பிரீமியம் ஸ்டோரி
சக்தியர் சங்கமம்!

கல்யாண மாலை தோள் சேரும்...

ன் சித்தி மகளுக்கு நீண்ட நாள்களாகக் கல்யாணம் தடைப்பட்டு வந்தது. இந்த நிலையில் நானும் என் சித்தியும் உறவுக்காரர் வீட்டு கிரகப்பிரவேசத்துக்குச் சென்றிருந்தோம். அப்போது எங்களைச் சந்தித்து நலம் விசாரித்த என் அம்மாவழிப் பாட்டி, சித்தி மகளின் கல்யாணம் குறித்து விசாரித்துத் தெரிந்துகொண்டார். 

சக்தியர் சங்கமம்!


‘‘கவலைப்படாதீங்க. அதற்கென்று நேரம் வரும்போது எல்லாம் நல்லபடியா நடக்கும்’’ என்று ஆறுதல் சொன்னவர். ஒரு ஸ்லோகத்தையும் சொல்லிக்கொடுத்து, ‘‘உன் மகளை இந்த ஸ்லோகத்தை தினமும் படித்துவரச் சொல்’’ என்று அறிவுறுத்தினார்.

அதன்படியே செய்தார் சித்தி. அடுத்த மூன்று மாதங்களில் நல்லதொரு வரன் அமைந்தது என் சித்தி மகளுக்கு. அந்த ஸ்லோகம் ஸ்ரீநாராயணீயத்தில் உள்ளது. கல்யாணத் தடையால் வருந்தும் சகோதரிகள் தினமும் அதைப் பாராயணம் செய்து பலன் அடையலாமே. உங்களுக்காக அந்த ஸ்லோகம்...

வர்ஷே ப்ரதீசி லலிதாத்மனி கேதுமாலே
லீலா விசேஷ லலிதஸ்மித சோபனாங்கம்
லக்ஷ்ம்யா ப்ரஜாபதி ஸுதைச்ச நிஷேவ்யமாணம்
தஸ்யா: ப்ரியாய த்ருதகாமதனும் பஜே த்வாம்

கருத்து:
பகவான் நாராயணன் மன்மதனின் பிதா. மன்மதனோ அளவற்ற அழகு வாய்ந்தவன். அப்படிப்பட்ட மன்மதனுடைய உருவத்தை மகாலட்சுமியின் திருப்திக்காக திருமால் தரித்தார். அப்படிப்பட்ட திருருவை மகாலட்சுமி ஏகாந்தமாக பூஜிக்க விருப்பம்கொண்டாள். அத்தகைய தனித்த இடமே கேதுமாலயம். அற்புதமான அந்த இடத்தில் ஸ்வாமிக்கு காமதேவன் என்று பெயர். அங்கு லட்சுமியுடன் சேர்ந்து (இரவு பகல்) தேவதைகளும் வழிபடுகிறார்கள். இயற்கையாகவே பேரழகு வாய்ந்தவர் பகவான். திருமகளின் திருப்திக்காகச்செய்யும் சிறந்த அருளாடல்களாலும் அழகிய புன்சிரிப்பாலும் அவரது அழகு மென்மேலும் பெருகுகிறது.

சக்தியர் சங்கமம்!திருமகளுக்காக பகவான் நிகழ்த்தும் அருளாடலின் சிறப்பை விவரிக்கும் இந்த ஸ்லோகத்தைப் படித்து, அனுதினமும் குருவாயூரப்பனுக்கு தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள்; வெகுவிரைவில் கல்யாண மாலை தோள் சேரும்.

- கே.புவனா கல்யாணி, திருப்பூர் 


தேங்காய் உடைக்கும்போது...

‘க்ஷீரபலா ஸப்த பலா பரசுராம சுபம் சுபம்’

பூஜைக்காகத் தேங்காய் உடைக்கும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது. தேங்காய் பரசுராமரால் இவ்வுலகுக்குக் கொண்டுவரப்பட்டது என்பதால், இந்த ஸ்லோகத்தைச் சொல்லி தேங்காயை உடைக்க வேண்டும் என்பார்கள்.

அதேபோல், தேங்காய் உடைத்தல் குறித்துச் சில நியதிகளும் நம்பிக்கைகளும் உண்டு. தேங்காய் உடைகின்றபோது மூன்றில் ஒரு பங்கானால் மகிழ்ச்சி உண்டாகும். ஐந்தில் ஒரு பங்கானால் அழியாச்செல்வம் சேரும். சமமாக உடைந்தால் துயரங்கள் நீங்கும்.

- கே.ராஜலட்சுமி, சென்னை-44

அருள் தரும் சிவ வடிவங்கள்!

சி
றப்பான வரங்களை வாரி வழங்கும் சிவமூர்த்தியின் திருவடிவங்களின் மகிமைகள் குறித்து ஞான நூல்கள் விவரிக்கின்றன. அதன்படி திருமண வரம் வாய்க்க உமாதேவியுடன் சிவபிரான் சேர்ந்து அமர்ந்தருளும் உமா மகேஸ்வர வடிவத்தை வழிபட வேண்டுமாம்.

ருத்ரரை வழிபட செயல்வன்மை உண்டாகும்.

அர்த்தநாரீசுவரர் திருவடிவை வழிபடுவதால், தம்பதியரிடத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் உண்டாகும்.

சோமசுந்தரர் வழிபாடு மக்கட்பேறு அளிக்கும்.

தட்சிணாமூர்த்தி வழிபாட்டினால் மனதில் சாந்தம் பிறக்கும்.

பிட்சாடனரை வழிபடுவதால், தேவையற்ற விருப்பங்கள் மனதை விட்டு அகலும்.

கங்காளர் வழிபாடு வைராக்கியத்தை அருளும்.

காமதகன மூர்த்தியை பூஜிப்பதால் மெய்ஞ்ஞானம் சேரும்.

சரப மூர்த்தியை வழிபடுவதால் சந்தோஷம் பெருகும்.

திருநீலகண்டரை வழிபடுவதால் மனச் சலனம் நீங்கும்; மனதை ஒருமுகப்படுத்தலாம்.

பைரவரை வழிபடுவதால் தீவினைகள், சத்ரு பயம் ஆகியன நீங்கும்.

நடராஜரை வழிபடுவதால் செயல்கள் சிறக்கும்; நற்காரியங்கள் வெற்றி பெறும், ஐம்புலன்களையும் வெல்லலாம்.

- மீனாட்சி முத்துக்குமார், கடையநல்லூர்   

சக்தியர் சங்கமம்!

தெரிந்துகொள்ளுங்கள்...

தயத்துக்குப் பிறகும் உறக்கம் கூடாது. அப்படித் தூங்கினால் அந்த இல்லத்தைவிட்டு லட்சுமிகடாட்சம் நீங்கும்.

• ஈர ஆடையுடன் ஒரு கர்மாவும் செய்யக் கூடாது. சிராத்த தினத்தன்று வெந்நீரில் நீராடக் கூடாது.

• இருள் சூழ்ந்த இடத்தில் அமர்ந்து சாப்பிடக் கூடாது.

• வீட்டின் தலைவாயிலில் நின்றபடி தலைவாருவதோ, சிகையில் சிக்கல் எடுப்பதோ கூடாது.

- சு.மங்கையர்க்கரசி, உடன்குடி 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு