Published:Updated:

பூஜையறை பொக்கிஷம்! - நினைத்ததை நிறைவேற்றும் அற்புதத் துதிகள்!

பூஜையறை பொக்கிஷம்! - நினைத்ததை நிறைவேற்றும் அற்புதத் துதிகள்!
பிரீமியம் ஸ்டோரி

முதல் வணக்கம்!

ஏக தந்தம் மஹாகாயம்
      தப்தகாஞ்சன ஸன்னிபம்
லம்போதரம் விசாலாக்ஷம்
     வந்தேஅஹம் கணநாயகம்

கருத்து:  ஒற்றைத் தந்தம், பெருத்த சரீரம், தழைத்த வயிறு மற்றும் அகன்ற கண்களைக் கொண்டவரும், உருக்கிய தங்கத்தைப் போல் பிரகாசிப்பவரும், பூத கணங்களுக்குத் தலைவருமான மகா கணபதியை வணங்குகிறேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பூஜையறை பொக்கிஷம்! - நினைத்ததை நிறைவேற்றும் அற்புதத் துதிகள்!

கணாஷ்டகத்தின் இந்தப் பாடலைப் படிப்பதால் சர்வ பாவங்களும் கேது தோஷம் முதலானவையும் நீங்கும்.

அன்னபூர்ணா ஸ்தோத்திரம்

நித்யானந்தகரீ வராபயகரீ
    ஸெளந்தர்யரத்னாகரீ
நிர்தூதாகில  கோரபாபநிகரீ
    ப்ரத்யக்ஷமாகேஸ்வரீ
ப்ராலேயாசல  வம்ஸபாவகரீ
    காஸீபுராதீஸ்வரீ
பிக்ஷாம்தேஹி க்ருபாவலம்பனகரீ
    மாதான்னபூர்ணேஸ்வரீ

பூஜையறை பொக்கிஷம்! - நினைத்ததை நிறைவேற்றும் அற்புதத் துதிகள்!

ஆதிசங்கரர் அருளிய அன்னபூர்ணா ஸ்தோத்திரத்தின் அற்புதமான பாடல் இது. தீபாவளி நாளில் மட்டுமல்ல, தினமும்கூட இந்த ஸ்தோத்திரத்தைப் பாடி அன்னபூரணியை வழிபடுவது விசேஷ பலன்களைப் பெற்றுத் தரும்.

நடராஜ பத்து 

மானாட மழுவாட மதியாடப் புனலாட
    மங்கை சிவகாமி ஆட
மாலாட நூலாட மறையாட திரையாட
    மறை தந்த பிரம்மன் ஆட
கோனாட வானுலகு கூட்டமெல்லாம் ஆட
    குஞ்சரமுகத்தன் ஆட
குண்டலமிரண்டாட தண்டை புலியுடை ஆட
    குழந்தை முருகேசன் ஆட

பூஜையறை பொக்கிஷம்! - நினைத்ததை நிறைவேற்றும் அற்புதத் துதிகள்!
பூஜையறை பொக்கிஷம்! - நினைத்ததை நிறைவேற்றும் அற்புதத் துதிகள்!

ஞானசம்பந்தரொடு இந்திரர் பதினெட்டு
    முனியாட பாலகரும் ஆட
நரைதும்பை யறுகாட நந்திவாகன மாட
    நாட்டியப் பெண்கள் ஆட
வினையோட உனைப்பாட எனைநாடி இதுவேளை
    விருதோடு ஆடி வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே யெனைஈன்ற
    தில்லைவாழ் நடராஜனே

பிரதோஷ தினங்களில் இந்தப் பாடலைப் பாடி சிவபெருமானை - ஆடலரசனை வழிபட நற்காரியங்கள் ஸித்திக்கும்; நினைத்தது தடையின்றி நிறைவேறும்.

மகாலட்சுமி அஷ்டகம்

இந்திரன் அருளிய இந்த அற்புத ஸ்தோத் திரத்தை தினமும் ஒருமுறை பாராயணம் செய்தால் பாவங்கள் அனைத்தும் விலகும்; இரண்டு முறை பாராயணம் செய்தால் செல்வ வளம் செழிக்கும்; மூன்று முறை பாராயணம் செய்தால் எதிரிகள் தொல்லை விலகும்.

பூஜையறை பொக்கிஷம்! - நினைத்ததை நிறைவேற்றும் அற்புதத் துதிகள்!

நமஸ்தேஸ்து மஹாமாயே  ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
        சங்க சக்ர கதா ஹஸ்தே
    மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி
      ஸர்வபாபஹரே தேவி
    மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

பூஜையறை பொக்கிஷம்! - நினைத்ததை நிறைவேற்றும் அற்புதத் துதிகள்!

ஸர்வக்ஞே ஸர்வ வரதே ஸர்வதுஷ்ட பயங்கரீ
      ஸர்வ துக்க ஹரே தேவி
    மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸித்தி புத்தி ப்ரதே தேவி புக்திமுக்தி ப்ரதாயினி
   மந்த்ர மூர்த்தே ஸதாதேவி
    மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி
யோகக்ஞே யோக ஸம்பூதே
மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

பூஜையறை பொக்கிஷம்! - நினைத்ததை நிறைவேற்றும் அற்புதத் துதிகள்!

ஸ்தூல ஸூக்ஷ்ம மஹாரெளத்ரே மஹாசக்தி                    
மஹோதரே மஹாபாபஹரே தேவி
    மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரம்ஹ ஸ்வரூபிணி
         பரமே ஸி ஜகன்மாத:
    மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே
       ஜகத் ஸ்த்திதே ஜகன்மாத:
    மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

நாராயணா எனும் நாமம்

குலம் தரும் செல்வம் தந்திடும்
      அடியார் படுதுயர் ஆயினவெல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள்விசும்பருளும்
   அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற
     தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
       நாராயணா என்னும் நாமம் 

- திருமங்கையாழ்வார்

பூஜையறை பொக்கிஷம்! - நினைத்ததை நிறைவேற்றும் அற்புதத் துதிகள்!

தீராத துன்பங்கள் தீரவும், வறுமைகள் நீங்கவும், வீடு-மனை முதலான செல்வங் களையும் சுபிட்சங்களையும் அடைய உதவும் அற்புத பாசுரம் இது.

நெடியோனே வேங்கடவா 

செடியாய வல்வினைகள்
    தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா
     நின்கோவிலின் வாசல்
அடியாரும் வானவரும்
    அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துநின்
    பவளவாய் காண்பேனே

- குலசேகராழ்வார்

பூஜையறை பொக்கிஷம்! - நினைத்ததை நிறைவேற்றும் அற்புதத் துதிகள்!

திருவேங்கடவனின் திருவருளைப் பெற்றுத் தரும் இந்தப் பாசுரத்தைச் சனிக்கிழமைகளில் பாடி வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கி, சந்தோஷம் பொங்கிப் பெருகும்.

லிங்காஷ்டகம்

பூஜையறை பொக்கிஷம்! - நினைத்ததை நிறைவேற்றும் அற்புதத் துதிகள்!

ப்ரஹ்ம முராரி ஸுரார்ச்சித லிங்கம்
நிர்மல பாஷித சோபித லிங்கம்
ஜன்மஜ துக்க விநாசக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்.
தேவ முனி ப்ரவார்ச்சித லிங்கம்
காம தஹன கருணாகர லிங்கம்
ராவண தர்ப்ப விநாசக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்.
ஸர்வ ஸுகந்த ஸுலேபித லிங்கம்
புத்தி விவர்த்தன காரண லிங்கம்
ஸித்த ஸுராஸுர வந்தித லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்.
கனக மஹாமணி பூஷித லிங்கம்
பணிபதி வேஷ்டித சோபித லிங்கம்
தக்ஷ ஸுயஜ்ஞ விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்.
குங்கும சந்தன லேபித லிங்கம்
பங்கஜ ஹார ஸுசோபித லிங்கம்
ஸஞ்சித பாப விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்.
தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம்
பாவையர் பக்தி பிரேவச லிங்கம்
தினகர கோடி ப்ரபாகர லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்.
அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம்
ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம்
அஷ்ட தரித்ர விநாசித லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்.
ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்
ஸுரவன புஷ்ப ஸதார்ச்சித லிங்கம்
பரமபர பரமாத்மக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்.
லிங்காஷ்டக மிதம் புண்யம் யப் படேச் சிவ ஸந்நிதெள
சிவலோக மவாப்நோதி சிவேந ஸஹ மோததே.

பூஜையறை பொக்கிஷம்! - நினைத்ததை நிறைவேற்றும் அற்புதத் துதிகள்!

நம்முடைய கஷ்டங்கள் யாவும் நீங்கி எதிர்காலம் சிறக்க, வாழ்க்கைச் செழிக்க நாள்தோறும் படிக்க வேண்டிய சிவ துதிப்பாடல் இது.

பூஜையறை பொக்கிஷம்! - நினைத்ததை நிறைவேற்றும் அற்புதத் துதிகள்!

அபிராமி அந்தாதி

வையம் துரகம் மதகரி
      மாமகுடம் சிவிகை
பெய்யும் கனகம் பெருவிலை
     ஆரம் பிறை முடித்த
ஐயன் திருமனையாள் அடித்
     தாமரைக்கு அன்பு முன்பு
செய்யும் தவமுடையார்க்கு
      உளவாகிய சின்னங்களே

பூஜையறை பொக்கிஷம்! - நினைத்ததை நிறைவேற்றும் அற்புதத் துதிகள்!

அனுதினமும் அம்பிகைக்கு நெய்விளக்கு ஏற்றிவைத்து, சர்க்கரைப் பொங்கல் நிவேதித்து, செவ்வரளிப் பூக்களால் அர்ச்சித்து, மேற்காணும் பாடலைப் பாடிவர உயர் பதவி யோகம் வாய்க்கும்; சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து கிடைக்கும்.

நாளென் செய்யும்...

நாளென் செயும்வினை தானென்
    செயுமெனை நாடிவந்த
கோளென் செயும்கொடுங் கூற்றென்
    செய்யுங் குமரேச ரிரு
தாளுஞ் சிலம்பும் சதங்கையும்
    தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு
    முன்னே வந்து தோன்றிடினே

- கந்தரலங்காரம்

பூஜையறை பொக்கிஷம்! - நினைத்ததை நிறைவேற்றும் அற்புதத் துதிகள்!

நேரம் வாய்க்கும்போதெல்லாம் இந்தப் பாடலைப் பாடி முருகனைத் தியானித்து வழிபட்டு வந்தால், கிரக தோஷங்களால் ஏற்படும் துன்பங்கள் விலகும். மன தைரியம் பிறக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

மாருதி ஸ்தோத்திரம்

புத்திர்பலம் யசோதைர்யம்
    நிர்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம்ச
    ஹனுமத் ஸ்மரணாத் பவேத்     

பூஜையறை பொக்கிஷம்! - நினைத்ததை நிறைவேற்றும் அற்புதத் துதிகள்!

தினமும் இந்தப் பாடலைப் பாடி அஞ்சனை மைந்தனை வழிபட்டால் அறிவில் வலிமை, புகழ், துணிவு, பயமின்மை, நோயின்மை, ஊக்கம், பேச்சு வலிமை ஆகிய அனைத்தும் ஸித்திக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism