ஸ்ரீவேங்கடேச கராவலம்ப ஸ்தோத்திரம்!

சக்தி விகடன் 12.9.17 தேதியிட்ட சக்தியர் சங்கமம் பகுதியில் சேலம் வாசகி ஹரிப்ரியா, ஸ்ரீவேங்கடேச கராவலம்ப ஸ்தோத்திரம் வேண்டும் என்று கேட்டிருந்தார்.

மிக அற்புதமான அந்த ஸ்தோத்திரப் பாடல் தொகுப்பின் நகலை சென்னை வாசகர் ராம்மோஹன், மதுரை வாசகி வி.லக்ஷ்மி ஆகியோர் அனுப்பிவைத்துள்ளனர். அவை, வாசகி ஹரிப்ரியாவுக்கு அனுப்பிவைக்கப் படுகின்றன. சகல கிரக தோஷங்களையும் நீக்கி, சர்வ சுபிட்சங்களை அளிக்கவல்ல ஸ்ரீவேங்கடேச கராவலம்ப ஸ்தோத்திரத்தின் ஒரு பாடல் இங்கே உங்களுக்காக...

ஸ்ரீஸேஷ ஸைலசுநிகேதன திவ்ய மூர்த்தே
நாராயணாச்யுத ஹரே நளிநாயதாக்ஷ
லீலாகடாக்ஷ பரிரக்ஷித ஸர்வலோக
ஸ்ரீவேங்கடேஸ மம தேஹி கராவலம்பம்

கருத்து: சேஷகிரியில் வசிப்பவரும், திவ்ய உருவம்கொண்டவரும், நாராயணனும், அச்சுதனும், ஹரியும், புண்டரீகாக்ஷனும், வேடிக்கையான கடாக்ஷங்களால் எல்லா உலகங்களையும் ரட்சிப்பவருமான திருவேங்கடவனே... என்னைக் கைகொடுத்து காக்க வேண்டும்.

அர்ஜுனன் சந்நிதி!

சீர்காழிக்கு அருகிலுள்ள திருவெண்காட்டிலிருந்து சுமார் 3 கி.மீ தூரத்திலுள்ளது பார்த்தன்பள்ளி. பிரசித்திப்பெற்ற பெருமாள் தலம் இது. இங்கே கோயில்கொண்டிருக்கும் பெருமாள் திருக்கரத்தில் கத்தியுடன் அருள்பாலிக்கிறார். மேலும், இங்கே மூலவர், உற்சவர் இருவருமே ஸ்ரீதேவி, பூதேவி, நீளா தேவி ஆகிய மூன்று தேவியருடன் அருள்வது விசேஷம்.

அர்ஜுனனுக்குப் பகவான் ஞான உபதேசம் செய்த தலமாதலால், திருக்கோயிலின் பிராகாரத்தில் அர்ஜுனனுக்கும் தனிச் சந்நிதி உள்ளது. குடும்பத்துடன் அவசியம் சென்று தரிசிக்க வேண்டிய அற்புதமான ஆலயம் இது.

- எஸ்.விஜயலக்ஷ்மி, சென்னை-88

ராமாயணம்... பாராயணம்!

வால்மீகி முனிவர் அருளிய ராமாயணத்தில் எந்த காண்டத்தில் என்ன சர்க்கத்தைப் படித்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து பெரியோர்கள் அனுபவத்தில் உணர்ந்து விளக்கியுள்ளார்கள். நாமும் தெரிந்துகொள்வோமா?

* கல்யாணத் தடை நீங்க வேண்டுமெனில் பால காண்டத்தில் உள்ள சீதா கல்யாணத்தைத் தினமும் காலை மாலை இரண்டு வேளை களிலும் படிக்க வேண்டும்.

* குழந்தையில்லாத அன்பர்கள், பால காண்டத்தில் புத்திர காமேஸ்டி பாயஸதான பாராயணக் கட்டத்தைப் பாராயணம் செய்ய வேண்டும்.

* சுகப்பிரசவத்துக்கு பால காண்டத்தின் ராம அவதார வைபவத்தைத் தினமும் காலை யில் படிக்க வேண்டும்.

* தவறான வழியில் செல்லும் பிள்ளைகள் நல்வழிக்குத் திரும்ப வேண்டுமெனில், தினமும் காலையில் அயோத்யா காண்டத்தில் கெளசல்யா ராமா ஸம்வாதத்தைப் படித்து வர வேண்டும்.

* அரசாங்கக் காரியங்களில் வெற்றி கிடைக்க அயோத்யா காண்டத்தில் விவரிக்கப்படும் ராஜ தர்மங்களை காலையில் பாராயணம் செய்ய வேண்டும்.

* ஏவல், பில்லி, சூன்யம் போன்ற தீவினைகள் நீங்க, தினமும் மாலையில் லங்கா விஜயத்தைப் படித்து வர வேண்டும்.

* பிரிந்தவர் சேர சுந்தர காண்டத்தில் அங்குலீயக பிரதானத்தைத் தினமும் காலை யிலும் மாலையிலும் படிக்க வேண்டும்.

* கெட்ட கனவுகள் வராமல் இருக்க, சுந்தர காண்டத்தில் `திரிஜடை ஸ்வப்னம்' குறித்த பகுதியைக் காலையில் படிக்க வேண்டும்.

* ஆபத்துகள் நீங்கிட, யுத்த காண்டத்தில் வரும் விபீஷண சரணாகதியைக் காலை வேளையில் படிக்க வேண்டும்.

* மறுபிறவியில் சகல சுகங்களும் பெற்றுச் சிறக்க, ஸ்ரீராம பட்டாபிஷேகத்தைத் தினமும் காலையில் பாராயணம் செய்து வர வேண்டும்.

- ப.சரவணன், ஸ்ரீரங்கம்