Published:Updated:

புதிய புராணம்! - மகா தேவ ரகசியம்

புதிய புராணம்! - மகா தேவ ரகசியம்
பிரீமியம் ஸ்டோரி
புதிய புராணம்! - மகா தேவ ரகசியம்

ஷங்கர்பாபு

புதிய புராணம்! - மகா தேவ ரகசியம்

ஷங்கர்பாபு

Published:Updated:
புதிய புராணம்! - மகா தேவ ரகசியம்
பிரீமியம் ஸ்டோரி
புதிய புராணம்! - மகா தேவ ரகசியம்

நான் கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்தபோது, ஒரு குரல் காதில் விழுந்தது. `அவன்தான் என்னோட எதிரி. அவன் செய்த கொடுமையை மறக்க முடியுமா?அவன் நிம்மதியைக் கெடுக்க நான் எதுவும் செய்வேன்.அப்புறம், இந்த உயிர் இருந்து என்ன பிரயோசனம்?’

குரல்வந்த திசையை நோக்கினேன்.  எண்பத்தைந்து வயது முதியவர் ஆவேசத்துடன் முதுமையால் நடுங்கும் குரலுடன் பற்பல சப்தங் களை வெளிப்படுத்திக்கொண்டிருந்தார்.

நான் அசந்து போகவில்லை. காரணம், இந்த ரகத்தில் இன்னொரு பழிவாங்கும் குரலைக் கேட்டிருக்கிறேன்.

`அவ என்னோட கையை உடைச்சுட்டா...விளையாடிட்டிருக்கும்போது, தள்ளிவிட்டதுல என் கையே போச்சு.'

இந்தக் குரலுக்கு வயது மூன்று. மழலைக்குரலில் கடவுளிடம் தன் எதிரியைத் தண்டிக்குமாறு கேட்டுக்கொண்டது.

இதிலுள்ள அபத்தங்களை,  முதிர்ச்சியின்மையை விடுங்கள். தெரிந்துகொள்ள வேண்டியது... மனிதன் தன் நிம்மதியை, மகிழ்ச்சியை அழித்தவர் களை மன்னிப்பதே இல்லை. அப்படியே மன்னித் தாலும், மறப்பதே இல்லை... எத்தனை வயதானா லும், ஏழை பணக்காரன் என எந்தச் சூழலில் இருந்தாலும்!

புதிய புராணம்! - மகா தேவ ரகசியம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அழித்தலுக்குக் காரணமானவர்களை நாம் உறவு கொண்டாட நெருங்கவும் மாட்டோம்.

ஆனால், அழித்தல் தொழிலுக்குரியவராகச் சொல்லப்படும் சிவபெருமானை நாம் கொண் டாடிக் கொண்டிருக்கிறோம். சொல்லப் போனால், படைக்கும் கடவுளான பிரம்மாவுக்குக்கூட நாட்டில் இந்த அளவு ஆலயங்கள் இல்லை.

ஒருபுறம், நாம் நமது அமைதியை அழித்தவர் களை மன்னிப்பதில்லை; மறப்பதில்லை.இன்னொருபுறம் அழித்தலைத் தொழிலாகக் கொண்டுள்ள கடவுளை நாம் போற்றிக் கொண்டிருக்கிறோம்.

எங்காவது அழித்தவர்கள் கொண்டாடப் படுவார்களா? என்ன ஒரு முரண்!

எனில், இந்த அழித்தல் என்ற வார்த்தையை நாம்தான் தவறாகப் புரிந்துகொண்டிருக்க வேண் டும். உண்மையும் அதுதான்.

`அழித்தல்' என்பதை நாம் நமது மொழியின் நேரடி அர்த்தபடி தவறாகப் புரிந்துகொண்டிருக் கிறோம். மேலும் மனித மனதின் குறுகிய புரிதல் படியும் ‘அழித்தல்’ என்றால், ஒருவர் படைத்த ஒன்றை, ஒருவரால் காக்கப்படும் ஒன்றை, சிவபெருமான் அழித்துக்கொண்டிருப்பதாகவும் புரிந்து கொண்டிருக்கிறோம்.

ஆன்மிக நோக்கில் ‘அழித்தல்’ என்றால் என்ன?

இந்தப் பூமியில் வேகமாக ஓடும் உயிரினம், மெதுவாக நகரும் உயிரினம், வேகமாகப் பறக்கும் உயிரினம், நீந்தும் உயிரினம், அதிக எடையுள்ள உயிரினம் என்று பல உயிரினங்களை அறிந்து வைத்திருக்கிறோம். ஆனால், அதிகம் அச்சப்படும் உயிரினம், பயந்து பயந்தே சாகும் உயிரினம் எது என்பதை அறிவீர்களா?

தெரிந்துகொள்ளுங்கள்... மனிதன்தான் அந்த உயிரினம்! ஆச்சர்யம் எதுவுமில்லை. மனிதன் அப்படித்தான் இருப்பான்; அப்படித்தான் இருக்க முடியும். காரணம், மனிதனுக்குக் கற்பனைத்திறன் இருக்கிறது. இந்தத் திறன்தான் தன்னைவிட வலிமை படைத்த உயிரினங்களை அடக்கியாளக் கற்றுக்கொடுத்தது; உலகை ஆளக் கற்றுக் கொடுத்தது. அதேநேரம், இதே கற்பனை சக்திதான் அவனை இன்றுவரை கவலையும் அச்சமும் கொள்ள வைத்திருக்கிறது.

