Published:Updated:

அனுமன் தரிசனம் - ஆனந்த வாழ்வுதரும் - அனந்தமங்கலம் ஆஞ்சநேயர்

அனுமன் தரிசனம் - ஆனந்த வாழ்வுதரும் - அனந்தமங்கலம் ஆஞ்சநேயர்
பிரீமியம் ஸ்டோரி

சிவனாரைப் போன்ற மூன்று கண்களுடனும், பத்து திருக்கரங்களில் ஒன்பது திருக்கரங்களில் ஆயுதங்களுடனும், ஒரு திருக்கரத்தில் வெண்ணெயுடனும் ‘திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர்’ கோயில்கொண்டிருக்கும் தலம்தான், அனந்தமங்கலம். நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகில் இயற்கை எழில் கொஞ்சும் அழகிய கிராமம் அனந்தமங்கலம். இந்த ஊரில் விஜயநகர மன்னர்களின் காலத்தில் கட்டப்பட்ட அருள்மிகு ராஜகோபால பெருமாள் திருக்கோயிலில், தெற்கு நோக்கிய சந்நிதியில் காட்சி தருகிறார் ஆஞ்சநேயர்.

அனுமன் தரிசனம் - ஆனந்த வாழ்வுதரும் - அனந்தமங்கலம் ஆஞ்சநேயர்

திரேதாயுகத்தில் ஸ்ரீராமபிரான் ராவண சம்ஹாரம் முடித்துவிட்டு, சீதா பிராட்டியுடன் அயோத்தி திரும்பிக்கொண்டிருந்தார். வழியில் பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்துக்கு விஜயம் செய்தார். ராமபிரானை வரவேற்ற பரத்வாஜ முனிவர், அவரிடம் ஒரு வேண்டுகோளையும் வைத்தார். ரக்த பிந்து மற்றும் ரக்த ராட்சகன் என்ற இரண்டு அரக்கர்கள் கடலுக்கு அடியில் தவம் செய்து வருவதாகக் கூறியவர், உலக நன்மைக்காக அவர்களை அழிக்க வேண்டும் என்றும் கூறினார். மகரிஷி கூறியதை ஏற்றுக்கொண்ட ராமபிரான், அந்த அரக்கர்களை அழிப்பதற்காக அனுமனை அனுப்புவதாகக் கூறினார். மேலும், அரக்கர்களை அழிக்கப் புறப்பட்ட அனுமனுக்கு ராமபிரான் தம்முடைய வில் அம்புகளையும், மகாவிஷ்ணு தம் சங்கு சக்கரத்தையும், சிவபெருமான் திரிசூலத்தையும், பிரம்மா கபாலத்தையும், அம்பிகை பாசம் மற்றும் அங்குசத்தையும், ருத்திரன் மழுவையும் வழங்கினார்கள். அனைத்துக்கும் மேலாக சிவபெருமான் தம்முடைய நெற்றிக்கண்ணையும் வழங்கினார்.

அனுமன் தரிசனம் - ஆனந்த வாழ்வுதரும் - அனந்தமங்கலம் ஆஞ்சநேயர்

இப்படி அனைத்து தெய்வங்களாலும் வலிமைபெற்ற ஆஞ்சநேயர், அரக்கர்களை சம்ஹாரம் செய்தார். போன காரியம் வெற்றிகரமாக முடிந்த மகிழ்ச்சியில் கடற் கரையோரத்தில் வந்து ஆனந்தமாக ஆஞ்சநேயர் தங்கியிருந்தார். அந்த இடம்தான் ஆனந்தமங்கலம் என்றும் காலப்போக்கில் மருவி, தற்போது அனந்தமங்கலம் என்றும் அழைக்கப்படுகிறது என்பதும் தல வரலாறு.  

இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபட்டால் மேற்குறிப்பிட்ட அனைத்து தெய்வங்களின் அருளும் கிடைக்கும். மேலும், இது ஆஞ்சநேயரின் நித்யவாசஸ்தலம் என்பதால், காலநேரம் பார்க்காமல் எப்போதும் வழிபடலாம். அனுமத் ஜயந்தி இங்கே விசேஷம்.  இவருக்கு வெண்ணெய் சாற்றி வழிபட்டால் நமது துன்பங்கள் எல்லாம் வெப்பத்தில்பட்ட வெண்ணெய் போல் கரைந்துபோகும்.

- மு. இராகவன்,

படம் : க. சதீஷ்குமார்