Published:Updated:

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

Published:Updated:
தசாவதாரம் திருத்தலங்கள்!
தசாவதாரம் திருத்தலங்கள்!
##~##
'ஓ
குருவாயூரப்பா... முன்பு அத்ரி முனிவருக்குப் பிள்ளையாக அனுசுயையிடம் தாங்கள் பிறந்தீர்கள். தத்தர் எனும் பெயரையும் அடைந்தீர்கள். சீடர்கள் பலரும் தங்களின் யோக மகிமையைக் கண்டு தங்களை அண்டினார்கள். ஆனாலும் அவர்களின் சங்கமம், தியானத்துக்கு இடையூறு எனக் கருதி, தனிமை எனும் கன்னிகையாகிய மனைவியுடன் சஞ்சரித்தீர்.

மிகுந்த பக்தியுடன் தங்களைத் தரிசித்த கார்த்தவீர்யார்ஜுனனுக்கு, அஷ்ட ஐஸ்வரியங்கள் முதலான பல வரங்களை அளித்தீர்கள். அதுமட்டுமா? தங்களின் பக்தனாகிய அவனை எமன் வந்து கொண்டுபோக முடியாததால், தாங்களே அவனை வதம் செய்வதாக வரம் கொடுத்தீராமே?’ (அத்ரே: புத்ரதயா...)

- ஸ்ரீநாராயணீயத்தில், பரசுராம அவதார மகிமையை மிக அற்புதமாக ஆரம்பிக்கிறார் நாராயண பட்டதிரி.

தசாவதாரம் திருத்தலங்கள்!

பிரமாண்ட புராணம், ஹரிவம்சம், மகாபாரதம் முதலான ஞான நூல்கள் பலவும், ஸ்ரீபரசுராம அவதார ரகசியத்தை விவரிக்கின்றன; எனினும், அவற்றுக்கிடையே சிறு சிறு வேறுபாடுகள் உண்டு. நாராயணீயம் அருளிய நாராயண பட்டதிரி ஒரு காரியம் செய்தார். தான் எழுதிய அவதார மகிமைகள் சரிதான் எனும்படி ஸ்ரீகுருவாயூரப்பனிடமே அவர் ஒப்புதல் வாங்கிவிட்டார்! எம்பெருமானின் அவதாரப் பெருமைகளை விவரித்ததுடன், 'இது சரிதானே’ என்று இவர் கேட்க, குருவாயூரப்பனும் 'ஆமாம்’ என தலையசைத்து ஆமோதித்ததாக வரலாறு!

ஸ்ரீபரசுராமன் கதையையும்... 'ஸ்ரீதத்த அவதாரத்தில் கார்த்தவீர்யார்ஜுனனுக்கு பகவான் அளித்த வரம், இந்த அவதாரத்தில் சத்தியமாக்கப்பட்டது’ எனும் தகவலுடன் நாராயணப் பட்டதிரி ஆரம்பிக்கும் விதம், அலாதியானது!

தசாவதாரம் திருத்தலங்கள்!

இப்படி, புராணங்கள் பல்வேறு சிறப்புக் காரணங்களைச் சொன்னாலும் பரசுராமனின் அவதாரம் உணர்த்தும் நீதி ஒன்றுதான்... அநீதிக்கு தண்டனை நிச்சயம். இதை, இந்த அவதாரச் சம்பவங்கள் ஒவ்வொன்றும் சுட்டிக்காட்டும்!

பரசுராமனுக்கு பதினான்கு வயது. அதற்குள்ளாக சகல வேதங்களையும் கற்றுத் தேர்ந்திருந்தான். அதனால் அந்த இளம் வயதிலேயே மனப்பக்குவம் வாய்த்தது. சுக-துக்கங்களை சமமாகப் பாவிக்க முடிந்தது. நீதி எது, அநீதி எது என பகுத்துப் பார்க்கத் தெரிந்திருந்தது.

ஒருநாள், தந்தை அழைத்தார். இவனுக்கு முன்னதாக மூத்த சகோதரர்களும் வந்து நின்றிருந்தனர். அருகிலேயே அன்னை ரேணுகாவும் நின்றிருந்தாள். அவளைச் சுட்டிக்காட்டி, ''இவளைக் கொன்று போடு பரசுராமா!'' என்று காடு அதிர இரைந்தார் ஜமதக்னி. 'சித்ரரதன் என்கிற கந்தர்வனைக் கண்டு சற்றே மனச் சஞ்சலம் கொண்டுவிட்டாள் ரேணுகா. எனவே, அவள் தண்டிக்கப்பட வேண்டியவள்’ என்பது அவரது எண்ணம். தாயைக் கொல்வது பெரும் பாவமென்று சகோதரர்கள் ஒதுங்கிக் கொண்டனர். ஆனால், தந்தை சொல்லை ஏற்க மறுப்பதும் தவறு அல்லவா? எனவே, அவர்களையும் கொல்லப் பணித்தார் ஜமதக்னி.

சற்றும் யோசிக்கவில்லை பரசுராமன். தந்தையின் கட்டளையை நிறைவேற்றினான். மனம் மகிழ்ந்தார் ஜமதக்னி; 'வேண்டும் வரம் கேள்!’ என்றார். 'என் அன்னையையும் சகோதரர்களையும் உயிர்ப்பித்துத் தாருங்கள்’ எனக் கேட்டான் பரசுராமன். அவனது சமயோசிதத்தைக் கண்டு வியந்த ஜமதக்னி, அவனை ஆரத்தழுவிக் கொண்டார். அவன் விரும்பியபடியே வரம் தந்து மகிழ்ந்தார். புனிதவதியாக எழுந்தாள் ரேணுகை. சகோதரர்களும் உயிர் பெற்றனர். அதன் பின் இனிதே கழிந்தன நாட்கள்.

ஸ்ரீபரசுராமன், தமது அவதார நோக்கத்தை நிறைவேற்றும் காலமும் கனிந்தது.

தசாவதாரம் திருத்தலங்கள்!

குதிரைகளின் காலடிச் சத்தம், வெகு அருகில் கேட்டது. பெரும் படை ஒன்று ஆஸ்ரமத்தை நெருங்குவதைத் தெரிந்துகொண்டார் ஜமதக்னி. எழுந்து ஆஸ்ரம வாயிலை நோக்கினார்.

அவரின் கணிப்பு சரிதான்! நூறு- நூற்றைம்பது வீரர்கள் கொண்ட படையணி வந்து சேர்ந்திருந்தது.

ஓரிரு வீரர்கள் வேகவேகமாக இறங்கி ஓடி வந்தார்கள். அருகில் நெருங்கி வாய் பொத்தி, 'மாமன்னர் கார்த்தவீர்யன் வந்திருக்கிறார்’ என்றார்கள் மூச்சிரைத்தபடி.

அப்படி அவர்கள் சொல்லி முடிப்பதற்குள் உள்ளே பிரவேசித்தான், கேஹய தேசத்தின் சக்கரவர்த்தி கார்த்தவீர்யார்ஜுனன்.

தசாவதாரம் திருத்தலங்கள்!

கேஹேய மன்னன் கார்த்தவீர்யனுக்கும் அவன் முன்னோருக்கும் ஜமதக்னியின் முன்னோர் குல குருக்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால் காலத்தின் போக்கில் அந்த உறவு விட்டுப்போயிற்று. வெகு காலம் கழித்து இப்போதுதான் இருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள். வேட்டையாடிவிட்டு வந்திருக்கும் மன்னன் பசிக் களைப்பில் இருப்பதை அறிந்துகொண்டார் முனிவர்.

அதிதி உபச்சாரம் செய்ய விரும்பிய ஜமதக்னி முனிவர், தன்னிடம் இருந்த சுசீலை என்ற பெயருடைய காமதேனுவைப் பிரார்த்தித்து, அவளுடைய அருளால், அரசனையும் பரிவாரங்களையும் நன்கு உபசரித்து உணவளித்து திருப்தியடையச் செய்தார்.

கார்த்தவீர்யன் வியந்தான். காட்டில் வசிக்கும் முனிவர் ஒருவரால், தனது படை பரிவாரங்கள் முழுவதுக்கும் தங்கு தடையின்றி உணவளிக்க முடிகிறதென்றால், அவரிடம் ஏதோ அபூர்வ சக்தி இருக்கும் என யூகித்தான்.

இந்த யோசனையுடனேயே அரண்மனைக்குத் திரும்பினான். அதன்பிறகே, தெய்வீகப் பசுவான காமதேனு முனிவர் வசம் இருப்பது, உளவாளிகள் மூலம் தெரியவந்தது.

உடனே ஒரு காரியம் செய்தான். தன்னுடைய துர்மந்திரி ஒருவனை அழைத்தான்.

அவன் மூலம், 'உங்களுக்கு ஒரு கோடி பசுக்களைத் தானமாக அளிக்கிறேன். பதிலுக்கு தங்களிடம் இருக்கும் தெய்வப் பசுவை என்னிடம் ஒப்படைக்க வேண்டும்’ எனும் தகவலை முனிவருக்குச் சொல்லி அனுப்பினான்.

தான் அனுப்பிய தூதன் தெய்வப் பசுவோடு திரும்பி வருவான் எனக் காத்திருந்தான் கார்த்தவீர்யன்.

ஆனால், காலம் வேறொரு பதிலுடன் காத்திருந்தது அவனுக்காக!

- அவதாரம் தொடரும்...