‘நாளை எப்படி இருக்குமோ, எதிர்காலம் எப்படி இருக்குமோ, நாம் நினைப்பதுபோல் நடக்குமோ, நடக்காமல் போகுமோ’ என்றெல்லாம் சிந்திப்பதுடன் ‘மரணம் எப்போது வரும், மரணத்துக்குப் பிறகு என்ன நடக்கும், என் உடல் போய்விட்டால் அப்புறம் ‘நான்’ என்ன ஆவேன்?’ என்றெல்லாம் பல பயங்கள் மனிதனுக்கு.

மனிதனுக்கு எவ்வளவு ஆசைகள் இருக்கிறதோ, அந்த அளவு அச்சங்களும் இருக்கும். இருந்தே தீரும். சிவபெருமான் உங்கள் அச்சங்களை அழிக்கிறார்; பயங்களைப் போக்குகிறார். இதனால் தான் திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளின் தொழில் ‘அழித்தல்’ என்று குறிப்பிடப்படுகிறது. 

புதிய புராணம்! - மகா தேவ ரகசியம்

திரிபுரம் என்பது ஒவ்வொருவர் மனதிலும் இருக்கும் கடந்த, நிகழ், எதிர்காலங்கள் குறித்த அச்சங்களின் குறியீடாகும். அவை அழிந்ததென் றால் உங்களுக்குக் கால பயம் போய் விடுகிறது. அதுவே அழியாத ஆனந்த நிலை.  ஆக, அச்சத்தை அழிப்பதே சிவபெருமானின் வேலை. அச்சமற்ற மனதின் ஆனந்தத்தை அனைவரையும் பெற செய்வதே அவரது பணி. அந்த விதத்தில் அழித்தலே அவரது தொழில்.

அதனால்தான் சிவ + ஆனந்தம் = சிவானந்த மாகவும்,  சத் + சித் ஆனந்தம் = சச்சிதானந்தமாகவும் அவர் அறியப்படுகிறார். அவரது நடனமும் அளவற்ற ஆனந்தத்தின் குறியீடுதான்.

அதேபோல் சிவபெருமான் பல கோயில்களில் சுயம்பு வடிவில் இருப்பதாக நாம் அறிந்திருக்கிறோம். சுயம்பு என்றால், தன்னிச்சையாக, இயல்பாக உருவாவது என்று பொருள். ஆனந்தம் என்பது உங்களிடம் உங்களாலேயே ஏற்படுத்தப்பட வேண்டும். அந்த ஆனந்தம் மட்டுமே உங்களிடம் நிலையானதாக இருக்கும் என்பதை உணர்த்தவே பல இடங்களில் சுயம்பு லிங்கமாக அருள்கிறார் ஈஸ்வரன்.

மேலும்,  ‘லிங்கம்’  என்பது ஆனந்தத்தை, கட்டற்ற மகிழ்ச்சியை உணர்த்துவதாகும். இந்த நோக்கில் சிவன் உங்களை அழிக்கவில்லை.உங்களது அச்சத்தை அகற்றி உங்களை மாற்றியமைக்கிறார்.

சிவபெருமானின் இந்தக் கருணையை, அனைத்து உயிர்களும் ஏதோ ஒருவிதத்தில் உணர்ந்திருக்க வேண்டும். அதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. நமது நிரந்தரப் பெற்றோராகிய கடவுளுக்கும், அவரின் குழந்தைகளுக்கான நமக்கும் கண்ணுக்குத் தெரியாத இணைப்பு இருக்கத்தானே செய்யும்? நம்மைப் பூமியில் அலையவிட்டாலும், பெற்றோராக அவர் நம்மைக் கண்காணித்துக்கொண்டுதானே இருப்பார்?

அந்த பந்தத்தை  உயிர்கள்  உணர்ந்திருக்கின்றன.சிவன் சுடுகாட்டில் இருப்பவராய் அறியப் பட்டாலும், கோபக்கார ருத்ரராய் அறியப் பட்டாலும், கபாலத்தை ஏந்தியவராக அறியப்பட் டாலும், பெரும் ஊழியை நடத்தும் ஊர்த்துவராக அறியப்பட்டாலும்... அவர், மனதின் அச்சத்தை அழித்து, நம்மை மாற்றியமைத்து ஆனந்த நிலைக்குக் கொண்டுசெல்வதை ஒவ்வோர் மனிதனும் ஏதோ ஒரு புள்ளியில் அறிந்து வைத்திருக்கிறான்.

அதனால்தான், தனது நிம்மதியை அழித்த சக மனிதனை மன்னிக்காத மனிதன், ஆனந்தமாக நடனம் ஆடும் நடராஜரை ஏற்றுக்கொள்கிறான்; போற்றுகின்றான்; தன்னை ஒப்புவிக்கிறான். இதுவே மகா தேவனின் ரகசியம்.  

இதையே மனிதர்களிடமும் பொருத்திப் பாருங்கள். உங்களது நிம்மதியை, மகிழ்ச்சியை அழித்ததாக நீங்கள் நம்பிக்கொண்டிருப்பவர்களே நீங்கள் வாழ்வில் உயரவும், அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லவும் உதவியிருப்பார்கள். 

இதை நீங்கள் உணர்ந்தால், அதுவே உங்களின் வெற்றியின் ரகசியம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism