பிரீமியம் ஸ்டோரி
சக்தியர் சங்கமம்!

அஷ்டமங்கல தரிசனம்

சிவாகம சாஸ்திரம் குறிப்பிடும் எண்வகை மங்கலப் பொருள்கள்: சங்கு, தீபம், ஸ்வஸ்திகம், தர்ப்பணம் (கண்ணாடி), கொடி, மரச் சீப்பு, சக்தி, யானை ஆகியன. இவற்றை ஆலயங்களிலோ, வீட்டிலோ காண நேர்ந்தால் மகாலட்சுமியாக எண்ணி தரிசிக்க வேண்டும்.

அதேபோல், வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்திட வேண்டுமெனில் எண்வகை மங்கலப் பொருள்களைக் கண்ணாடிப் பெட்டியில் வைத்துத் தினமும் வணங்க வேண்டும் என்று அறிவுறுத்தும் ஞானநூல்கள், அந்தப் பொருள்களையும் பட்டியலிடுகின்றன. அவை: குங்குமச் சிமிழ், சந்தனம், தாம்பூலம், கொட்டைப்பாக்கு, சங்கு, கண்ணாடி, காமாட்சி விளக்கு, தாமரை. இவை வீட்டில் இருந்தாலும் பெண்களால் வழிபடப்பட்டாலும் அதனால் மகாலட்சுமி ஈர்க்கப்படுவாள் என்கிறது அறப்பளீச சதகம்.

பெளர்ணமி, வெள்ளிக்கிழமை, பூர நட்சத்திரம், அஷ்டமி திதி ஆகிய நாள்களில் அஷ்ட மங்கலங்களை வைத்து பூஜை செய்துவந்தால் இல்லத்தில் வறுமை நெருங்காது, தன வரவுக்குக் குறை இருக்காது.

- கே.ராஜலட்சுமி குமாரசிவம், சென்னை-44

சக்தியர் சங்கமம்!

பெளர்ணமியில் சிவ பூஜை

ஒவ்வொரு மாதமும் வரும் பெளர்ணமி தினத்தில் கீழ்க்காணும் பொருள்களைச் சமர்ப்பித்து சிவபூஜை செய்தால் அனைத்து விருப்பங்களையும் அடையலாம்.

சித்திரை: மரிக்கொழுந்து
வைகாசி: சந்தனம்

சக்தியர் சங்கமம்!


ஆனி: முக்கனிகள்
ஆடி: பால்
ஆவணி: நாட்டுச் சர்க்கரை
புரட்டாசி: அப்பம்
ஐப்பசி: அன்னம்
கார்த்திகை: தீப வரிசை
மார்கழி: நெய்
தை: கருப்பஞ்சாறு
மாசி: நெய்யில் நனைத்த கம்பளம்
பங்குனி: தயிர்

அதேபோல் சிவாலயத்தை வலம்வரும்போது நந்தியையும் பலிபீடத்தையும் சேர்த்தே பிரதட்சிணம் செய்ய வேண்டும். அதற்குரிய பலன்கள் என்னென்ன என்று தெரிந்துகொள்வோமா?

மும்முறை வலம்வந்தால் நினைத்தது நடக்கும்.

சக்தியர் சங்கமம்!

5 முறை வலம்வந்தால்- வெற்றி கிடைக்கும்.
7 முறை வலம்வந்தால் - நல்ல குணம் உண்டாகும்.
9 முறை வலம்வந்தால் - குழந்தை பாக்கியம் உண்டாகும்.
11 முறை வலம்வந்தால் - நீண்ட ஆயுள் கிட்டும்.
13 முறை வலம்வந்தால் - வேண்டுதல் விரைவில் நிறைவேறும்.
15 முறை வலம்வந்தால் - செல்வம் ஸித்திக்கும்; வறுமை விலகும்.
17 முறை வலம்வந்தால் - செல்வம் பெருகும்.
108 முறை வலம்வந்தால் - அஸ்வமேத யாகம் செய்த பலன்.
1008 முறை வலம்வந்தால் - ஒரு வருட தீட்சையாக பலன் கிடைக்கும்.

- கவிதா சரவணன், ஸ்ரீரங்கம்

தசா காலங்களும் தெய்வங்களும்!

சக்தியர் சங்கமம்!


கர்ம வினைகளுக்கு ஏற்ப நமக்கு விதிக்கப்பட்ட பலாபலன்களை நடைமுறைப்படுத்துகிறார்கள் நவகிரக மூர்த்திகள். அந்தந்த கிரகங்களுக்கு உரிய தசா காலத்தில் குறிப்பிட்ட தெய்வங்களை வழிபடுவதால் கெடுபலன்கள் குறைந்து நற்பலன்கள் அதிகரிக்கும் என்பார்கள் பெரியோர்கள். அவ்வகையில் எந்தெந்த தசா காலத்தில் எந்தெந்த தெய்வத்தை வழிபடலாம் என்று அறிவோமா?

கேது தசை -  விநாயகர்
ராகு தசை - சிவபெருமான்
சனி தசை - திருமால்
சுக்கிர தசை - அம்பாள்
குரு தசை - குரு பகவான்
புதன் தசை - விநாயகர்
செவ்வாய் தசை - முருகன்
சந்திர தசை - அம்பாள், சிவனார்
சூரிய தசை - ஆஞ்சநேயர்

- சண்முகத்தாய் செல்லையா, சாத்தூர்

சக்தியர் சங்கமம்!

சிவாலய பரிவாரங்கள்

நடைமுறையில் அஷ்ட பரிவாரங்கள் எனப்படும் எட்டு பரிவார தெய்வங்கள் சிவாலயங்களில் உண்டு என்பதை அறிவோம். சமீபத்தில்  பழைய புத்தகம் ஒன்று கிடைத்தது. அதில் சிவாலயத்தில் இடம்பெற வேண்டிய 22 வகை பரிவார தெய்வங்களைப் பற்றிய தகவல் இடம் பெற்றிருந்தது. அதுகுறித்து உங்களோடும் பகிர்ந்துகொள்கிறேன்.

கிராதார்ச்சுனர், விருஷபாருடர், சக்ரதான மூர்த்தி, காமாரி, கல்யாண சுந்தரர், பிட்சாடனர், கங்காளர், கஜசம்ஹாரர், விஷ்ணு பிரசாதர், சந்திர சேகரர், உமாசகித சதாசிவர், ஹரிஹரர், அர்த்தநாரீசர், சோமாஸ்கந்தர், விஷபாகரணர், திரிபுர சம்ஹாரர், கால சம்ஹாரர், நடராஜர், கங்காதரர், வைவாகிகர், சரபர், ஏகபாதர். இந்தத் தெய்வ மூர்த்தங்களில் பல திருவடிவங்களை நாம் அறிவோம் என்றாலும் வைவாகிகர், விஷபாகரணர், ஏகபாதர், காமாரி ஆகிய தெய்வ மூர்த்தங்கள் குறித்த விவரம் தெரியவில்லை. இதுகுறித்து விவரம் அறிந்த அன்பர்கள் பகிர்ந்துகொண்டால் பயனுள்ளதாக இருக்கும்.

- பவானி சுந்தரம், திருச்சி-2


 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு