Published:Updated:

ஆலயம் தேடுவோம் - அழகுற எழும்பட்டும் ஆலயம்! - ஆவணியாபுரம்

ஆலயம் தேடுவோம் - அழகுற எழும்பட்டும் ஆலயம்! - ஆவணியாபுரம்
பிரீமியம் ஸ்டோரி
ஆலயம் தேடுவோம் - அழகுற எழும்பட்டும் ஆலயம்! - ஆவணியாபுரம்

எஸ்.கண்ணன்கோபாலன் - படங்கள்: கே.குணசீலன்

ஆலயம் தேடுவோம் - அழகுற எழும்பட்டும் ஆலயம்! - ஆவணியாபுரம்

எஸ்.கண்ணன்கோபாலன் - படங்கள்: கே.குணசீலன்

Published:Updated:
ஆலயம் தேடுவோம் - அழகுற எழும்பட்டும் ஆலயம்! - ஆவணியாபுரம்
பிரீமியம் ஸ்டோரி
ஆலயம் தேடுவோம் - அழகுற எழும்பட்டும் ஆலயம்! - ஆவணியாபுரம்

பொன்னி நதியும், அதன் கிளை நதிகளும் ஆண்டு முழுவதும் தவழ்ந்தோடி, எங்கும் பசுமைச் செழிப்புடன் திகழ்ந்த தேசம் சோழ தேசம். பசுமைச் செழிப்பு மட்டுமல்ல, பக்திச் செழிப்புக்கும் சோழ தேசத்தில் பஞ்சமே இல்லை என்று சொல்லும்படி, காணும் இடமெங்கும் எண்ணற்ற ஆலயங்கள் அமைந்திருந்தன.

இன்று பொன்னி என்னும் புனித நதி ஆண்டின் பெரும்பகுதி வறண்டு, சோழ தேசத்தின் பசுமைச் செழிப்பும் காணாமல் போய்விட்டது. அதேபோல எண்ணற்ற ஆலயங்களும் இன்று சிதிலமடைந்தும், மண்ணுக்குள் புதையுண்டு மறைந்தும் போய்விட்டன. 

அந்நியர்களின் படையெடுப்பு, வாழ்வாதாரம் இல்லாத நிலையில் மக்கள் சொந்த ஊரை விட்டுப் பிழைப்புத் தேடி வெளியூர்களுக்குச் சென்றுவிடுதல் போன்ற பல காரணங்களால், எண்ணற்ற ஆலயங்கள் சிதிலமடைந்துவிட்டன.

ஆலயம் தேடுவோம் - அழகுற எழும்பட்டும் ஆலயம்! - ஆவணியாபுரம்

பிற்காலத்தில் அவற்றுள் பல ஆலயங்கள் ஆன்மிக அன்பர்களின் ஆர்வத்தாலும், முயற்சியினாலும் புனருத்தாரணம் செய்யப்பெற்று, நித்திய பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. அப்படித்தான் இதோ நாம் தரிசித்துக்கொண்டிருக்கும் இந்த ஆலயமும் திருப்பணிக்குக் காத்துக்கொண்டிருக்கிறது.

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூருக்கு அருகில், காவிரியின் கிளை நதியான வீரசோழன் ஆற்றின் தென்கரையில், இயற்கையெழில் நிறைந்த சூழ்நிலையில் அமைந்திருக்கிறது ஆவணியாபுரம்.

இந்தக் கிராமத்தில், ஒரு காலத்தில் நித்திய பூஜைகளும் திருவிழாக்களுமாக மகோன்னத நிலையில் அமைந்திருந்தது ஒரு சிவன் கோயில். காலப்போக்கில் அந்த ஆலயம் சிதிலமடைந்து, இன்று திருப்பணிக்காகக் காத்திருக்கும் நிலைமையைப் பார்த்தபோது, நம் நெஞ்சம் கலங்கவே செய்தது.

அமரர்களின் பொருட்டு நஞ்சினை உண்டது, அடியவர் பொருட்டு மண் சுமந்து பிரம்படி பட்டது போன்ற பல துன்பங்களை மகிழ்ச்சியுடன் ஏற்று, நம்மையெல்லாம் காத்து அருள்புரிபவர் அல்லவா தியாக வடிவினரான தியாகேசப் பெருமான்?! அவருடைய ஆலயம் சிதிலம் அடைந்திருப்பது கண்டும் நாம் ஏதும் செய்யாமல் இருந்தால்?

ஆலயம் தேடுவோம் - அழகுற எழும்பட்டும் ஆலயம்! - ஆவணியாபுரம்

இப்படி ஓர் எண்ணம் ஆவணியாபுரம் அன்பர் களுக்கு ஏற்படவே செய்தது. எண்ணத்தைச் செயல்படுத்த நினைத்தவர்கள், ஒரு திருப்பணிக் கமிட்டியை ஏற்படுத்தி, திருப்பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார்கள். கமிட்டியின் தலைவரான சீனிவாசனிடம் பேசினோம்.

ஆலயம் தேடுவோம் - அழகுற எழும்பட்டும் ஆலயம்! - ஆவணியாபுரம்


‘`பழைமை வாய்ந்த இந்தக் கோயில் பல வருஷமாவே சிதிலமடைந்து இருந்தது. இறைவனுக்கும் அம்பாளுக்கும் என்ன பெயர் என்றுகூட யாருக்கும் தெரியாது. வெட்டவெளியில் இருந்த சுவாமி, அம்பாள், நந்திதேவர் சிலைகளை எடுத்து, மங்காகுளம் மாரியம்மன் கோயிலில் வைத்து வழிபட்டு வருகிறோம்.

ஒருமுறை, கும்பகோணம் ஜோதிமலை இறைப்பணித் திருக்கூட்ட நிறுவனர் திருவடிக் குடில் சுவாமிகள் வந்து பார்த்தார். அவருடைய ஆலோசனைப்படி ஒரு கமிட்டி ஏற்படுத்தி, பேங்கில் ஜாயிண்ட் அக்கவுண்ட் ஆரம்பித்தோம். கடந்த 2015-ம் வருஷம் செப்டம்பர் மாதம் 9-ம் தேதி ஊர்மக்களின் ஒத்துழைப்புடன் பூமி பூஜை போட்டோம்.

பூமிபூஜைக்குத் திருவாவடுதுறை ஆதீனம் குருமகா சந்நிதானத்தின் சார்பில் கட்டளைத் தம்பிரான் சுவாமிகளும், திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் கண்காணிப்பாளரும் கலந்துகொண்டனர்.

முதல் கட்டப் பணிகளுக்கு 12 லட்சம் மதிப்பீட் டில் திருப்பணிகளைத் தொடங்க நினைத்தோம். ஆனால், தற்போது 4.5 லட்சம் செலவுக்கான திருப்பணிகள்தான் நடைபெற்றுள்ளன.

ஆலயம் தேடுவோம் - அழகுற எழும்பட்டும் ஆலயம்! - ஆவணியாபுரம்

போதிய நிதி இல்லாத காரணத்தால் திருப் பணிகளைத் தொடர்வதில் சிரமம் இருக்கிறது. மேலும் கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வால் செலவுகளும் அதிகமாகும். ஆன்மிக அன்பர்களும் சிவனடியார்களும் உதவி செய்தால், விரைவிலேயே சிறிய அளவிலாவது கோயில் கட்டி, கும்பாபிஷேகம் செய்துவிடலாம் என்பது தான் ஊர்மக்களின் எதிர்பார்ப்பு’’ என்றார்.

‘`பெயர்கூட தெரியாமல் இருந்த சுவாமிக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் என்ற திருப்பெயர் ஏற்பட்டது எப்படி?’’ என்று அவரிடம் கேட்டோம்.

அதுபற்றி அவர் கூறுகையில், ‘`எங்கள் யாருக்குமே சுவாமியின் பெயர் தெரியாமல்தான் இருந்தது. ஆனால், சுவாமி, அம்பாள் விக்கிரகங் களை மாரியம்மன் கோயிலில் வைத்துப் பூஜை களைச் செய்ய நினைத்தபோது, சுவாமிக்கு ஒரு பெயர் வைக்கவேண்டும் என்றும், அந்தப் பெயரையும் சுவாமியே எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் நாங்கள் விரும்பினோம்.

அதன்படி மதுரை போன்ற பல கோயில்களின் சுவாமி பெயர்களை எல்லாம் தனித்தனியாக எழுதி மடித்து, சுவாமிக்கு முன்பாக வைத்து வணங்கிவிட்டு, அந்தச் சீட்டுகளில் ஒன்றை ஒரு குழந்தையை விட்டு எடுக்கச்சொன்னோம். அப்படி அந்தக் குழந்தை எடுத்துக்கொடுத்த பெயர்தான் மீனாட்சி சுந்தரேஸ்வரர்’’ என்றார்.

அந்தத் திருப்பெயர் அந்தக் குழந்தையின் விருப்பமோ அல்லது குழந்தையின் வடிவத்தில் இருந்த ஆண்டவனின் விருப்பமோ, அது அந்த ஈசனுக்குத்தான் வெளிச்சம்!

ஆலயம் தேடுவோம் - அழகுற எழும்பட்டும் ஆலயம்! - ஆவணியாபுரம்

நமக்கெல்லாம் அருள்வதற்காகவே, தனக்குரிய பெயரைத் தானே தேர்ந்தெடுத்துக்கொண்ட ஐயன், நித்திய பூஜைகளும் திருவிழாக்களும் காண வேண்டாமா? அவருக்கு ஒரு கோயில் இருந்தால்தானே அது சாத்தியமாகும்? நமக்கெல்லாம் அருள்புரியத் திருவுள்ளம் கொண்டுவிட்ட ஆவணியாபுரம் ஐயனுக்கு அழகியதோர் ஆலயம் அமைய நாமும் நம்மால் இயன்ற பொருளுதவி செய்யவேண்டும். அது நம்முடைய கடமையும் மண்ணில் பயனுற நாம் வாழ வழி செய்த பரமனுக்கான நன்றிக்கடனும்கூட.

ஆகவே, ஆவணியாபுரம் சிவனாரின் திருக்கோயில் திருப்பணி அன்பர்களுக்கு நாமும் தோள்கொடுப்போம்; நம்மால் இயன்ற பொருளுதவிகளைச் செய்வோம். அழகுற எழும்பட்டும் ஆலயம்! ‘தேசனே! தேனார் அமுதே! தென்பாண்டி நாட்டானே’ என்று மாணிக்கவாசகப் பெருமான் உருகி உருகிப் பாடும் நம் ஐயனின் பூரண அருளால் இந்த உலகம் செழிக்கட்டும்.

எங்கிருக்கிறது... எப்படிச் செல்வது?

மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் ஆடுதுறையில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது ஆவணியாபுரம். ஆடுதுறையில் இருந்து ஆட்டோ வசதி உண்டு.

வங்கிக் கணக்கு விவரம்:

Account Name:
G.ARUMUGAM / S.SEKAR
Account No: SB A/C 030001000016322
BANK NAME: Indian overseas bank - Avaniapuram
IFSC IOBA0000300
தொடர்புக்கு: A.G.சீனிவாசன் - 9942514470