Published:Updated:

எழுமேடு - ஸ்ரீபச்சைவாழியம்மன்

எழுமேடு - ஸ்ரீபச்சைவாழியம்மன்

எழுமேடு - ஸ்ரீபச்சைவாழியம்மன்

எழுமேடு - ஸ்ரீபச்சைவாழியம்மன்

Published:Updated:
எழுமேடு - ஸ்ரீபச்சைவாழியம்மன்
எழுமேடு - ஸ்ரீபச்சைவாழியம்மன்


பச்சைப் பசேலென வயல்கள் சூழ்ந்திருக்க, அந்த ஊரையும் மக்களையும் காப்பதற்கு, பச்சை மரம் ஒன்றின் மீது குடியமர்ந்தாளாம் அம்மன்! ஊர்ப் பெரியவரின் கனவில் வந்து, அம்மனே இந்தத் தகவலைச் சொல்லியருள... விடிந்ததும் விஷயம் கேள்விப்பட்டு ஊரே சிலிர்த்தது. அம்மனுக்குக் கோயில் எழுப்பி, பச்சை நிற மேனியளாக அம்மனின்  திருமேனியை பிரதிஷ்டை செய்து வழிபடத் துவங்கினர்! அவளின் திருநாமம் - ஸ்ரீபச்சைவாழியம்மன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##
டலூர் மாவட்டத்தில் உள்ளது எழுமேடு. கடலூர்- பண்ருட்டி பாதையில், சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது, மேல்பட்டாம்பாக்கம். இங்கிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ளது எழுமேடு. இந்தக் கிராமத்தின் திரும்பிய திசையெங்கும் பச்சைப் பசேல் வயல்வெளிகள், கண்ணுக்கு நிறைவைத் தர... மனதுக்கு நிம்மதியையும் சந்தோஷத்தையும் தந்து நம்மை வாழவைக்கும் பச்சைவாழி அம்மன், இங்குதான் அழகுறக் கோயில்கொண்டிருக்கிறாள்.

'படையல் போட்டு வேண்டிக்கிட்டா, பரம்பரைக்கும் நம்மளைக் காப்பாள் பச்சைவாழியம்மன்’ என்று கிராமத்தில் பழமொழி போலவே சொல்கின்றனர், பக்தர்கள்! ஆண்-பெண் பேதமின்றி அனைவரை யும் காத்தருள்கிறாள் அம்மன். குறிப்பாக, தனது சந்நிதியில் வந்து நின்று, மனக் குறையைச் சொல்லி அழும் பெண்களின் வேதனையை உடனே தீர்த்து வைக்கிறாள் எனப் போற்றுகின்றனர், ஊர்மக்கள்.

'உரிய வயதை அடைந்தும் பொண்ணுக்குக் கல்யாணம் தகையலியே...’, 'கண்ணாலம் கட்டிக் கரையேத்தினாலும் கரு உண்டாகலியே...’ எனத் தவித்து மருகும் பெற்றோர், தங்களின் பெண்களுடன் இங்கு வந்து கோயில் மரத்தில், துணி முடிச்சுப் போட்டுப் பிரார்த்தித்தால், விரைவில் வீட்டில் கெட்டிமேளச் சத்தம் கேட்கும்; தொட்டில் கட்டி வழிபட்டால், சீக்கிரமே வீட்டில் தொட்டில் சத்தம் கேட்கும் என்பது நம்பிக்கை!

எழுமேடு - ஸ்ரீபச்சைவாழியம்மன்

ஆடி மாதத்தில் சிறப்புற நடைபெறுகிறது, ஐந்து நாள் திருவிழா! அப்போது, வெள்ளிக்கிழமையன்று சுற்று வட்டார ஊர்க்காரர்களும் திரண்டு வந்து, பொங்கல் படையலிட்டு வேண்டிக் கொள்கின்றனர். அப்படிப் பிரார்த்திக்க... குடும்பத்தில் சண்டை சச்சரவு இருக்காது; கணவன்- மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கும் என்கின்றனர்.

அதேபோல், அம்மனை மனதாரப் பிரார்த்தித்தால், பிரிந்தவர்கள்கூட ஒன்று சேருவார்களாம்.

கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, எழுமேடு முதலான ஊரைச் சேர்ந்தவர்கள், தங்கள் வீட்டில் என்ன நல்லது கெட்டது என்றாலும், அம்மனின் உத்தரவு கேட்டே செய்கின்றனர். அம்மனின் தோளில் எலுமிச்சை பழத்தை வைத்து, செய்யப் போகும் காரியத்தை மனதில் நினைத்துக்கொள்வார்களாம், பக்தர்கள். பழம் கீழே விழுந்தால், நினைத்த காரியம் நிறைவேறுமாம்! அதேபோல் கல்யாணம், காதுகுத்து என வீட்டில் எந்த சுபநிகழ்ச்சியாக இருந்தாலும், பச்சைவாழி அம்மனுக்குத்தான், முதல் அழைப்பு!

இன்னொரு சிறப்பு... அம்மனுக்குப் பூஜை செய்யும்போது, அம்மனுக்குப் பிடித்த சிலம்பையும் உடுக்கையையும் கொண்டு இசைத்தபடியே பூஜை செய்வார்கள், பூசாரிகள்!

அம்மனைத் தரிசித்து, தங்களது வேண்டு தலைச் சொல்லிவிட்டு வந்ததுமே, பச்சை நிறச் சேலையைத் தயாராக வாங்கி வைத்துவிடுவார் களாம், பக்தர்கள்... தங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக!

-நா.இள.அறவாழி
படங்கள்: ஜே.முருகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism