Published:Updated:

கோயில் நகரமாம் காஞ்சிபுரத்தில் உள்ள 108 அபூர்வ சிவத்தலங்களின் தரிசனம்! #VikatanInteractive

கோயில் நகரமாம் காஞ்சிபுரத்தில் உள்ள 108 அபூர்வ சிவத்தலங்களின் தரிசனம்! #VikatanInteractive

காஞ்சிபுரத்தை கோயில் நகரமாக்கிய 108 சிவத்தலங்களின் தரிசனம்! #VikatanInteractive...

கோயில் நகரமாம் காஞ்சிபுரத்தில் உள்ள 108 அபூர்வ சிவத்தலங்களின் தரிசனம்! #VikatanInteractive

காஞ்சிபுரத்தை கோயில் நகரமாக்கிய 108 சிவத்தலங்களின் தரிசனம்! #VikatanInteractive...

Published:Updated:
கோயில் நகரமாம் காஞ்சிபுரத்தில் உள்ள 108 அபூர்வ சிவத்தலங்களின் தரிசனம்! #VikatanInteractive

`நகரேஷு காஞ்சி' என்பது கவி காளிதாசனின் வாக்கு. `முக்தி தரும் நகரேழில் முக்கியமாம் காஞ்சி' என்பது ஶ்ரீவேதாந்த தேசிகரின் புகழுரை. தொன்று தொட்டு இன்று வரை கல்வி, கலை, புராணம், வரலாறு, ஆன்மிகம் என்று எல்லாத் துறைகளிலும் புகழ் குன்றாமல் சிறப்புற்றுத் திகழும் நகரம் காஞ்சி.

`கல்வியில் சிறந்த நகரம்' என்றும் காஞ்சிக்குச் சிறப்புண்டு. நாளந்தா பல்கலைக்கழகத்துக்கு இணையான பல காஞ்சிக் கடிகைகள் (கலாசாலைகள்) இந்த நகரத்தில் சிறப்புற்று விளங்கியதை வரலாறு விவரித்திருக்கிறது. நாளந்தா பல்கலைக்கழகத் தலைவரான தர்மபாலர், பௌத்த மதத்தில் விஞ்ஞானப் பிரிவை ஏற்படுத்திய திக்நாகர், சீனர்கள் வணங்கும் போதிதர்மர் ஆகியோர் காஞ்சிக் கடிகைகளில் பயின்றவர்கள்தாம்.

காஞ்சியின் மகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்லாக இருப்பது, `கோயில்களின் நகரம்' என்ற பெருமைதான். காணும் திசையெங்கும் விண்முட்டும் கோபுரங்கள். எந்தத் தெருவில் நின்றாலும் அங்கிருந்து ஒரு மந்திர ஒலி நம் மனதை மயக்கும். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காஞ்சிபுரம் என்றால் ஏகாம்பரநாதர் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், காமாட்சி அம்மன் கோயில், கைலாசநாதர் கோயில்கள்தாம் நம் நினைவுக்கு வரும். ஆனால், இந்தக் கோயில் நகரம் 108 சிவாலயங்களை தன்னுள்ளே அடக்கி வைத்திருப்பது பலர் அறியாதது. காஞ்சிபுரத்தைச் சூழ்ந்து இந்த 108 சிவாலயங்கள் அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு சிவாலயத்துக்கும் ஒரு புராணச் சிறப்பு, வரலாற்றுப் பெருமை உண்டு. 

திருமால், `அனந்த பத்மநாமம்' என்ற பெயரில் சிவபெருமானை வணங்கித் தனது சாபம் நீங்கப்பெற்ற தலம், லிங்கையப்பர் தெருவில் வீடுகளுக்கு மத்தியில் அமைந்திருக்கிறது. அடர்ந்து காணப்படும் கான்கிரீட் வீடுகளைக் கடந்து சென்றால் மட்டுமே அனந்த பத்மநாம ஈஸ்வரரைத் தரிசிக்க முடியும். 

அரிசி ஆலைக்குக் குழி தோண்டும்போது கிடைத்த 16 பட்டைகளைக் கொண்ட பழைமையான சிவலிங்கம் இப்போது சுக்லேசுவரராக அருள் புரிகிறார். கிருஷ்ணர் வழிபட்ட கிருஷ்ணேஸ்வரர்; காமன் வழிபட்ட காமேஸ்வரர்; பிரம்மா மற்றும் விஷ்ணு ஆகியோரின் கர்வத்தை அடக்கிய மகாலிங்கேஸ்வரர் என்று சிறப்பு மிக்க பல சிவத்தலங்கள் நம் பார்வை படாமல் காங்கிரீட் காடுகளுக்கு மத்தியில் மறைந்து கிடக்கின்றன. 

காஞ்சியில் இருக்கும் 108 சிவாலயங்களில் பெரும்பாலானவற்றை மகாசிவராத்திரி அன்று மட்டுமே அடையாளம் காணமுடியும். நெருக்கடியான, அடையாளம் கண்டறிய முடியாத இடங்களில் இந்தக் கோயில்கள் இருக்கின்றன. சில கோயில்கள் மடங்களின் நிர்வாகத்திலும் சில கோயில்கள் தனி நபர்களின் நிர்வாகத்திலும் இருக்கின்றன. 

காஞ்சி மா நகரின் அடித்தளங்களாக இருக்கும் இந்த 108 திருச் சிவத் தலங்களையும் தரிசிப்பவர்கள் நிச்சயம், அழுத்தமான ஆன்மிக அனுபவத்தை உணர்வார்கள். விகடன் வாசகர்களுக்காக 108 திருத்தலங்களின் தரிசனம், இங்கே `இன்ட்ராக்டிவ்' வடிவில்! 

கீழே இருக்கும் படத்தில், `ஆலயத்துக்குள் செல்வோம்' என்ற பகுதிக்குக் கீழே இருக்கும் அம்புக்குறியை க்ளிக் செய்தால் ஒவ்வோர் ஆலயத்தின் தரிசனமும் கிடைக்கும். மேலும், அந்தக் கோயில் எந்தப் பகுதியில் இருக்கிறது என்பதையும் அறிந்துகொள்ளலாம். `வரலாறு'  என்ற இடத்தை `கிளிக்' செய்தால் கோயிலின் வரலாறும் விரியும். 

ஆலயங்களைத் தரிசிப்பதோடு உங்கள் கருத்தையும் பதிவு செய்யுங்கள்! 

 
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism