Published:Updated:

கனவில் வந்தார் கோயில் கொண்டார்! - தென் சபரி தரிசனம்

கனவில் வந்தார் கோயில் கொண்டார்! - தென் சபரி தரிசனம்
பிரீமியம் ஸ்டோரி
கனவில் வந்தார் கோயில் கொண்டார்! - தென் சபரி தரிசனம்

தெ.பாலமுருகன் - படம்: எஸ்.சாய்தர்மராஜ்

கனவில் வந்தார் கோயில் கொண்டார்! - தென் சபரி தரிசனம்

தெ.பாலமுருகன் - படம்: எஸ்.சாய்தர்மராஜ்

Published:Updated:
கனவில் வந்தார் கோயில் கொண்டார்! - தென் சபரி தரிசனம்
பிரீமியம் ஸ்டோரி
கனவில் வந்தார் கோயில் கொண்டார்! - தென் சபரி தரிசனம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலூகா, ஊனையூர் பஞ்சாயத்தில் கொசப்பட்டி கிராமத்தில் அமைந்திருக்கிறது, தென் சபரி ஐயப்பன் கோயில். சபரிமலைக்கு நடந்துசெல்ல இயலாத நிலையில் இருக்கும் பக்தர்கள், இந்தக் கோயிலுக்கு இருமுடி கட்டிவந்து ஐயன் ஐயப்பனைத் தரிசித்து வழிபட்டுச் செல்கிறார்கள்.

கனவில் வந்தார் கோயில் கொண்டார்! - தென் சபரி தரிசனம்

கொசப்பட்டி கிராமத்திலிருந்து குருசாமியான சூரக்குடி சிங்காரம் எனும் அன்பரின் தலைமை யில் சபரி யாத்திரை செல்வது வழக்கம்.

1979-ம் ஆண்டில் ஒரு சம்பவம். யாத்திரைக்குக் கிளம்புவதற்கு முன்னதாக ஒருநாள் சக்தி பூஜை நடத்தினார்கள். அன்றிரவு பக்தர் ஒருவருக்குக் கனவு வந்தது. அதில், சிறுவன் ஒருவனின் கையைப் பிடித்து அழைத்து வருகிறார் பெரியவர் ஒருவர். நெற்றி நிறைய விபூதி பூசிக்கொண்டும், கழுத்தில் ருத்திராட்ச மாலையுடனும் பெரியவர் காட்சி தர, சிறுவனோ  பொன்வண்ணமாக ஜொலித்தான். பெரியவர் அந்தச் சிறுவனைப் பக்தரிடம் ஒப்படைத்து விட்டு மறைந்துபோனார்.

விழித்தெழுந்ததும் கனவு பற்றி குழுவினரிட மும் குருநாதரிடமும் தெரிவித்தார் பக்தர். அனைவரும் சிலிர்த்துப்போனார்கள். மறுநாள் பூஜையின்போது அருள் வந்து ஆடினார் பூசாரி. ‘‘கனவில் சிறுவனாக வந்தது நான்தான். பெரிய வர் கோலத்தில் என் அண்ணனே (முருகப் பெருமான்) இங்கு அழைத்துவந்தார். இனி, இங்கே கோயில் கொள்ளப்போகிறேன்’’ என்று அருள்வாக்குச் சொன்னார் அவர். ஆம்! ஐயன் ஐயப்பனே அவர் மூலம் அருள்வாக்கு தந்தான்.

கனவில் வந்தார் கோயில் கொண்டார்! - தென் சபரி தரிசனம்

அப்போது, ‘‘நீர் காட்டில் வசிக்கும் தெய்வமாச்சே’’ என்று குருசாமி முதலானோர் தயக்கத்தை வெளிப்படுத்தினார்கள். அவர்க ளிடம், ‘‘கவலைப்படாதீர்கள். உங்கள் அனை வரையும் நான் பாதுகாப்பேன். சபரி பீடத்தில் உள்ளது போன்று  இங்கும் அருள்பாலிப்பேன்’’ என்று ஐயனிடம் இருந்து சத்தியவாக்குக் கிடைத்தது. பிறகென்ன... மிக அற்புதமாக எழும்பியது தென் சபரி ஐயப்பன் கோயில். 1995-ம் ஆண்டு திருப்பணிகள் முடிந்து கும்பாபி ஷேகம் நடைபெற்றது. அன்று முதல், தன்னைத் தேடிவரும் பக்தர்களின் குறைகளை எல்லாம் களைந்து, அவர்கள் வேண்டும் வரத்தை  தந்து அருள் பாலிக்கிறார், ஐயன் ஐயப்பன்.

கோயிலுக்குக் கீழே மஞ்சள்மாதா, கருப்பச் சாமி போன்ற காவல் தெய்வங்களும் காட்சி தருகிறார்கள். வருடம்தோறும் கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அன்று விளக்கு பூஜையும், கடைசி ஞாயிறன்று லட்சார்ச்சனையும் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன.

அதேபோல், மார்கழி 11-ம் தேதி மண்டல பூஜை, அன்னதானத்தோடு நடைபெறுகிறது. தை மாதம் முதல் தேதி, சபரிமலையில் நிகழும் மகரஜோதி தரிசனப் பேறு இங்கு வரும் பக்தர்களுக்கும் கிடைக்கும் வகையில் இங்கேயும் அதேநாள் மகரஜோதி வைபவம் நடைபெறுகிறது.  மேலும், பங்குனி மாதம் 21-ம் தேதி ஐயப்பனுக்கு உற்சவம், படி பூஜை, சுவாமியின் திருப்பவனி ஆகியன சிறப்புற நடைபெறும்.

சித்திரை 1-ம் தேதி நடைபெறும் ஆராட்டு விழா இங்கே விசேஷம்.

நீங்களும் ஒருமுறை தென் சபரி ஐயப்பனைத் தரிசித்து மனதார வழிபட்டு, உங்கள் சிந்தை மகிழ வரம்பெற்று வாருங்கள்.