Published:Updated:

ராமர் பாலம் இயற்கையா... செயற்கையா? - ஞானநூல்கள் என்ன சொல்கின்றன?

ராமர் பாலம் இயற்கையா... செயற்கையா? - ஞானநூல்கள் என்ன சொல்கின்றன?
பிரீமியம் ஸ்டோரி
ராமர் பாலம் இயற்கையா... செயற்கையா? - ஞானநூல்கள் என்ன சொல்கின்றன?

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

ராமர் பாலம் இயற்கையா... செயற்கையா? - ஞானநூல்கள் என்ன சொல்கின்றன?

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:
ராமர் பாலம் இயற்கையா... செயற்கையா? - ஞானநூல்கள் என்ன சொல்கின்றன?
பிரீமியம் ஸ்டோரி
ராமர் பாலம் இயற்கையா... செயற்கையா? - ஞானநூல்கள் என்ன சொல்கின்றன?

டம், வேளை என்கிற இரண்டையும் குறிப்பிட்டு அறம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று தர்மசாஸ்திரம் பரிந்துரைக்கும். செயலில் இறங்கும் தறுவாயில், தான் இருக்கும் இடத்தைச் சுட்டிக்காட்டுவான் இந்தியக் குடிமகன். பாரததேச தவப்புதல்வன் என்று தன்னைக் குறிப்பிடாமல் கங்கை நதி - ராமர் பாலம் என்ற இரண்டுக்கும் இடைப்பட்ட தேசத்தில் வாழ்பவன் என்று சொல்வான் அவன் (ஸ்ரீராமசேது கங்கையோர் மத்யபிரதேசே). வேத காலம் தொட்டு இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது.

தேசத்தின் புனிதமான இரு எல்லைகளில் ராமர் பாலமும் ஒன்று. ராமசேதுவின் பெருமையால், கடலில் நீராடும் துறை அமைதியாக இருப்பதைக் காணலாம். ராமசேதுவின் திருமண்ணை கங்கையில் சேர்ப்பதும், கங்கையின் புனித நீரை ராமநாதனுக்கு அபிஷேகம் செய்வதும் உண்டு. தேசத்தின் உயர்வுக்குப் பெருமை சேர்க்கும் பாலம் அது. சேது, சேதுராமன், சேதுபதி, சேதுநாதன், சேதுலட்சுமி, சேதுராமச்சந்திரன், சேதுமாதவன் என்ற பெயர்கள் தென்னாட்டில் உண்டு.

காசியில் கங்கைக்கரையில் ஈசன் தன் பக்தர் களை ராம நாமத்தை ஓதி ஆட்கொள்கிறார். ராமேஸ்வரத்தில், ராமசேதுக்கரையில் ஈசன் நாமத்தை ஓதி ஆட்கொள்கிறார் ராமன். ராம பக்தர்கள் ராமர் பாலத்தை, ராமர் பாதமாகப் பார்ப்பார்கள். பக்தன் சாளக்கிராமத்தில் ஸ்ரீமந் நாராயணனைக் காண்பான். பாண லிங்கத்தில் ஈசனைக் காண்பான். ஏழுமலையை வேங்கடாசல பதியாகக் காண்பான். ராமாயணத்தில் இடம் பெற்ற ராமர் பாலத்தின் பெருமையை உணர்ந்த ஒரு கவிஞன் ‘சேது பந்தம்’ என்ற தலைப்பில் காவியம் ஒன்று இயற்றியிருக்கிறார். அவர் பெயர் ப்ரவரசேனன். 5-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் அவர் என்பது ஆராய்ச்சியாளர்களது கருத்து.

ராமர் பாலம் இயற்கையா... செயற்கையா? - ஞானநூல்கள் என்ன சொல்கின்றன?

பாலம் அமைத்தல், இலங்கை செல்லல், அரக்கனை அழித்தல் போன்ற தகவல்கள் அதில் இடம் பெற்றிருக்கின்றன. தேவதச்சன் விஸ்வகர்மாவின் புதல்வனான நளன் தலைமையில் அனுமனோடு இணைந்த வானரப் படை, பாலத்தை அமைத்ததாகத் தகவல் தருகிறார் அவர். இதிகாசங்களிலும் புராணங்களிலும் கட்டடம் மற்றும் சிற்பக்கலை வல்லுநராக விஸ்வகர்மாவைக் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம்.

இதிகாசம் என்ற சொல்லுக்கு, இதி- ஹ- ஆஸ = இப்படி அவர்கள் வாழ்ந்தார்கள் என்று பொருள். கற்பனையன்று; வரலாறு என்பதை அந்தச் சொல் சுட்டிக்காட்டும். சேது வாயிலாக அதாவது, ராமர் பாலம் வழியாக வானரப் படை, கடலைக் கடந்தது போல் கவிஞன் ப்ரவரசேனனின் புகழ் கடலைத் தாண்டிப் பரவி விளங்குகிறது என்று கவிஞர் பெருமையைப் புகழ்கிறார் பாணபட்டர். ‘ஹர்ஷ சரிதம்’ எனும் தன் நூலில், ‘சேதுபந்தம்’ என்ற காப்பியம் இயற்றப்பட்டதைச் சூசகமாகத் தெரிவிக்க ‘சேது வழியாக வானரப் படை சென்றது போல்’ என்ற உவமையைக் கையாண்டிருக்கிறார் அவர். சில வருடங்களுக்கு முன்பு வெள்ளப்பெருக்கில் தனுஷ்கோடி மூழ்கடிக்கப்பட்டது. வெள்ளத்தின் அடியில் இப்போதும் தனுஷ்கோடி உண்டு.

ராமசேதுவும் அப்படியே. அரக்கனை அழித்த பிறகு புஷ்பக விமானத்தில் அயோத்திக்குத் திரும்பினார்கள் ராமனும் சீதையும். வழியில் தென்பட்ட தண்டகாரண்யம், பஞ்சவடி போன்ற இடங்களை விமானத்திலிருந்து சீதைக்கு அடையாளம் காட்டுகிறார் அவர். அகஸ்திய முனிவரின் ஆஸ்ரமத்தைக் கண்ணுற்ற சீதை, அவர் மனைவி லோபாமுத்திரையை தரிசிக்க வேண்டும் என்ற ஆவலை வெளியிடுகிறாள். ராமனும் ஒப்புதல் அளித்தார். ஆஸ்ரமத்தில் புஷ்பக விமானம் இறங்கியது.

‘அகஸ்திய முனிவரின் மனைவி லோபாமுத்தி ரையை வணங்குவது சிறப்பு. லோபாமுத்திரையோடு நிகழும் உரையாடலில் எல்லாத் தகவல்களும் இடம்பெறலாம், தவறில்லை. ஆனால், ‘உன் கணவன் எப்படிக் கடலைக் கடந்தார்?’ என்ற கேள்விக்கு பாலம் அமைத்துச் சென்றார் என்று சொல்லாதே. அது நமக்குப் பெருமையளிக்காது. ஏனெனில், அவர் கணவர் அகத்தியர், கடலை உள்ளங்கையில் அடக்கி உறிஞ்சியவர்!’ என்று நகைச்சுவையோடு சேதுவைக் குறிப்பிடுகிறார் (பிருஷ்டாபி மாவத பயோநிதிபந்தனம் தத். ஸாவை யத: சுளிகிதாம்புநிதே: களத்ரம் ). இந்தத் தகவல் ஹனுமன் நாடகத்தில் தென்படுகிறது.

போஜனது அரசவைக் கவிஞர் தாமோதர மிச்ரர், ஹனுமன் நாடகத்தைத் தொகுத்திருக்கிறார். அதில், ‘குறை இல்லாமல் என்றும் நிறைவோடு காட்சியளிக்கிறது கடல். அதைப் பலர் சீண்டிப் பார்த்திருக்கிறார்கள். அகஸ்தியர், கடலை விழுங்கினார். பரசுராமன் கோடரியை வீசி அதன் எல்லையை வரையறுத்தார். அனுமன் அதைத் தாண்டினான். உலகத்தின் முடிவைச் செயல்படுத்தும் நெருப்பு, அதைச் சுண்ட வைத்தது. விஷ்ணு தன் பங்குக்கு அதைக் கடைந்தார். ராமர் அதற்குப் பாலம் அமைத்தார். இப்படி துன்ப வரிசைகளைச் சுமக்க நேர்ந்தது கடல். ஆனால், உனது புகழ்க் கடல் கம்பீரமாக விளங்குகிறது. முற்றிலும் மாறுபட்டது. பிறர் சீண்ட முடியா வண்ணம் தனித்து விளங்குகிறது’ என்று ராமரைப் போற்றும் செய்யுள் இம்மிடி தேவராயரின் (தெலுங்கு பூமியின் இரண்டாவது தேவராய அரசர்) நூலில் இருக்கிறது. அவர் ராமர் பாலத்தை மறக்காமல் குறிப்பிடுகிறார் (அபாயி முனினாபுரா... புரைபந்திலங்காரிணா )

சீதையை ராவணன் கவர்ந்தான். தவறு இழைத்த அவன் தண்டிக்கப்பட வேண்டியவன். ஆனால், ஒன்றும் அறியாத கடல் பாலத்தைச் சுமந்தது. துயரத்தில் ஆழ்ந்தது என்று அனுதாபப் படுகிறார் ராமதாஸ கவி. இது, சுபாஷித ரத்ன பாண்டாகாரம் தரும் தகவல்.

உலகம் போற்றும் ‘உத்தமனான ராமனுக்கு உதவ எண்ணியது ஓர் அணில். அது, தனது உடலைத் தண்ணீரில் மூழ்கடித்து, மணலில் புரண்டது. அப்படி அதன் உடம்பில் ஒட்டிய மணலை ராமசேதுவில் சேர்த்து அகமகிழ்ந்தது அது. அதைப் பார்த்த ராமருக்கு இரக்கம் சுரந்தது. அந்த அணிலைக் கையில் ஏந்தினார். அதன் முதுகை வருடினார். அவர் கண்களில் நன்றிப் பெருக்கால் நீர் தளும்பியது!’ என்ற செவிவழித் தகவல் இன்றும் காதில் ஒலிக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராமர் பாலம் இயற்கையா... செயற்கையா? - ஞானநூல்கள் என்ன சொல்கின்றன?

‘கடலைத் தாண்ட அனுமன் தயாரானார். மகேந்திர மலை உச்சியில் ஏறி நின்று இடுப்பில் இரு கைகளையும் வைத்துக்கொண்டார். கம்பீரமாகத் தோற்றமளித்தார். தாண்ட வேண்டிய இடத்தை - ராமேஸ்வரம் கரையிலிருந்து இலங்கை வரை - பார்வையால் ஒரு கோடு வரைந்தார். அவரது அந்தப் பார்வைக் கோடு வருங்காலத்தில் அமைய இருக்கும் ராமசேதுவுக்கு நூல் பிடித்து அளவு பார்த்ததுபோல் இருந்தது’ என்று விளக்குகிறார் கவி இம்மிடிதேவ ராயர் (ஆகாமிசேதோரிவ சூத்ரபாதம் ).

பாலம் அமைத்து வானரப் படைகளோடு ராமன் இலங்கையில் நுழைந்துவிட்டார். ‘சீதையை விடுதலை செய்யுங்கள்’ என்று ராவணனை அறிவுறுத்தினாள் மண்டோதரி ( சம்ப்ராப்தோ வார்த்தி முல்லங்கிய யோத்தும்... ப்ரேயஸீ ராவணாஸ்ய ). ‘வானரப் படை சூழ்ந்த இலங்கை யைப் பார்க்கிறேன். பாலம் அமைத்து ராமன் இலங்கையை எட்டிவிட்டார் என்ற தகவல் காதில் விழுகிறது.’ இக்கட்டான இந்தச் சூழலில் செய்வதறியாது கவலையில் ஆழ்ந்தான் ராவணன் ( சேதுர்பந்த இதி ச்ருணோமி ). கன்னியரின் கூந்த லில் வகிடு எடுப்பது போல் கடலின் தென்மேற்கில் பாலம் அமைத்தான் ராமன் (சேதும் தக்ஷிண பச்சிமௌ ஜலநிதிம் சீமந்தயன்னிர்மித: ).

ராமர் கதையில் விறுவிறுப்பான பல திருப்பு முனைகள் உண்டு. அதில் சேதுபந்தனம் எனப்படும் ராமர் பாலம் அமைப்பதும் ஒன்று. வானரப் படையால் உருவான பாலத்தின் பெருமையை விளக்குகிறார் கவியரசர் பட்டி. அவரது நூலில், ‘சேது பந்தன ஸர்க்கம்’ என்று அதற்கு ஒரு பகுதியையே ஒதுக்கியிருக்கிறார். அதில், ‘வானரப் படை அநாயாசமாக இலங்கை செல்ல பாலம் அமைத்த பெருமானே!’ என்று ராமனைப் புகழ்கிறார்.

‘ராமாஷ்டப்ராஸம்’ என்ற தலைப்பில் கவிதை புனைந்தார் கண்டர மாணிக்கம் ராம பத்ர தீட்சிதர். அதற்கு விரிவுரை அளித்தவர் சேது சாஸ்திரிகள். ‘வானரப் படை சூழ கடற்கரையை அடைந்தார் ராமன். ‘கடலைக் கடந்து இலங்கை செல்ல வேண்டும்!’ சிந்தனையில் ஆழ்ந்தார். தர்பாஸனத்தில் சப்பணம் இட்டு உட்கார்ந்து மூன்று இரவுகள் தியானத்தில் ஆழ்ந்தார். கடலரசன் வரவில்லை. ‘அறத்தின் இடையூறு, அகற்றப்பட வேண்டிய ஒன்று. ஆக்னேய அஸ்திரத்தால் கடலை வற்றச் செய்கிறேன். வானரப் படைகள் நடைபயணமாக இலங்கை செல்லட்டும்!’ என்று தீர்மானித்து, பாணம் தொடுக்க முயன்றார் ராமன். ஓடி வந்தான் சமுத்திர ராஜன். ‘அறத்தின் உருவமே! ஆறுவது சினம். கடல் வற்றினால் உலகம் அழிந்துவிடும். தங்கள் வம்சத்தில் உதித்த ஸகர மகாராஜாவின் புதல்வர்களால் இந்தக் கடல் உருவானது. அதன் காப்பாளன் நான். தங்களுக்கு உதவுவது, எனது கடமை. இதோ! இந்த நளன், விஸ்வகர்மாவின் புதல்வன். சேதுவை அமைக்கச் சிறந்தவன். மற்ற வானரங்களது உதவியோடு பாலம் அமைத்து, தாங்கள் இலங்கை செல்ல வேண்டும் என்று வேண்டுகிறேன்!’ என்றான் சமுத்திர ராஜன்.’ இது போஜ அரசன் இயற்றிய சம்பூ ராமாயணத் தகவல். பாராவாரத்தின் பாரத்தை எட்ட பாலம் அமைத்த பகலவனே! என்று தனது அஷ்டப்ராஸ புஷ்பாஞ்சலியில் குறிப்பிடுகிறார் கவி சுந்தரதாஸன்.

ராமாயணத்தின் யுத்த காண்டம் பகுதியில் பாலம் கட்டும் படலம் உண்டு. நளனோடு இணைந்த வானரப் படை பாலம் அமைத்தது. முதல் நாள் 14 யோஜனை நீளத்துக்குப் பாலம் கட்டினார்கள். 2-வது நாள் 20 யோஜனை தூரமும், 3-ஆம் நாள் 21 யோஜனை தூரமும், 4-வது நாள் 22 யோஜனையும், 5-வது நாள் 23 யோஜனையுமாக மொத்தம் நூறு யோஜனை தூரம் விஸ்வகர்மாவின் புதல்வன் நளன் பாலத்தைக் கட்டி முடித்தான். இது ராமாயணம் தரும் தகவல். ஏராளமான மொழிகளில் ராமாயணம் மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது. அவற்றில் எல்லாம் ‘ராமர் பாலம்’ பற்றிய தகவல் உண்டு.

எல்லாவற்றுக்கும் மேலாக லண்டனில் உள்ள ‘இந்திய ஆபீஸ் நூலக’த்தில் சேமித்து வைக்கப் பட்டுள்ள ராமாயணம் தொடர்பான அரிய நூல்கள் பல, ‘ராமர் பாலம்’ பற்றிய தகவல்களைக் காப்பாற்றி, உலகுக்கு உண்மையைப் பறை சாற்றுகின்றன.

(25.10.2007 சக்தி விகடன் இதழிலிருந்து...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism