Published:Updated:

புதிய புராணம்! - குற்றமும் தண்டனையும்..!

புதிய புராணம்! - குற்றமும் தண்டனையும்..!
பிரீமியம் ஸ்டோரி
புதிய புராணம்! - குற்றமும் தண்டனையும்..!

ஷங்கர்பாபு - ஓவியங்கள்: ரவிபெளட்

புதிய புராணம்! - குற்றமும் தண்டனையும்..!

ஷங்கர்பாபு - ஓவியங்கள்: ரவிபெளட்

Published:Updated:
புதிய புராணம்! - குற்றமும் தண்டனையும்..!
பிரீமியம் ஸ்டோரி
புதிய புராணம்! - குற்றமும் தண்டனையும்..!

டிப்படைச் சட்டங்கள் குறித்த பயிற்சி வகுப்புக்குச் சென்றிருந்தேன். வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருந்த சட்ட வல்லுநர் ஒரு கேள்வியைக் கேட்டார். ‘திருவிளையாடல் புராணத்தில் சிவபெருமான் நக்கீரருக்கு தண்டனை வழங்கியது சரியா, தவறா?’ என்பதுதான் அந்தக் கேள்வி.

இது எல்லோருக்கும் தெரிந்த கதைதான்.

சட்ட வல்லுநர் கேட்ட கேள்விக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல விவாதங்கள் எழுந்தன. இறுதியில் ‘நக்கீரர் புரிந்த வாதத்தில் அடிப்படைத் தவறு இருக்கிறது. அதையொட்டியே தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது’ என்றார்.

புதிய புராணம்! - குற்றமும் தண்டனையும்..!

அதைப் பற்றி அறிவதற்கு முன்பு இன்னொரு வழக்கைப் பார்த்துவிடலாம்.

ஓர் அரசர் தினந்தோறும் ஏழைகளுக்கு உணவு அளிப்பது வழக்கம். ஒருநாள் அந்த அன்னதானத்தில் உணவு அருந்திய ஒருவன் இறந்து போனான். அந்தச் சாப்பாட்டில் விஷம் கலந்திருந்தது. சாப்பிட வந்தவனுக்கு ஒருவகையில் இது அநீதிதான். அவனுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும். சாப்பாட்டில் விஷம் கலந்ததற்கு யாராவது ஒருவர் பொறுப்பேற்கத்தான் செய்ய வேண்டும். பாவ, புண்ணியக் கணக்குகளைக் கவனித்துவரும் சித்திரகுப்தன், இந்த நிகழ்ச்சியை ஆராய்ந்து பார்த்தார்.

உணவில் விஷம் எப்படி கலந்தது?

வானத்தில் ஒரு கழுகு பறந்துகொண்டிருந்தது. அதன் வாயில் இறந்துவிட்ட பாம்பு ஒன்று இருந்தது. அதன் வாயிலிருந்து சிந்திய விஷம், சாப்பிட்டவனின் இலையில் இருந்த உணவில் கலந்துவிட்டது. அதை உண்ட ஏழை இறந்துபோனான்.

கழுகு, அதன் உணவான பாம்பை எடுத்துச் செல்கிறது. எனவே, கழுகின் மீது குற்றம் இல்லை. அதேநேரம் விஷம் சிந்தக் காரணமான பாம்பையும் குற்றம் சொல்ல முடியாது. காரணம், பாம்பு இறந்த நிலையில் அதன் வாயில் இருந்து விஷம் சிந்தியிருக்கிறது. தனது உணர்வற்ற நிலையில் செய்யப்படும் செயல்களுக்குப் பாம்பு பொறுப்பேற்க முடியாது. மேலும், கீழே உணவு இருப்பது கழுகு, பாம்பு இரண்டுக்குமே தெரியாது.

அரசனையும் இதில் குற்றம் சொல்ல முடியாது. இன்னும் சொல்லப் போனால் இறந்தவனுக்கும் அவனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மேலும், அவன் அளித்த உணவிலும் ஏழைகள் பசியாற வேண்டும் என்பதைத் தவிர வேறு உள்நோக்கம் எதுவும் இல்லை.

ஆனாலும், இந்தச் செயலுக்கான பாவக் கணக்கை ஒருவர்மீது சுமத்தித்தான் ஆக வேண்டும். அவருடைய புண்ணியத்தை இறந்தவருக்கு அளித்து நியாயம் வழங்கியே ஆக வேண்டும்.

என்ன செய்வது என்று யோசித்த சித்திரகுப்தன், மீண்டும் அந்த இடத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார். அங்கே மீண்டும் ஏழைகளுக்கு உணவு வழங்கப்பட்டுக்கொண்டிருந்தது. சாப்பிடச் சென்ற ஒருவருக்கு அந்த இடத்துக்கான வழி தெரியவில்லை.

எனவே, அங்கிருந்த ஒரு முதியவரிடம் சென்று வழி கேட்டார். அதற்கு அந்த முதியவர், ‘அந்த அரசன் கொடுக்கும் உணவில் விஷம் கொடுத்துக் கொல்லக் கூடியவன்’ என்றார்.

அடுத்த கணம், சித்திரகுப்தன் அந்த  முதியவர் மேல் பாவக்கணக்கை எழுதினார்.

இதில் ஒரு தவறுக்கு யார்மீது பொறுப்பைச் சுமத்துவது என்பதை பல கோணங்களில் ஆராய்ந்து தீர்ப்பு எழுதும் சித்திரகுப்தனின் பணியை விடுங்கள். என்ன காரணத்துக்காக அந்த முதியவர் மீது பழியும் பாவமும் சுமத்தப் பட் டிருக்கிறது என்பதைப் பாருங்கள்.

அடுத்தவரின் செயல்களுக்குக் களங்கம் கற்பித்தல், அவதூறு பேசுதல், தனக்குத் தெரியாத ஒன்றைத் தெரிந்ததுபோல் சொல்லுதல், அதையும் தீய எண்ணத்துடன் சொல்லுதல் மகா பாவம்.

‘மனிதர்கள் செய்கின்ற பாவங்களை எத்தனை வகைப்படுத்தலாம்' என்று பார்வதி தேவி கேட்டதற்கு, ‘உடலினால் செய்கின்ற பாவம், சிந்தையினால் செய்யக்கூடிய பாவம், சொற்களால் செய்கின்ற பாவம் என்று பாவங்களை மூவகைப் படுத்தலாம்’ என்று ஈசன் பதில் பகர்ந்தாராம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புதிய புராணம்! - குற்றமும் தண்டனையும்..!

இதில் முதல் இரண்டு பாவங்களையும் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. சொற்களால் செய்கின்ற பாவத்தை  - பொய் பேசக்கூடாது,  கடுஞ் சொற் களால்  மற்றவர் மனதைப் புண்படுத்தக் கூடாது என்ற ரீதியில்தான் புரிந்துகொள்கிறோமே தவிர, தெரியாததைத் தெரிந்ததுபோல் சொல்லி, அதில் பெருமையடைவதும் பாவம்தான் என்பதை எத்தனை பேர் புரிந்துகொள்கிறோம்?

நக்கீரரின் பிரச்னைக்கு வருவோம்.

‘பரவி நீ வழிபட்டேத்தும் பரஞ்சுடர் திருக்காளத்தி அரவுநீர்ச் சடையார் பாகத்தமர்ந்த ஞானப்பூங்கோதை இரவினீர்ங் குழலும் அற்றோ? என, அஃதும் அற்றேயெண்ணி வெருவிலான் சலமே முற்றச் சாதித்தான் விளைவு நோக்கான்’ என்கிறது திருவிளையாடற் புராணம்.

தருமிக்கு அளித்த பாடலின் சொற்குற்றம், பொருட்குற்றம் ஒருபக்கம் இருக்கட்டும். இறைவன், ‘தேவலோக மகளிரின் கூந்தலுக்கும் மணம் கிடையாதா?’ என்று கேட்டபோது, நக்கீரர், ‘கிடையாது’ என்று உறுதிபடக் கூறுகிறார்.

மனித இனத்தைச் சேர்ந்த நக்கீரருக்கு மானுடப் பெண்களின் கூந்தல் பற்றி வேண்டுமானால் தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறதே தவிர, அவருடைய அறிவுக்கு அப்பாற்பட்ட தேவலோக மகளிரின் கூந்தல் பற்றி எப்படிக் கூறமுடியும்?

எனவே, இறைவன் அப்படிக் கேட்டபோது, தனக்குத் தெரியாது என்றுதான் சொல்லி இருக்க வேண்டுமே தவிர, அவர்களின் கூந்தலிலும் மணம் இருக்காது என்று கூறியது எப்படி சரியாகும்?

தனது அறியாமையை மறைக்க, அறிந்தது போல் அடித்துப் பேசி னால், அந்த அறியாமை மறைந்து விடுமா? இந்தக் கோணத்தில் பார்த்தால், நக்கீரருக்குத் தண்டனை கொடுத்தது சரியே’ என்று விளக் கினார் சட்ட வல்லுநர்.

நினைத்துப் பாருங்கள்... தன்னைப் பெரிய ஆளாகக் காட்டிக்கொள்ள, மனமறிந்து எத்தனை முறை பொய் சொல்லி இருப்போம்?

நாட்டிலும் வீட்டிலும் ஏற்பட்ட பல பிரச்னை கள், அறியாதவர் களால் ஏற்பட்டதை விடவும், அறியாததை அறிந்தவர்போல் நடந்து கொண்ட வர்களால் ஏற்பட்டிருப்பதே அதிகம்.

அனைத்தும் அறிந்தவர் யார்? அறியாமை என்பது அவமானமே அல்ல. அறியாமையை ஒப்புக்கொள்வதே அறிவு. அதுவே நம்மை அறியாப் பொருளான பரம்பொருளை அறியச் செய்யும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism