Published:Updated:

சுண்டக்காமுத்தூர் - செல்லாண்டியம்மன்

சுண்டக்காமுத்தூர் - செல்லாண்டியம்மன்

சுண்டக்காமுத்தூர் - செல்லாண்டியம்மன்

சுண்டக்காமுத்தூர் - செல்லாண்டியம்மன்

Published:Updated:
சுண்டக்காமுத்தூர் - செல்லாண்டியம்மன்
##~##
கோ

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

யம்புத்தூரில் இருந்து சிறுவாணி செல்லும் வழியில் சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சுண்டக்காமுத்தூர் எனும் கிராமம். இங்கு கோயில்கொண்டு, மொத்த கொங்கு தேசத்தையும் வாழ வைத்துக்கொண்டிருக்கிறாள், செல்லாண்டி அம்மன்!

சுமார் 200 வருடங்களுக்கு முன்பு, இந்தப் பகுதியில் சுண்டைக்காய் விளைச்சல் அமோகமாக இருக்குமாம்! இதனால் சுண்டைக்காய்முத்தூர் என்றே ஊரின் பெயரும் அமைந்ததாகச் சொல்கின்றனர் ஊர்மக்கள். சுண்டைக்காய் பயிரிட்ட நிலத்தில் ஒருநாள், ஏதோ தட்டுப்பட, அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து, நிலத்தை தோண்டினர். அப்போது, பூமியில் இருந்து தென்பட்டது அம்மனின் விக்கிரகம். அப்போது அங்கிருந்த பெண், 'நான் செல்லாண்டி ஆத்தா வந்திருக்கேன்; இங்கேயே குடியிருக்கப் போறேன்; இனிமே நீங்க நல்லா இருப்பீங்க’ என அருள் வந்து ஆடினாள். இதையடுத்து, அம்மன் விக்கிரகத்தை அருகிலேயே பிரதிஷ்டை செய்து, சிறிய கோயில் எழுப்பி வழிபடத் துவங்கினர். அன்று துவங்கி இன்றளவும், ஊரைச் செழிக்கச் செய்து, ஊர் மக்களை,  காத்து- கருப்பு அண்டாமல் காத்து வருகிறாள் ஸ்ரீசெல்லாண்டி அம்மன்!  

'செல்லாண்டி ஆத்தாகிட்ட உத்தரவு கேட்டுத்தான் எதையும் செய்வோம்’ என்கின்றனர் சுற்றுவட்டார கிராம மக்கள். விளைநிலத்திலிருந்து வந்து, காடு- கரைகளை செழிக்கச் செய்வதால், 'இந்த முறை என்ன பயிரிடவேண்டும்’ என அம்மனிடம் உத்தரவு கேட்கும் வழக்கம் இன்றைக்கும் உள்ளது என்கின்றனர், விவசாயிகள்! என்னென்ன விதைக்கலாம் என்பதை தனித்தனிச் சீட்டுகளில் எழுதி, அம்மனுக்கு முன்னே போடுவார்களாம். பிறகு, அங்கிருப்பவர்களில் எவர் மீதாவது அம்மன் அருளாக வந்து இறங்க... அவர் எடுத்து தரும் சீட்டில் என்ன உள்ளதோ, அதையே அந்த வருடம் பயிரிடுவர். இதனால், விளைச்சல் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை! ஆரம்பகாலத்தில் சுண்டக்காமுத்தூர் விவசாயிகள் மட்டும் உத்தரவு கேட்டு, விதைத்து வந்தனர். பிறகு, கொங்கு மண்டலத்தின் பல ஊர்களில் இருந்தும் விவசாயிகள் வந்து உத்தரவு கேட்டுச் செல்கின்றனராம்!

சுண்டக்காமுத்தூர் - செல்லாண்டியம்மன்
சுண்டக்காமுத்தூர் - செல்லாண்டியம்மன்

அதேபோல், தலைப் பிரசவத்துக்கு பிறந்த ஊருக்கு வருகிற பெண்கள், பிள்ளை பிறந்து, கணவரின் வீட்டுக்குச் செல்வதற்கு முன்னதாக, அம்மனின் சந்நிதியில் குழந்தையை வைத்துவிட்டு, 'ஆத்தா, என்னைக் காத்தது போலவே, என் புள்ளையையும் காக்கோணும்; சந்ததியை சிறக்கச் செய்யோணும்’ என வேண்டிச் செல்கின்றனர்!

ஆடி மாதத்தில் திருவிழா; என்றாலும் தை மாதம்தான் அம்மனுக்கு  விசேஷம்! தை மாதப் பிறப்பன்று, விவசாயிகள் பொங்கல் படையலிட்டு, தங்களின் நிலத்தில் விளைந்ததை அம்மனுக்குக் காணிக்கையாகத் தருவர்! செல்லாண்டி அம்மனுக் குக் காவல் தெய்வமாக இருந்து, பில்லி- சூனியம், விஷ ஜுரம் எதுவும் அண்டாமல் காத்தருள்கிறார் கருப்பண்ணசாமி! இவருக்கு அரிவாளும் மண் குதிரையும் காணிக்கை செலுத்தி வழிபடுகின்றனர் ஊர்க்காரர்கள். அதேபோல், புதுமணத் தம்பதி, அந்தநாளில் இங்கு வந்து அம்மனுக்கு பொங்கல் வைத்து வணங்கிச் செல்வர். இதனால், அந்தக் குடும்பத்தையும் வாரிசையும் அம்மன் வாழ வைப்பாள், என்கின்றனர் பக்தர்கள்!

இன்னொரு விஷயம்... கோயிலுக்கு அருகில் உள்ள கிணறு வற்றவே வற்றாதாம்! சுற்றியுள்ள அனைத்துக் கோயில்களுக்கும் இந்தக் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துச் சென்று அபிஷேகிப்பது வழக்கமாம்!  

- ம.பிருந்தா படங்கள்: வெ.பாலாஜி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism