாள். 

புருஷாதேவியின் புயல்வேக தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிய செம்பன் மாமுடி மன்னன், முதல் நாள் போரில் தோற்றுப் போனான். இதைப் பெரும் அவமான மாகக் கருதினான் செம்பன் மாமுடி மன்னன். புருஷாதேவியை வெற்றிகொள்ள தன் நண்பனான காட மன்னனிடம் உதவி கேட்டான். இரண்டு நாள்களில் காட நாட்டுப் படை வந்தது. செம்பன்மாமுடி மன்னன் மீண்டும் போர் முரசுக் கொட்டினான்.

அந்தப் போரிலும் ஆக்ரோஷத்துடன் போரிட்டாள் புருஷாதேவி. எனினும், இரண்டு நாட்டுப் படைகளைச் சமாளிக்க முடியாமல் அவளின் முன்னணிப் படைத் தலைவிகள் ஏழு பேரும் நிலைகுலைந்தனர்.

அவர்களில் மூத்தவள் பேசினாள். “நாம் இந்தப் போரில் தோல்வி அடைந்துவிடுவோம்.  நம்மைச் சிறை கைதிகளாய் இவர்கள் பிடித்துக் கொண்டு போவார்கள். அந்தப்புரத்தில் அடைப்பார்கள். ஆணின் ஸ்பரிசமே படாத நம்மைத் தொட முயல்வார்கள் அதைவிட சாவதே மேல்” என்றாள். அதை மற்றவர்களும் ஏற்றுக்கொள்ள, ஏழு பேரும் வாளை நட்டு அதன்மேல் பாய்ந்து உயிர்விட்டனர்.

இதையறிந்து துடிதுடித்த புருஷாதேவியும், அவர்களைப் போலவே வாளைத் தரையில் நட்டு அதன்மீது பாய்ந்து தன்னை மாய்த்துக்கொண்டாள். இதைக் கண்ணுற்ற செம்பன்மாமுடி மன்னனும் மனம்தாளாமல் வாளை தன் மார்பில் பாய்ச்சி உயிர் நீத்தான்.

உயிர்நீத்தோர் சிவனிடம் சென்றனர்.  புருஷாதேவிக்கு சிவனார் கொல்ல வரம், வெல்ல வரம் எனப் பல வரங்களை அளித்ததுடன், “இன்று முதல் நீ ஆட்டுக்கார இசக்கி என்று பெயர் பெறுவாய். உன் தோழிகள் செங்கிடாக்காரன், கருங்கிடாக்காரன் எனும் வாதைகளுடன் இணையட்டும்” என்று அருளினார். ஆட்டுக்கார இசக்கி மதுரைக்குச் சென்று, அங்குள்ள மந்திரவாதிகளைப் பயமுறுத்தி, பூசை ஏற்றாள். கொக்கோடு என்ற இடத்தில் தனிக்கோயில் கொண்டாள்.

இக்கதை `பெண்ணரசியாள் கதை',  `ஆட்டுக் கார இசக்கி கதை' எனும் பெயர்களில் கதைப் பாடலாக உள்ளது. பல்லவி, அனுபல்லவி, சரணம் என்னும் இசை வடிவத்துடன் தொடங்குகிறது இக்கதை. மரபுவழி யாப்புப் பாடல்கள் இதில் கலந்து வருகின்றன. 

1.643 வரிகள்கொண்ட இப்பாடல் 200 ஆண்டு களுக்குமுன் புனையப்பட்டிருக்கலாம்.

நெல்லை மாவட்டத்தின் தென் பகுதி, குமரி மாவட்டம் மேலச்சுரங்குடி, அம்மாண்டி விளை, தருமபுரம், வெள்ளமடி, குளச்சல் என்னும் ஊர்களில் முத்தாரம்மன் மற்றும் இசக்கி கோயில்களில் ஆட்டுக்கார இசக்கி துணை தெய்வமாக வழிபாடு பெறுகிறாள். புருஷாதேவி துணை தெய்வமாக உள்ளாள்.
 
ஆட்டுக்கார இசக்கிக்கான படையல் வித்தி யாசமானது. கர்ப்பிணிக்குரிய மருந்துகளான நல்ல மிளகு, இஞ்சி, சுக்கு போன்றவற்றையும், பிரசவித்தப் பெண்ணுக்குக் கொடுக்கப்படும் கறிவகைகளையும் படைக்கின்றனர். இவளுக்கு நேர்ச்சை செய்தால் சுகப்பிரசவம் நடக்கும் என்பது நம்பிக்கை.

`சிங்களக்காற்று அடிவயிற்றில் பட்டால், பருவம் அடைந்த பெண் கர்ப்பம் அடைவாள்' என்ற நம்பிக்கை, தென் மாவட்ட கடற்கரை கிராமங்களில் இன்றும் உள்ளது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism