Published:Updated:

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

Published:Updated:
வரம் கொடுக்கும் வழிபாடுகள்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ருத்ரா நட்சத்திரத்தை, ஆதிரை என்று சொல்வோம். திரு என்று இணைத்து திருவாதிரை எனப் பெருமைப்படுத்துவோம். 'ஆருத்ரா’ என்றால் 'ஈரமான’ என்று பொருள் உண்டு. அதாவது ஈரமான, கனிந்த மனம் படைத்த நட்சத்திரம் இது! இரக்க மனம் கொண்ட ருத்ரன், அதன் தேவதை. அவன், எளிதில் மகிழ்ச்சியை அடைவான். ஆசுதோஷி எனப் பெருமைப்படுத்துகிறது புராணம்! பக்தனிடம் மகிழ்வான்; துஷ்டனிடம் கோபத்தை உமிழ்வான் (ஆசுதோஷி, ஆசு கோபி).

ருத்ரன் என்றால் துயர் துடைப்பவன் என விளக்கம் தருகிறது புராணம். 'திருவாதிரையுடன் இணைந்த ருத்ரன், எங்களைக் காப்பாற்ற வேண்டும். எங்களுக்குப் பாவமன்னிப்பு அளிப்பதுடன் எங்கள் எதிரிகளையும் அழித்து, எங்களுக்கு அருள வேண்டும்’ எனும் வேண்டுகோள் வேதத்தில் உண்டு (ஆர்த்ரயா ருத்ர ப்ரதமான ஏதி).

ஒரு தாரையுடன் இணைந்த நட்சத்திரம், திருவாதிரை. மிதுன ராசியில் முழுமையாக இடம்பிடித்த நட்சத்திரம் இது. ராசிக்கு அதிபதி புதன் என்றாலும் அம்சகத்தில் குருவுடனும் சனியுடனும் இணைந்திருப்பதால், அறிவாற்றல், பொறுமை, பெருந்தன்மை, சிந்தனை வளம், உழைப்பில் உத்வேகம், பாகுபாடின்றி அனைவருடனும் இணைந்து செயல்படும் பாங்கு ஆகிய அனைத்தும் திருவாதிரையில் பிறந்தவரிடம் தென்படும் என வரையறுத்துள்ளது ஜோதிடம்.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

ராசி புருஷனின் கழுத்தில் இடம் பிடித்த நட்சத்திரம், இது. பிறரின் பெருமைகளை வெளியிடவும் சிறுமைகளை அடக்கவும் தெரிந்தவனாகத் திகழ்வர், இந்த நட்சத்திரக்காரர்கள். ஒலியானது, கழுத்தில் இருந்து வெளிவர வேண்டும். நல்லவற்றை வெளியிடும் அந்த கண்டம் (கழுத்து), தீயவற்றை அடக்கிக் கொள்ளும் எனும் அதன் தகுதி நட்சத்திரத்திலும் தென்படும்.

மனம், உதவி செய்ய விரும்பாது. தகுதியில், தன்னை மிகைப்படுத்திக் கொள்ளும். பிறரின் எதிர்ப்பை முறியடிக்கும். அடுத்தவரின் துன்பத்தில் இன்பம் காணும். தவறு செய்வதில் வெட்கமின்றி இருக்கும். தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதில், விழிப்புடன் செயல்படும் என திருவாதிரை நட்சத்திரக்காரர்களின் மனத்தை பிரணத் சம்ஹிதையில் வராஹமிஹிரர் தெரிவிக்கிறார்.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

சீண்டினால் கோபப்படுவார்கள். அது குரோதமாக மாறிச் செயல்பட்டு, துன்பப்பட வைப்பார்கள். அடுத்தவரின் பொருளை தனதாக்கிக் கொள்வார்கள். பிறன் மனை விழைவார்கள். தைரியமாகச் செயல்படுவார்கள். அவர்களின் சொற்கள், பிறரைப் புண்படுத்தும். ஆனால், ஒன்று மற்றும் நான்காம் பாதங்களுக்கு அம்சகத்தில் குருவின் சேர்க்கை இருப்பதால், பச்சாதாபப்பட்டு அடிபணிந்து, நன்மை செய்வார்கள் என்று பராசரர் தெரிவிக்கிறார்.

ஏழ்மை, எதிலும் நிறைவில்லாத தன்மை, நிலையில்லாத மனத்தால்... ஆசைப்பட்ட பொருட்களில் மாறி மாறி தாவிக் கொண்டிருக்கும் சபல புத்தி, வலுவான உடல் கட்டமைப்பு, தரம் தாழ்ந்த செயலில் ஈடுபடும் ஆர்வம் ஆகியவை திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களிடம் தென்படும் என்கிறது ஜாதக பாரிஜாதம்.  

முதல் பாதத்தில் பிறந்தவரிடம், சேமித்த பணம் தங்காது. வரவை கவனிக்காமல் செலவு செய்வார்கள். 2-ஆம் பாதத்தில் பிறந்தவர்கள், ஏழ்மை நிலையில் இருப்பார்கள். 3-வதில் நீண்ட ஆயுள் இருக்காது. 4-வதில், தவறான வழியில் பணம் ஈட்டுவான் என்கிறார் வராஹமிஹிரர்.

அதிக அகங்காரத்தால், பிறரைப் பகைத்துக் கொள்வர். உதவி செய்ய முற்படமாட்டார்கள். செய்நன்றி மறப்பார்கள். பொறாமைப்படுவர். நீண்ட ஆயுளைப் பெறுவார்கள் என மாறுபட்ட விளக்கம் ஜோதிடத்தில் உண்டு.

கடினமான நட்சத்திரம் இது! எதிரியை அழிப்பதற்கு முற்றுகை, அரசனைச் சிறைப்பிடித்தல், யுத்தம் செய்யக் கிளம்புதல், பிறரை ஏமாற்றுதல், வாதத்தில் வெற்றி பெறுதல், சூதாடுதல், ஆயுதம் ஏந்துதல், மூளையை மழுங்கச் செய்து, பிறரை வசப்படுத்துதல், மருந்து கொடுத்து மயக்குதல், ஏவலாளியை அடக்குதல், விலங்கினங்களைப் பிடித்து, தன் வசப்படுத்துதல், உளவை வரையறுத்தல், உளவாளிகளை அறிதல் ஆகியவற்றுக்கு திருவாதிரை நட்சத்திரத் தொடர்பு இருப்பின் சிறக் கும் என்கிறது பிரஹத் ஸம்ஹிதை.  

திருவாதிரை நட்சத்திரத்தின் ஆரம்ப தசை ராகு, 18 வருடங்கள் நீடித்திருக்கும். சுவாதி, சதயம் ஆகிய இரண்டு நட்சத்திரங்களுக்கும் இது பொருந்தும். முதல் நட்சத்திரம், 10-வது நட்சத்திரம், அதன் 10-வது நட்சத்திரம் ஜன்ம, அனுஜன்ம, த்ரி ஜன்ம என்ற பெயரில், மூன்றுக்கும் தொடர்பு சொல்லப்படுகிறது. தசையில், மூன்றிலும் ஒன்றாக இருப்பதற்கு அதன் தொடர்பு காரணமாக அமைந்திருக்கிறது. தொடர்பை வைத்து, ரஜ்ஜு எழுந்தது. த்ரிகோணம் என்ற நெருங்கிய ராசியின் தொடர்பு அதனை ஊர்ஜிதம் செய்கிறது.

முதல் ஒன்பது நட்சத்திரங்களில், 6-வது திருவாதிரை. இரண்டாவது, மூன்றாவது ஒன்பது நட்சத்திர வரிசையில் முறையே சுவாதியும் சதயமும் ஆறாவதாக இருக்கும். இந்த ஒற்றுமைதான், மூன்றுக்கும் ராகு தசையாக முடிவு எடுக்கக் காரணமாக அமைந்தது.

ஒட்டுதல் இல்லாத நட்சத்திரங்களை பொருத்தத்தில், வேதை என்பார்கள். வேதம் - இரண்டாகப் பிளந்தது என்கிற பொருளும் உண்டு. தொடர்பு அற்றது என்றும் சொல்லலாம். திருவாதிரை நட்சத்திரத்துக்கு திருவோணம் வேதை நட்சத்திரம். அதாவது, ஒட்டுதல் அற்றது. வேதை நட்சத்திரங்கள் இரண்டும் 6, 8 ராசிகளில் தென்படும். கேந்திரம், த்ரிகோணம் என்கிற ராசி சம்பந்தம் அதில் இருக்கும் நட்சத்திரத்துக்கு ஒட்டுதலை விளக்கும் ஷஷ்டாஷ்டகமான ராசியில், வேதை நட்சத்திரங்கள் தென்படும். 6, 8 ராசிகள் தொடர்பு அற்றவை என்பதால் ராசி பொருத்தமின்மையை விளக்கியது. ஷஷ்டாஷ்டக ராசியில் ஒன்றுக்கு ஒன்று வேதை நட்சத்திரங்கள் தென்படுவதால் அதுவும் தொடர்பு அற்ற நட்சத்திரமாகவே கருதப்பட்டது. வேதை நட்சத்திரம் என்ற ஒரு பொருத்தமின்மை, மற்ற பொருத்தங்கள் சேர்ந்திருந்தாலும் அதைச் செயல்படாமல் செய்துவிடும் என்ற ஜாதகா தேசத்தின் கூற்று, ஒட்ட வேண்டிய பொருத்தத்தில் இது அடங்காததால் அதை விலக்கச் சொல்லுகிறது ஜாதகப் பொருத்தம் (ஏகோஹிதோஷோ வேதாக்ய: குணான்ஹந்திபஹூநபி...).

தசாநாதன், ராகுவாக இருந்தாலும் புக்தியிலும் அந்தரத் திலும் ஒன்பது கிரகங்களுடைய பங்கு விகிதாசாரப்படி இருப்பதாலும் புக்தியிலும் அந்தரத்திலும் தனித்தனியே ராகுவின் இணைப்பு இருப்பதாலும் அந்தந்த கிரகங் களுடன் இணைந்த அத்தனை நட்சத்திரங்களும் பலனை இறுதி செய்து பங்கு வகிக்கிறது, என்று சொல்லலாம். தசாநாதனுக்கும் அந்தரநாதனுக்கும், புக்திநாதனுக்கும் அந்தரநாதனுக்கும் இருக்கும் தொடர்பு, அதன் தரம், வலிமை ஆகியவற்றையும் சேர்த்து தசாபலன் சொல்லவேண்டியிருப் பதால், அதில் அத்தனை நட்சத் திரங்களுக்கும் பங்கு இருப்பதால், நட்சத்திரத்தின் இயல்பு பலனின் மாறுதலை உண்டு பண்ணும்.  காலத்தின் வரைபடம் ஜாதகம். தேசத்துடன் இணைந்து தோன்றிய வன். அந்த வேளையில் இருக்கும் நட்சத்திரத்தின் வாயிலாக காலத்து டன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்கிறான். அவனுக்கு காலத் தின் நுழைவாயில், நட்சத்திரம். காலத்துடன் அவனை ஒட்ட வைத்தது நட்சத்திரம்.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

சந்திரன் வாயிலாக நட்சத்திரம் அறிமுகம் செய்யப்படுகிறது. தேசத் துடன் இணைந்த வேளை லக்னம். பூமி தன்னைத்தானே சுற்றி வரும் வேளை, லக்னம். ஆகையால் லக்னமும் சந்திரனும் (அதாவது நட்சத்திரமும்) அவன் பலனை இறுதியாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

லக்னராசி, சந்திரன் இருக்கும் ராசி, லக்னாதிபதி நின்ற ராசிநாதன், சந்திரன் நின்ற ராசிநாதன், லக்ன நவாம்சக ராசி, சந்திர நவாம்சக ராசி ஆகிய இந்த ஆறு ராசிகளைக் கவனித்துப் பலன் சொல்லவேண்டும் என்கிறார் வராஹ மிஹிரர் (ராசிக்ஷேத்ர கிருஹ...) இந்த ஆறும், தேசமும் நட்சத்திரமும் இணைந்த வேளையுடன் தொடர்பு உடைய காலத்தைக் குறிக்கும். காலம், நட்சத்திரம் வாயிலாக தேசத்தோடு ஒட்டித் தோன்றியவனை இணைத்துக் கொள் கிறது. 12 ராசிகளை வைத்து அவன் சந்திக்க வேண்டிய பலன்களை இறுதி செய்ய, இந்த ஆறு ராசிகளின் தொடர்பு தேவை என்கிறது ஜோதிடம். பொதுப்பலன், இவனைச் சார்ந்ததாக மாற்றுவது, அவனது இணைப்புக்கு ஆதாரமான நட்சத்திரம். இந்தப் பலனை அறிமுகம் செய்த வர்கள் ரிஷிகள். அதை வரையறுக்க சட்ட திட்டத்தைச் சுட்டிக்காட்டினார்கள்.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

பொதுவான பலன்களை ஒருவர் பிறந்த வேளையில்  தென்படும் ஆறு ராசிகளை இணைத்து, ஆராய்ந்து, அவர்களுக்கு உகந்த பலனை வெளியிடும். ஒரே லக்னத்தில் பிறந்தாலும் ஒரே நட்சத்திரத்தில் பிறந்தாலும் இரண்டு பேரின் பலன்களில் மாறுதல் தென்பட, அந்த ஆறு ராசிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அந்த ராசிகளில் தென்படும் நட்சத்திரங்களும் கிரகங்களும் அவன் பூர்வஜன்ம வினையை படம் போட்டுக்காட்டும்.

நட்சத்திரத்தின் அளவை வைத்து தசாவருஷங்களில் அளவு அமைந்திருக்கும். பிறக்கும்போது, திருவாதிரை இரண்டு பாதங்கள் முடிந்திருந்தால் தசையின் காலமும் பாதியாக மாறிவிடும். அப்போது, தசையின் பின்பகுதியில் இருக்கும் மிஞ்சிய புக்தி அந்தரநாதனுடன் இணைந்த ராகுவின் பலன் மட்டும் அனுபவத்திற்கும் வரும். தசாகால அளவை நிர்ணயிப்பது நட்சத்திரம் என்பதால் மாறுபட்ட பலன்கள், அந்த நட்சத்திரக்காரனில் தென்படும்.

'ரும் ருத்ராய நம:’ எனும் மந்திரத்தைச் சொல்லி ஈசனை வழிபட வேண்டும். காலையில் சூரிய உதயத்துக்கு முன்பு அதாவது ஐந்து மணி அளவில் எழுந்து, நீராடி, நெற்றித் திலகமிட்டு, பத்மாசனத்தில் அமர்ந்து, கண்களை மூடிக்கொண்டு ஈசனின் திருவுருவை நினைத்து, 108 தடவை இந்த மந்திரத்தை மனதுள் அசைபோடவேண்டும். எதிரே, ஈசனின் திருவுருவப் படத்தை வைத்துக் கொள்ளலாம். சகலத்தையும் மறந்து, ஈசனையே நினைந்து, அவனின் திருவுருவத்தை மனதில் பதித்து வேண்டுங்கள். இறைவனில் லயித்துவிட்டால், மன அழுக்கு சிறுகச்சிறுக அகலும். மனம் லயித்து வழிபடுகிற நேரமும் மெள்ள மெள்ள அதிகரிக்கும். பிறகு இந்தப் பழக்கம், நாம் ஈடுபடுகிற வேலைகளில் திறமையுடன் செயல்படப் பயன்படும்.

மிருத்யும் ஜயாய ருத்ராய அமிருதே சாய
சம்பவே. நீலகண்டாய சர்வாய
மஹா தேவாய தே நம:

எனும் செய்யுளைச் சொல்லி, பிரார்த்தியுங்கள். மந்திரம் தெரிந்தவர்கள் 'த்ரயம்பகம்’ எனும் மந்திரத்தைச் சொல்லி வழிபடலாம். இதனால் மனம் தெளிவு பெறும்; ஆசைகள் அடங்கும்; அமைதி பிறக்கும்!

- வழிபடுவோம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism